Sunday, August 4, 2013

பட்டாம்பூச்சி..

பட்டாம்பூச்சி..

அழகான காலம் பள்ளியில் கால் அரை முழு பரீட்சை விடுமுறை எல்லாம்..அப்படி பட்ட ஒரு விடுமுறையில் மாமா வீட்டுக்கு சென்று இருந்த போது..

மாமா எனக்கு பாப்பாத்தி பிடிச்சு தாரியா என்று வெட்கத்துடன் கேட்ட பொன்னி ஏக்கத்துடன் கேட்டது சந்தோசம் ஒரு புறம் என்றாலும் அதை துரத்திக்கொண்டு ஓடவேண்டும் என்ற கவலையும் கூட இருந்தது...

சரி சரி இரு வரேன் என்று என்னோமோ வேட்டைக்கு போறது போல கிளம்பியாச்சு..(பிடிக்காட்டி கொஞ்சம் கேவலம்தான் இல்லையா) ஒரு கருப்பு சிகப்பா புள்ளிப்போட்ட பட்டாம்பூச்சியாய் தேடி ஒரு ஒரு தும்பை செடியையும் பூவாய் கடந்து செல்ல பின்னே வரும் பொன்னியை வரதே என்று சைகையில் சொல்லி ஒரு பட்டாம்பூச்சியை  பிடிக்க மிகவும் மௌனமாய் ஆயத்தம் ஆனேன்.


ஒரு செகப்பு கொண்டைப்பூவை தாண்டி பச்சைப்பசேல் இருக்கும் தோட்டத்தில் இருக்கும் செவந்தி பூக்களையும்  தாண்டி  தும்பைபூ செடியில் வெள்ளை தும்பை பூவின் மீது அமர்ந்து இருக்கும்  கருப்பு செகப்பு புள்ளிப்போட்ட அழகான வண்ணத்து பூச்சி அமர்ந்து இருக்க லாகவமாய் அதை பிடிக்க எத்தனிக்கையில் பறந்து போனது ஏமாற்றமே என்னைவிட பொன்னிக்கு 



தூரமாய் அவள் சோகமாய் பார்ப்பது போல எனக்கு தோன்றின நிமிடம் துரத்திக்கொண்டு போனேன் அடுத்த பாப்பாத்தியை தேடி செடிகளுக்கு அழுத்தம் கொடுக்குகாத வகையில் மெல்லமெல்ல எட்டிப்  பிடித்தேன்..இம்முறை ஜெயம்...

ஐ பாப்பாத்தி என்று ஓடிவரும் பொன்னிக்கு கொடுக்கமால் கொஞ்ச நேரம் மாட்டேன் போ என்று கூட சொல்லலாம் என நினைத்தாலும் அவளை அந்த கணம் கூட காக்க வைக்க தோன்ற வில்லை. உடனே அவள் கைகளில் பொத்திக்கொடுக்கையில் அவளில் கண்களில் மிதந்த 
சந்தோசமும் பறந்து விடுமோ என்ற பயமும் ஒரு சேர பார்க்கையில் அழகாய் இருந்தது அவளின் வெட்கமும்..

நொடி நேரம் அவளின் சந்தோசம் எப்பிடி என்று  பார்க்கிறது அவளின் கையில் இருந்த பட்டாம் பூச்சி. அவளில் கைகளை விட்டு பிரிய மனம் இல்லமால் இருப்பதை போல தோன்றியது எனக்கு..

அதே நேரம் பறந்து போ என்று தாமரை கைகளால் விரித்து பறக்க சொல்லிவிட்டாள்.அது சிறகை லேசாய் அசைத்து பறக்கிறது.சில விநாடி கண நேரம் சந்தோசமாய் இருந்த ரெண்டு பட்டாம் பூச்சிகளும் மீண்டும் வருவது  எப்போது?



ஒரு புன்னகையை என்னை நோக்கி வீசியதில் மாமா இன்னொரு பட்டாம்'பூச்சி பிடிச்சு தாரியா என்று கேட்பது போல இருந்தது..

அழகான காலம் மீண்டும் வர வேண்டும்....


பின்குறிப்பு :

முழுவதும் கற்பனையே 
புகைப்படங்கள் தேங்க்ஸ் கூகிள் (/\)
அத்தைபொண்ணுக்காக இந்த பதிவு...




22 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

பட்டாம்பூச்சி போன்றே மிகவும் அழகான அருமையான படைப்பு.

படத்தேர்வுகளும் மிகச்சிறப்பாக உள்ளன.

மனம் நிறைந்த மகிழ்வான பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

”அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை” என்ற தலைப்புக்கு ஏற்ற படைப்பு. மகிழ்ச்சி. ;)

அன்புடன்
VGK

Angel said...

சரி சரி இரு வரேன் என்று என்னோமோ வேட்டைக்கு போறது போல //

ஹா ஹா :)))சிவா பூச்சி வேட்டைக்கா

Angel said...

டி ஒரு ஒரு தும்பை செடியையும் பூவாய் கடந்து செல்ல //

ஆஹா எவ்ளோமேன்மையான மனசு என் தம்பிக்கு ..பூவாய் கடந்து !!! சூப்பர்

Angel said...

சில விநாடி கண நேரம் சந்தோசமாய் இருந்த ரெண்டு பட்டாம் பூச்சிகளும் மீண்டும் வருவது எப்போது?//
வரும் வரும் விரைவில் :))

நான் ஒரு ஐடியா தரேன் ..தோட்டத்தில் ஒரு ஆரஞ்சு அரை பாதி வெட்டி கயிறில் கட்டி தொங்க வச்சிடுங்க கலர் கலரா பட்டாம்பூச்சிஸ் வரும் பிடிச்சி கொடுக்கலாம்

Angel said...

என்னது ??கற்பனையா ஆ ஆஅ??..கற்பனை என்றாலும் நிசம்மா சிட்டுவேஷன் கண் முன் தெரியுது எனக்கு ..படங்களும் பதிவும் ..சிவாவின் கற்பனையும் அழகு

Angel said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

பட்டாம்பூச்சியே ஒரு அழகான வவிதைதான், அத்தை பொண்ணுக்கு வாழ்த்துக்கள்...!

இதமான பகிர்வு...!

Unknown said...


வை.கோபாலகிருஷ்ணன் said...
பட்டாம்பூச்சி போன்றே மிகவும் அழகான அருமையான படைப்பு.

படத்தேர்வுகளும் மிகச்சிறப்பாக உள்ளன.

மனம் நிறைந்த மகிழ்வான பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

”அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை” என்ற தலைப்புக்கு ஏற்ற படைப்பு. மகிழ்ச்சி. ;)

அன்புடன்
VGK

நன்றி ஐயா

Unknown said...

Cherub Crafts said...
சரி சரி இரு வரேன் என்று என்னோமோ வேட்டைக்கு போறது போல //

ஹா ஹா :)))சிவா பூச்சி வேட்டைக்கா

August 5, 2013 at 12:19 AM Delete

ஆமாம் ஆமாம் .:)

Unknown said...

Cherub Crafts said...
டி ஒரு ஒரு தும்பை செடியையும் பூவாய் கடந்து செல்ல //

ஆஹா எவ்ளோமேன்மையான மனசு என் தம்பிக்கு ..பூவாய் கடந்து !!! சூப்பர்//



பின்ன அக்காவை போல தான தம்பியும்..

Unknown said...

Cherub Crafts said...
சில விநாடி கண நேரம் சந்தோசமாய் இருந்த ரெண்டு பட்டாம் பூச்சிகளும் மீண்டும் வருவது எப்போது?//
வரும் வரும் விரைவில் :))

நான் ஒரு ஐடியா தரேன் ..தோட்டத்தில் ஒரு ஆரஞ்சு அரை பாதி வெட்டி கயிறில் கட்டி தொங்க வச்சிடுங்க கலர் கலரா பட்டாம்பூச்சிஸ் வரும் பிடிச்சி கொடுக்கலாம்//



நிஜமாவா அட ஐடியா
இருக்கே..மறுபடியும் அத்தை பொண்ணுக்கு எங்க போக?

Unknown said...


MANO நாஞ்சில் மனோ said...
பட்டாம்பூச்சியே ஒரு அழகான வவிதைதான், அத்தை பொண்ணுக்கு வாழ்த்துக்கள்...!

இதமான பகிர்வு...!//



அப்போ எனக்கு வாழ்த்துக்கள இல்லையா
நன்றி அண்ணா

முற்றும் அறிந்த அதிரா said...

அடடா... பில்லா ரிரேன் ஆகிட்டார்போல... வெல்கம்.. வெல்கம்...

இன்னுமா பொன்னியை மறக்கேல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவவுக்குத்தான் திருமணம் ஆகிட்டுதே:))..

முற்றும் அறிந்த அதிரா said...

///முழுவதும் கற்பனையே ///

சரி நம்புறோம்ம்...:))



///அத்தைபொண்ணுக்காக இந்த பதிவு...///

இது எங்கயோ இடிக்குதே சாமீஈஈஈஈஈஈஈ:))

இமா க்றிஸ் said...

:-)

பட்டாம்பூச்சி போலவே பதிவும் இருக்கு சிவா.

Unknown said...

athira said...
அடடா... பில்லா ரிரேன் ஆகிட்டார்போல... வெல்கம்.. வெல்கம்...

இன்னுமா பொன்னியை மறக்கேல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவவுக்குத்தான் திருமணம் ஆகிட்டுதே:))..//

வாங்க வாங்க
பேபி அதிரா
இந்த பொன்னிக்கு இன்னும் ஆகலையே :)

Unknown said...

athira said...
///முழுவதும் கற்பனையே ///

சரி நம்புறோம்ம்...:))



///அத்தைபொண்ணுக்காக இந்த பதிவு...///

இது எங்கயோ இடிக்குதே சாமீஈஈஈஈஈஈஈ:))

August 10, 2013 at 2:52 AM Delete//

நோ நோ ரொம்ப யோசிக்க கூடாது :)

பிறகு ரெண்டு அண்ணாக்கள் நலமும் அறிய அவா.
மீண்டும் நன்றி வருகைக்கும்

Unknown said...

இமா said...
:-)

பட்டாம்பூச்சி போலவே பதிவும் இருக்கு சிவா. //

வாங்க வாங்க
வருகைக்கு நன்றி

Unknown said...

Cherub Crafts said...
என்னது ??கற்பனையா ஆ ஆஅ??..கற்பனை என்றாலும் நிசம்மா சிட்டுவேஷன் கண் முன் தெரியுது எனக்கு ..படங்களும் பதிவும் ..சிவாவின் கற்பனையும் அழகு/

ஒரு கமெண்ட் பதில் பட மறந்துட்டேன்.

நன்றி அஞ்சு அக்கா.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...

இமா க்றிஸ் said...

அறியத் தந்ததற்கு நன்றி தனபாலன்.
வாழ்த்துக்கள் சிவா. @}->--

Unknown said...

Nandri anna..

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...