Monday, November 7, 2011

ஞாபகம் ...தீபாவளிஞாபகம்
தீபாவளி முடிந்து சென்னைக்கு கிளம்பிக்கொண்டு இருந்தேன், பேருந்தில் "பத்திரமா போய்ட்டு வா,போன உடனே கால் பண்ணு,மணி பர்ஸ் எல்லாம் பத்திரம்!" என்ற பாசமான உரையாடலை கேட்டுக்கொண்டே அப்போது என் கவனம் பஸ் ரேடியோவில் அரைகுறையாக இருந்தது, சார் இந்த பெட்டியை மேல வைக்க முடியுமா என்ற குரலை எங்கயோ கேட்டது போல இருக்கே என்று திரும்பி பார்க்கையில் ....

அருகில் அவள், அவளது அம்மா,ஒருவயது குழந்தை. வந்ததது கவிதா என்று புரிந்தது. "என்ன ஜீவா எப்படி இருக்க? உன்ன பார்ப்பேன் நினைக்கவே இல்லை..எங்க போற?" என்று கேள்வி மேல கேள்வி கேட்டு என்னை முழி பிதுங்க வைத்து விட்டாள்..சம்பரதாய விசாரிப்புகளுக்குப் பின் அவள் அம்மாவிடம் என்னை அறிமுக படுத்தி விட்டு அவள் புராணத்தை தொடர்ந்தாள்.

அருகில் இருப்பவர்களை பற்றி கவலை பட்டதாக தெரியவில்லைவில்லை, இப்பவும் அவளின் வெளிப்படையான தன்மை மாறவில்லை என்பதை கண்டு உள்ளுக்குள் சந்தோசம். வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஆம் ஆம் இல்லை என்று பதில் கூறுவதை விட வேறு வழி தெரியவும் இல்லை.

"பள்ளி முடிந்து பத்து வருடம் கழித்து முதன் முதலாக பார்க்கின்றேன், அதுவும் இந்த நிலைமையில் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை ஜீவா" என்றாள் மறுபடியும்..பிளாஷ் பாக்: பள்ளிமுடிந்ததும் அவள் அப்பாவிற்கு வேறு ஊருக்கு மாறுதல் கிடைத்து விட்டதாகவும், அங்கே கல்லூரி படிப்பு முடித்து கம்ப்யூட்டர் கிளாஸ் போய்க்கொண்டு இருக்கும்போது திருமணம் முடிந்ததாக கூறி முடித்தாள்.

சரவெடி வெடித்து முடிந்தது போல இருந்தது அவளின் உரையாடல்கள்..அவளிடம் பிடித்த விஷயம் ஒளிவு மறைவு இன்றி நேரடியாக பேசும் பண்புதான். இப்போவும் மாறாமல் இருக்கிறது, ஒருமுறை கணக்கு பாடத்தில் ஏதோ கேட்க எனக்கு தெரியவில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது கணக்கு வாத்தியார் வர இசகு பிசகாக மாட்டிக்கொண்டு அவர் என் காதைத் திருகி அடிவாங்கியதை அடிக்கடி சொல்லி கேலி செய்து பிறகு மன்னிப்பு கேட்டதும் திடீரென்று நினைவில் வந்து போனது.."உனக்கு ஞாபகம் இருக்கா ஜீவா என்னால தான அன்னைக்கு நடராஜன் சார் கிட்ட திட்டு வாங்கின?" என்று அவளும் நினைவு கூர்ந்தது எனக்கு வியப்பை கொடுத்தது.

வகுப்பில் எட்டு பேரு மட்டும் பெண்கள் மீதி நாற்பது பேர் பசங்க. அந்த எட்டில் கவிதா மட்டும் என்னிடம் பேசி பழகியது இப்போது நினைத்தாலும் கொஞ்சம் ஆச்சர்யமாய் இருக்கும்.
மற்ற நண்பர்களிடம் பழகியது போலத்தான் உன்னிடம் நட்புக் கொண்டு இருந்தாலும் மற்றவர் பார்வையில் தவறாய் படும் என்று விலகி விலகிப் போனது உனக்கு என்றாவது புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.
மறுபடியும் பேசிக்கொண்டே நேரம் போனது தெரியவில்லை, அவள் இறங்கும் இடம் வந்ததும்
"போயிட்டு வரேன் ஜீவா, கவனமா இரு, சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு!" என்று சொல்லிவிட்டு சென்றாள்.

சென்ற உடன் பள்ளி இறுதி நாள் அன்று என்னிடம் கேட்ட கேள்வி ஒன்று ஞாபகம் வந்து போனது. "ஜீவா என்ன கல்யாணாம் பண்ணிகிறியா?" அப்போதும் பதில் தெரியாத திரு திரு வென்று முழித்தது

நினைத்து எனக்குள் ஒரு குறும் சிரிப்பு
எப்போவும் வந்து போகும்..

diski:

சாமி இந்த ப்ளாக் படிக்கிறவங்கள மட்டும் காப்பாத்து..

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...