Monday, January 31, 2011

உனக்கு அனுப்பாமல் எனக்குள் இருக்கும் ஒரு கடிதம்...
எனக்குள் வந்தது ஒரு மடல்....

உனக்கு அனுப்பாமல் எனக்குள் இருக்கும் ஒரு கடிதம்.

ஹாய் பிரவின்,

எப்படி இருக்க? நலமா?

நானும் நலமாய் இருப்பதாய்ப் பொய் சொல்லுகிறேன். உண்மையில் அப்படி இல்லை; ஏதோ ஒரு மாற்றம் என்னில் உணர்கிறேன். அருகில் இருந்த தருணங்களில் எதையும் அறிய முடியவில்லை, நீ தொலைவில் சென்ற பிறகு உணர்கின்றேன்.

என் உணர்வுகளையும் மதிக்கும் ஒரு மனிதனை முதல் முறை சந்தித்து இருக்கிறேன். நேர்கொண்டு பார்க்கும் உன் கண்கள் முதற்கொண்டு, அளவாக உள்ள உனது கால் நகம் வரைக்கும் என் நெஞ்சில் புகைப்படமாய்.. வந்து கொண்டே இருக்கிறது..

காலம் எவ்வளவோ வேகமாய்ப் போனாலும் அதைவிட வேகமாய் என் மனது உன்னைத் தேடிப் பறந்து கொண்டு இருக்கிறது. என்ன பேசினாய், ஏது பேசினாய் எதுவும் நினைவில் இல்லை.

உன்னை நான் மட்டும் தேடவில்லை; பக்கத்து வீட்டு வாண்டுகளும் "பிரவின் அண்ணா மீண்டும் எப்போ வருவாங்க?" என்று என்னை நச்சரித்துக் கொண்டு இருக்கின்றனர்.
அதில் நானும் அடங்கும் எப்போது மீண்டும் என்னிடம் வம்பு இழுப்பாய் என்று...

பட்டம் விட்டு சிறுவர்களோட சேர்ந்து நீயும் கண்ணாம்மூச்சி ஆடி..அவர்களில் ஒருவனாய்
நீ செலவிட்ட விடுமுறைத் தினங்கள் அவர்களோடுதான் அதிகம். இருந்தாலும், கிடைத்த இடைப்பட்ட நேரங்களில் என்னிடம் குட்டிக் குட்டி வம்பு, சண்டைகள் தவறாமல் இழுத்துக்கொண்டே தான் இருந்தாய். அப்போது உன் மீது இருந்த கோபம் தற்போது எங்கே போனதோ தெரியவில்லை. மறுமுறை வருவாயா தெரியவில்லை. ஆனால்... எந்தன் சிந்தனையில் விட்டுச் சென்ற உந்தன் நினைவுகள் அதிகம்.

தொடரும்...

கண்ணாடி
நானும் கண்ணாடி பார்த்தேன்
என்ன கோவமோ .
என் முகத்தை காட்டவில்லை..
மாறாக உன்னை நினைத்த
சந்தோசத்தை காட்டியது...!

Thursday, January 20, 2011

நிலவும் நினைவும் ....!


அழகான
இரவுகளின் நடுவில்
ஒரு நாளில் உன் முகம்
மேக இருட்டில் இருந்து
வெண்தங்கத்தை
முலாம் பூசிக்கொண்டு
கொண்டு
வான்வழியில் நீ
மாதம் ஒரு முறை
வந்து கரைந்து போகிறாய்..

உன்னைத் தொடும் முயற்சியில்
பூமியின் மேற்பரப்பில்
அடுக்கடுக்காய்
செங்கல்
எல்லாம்
வண்ணம் பூசிய
கட்டிடங்கள்..


நீடித்திடும்
இரவின் தனிமையில்
மட்டும் இல்லை..,
முடிந்து
போகும்
ஒரு
ஒரு
தினமும்
சருகுகளின்
மீது
கால் பதித்த
தடம்
போல
என்னைச்சிறைபிடித்திடும்
உந்தன் நினைவுகள்

தூரச்சென்று
திரும்பி பார்க்கும்
பார்வைகள்
நீண்டு போகாத
என்று எண்ணிய
நிமிடங்களும்
முடிந்து போகாத நாட்களும்
மறந்துவந்து
கரைந்து
போயின...

Monday, January 10, 2011

LEAVE LETTER

LEAVE LETTER

From:

N.Siva,

10th Standard "B" Section,

Anbaivida Ayutham Illai Primary School.To:

All Blog Owners,

Blogs follow dot.com,

All Blogs University Google,

U.S.A.

Sub:


Due to Exam am on leave....


Respected Sir/Madam (All Blog owners),

As am suffering from Exam fever..so am unable to Attend and see all the

blogs i follow and not able to put any comments. Please grant me leave for two

three month only.Thank you very much..


I wish All the blogs get over 100 comments for every post.

Thanking you,


Yours Obediently,

Name: N.Siva.

Date: 10.01.11


(P.K) SORRY FOR ANY SPELLING MISTAKES.THANKS IN ADVANCE)

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...