Sunday, April 24, 2011

எனக்குப் பிடித்த நாட்களும் நிமிடங்களும்...


இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதரும் ஒரு விதம், ஏன் ஒவ்வொரு தனி உலகம் என்றே சொல்லலாம்..

நான் சந்தித்த ஒரு சில நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்...

மும்முரமாய் மீன் குழம்பு வைத்துகொண்டு இருக்கும்போது ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது.
என் நண்பன் ரமேஷ் பத்து வருடம் கழித்து தொலை பேசியில் அழைத்து தன்னைக் கண்டுபிடிக்குமாறு கூறிய தினம், பிறகு கண்டு பிடிக்க இயலாமல் "நீங்கள் யாரு என்று கூறுங்கள்," என்று கெஞ்சி அவனிடம் திட்டு வாங்கி பிறகு நலம் விசாரித்து பழைய கதைகள் எல்லாம் பேசி சிறிது மகிழ்ந்த தினம் நேற்று.


பிறகு சாப்பிட்டு விட்டு அருகில் உள்ள பூங்காவுக்கு ஒரு நடைப்பயணத்தில்...
ஒரு அண்ணன் தங்கை இருவருக்கும் ஐந்தும் நான்கும் வயது இருக்கும். தன் தங்கை அழ அண்ணன் ஒரு கையில் இருந்த சாக்லட்டை அந்த தங்கையிடம் கொடுத்துக் கொண்டு இருந்த காட்சி மிக அழகானது. தங்கையும் பாதி கடித்துவிட்டு மீதியைத் திரும்ப அண்ணனுக்கு "இந்தா அண்ணே நீயும் சாப்பிடு," என்று கொடுத்த அந்தப் பாசமான காட்சி இன்னும் மனதில்....

முன்னர் ஒரு மாலை நேரத்தில் குட்டிக் குட்டிக் குழந்தைகள் மிக அழகாய் ஓடி விளையாடிக் கொண்டு இருந்தபொது அவர்களைக் கவனித்துக் கொண்டு இருக்கையில் ஒரு சின்னப் பையன் ஏதோ ஒன்றுக்குப் பிடிவாதம் பிடித்து, தரையில் விழுந்து புரண்டு பிறகு ஒருசில நிமிடத்தில் அதை மறந்து எழுந்து மற்றக் குழந்தைகளோட விளையாடச் சென்றது... அருமையான கணம்.


பிறகு பூங்காவில் வேகமாய் ஓடி வந்த ஒரு குட்டிப் பாப்பா கால் தவறி கீழே விழுந்துவிட்டது. அந்த நேரத்தில் யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, பார்க்க வில்லை என்றவுடன் வேகமாய் ஒரு புன்னகையுடன் விழுந்த அடி தெரியாமல் மறைத்துக் கொண்டு நடந்து சென்றதை தூரத்தில் இருந்து பார்க்கையில் மனதில் ஒரு நம்பிக்கை...


அருகில் உள்ள மரப்பலகையில் 'ஒரு காலத்தில் நானெல்லாம் அப்படி இப்பிடி' என்று மகிழ்ச்சியுடன் பழங்கதை கட்டிக்கொண்டு இருந்த பெருசுகள்.
அவர்கள் புன்னகையில் வாழ்ந்து மகிழ்ந்த சந்தோசம். அவர்களுக்குள் எவ்வளவோ சோகம் இருப்பினும் காட்டிக் கொள்ளாமல் அந்த நண்பர்கள் பேசிக் கொண்டு இருப்பதைக் கவனித்த நிமிடத்தில் நாளை நாமும் இப்படிதானே பேசிக்கொண்டு இருப்போம் என்று மனதில் சிரித்துகொண்டு இருக்கையில் ஒரு வித சந்தோசம்...

வாழ்க்கையில் இந்த நிமிடம் மட்டுமே இருப்பதாய் நினைத்து இருக்கும் நிமிடத்தை சந்தோசமாய் அமைதியாய் நகர்த்த வேண்டும் என்று எண்ணி வரும் பிரச்சனைகளை மன உறுதியுடன் எதிர்கொள்ள அவ்விடத்தை விட்டு மெல்ல காற்றடிக்கும் திசையில் நடக்க ஆரம்பித்தேன்....

நட்பில் பிரிவு என்பது இல்லை
அப்படி பிரிந்தால் அது நட்பு இல்லை

எதிர்பாரா அன்புதான் எப்போதும்
சந்தோசம் தரும்...
வாசித்தமைக்கு நன்றி
வாங்க வாங்க எல்லாம் வெயிலில் வந்து இருப்பீங்க. ஜில்னுனு ஐஸ்கிரீம் சாப்பிடுங்க...மீண்டும் சந்திப்போம்....

Wednesday, April 13, 2011

என்ன தலைப்பு வைக்க....?பொறுப்பு உணர்ச்சி :

நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு
இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம
ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!

நேத்து:
அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!


ஒரு குட்டி கதை:
அதாவது ஒரு காலத்தில் ராமு சோமு என்ற நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்
அவர்களில் சோமு ராமுவிடம் ராமு ராமு உனக்கு நல்ல நண்பனாக எப்பொதும் இருப்பேன்னு சொல்லிக்கிட்டு வந்தான் இதைக் கேட்ட ராமு உன்னை போல நண்பன் கிடைக்க குடுத்து வச்சு இருக்கணும் சொல்லி நன்றி சொன்னான் அப்போ அந்த வழிய ஒரு கரடி வந்துட்டு...
உடனே சோமு ஹயோ ஹயோ என்ன பண்றது தெரியலே அப்படின்னு ஓடி போய் மரத்து மேல் ஏறி அமர்ந்து கொண்டான் அப்பறம் ராமுக்குதான் மரம் ஏற தெரியாதே உடனே ஒரு யோசனை செய்தான் ராமு கரடி அருகில் வருவது போல் இருந்ததும் கீழே விழுந்து செத்து போனவன் போல கிடந்தான்..
கரடி அருகில் வந்து முகந்து பாத்து தூர போயிட்டு..அப்புறம் கரடி போனதும் சோமு ஓடி வந்து
ராமு கரடி உன் காதில என்னடா சொன்னிச்சு உன்ன எதுமே பண்ண வில்லையே என்ன சொல்லிடு போய்ட்டுன்னு கேட்டான்..அதற்கு ராமு துன்பம் வரும்போது கூட யாரு இருக்காங்களோ அவங்கதான் உண்மையான நண்பன் அப்டின்னு சொல்லிட்டு போனது என்றான். இதை கேட்ட சோமு வெட்கி தலை குனிந்தான். தனது தவறை மன்னிக்கும் மாறும் கேட்டான்..அப்பறம் இருவரும் நண்பர்களை சந்தோசமாய்
சென்றார்கள்....

தத்துவம் : அதிக அன்பும் மனதை கணக்கும் சுமை ஆகும்

வாசித்ததில் பிடித்தது:

குருநாதர் தான் வெளியூர் சென்று திரும்பும்முன் தான் எழுதிய நூலைப் படித்து முடித்துவிடுமாறு குருகுலத்தில் சீடர்களிடம் சொல்லிச் சென்றார் அந்த குருநாதர். எல்லோரும் முழுமையாகப் படித்து முடித்திருந்தார்கள். ஒரே ஒரு சீடர், அதில் ஒரேயொரு வரியை மட்டுமே படித்ததாக சொன்னார். மிகக்கடுமையாய் ஏசினார் குரு.

சீடர் முகம் வாடவில்லை. ஓங்கி அறைந்தார் குரு. அந்த இளைஞர் வருந்தவில்லை. சிறிது நேரம் போனது. அமைதியடைந்த குரு, அந்த சீடரை அழைத்து ”நீ படித்த வரி என்ன?” என்று கேட்டார். ”உன் கோபத்தைக் கட்டுப்படுத்து. எப்போதும் நிதானமாக இரு” என்பதே அந்த வாசகம். வெட்கித் தலை கவிழ்ந்தார் குரு. அந்த குரு, துரோணர். அந்த சீடர் தருமர்.....

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...