Thursday, June 21, 2018

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை....

என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொண்டேன் இல்லடா கொஞ்சம் மனசில சில கேள்விகள் எதிர்காலம் பற்றி
அதை தாண்டி அம்மா அப்பா பத்தி யோசித்துக்கொண்டு இருந்தேன் என சமாளித்து அங்கு இருந்து கிளம்பினேன் ...

சில வருடங்களுக்கு முன் ------(

ஆவலுடன் எதிர் பார்த்து காத்து இருந்தேன் அவளின் வருகைக்காக
ஒரு நாள் காலை விடியலில் வாடகை  காரில் வந்து அனைவரும் இறங்கினார்கள்
அதில் எனது தேவதையும்..பார்த்தவுடன் ஒரு சந்தோசம் மிதப்பது போன்று
வெளிகாட்டிக்கொள்ளவில்லை இருந்தாலும்..
சம்பர்தாய விசாரிப்புகள் முடிந்து அனைவரும் சற்று ஓய்வு எடுக்க என் கண்கள் அவளை தேடியது...சின்னதாய்ஒரு  சிரிப்பு..என்ன கொடுத்தாலும் தகும் அந்த புன்னகைக்கு...கம்பனாய் பிறக்கவில்லை கவிதை வரவில்லை ஆனாலும் ஒரு வரி
தேடி பார்த்தேன்

எதுவும் கிடைக்கவில்லை போகட்டும்ம் என்று என்ன பண்ற எப்போ படிப்பு முடியும் என்ற விசாரிப்புகள் தாண்டி சாதாரணமாக போய்க்கொண்டு இருந்தது அங்கே இருந்து என்னடா பண்ற அவ தூங்கட்டும் அப்பறம் பேசிக்கலாம் என்று அம்மா குரல் கொடுக்க ஒரு ஓட்டம் பிடித்தாள்...!

நானும் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று நிமிடங்களை மெனக்கெட்டு நகர்த்த ஆரம்பித்தேன்..என்ன பேச எது பேச ஆனாலும் பேச தோணும் எதுனா பேச  தோணும் அவளிடம் மட்டும்.. வார்த்தை மட்டும் காவிரி போல வறண்டு போய்விடும் சில நேரம்..ஒரு மௌனமாய் போகும் கண் இமைகள் மூடும்  கணம்  கூடா இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருப்பேன்..அவளின் காந்த கண்களை...


thank you tamilkavithaigal.com
 ......

Wednesday, June 20, 2018

காயம் மாறிடுமா..!


தனியே
தவிக்க
விட்டுச்சென்ற
நிமிடங்கள் ..!

அழுது
தீர்ந்த கண்ணீர் !

நீ வரும்
தூரம் பார்த்து ..
ஏங்கிய நொடிகள் !

மறந்து போன
உன்னை
இருப்பதாய்
நினைத்து
உன் வருகைக்காக
காத்து இருக்கும்
எனது இதயம்..

யாரோ ஒருவரின்
முகச்சாயல் பார்த்து
நீயாக இருக்க கூடாத என்று
ஏமாற்றிக்கொண்ட நொடிகள்...Thursday, December 26, 2013

123 test...

123 test....

அனைவருக்கும் அன்பான வணக்கம்..

நலம்

அனைவரும்நலமா... நலமாய் இருக்க வேண்டுகிறேன்...

பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு....

மறுபடியும் பதிவு உலக பக்க பிரவேசம்....(ஏன் இந்த பில்ட்இப்)... 

சூழ்நிலையும் சந்தரப்பமும் எதை செய்தாலும் முழு மனதோடு செய்ய வேண்டும் என்ற எண்ணமும் என்னை எந்த பதிவு உலக பக்கம் வர விடமால் செய்து விட்டது.

நீங்கள் அனைவரும் நலமாய் இருக்க இப்போதும் வேண்டிக்கொண்டு இருக்கிறேன்...யாரயும் மறக்க வில்லை பதிவு பக்கம் போகாமல் இருக்காலம் 
அன்பான என் உறவுகளை எப்படி மறப்பேன்...

எழுதியது சிலதான் எல்லாமே கொஞ்சம் மொக்கைதான். 
எனக்கு கிடைத்த உறவுகள் எல்லாமே வாழ்க்கையின் அர்த்தம் புரிய வைத்தன. ஏன் எழுதுகிறேன் என்று தெரியாமால் இருந்த எனக்கு 
நல்ல நட்புகளின் அரவணைப்பு மிகப்பெரிய சந்தோசத்தை நம்பிக்கை
ஏன் சில நேரம் சின்ன சின்ன கஷ்டமும் கொடுத்து இருக்கிறது.
எல்லாம் கடந்து போகும் என்று புலியூர் பூசரின் அறிவுரை எப்போதும் 
நினைவில் இருக்கிறது..

எல்லாருக்கும் நன்றி என்ற ஒரு சொல்லில் எழுதி அதைமுடிக்க விரும்ப வில்லை. அதற்கும் மேல் ஒரு அன்பு.
ஒரு சில அன்பானவர்களுக்கு அவர்களின் மீதுள்ள அன்பை பகிர விரும்புகிறேன் ஒரு ஒருத்தருக்கும் ஒரு பிரச்சனைகள் கடந்து அதை கடக்கும் சூழ்நிலையில் நானும் இருந்துகொண்டு இருக்கிறேன். என் அம்மா இம்மாவின் அன்பும் பிராத்தனையும் இல்லை  என்றால் பதிவு பக்கம் நான் இருந்து இருக்கமாட்டேன். அப்புறம் அத்தை பொண்ணு பொன்னி 


அவள் அன்பில் பாசத்தில் அது எல்லாம் உணர மட்டும் தான் முடியும். பிறகு என் உடன் பிறவா அக்கா காகிகத பூக்கள்  பிறகு என் தளம் வரும் அனைவருக்கும் 
என் அன்பாய் நன்றியை அற்பணித்து...

பிறக்க போகும் புது வருடம் அனைவருக்கும் 
எல்லாம் கிடைக்கும் வருடமாய் 
நலமாய் இருக்க புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்...


இருக்கிற ஒரு ஒரு நிமிடமும் எந்த ஒரு பிரதி பலனும்  எதிர்பாராமல் இருக்கும்  தருணத்திலும் தனிமை நிரம்பிய பொழுதுகளிலும் 
மிக சந்தோசமாய் இருப்பதை உணர்கிறேன்.

கஷ்டம் எல்லாம் பார்த்தாச்சு இனி என்ன இருக்கு...என்கிற சராசரி மனிதனாய் 
எல்லாம் ஏற்றுக்கொண்டு அடுத்து நன்மை வரும் என்ற நம்பிக்கையோடு 
நகர தொடங்குகிறேன்..

சாமி வர போற வருஷம் மொக்கைய எழுதாம நல்லதா ஒரு நாலு விசியம் எழுதி..(அப்படியே எழுதிட்டாலும்) எனக்கு தெரிந்த வற்றை எழுதாலாம் என்று இருக்கிறேன்.......எங்கயோ படிச்சது..

நமக்கு பிடிக்காத படங்களை பார்க்க எப்படி நாம் தவிர்க்க நினைக்கிறோமோ...
அதை போல காயபடுத்தும் நினைவுகளை தவிர்ப்பதும் நம்மால் முடியும்...
பிடித்த படம் மட்டும் பார்க்க நினைப்பது போல நம்மை சந்தோஷ படுத்தும் 
தருணங்களை நினைப்போம் சந்தோசமாய் வாழ தொடங்குவோம்...
வாழ்க்கை ஒரு முறை தானே...!

ஓகே நன்றி மீண்டும் சந்திப்போம்.....
Sunday, August 4, 2013

பட்டாம்பூச்சி..

பட்டாம்பூச்சி..

அழகான காலம் பள்ளியில் கால் அரை முழு பரீட்சை விடுமுறை எல்லாம்..அப்படி பட்ட ஒரு விடுமுறையில் மாமா வீட்டுக்கு சென்று இருந்த போது..

மாமா எனக்கு பாப்பாத்தி பிடிச்சு தாரியா என்று வெட்கத்துடன் கேட்ட பொன்னி ஏக்கத்துடன் கேட்டது சந்தோசம் ஒரு புறம் என்றாலும் அதை துரத்திக்கொண்டு ஓடவேண்டும் என்ற கவலையும் கூட இருந்தது...

சரி சரி இரு வரேன் என்று என்னோமோ வேட்டைக்கு போறது போல கிளம்பியாச்சு..(பிடிக்காட்டி கொஞ்சம் கேவலம்தான் இல்லையா) ஒரு கருப்பு சிகப்பா புள்ளிப்போட்ட பட்டாம்பூச்சியாய் தேடி ஒரு ஒரு தும்பை செடியையும் பூவாய் கடந்து செல்ல பின்னே வரும் பொன்னியை வரதே என்று சைகையில் சொல்லி ஒரு பட்டாம்பூச்சியை  பிடிக்க மிகவும் மௌனமாய் ஆயத்தம் ஆனேன்.


ஒரு செகப்பு கொண்டைப்பூவை தாண்டி பச்சைப்பசேல் இருக்கும் தோட்டத்தில் இருக்கும் செவந்தி பூக்களையும்  தாண்டி  தும்பைபூ செடியில் வெள்ளை தும்பை பூவின் மீது அமர்ந்து இருக்கும்  கருப்பு செகப்பு புள்ளிப்போட்ட அழகான வண்ணத்து பூச்சி அமர்ந்து இருக்க லாகவமாய் அதை பிடிக்க எத்தனிக்கையில் பறந்து போனது ஏமாற்றமே என்னைவிட பொன்னிக்கு தூரமாய் அவள் சோகமாய் பார்ப்பது போல எனக்கு தோன்றின நிமிடம் துரத்திக்கொண்டு போனேன் அடுத்த பாப்பாத்தியை தேடி செடிகளுக்கு அழுத்தம் கொடுக்குகாத வகையில் மெல்லமெல்ல எட்டிப்  பிடித்தேன்..இம்முறை ஜெயம்...

ஐ பாப்பாத்தி என்று ஓடிவரும் பொன்னிக்கு கொடுக்கமால் கொஞ்ச நேரம் மாட்டேன் போ என்று கூட சொல்லலாம் என நினைத்தாலும் அவளை அந்த கணம் கூட காக்க வைக்க தோன்ற வில்லை. உடனே அவள் கைகளில் பொத்திக்கொடுக்கையில் அவளில் கண்களில் மிதந்த 
சந்தோசமும் பறந்து விடுமோ என்ற பயமும் ஒரு சேர பார்க்கையில் அழகாய் இருந்தது அவளின் வெட்கமும்..

நொடி நேரம் அவளின் சந்தோசம் எப்பிடி என்று  பார்க்கிறது அவளின் கையில் இருந்த பட்டாம் பூச்சி. அவளில் கைகளை விட்டு பிரிய மனம் இல்லமால் இருப்பதை போல தோன்றியது எனக்கு..

அதே நேரம் பறந்து போ என்று தாமரை கைகளால் விரித்து பறக்க சொல்லிவிட்டாள்.அது சிறகை லேசாய் அசைத்து பறக்கிறது.சில விநாடி கண நேரம் சந்தோசமாய் இருந்த ரெண்டு பட்டாம் பூச்சிகளும் மீண்டும் வருவது  எப்போது?ஒரு புன்னகையை என்னை நோக்கி வீசியதில் மாமா இன்னொரு பட்டாம்'பூச்சி பிடிச்சு தாரியா என்று கேட்பது போல இருந்தது..

அழகான காலம் மீண்டும் வர வேண்டும்....


பின்குறிப்பு :

முழுவதும் கற்பனையே 
புகைப்படங்கள் தேங்க்ஸ் கூகிள் (/\)
அத்தைபொண்ணுக்காக இந்த பதிவு...
Monday, July 29, 2013

மீண்டும் கிறுக்கல்கள்

நீண்ட நாட்கள் கழித்து
அட ஒரு வருடம் ஓடி போனதே தெரியல...அவ்வவ் பதிவு எழுத மறந்து 
ஒரு வயசுகிட்ட ஆகிப்போனதில ரொம்ப வருத்தமே.....


ஆனாலும் தோணும் பொது வரலாம் என்று நினைத்தாலும்
தொடர்ந்த புதிய வேலைப்பளுவும்  கூடவே கொஞ்சம் உண்மையும் சொல்லனும் என்ன எழுதனும்னு எனக்கு சுத்தமா தெரிய வில்லையா இல்லை ஆமா போ என்ற சோம்பேறி தனமா ஏதோ  ஒன்று வைத்துக்கொள்ளுங்கள்...

இன்று வைத்த அவரைக்காய் சாம்பார்  வைத்து கொஞ்சம் கூடவே உருளை வருவலும் சேர்த்து வைத்து கட்டியதில் லேசாய் உறக்கம் எட்டிப்பார்க்கிறது..இதற்கு இடையில் நாம எப்போ பதிவு எழுதினோம் என்று பார்த்தேன் கடந்த வருடம் ஜூலை 27...

சரி ஒரு வருகைபதிவேடை போட்டு வைப்போம் என்று இந்த பதிவு...

உண்மையான அன்பான உறவுகள் எல்லாம் கிடைத்த இந்த வலைப்பதிவுக்கு கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆகணும்.

சிவா என்ற ஒன்றுமே இல்லாத எனக்கும் கூட பாசமான இமா  அம்மா, பாசமான என் பிறந்த நாள் தவறாது வாழ்த்து சொல்லும் எனது அஞ்சுக்கா,மகிமா, எனக்கு இன்னமும் பெண் பார்த்துக்கொண்டு இருக்கும் பேபி அதிரா அக்கா எல்லாருக்கும் என் அன்பான நன்றிகள்..பிறகு என் பதிவை கூட மதித்து வரும் அனைவருக்கும் என் நன்றிகள்..பிறகு நம்ம மனோ அண்ணாச்சிக்கும் என் பிரியமான நன்றிகள்...
.இப்பவே கண்ணகட்டுதே என சொல்லகூடாது...ஓகே 
இன்னும் கதை கவிதை எல்லாம் இருக்கு..

வாழ்க்கை மிக வேகமாய் யாருக்கும்
பதில் சொல்லாமல் சொல்லிக்கொண்டு போய்க்கொண்டு இருக்கிறது..
இருக்கும் இந்த கொஞ்ச காலத்தில் நாம் நாமாக நமக்கு பிடித்ததுபோல
யாருக்கும் தொல்லை இல்லாது வாழ்ந்து முடித்து விட வேண்டும் என்பது எல்லாரயும் போல எனது விருப்பமும்

சூழ்நிலையும் பிரச்சனைகளும் வசம் வந்து நண்பானாய் சேர்ந்துக்கொள்ள  வழி இல்லாது
அதன் சுழலில் விரும்பி சுற்றிக்கொண்டு நடந்துக்கொண்டே இருக்கிறேன்.

பிரியமான நட்பின் இழப்புகளும் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் கண்ணீர் துளிகளின் அரும்புகளில் இன்னும் எத்தனை இருக்கு என்று கண்ணீர் வற்றிவிடாது கண்ணை துடைத்துக்கொண்டு நடந்த நாட்களும் அதிகம்!


வாழ்க்கை எங்கு சென்று திரும்பும்
என்று தெரியாத
புதிரான எல்லையை  நோக்கி நானும் கடைசி நம்பிக்கையின்
விழும்பில் இதுவே எனது கடைசி தோல்வி
என ஒரு ஒரு முறையும் சொல்லிக்கொண்டு
நாட்களை கடத்திக்கொண்டு இருக்கிறேன்..


ஒரு ஒரு முறையும்
என்னை தவிக்க விட்டு சென்றாலும்
மறுமுறையும்
உனக்காக
காத்து இருக்கிறேன்
ஒரு நாளாவது 
என் அன்பின்
நிழலையாவது புரிந்துகொள்வாய என்று....ஓகே இது போதும் மீண்டும் எனது கிறுக்கல்களும் புலம்பல்களும் தொடரும்
என்னைப்போன்றவர்கள் இருக்கும் வரையிலும் கடவுளுக்கு வேலை இருந்துகொண்டே இருக்கும்

அன்புடன் அடுத்த பதிவில் சந்திப்போம்..

மனிதனை
மனிதனாக
நேசிக்கும்
அத்தனை
ஜீவனையும்
நேசிக்கிறேன்

இறைவா அனைவரையும் நலமாய் வைத்திரு...மீண்டும் கிறுக்கல்கள் தொடரும்.....

Sunday, November 11, 2012

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்அனைவருக்கும்


வணக்கம்


வணக்கம்


வணக்கம்


முதலில் வாழ்த்து
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்


எல்லாரும் நலமுடன் நீண்ட ஆயுளுடன் நீடித்த சந்தோசத்துடன் இருக்க இறையை வேண்டிக்கொண்டு...


நீண்ட நாட்கள் ஆகிவிட்டது அனைவரையும் பார்க்க வேணும் போல இருக்கு இருந்தாலும் சூழ்நிலை சரிவர அமைய வில்லை, இருந்தாலும் எல்லாம் விரைவில் சரி ஆகும் நம்பிகையுடன் கிடைக்கும் நேரத்தில் பதிவு..


ஒரு நாள் கூடவிடுமுறை இல்லை தினமும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்,சற்று நேரம் கிடைத்தாலும் உறங்கத்தான் சரியாக இருக்கிறது .


எல்லாரும் முறுக்கு அதிரசம் லட்டு எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பார்சல் மறக்காமல் அனுப்புங்க அப்படியே ஸ்வீட்ஸ் சாப்பிட்டு போங்க.


சாமி இந்த வருஷம் எல்லாருக்கும் நல்லபடியா இருக்கணும்


கவிதை மாதிரி


நிலாச் சாரலில்

தினமும்

நனைய விரும்புகிறேன்


துவட்ட

உன்

நினைவு

இருக்கிறது


என்ற நம்பிக்கையில்!!!பின் குறிப்பு :

பக்கத்துக்கு வீட்டு குட்டீஸ் உடன் இந்த வருடம் கொண்டாட போகிறேன்

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்


இன்றே கம்பி மத்தாப்பு எல்லாம் கொளுத்த ஆரம்பிச்சாச்சு.....மீண்டும் சந்திப்போம்...Friday, July 27, 2012

மறுபடியும்...

வணக்கம் வணக்கம்
அனைவருக்கும்

கொஞ்சம் தாமதம் மன்னிக்கவும்...

காரணம் எப்போதும் போல வேலைகள் அதிகம்
கடமைகளும் சேர்ந்து என்னை கவலை இல்லாது வேகமாய் ஓட செய்து விட்டது.
அன்பான வலை உலக உறவுகள்,நட்புகள் இவர்கள் கொண்டுள்ள பாசம் என்னை மீண்டும்
வர வைத்து இருக்கிறது.

உண்மையில் வாழ்க்கை இத்தனை வேகம் நகரும் என்று எதிர்பார்க்க வில்லை.திடீர் திடீர் திருப்பங்கள் வரும் மர்ம நாவல் போல தொடர்கிறது.அதுகூட படிக்கும்போதுதான் வாழ்வின் திருப்பங்கள் மிக மிக சுவாரசியமாய் நகர்கிறது...

ஒரு சுழலின் வேகத்துக்கு ஈடுகொடுத்து அடுத்த கரைக்கும் தொடுவதருக்குள் அடுத்த அடுத்த சுழல்! என்ன இருந்தாலும் சமாளித்து மெதுவாய் ஆற அமர உணர்கிறேன் வாழ்வின்
ஒரு சிறிய கணத்தை!இன்னும் நிறைய இருக்கிறது என்று உணரும்போது சிறிது மயக்கம் .
இருந்தாலும் சமாளித்து விடுவேன் என்ற நம்பிக்கையின் ஊடே போகிறேன் விடை தெரியாத வாழ்வை நோக்கி....

இத்தனை கஷ்டம் இருந்தாலும் அன்பான உறவுகள் நட்புகள் கூட இருக்கும்போது கஷ்டங்கள் தெரிவது இல்லை. சூழ் நிலையும் சந்தர்ப்பமும் சரியாய் இல்லாது போனாலும் மீண்டும் நேரம் கிடைக்கும்போது எல்லாம் வலை உலக உறவுகளை சந்திக்க வருவேன் என்ற நம்பிக்கையோட..

இது மகிமாவுக்கு ஒரு சின்ன கிப்ட்இது அஞ்சு அக்காவுக்கு உங்களுக்கு.
இது பேபி அதிராவுக்கு
இது கிரி அக்காவுக்குஇமா அவர்களுக்குபிறகு அனைவருக்கும்இது என் அத்தை பொண்ணு பொன்னிக்கு...


மறுபடியும் ஒரு மழை
ஒரு மாலை நேரத்தில்
மழைவரும் பொழுதில்
சில துளி சாரலில்
ஒற்றை குடையில்
இருவரும் இருக்கும்போது
மிதக்கும்
மௌனம்
ஒரு கவிதை ஆகிறது....

ஓகே மீண்டும் சந்திபோம் விரைவில்
இந்தியா ஒலிம்பிக்கில் நிறைய பதக்கம் பெற்று வர
எங்கள் சங்கம் வாழ்த்துகிறது..

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...