Tuesday, May 29, 2012

தூங்கும் போதும் நீ அழகுதான் .....


முயற்சித்து
நடந்து கொண்டு
இருக்கிறேன்
புதிய பாதை
நோக்கி
அங்கும்
ரெட்டை கோடுகளாய்
ரயில் தண்டவாளம்
எது வரை
போகும்....


பூ ஒன்றுக்கு
உனது புன்னகை
வேண்டுமாம்
கொஞ்சம்
எட்டிப்பார்த்து
விட்டு போயேன்!!தூங்கும் போதும்
நீ அழகுதான்
மெல்ல முழிக்கும்
போதும் அழகுதான்
காரணம் அது
உன் வீட்டு
செல்ல நாய்க்குட்டி..!

Monday, May 14, 2012

சின்ன சின்ன நியாபகங்கள்

அதாவது ஒரு காலத்தில் கி.மு, கி.பி,கோ எல்லாம் உடனே போய்ட கூடாது ஓகே..

ஏழாவது படிக்கும்போது நடந்த ஒரு சின்ன சம்பவம்...

நானு,லவா (குமார்) அவனுக்கு முடி சுருட்டை சுருட்டையா இருக்கும் அதனால அந்த பேரு)
அப்புறம் பாத்திர கடை மகேஷு அப்பறம் ரமேஷ் அப்புறம் கதை மாதவன் நாங்க ஒரு குரூப் பிறகு மாதவன் கதை சொல்லும்ஸ்பெஷலிஸ்ட்.
சமுக அறிவியல் ஆசிரியர் வருவார் வந்து யாரவது ஒரு பையன எழுப்பி விட்டு நீ நாலாம் பாடம் முதலாம் பானிப்பட்டு போர்ல இருந்து படின்னு சொல்லிட்டு தூக்கம் கொள்ள ஆரம்பித்து விடுவார்..திடிரென்று யாரையாவது ஒருவனை எழுப்பி அவனை படிக்கச் சொல்லுவார்,அவர் தூங்கறது யாருக்கும் தெரியா கூடாதாம்.நாங்க மனசுக்குள்ள திட்டுவோம்...மகேஷ் திட்டறதுதான் செம சிரிப்பா இருக்கும்..செம விட்டு அடிச்சுக்கிட்டு இருப்போம்.

அப்புறம் அந்த அதிக சத்தம்போட்டு ஒரு பையன் மைக் இல்லாம படிக்கும் சுகுமார் அவ்வளோ சத்தமா படிப்பான். பயபுள்ள உள்ள மைக் ஏதும் வச்சு இருக்கோணு அவன் படிச்சு முடித்ததும் நாங்க கிண்டல் பண்ணுவோம்.அவன் அவன் கடமையே என்று படிக்க நாங்கள் எங்கள் கடமையை செய்துகொண்டு யாரு கவனிச்சா நாங்க ஒரு பக்கம் அமைதியா பட கதை கேட்டுக்கொண்டு இருப்போம்.

நம்ம கதை மாதவன் விலாவரியா அப்படி இப்படி என்று அழகா சொல்லுவான். அவனுக்கு மதியம் கடலை மிட்டாய் வாங்கி கொடுத்தால்தான் மீதி கதை தொடரும் அது வேறு விசியம்இப்படி இருக்கையில்ல ஒரு நாள் வாத்தியார் எழுந்து அவன் விட்ட இடத்தில இருந்து படின்னு சொல்ல நம்ம லவாகிட்ட சொல்ல அவன் வேற பக்கம் படிக்க ஒரே சிரிப்பு அலை..அப்பறம் நடந்தது என்ன உங்களுக்கு தெரிந்து இருக்குமே.செம திட்டு அடி வேற லாவவுக்கு எங்களுக்கு ரொம்ப கஷ்டமா போயிட்டு.அதனால நாங்க உடனே மீட்டிங் போட்டு நம்மல்ல ஒருத்தர் யாரும் படிச்சா அதை கவனிக்கணும் என்று கேட்கும்போது இந்த வரி என்று காட்டணும்..அப்பறம் அடி வாங்கறது இல்லை அந்த பொறுப்பு நம்மகிட்ட வந்தாச்சு..

பிறகு பரீட்சை பற்றி இந்த பாடத்தில் நம்ம மகேஷு பதில் எழுதி இருந்தான் பாருங்க அட இப்படி எல்லாம் நாங்க எழுதுவான்னு நினைச்சுக்கூட பார்க்கவில்லை."இந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது அதனால் மார்க் போடவேண்டாம்" என்று எழுதி இருந்தான் ".அடுத்தநாள் பேப்பர் கொடுக்கும்போது வாத்தியார் அதை படித்து காமித்து நாலுபோடு போட்டது வேறு கதை.

இப்போ பார்த்தாலும் என்னடா அப்படித்தான் இன்னும் எழுதிக்கிட்டு இருக்கியான்னு கேட்டு கிண்டல் பண்றது உண்டு.

ஒரு ஒரு நாளும் ஒரு கலாட்டா நடக்கும்,ஊரில உள்ள கதை எல்லாம் திரைக்கதை போல மாதவன் சொல்லுவான் என்னன்னா சொன்ன படத்தோட கதைய திரும்ப வேற கதை கேக்கும்போது அதை மிக்ஸ் பண்ணி சொல்லும்போது பிடிச்சுடுவோம்..டே இந்த கதை நேத்து சொன்ன அப்டின்னு கேட்ட இல்லடா மறந்து போச்சுன்னு சொல்லி அடிவாங்காம தப்பிடுவான்.ஆனால் அவன் இப்போ கதை சொன்னாலும் கேக்கலாம்.இப்படி பல கதை இருக்கு நேரம் கிடைக்கும்போது சொல்றேன்.ஓகே ஸ்டார்ட் மியூசிக்
இந்த வாரம் அனைவருக்கும் இனிதே தொடரட்டும்.

அன்புடன்
சிவா

படங்கள் உதவி
நன்றி கூகிள்

Wednesday, May 9, 2012

மீண்டும் அடுத்த கடிதத்தில்..
எப்படி இருக்க பொன்னி நலமா
அத்தையும் மாமாவும் நலமாய் இருப்பார்கள் என்று நம்புகிறேன்
இங்கு நண்பர்கள் அனைவரும் நலம்

கடந்த முறை வந்த போது சில நிமிடங்கள் தான் உன்னை பார்த்தாலும் அதிகம் பேச முடியவில்லை சூழ்நிலையும் சந்தர்ப்பமும் இடைவெளியை ஏற்படுத்தி கொடுத்துக்கொண்டே இருக்கிறது இருந்தாலும் இந்த தூரத்தின் பயணத்தில் எல்லாம் நீ அறிவாய் என்று அமைதியாய் ஏற்றுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு முறையும் வரும் வரை காத்து இருந்து வந்த பிறகு விரைவில் சென்று விடுவாய் என்று சொல்லும் ஒரு ஒரு நேரத்திலும் வரும் வலிகள் கண்ணீராய் வெளிப்படுகையில் தூசி விழுந்தது என்று துடைக்கும் உனது பாங்கிலும் நலம் விசாரிப்பிலும் அன்பாய் பார்க்கும் ஒரு பார்வைக்கும் பதில் தெரியாமல் மருகுகிறேன்.

இந்த பாசம் எப்பொதும் வேண்டும் என்றுதான் தள்ளி போய்க்கொண்டு இருக்கிறேன்
கணக்கிலா அன்பை கொட்ட நீ இருக்கும்போது என் ஆயுசுக்கும் பாசம் தர நான் இருக்கிறேன் என்று சொல்ல முடியாமல் இருக்கிறேன் எனக்குள் மட்டும் சொல்லிக்கொண்டு.

ஊருக்குள் எங்க மாமா வந்து இருக்காக என்று சொல்லும்போது உன் கண்ணில் காணும் சந்தோசத்தை காண திரும்ப எப்போது வருவேன் என்று ஏங்குகிறேன்.

பிறகு நம்ம அசின்னு தமன்னா


எல்லாம் வீட்டில் விற்று விட்டதை அறிந்தும் தற்போது ஹன்சிகா
மட்டும் வைத்து இருப்பதை அறிந்து கொஞ்சம் வருத்தம் முற்றேன்.

புல்லறுத்து கொண்டு நேராக அசினுக்கும் தமனவுக்கும் நீ புல் வைக்கும் சாக்கில் பேசிக்கொண்டே போவது எனக்கு பிடிக்கும். பாவம் வாய் இருந்தால் அழுது இருக்கும் என்னை போல..

எல்லாம் விட்டு தனியாக இருப்பது சற்று கடினம்தான் என்று சொல்லிக்கொண்டே வீட்டில் மாப்ளை பார்த்துக்கொண்டு இருக்காக என்று வார்த்தைகளை முழுங்கி சொல்லும்போது என்ன சொல்வது நிஜமாய் அந்த நிமிடங்கள் கனக்கிறது.

கடந்த முறை மாமா அத்தை சொல்லும்போது வேலை இல்லாத சூழ்நிலையில் எப்படி பேசுவது என்று தெரியாமல் இருந்து விட்ட நிலையில் திரும்பவும் உங்கள் வீட்டில் வேறு வரன் பார்க்கும் செய்தி கொஞ்சம் தடுமாற்றம் கொடுக்கிறது.

என் சார்பில் பேச யாரும் இல்லை என்ன பேசவது என்று தெரியவும் இல்லை
இருந்தாலும் ஒரு நம்பிக்கையில் வாழ்கிறேன்.

எட்டாம் வகுப்பு தேர்வில் முதல் மார்க் வாங்கியதற்க நீ கொடுத்த இங்க்பேனா இன்னமும் பத்திரமாய் இருக்கிறது.

பிறகு விரைவில் ஊருக்கு வருகிறேன்
ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடு,கவலை படாத பொன்னி எல்லாம் சரி வரும்

மீண்டும் அடுத்த
கடிதத்தில்...
சும்மா 1 :)

மழை வரும் நேரத்தில்
குடை இல்லாமல் நனைகிறேன்
உன் நினைவுகளில்

டிஸ்கி :
சும்மா ஒரு கற்பனையில் எழுதியது
இக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே :)

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...