Thursday, December 26, 2013

123 test...

123 test....

அனைவருக்கும் அன்பான வணக்கம்..

நலம்

அனைவரும்நலமா... நலமாய் இருக்க வேண்டுகிறேன்...

பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு....

மறுபடியும் பதிவு உலக பக்க பிரவேசம்....(ஏன் இந்த பில்ட்இப்)... 

சூழ்நிலையும் சந்தரப்பமும் எதை செய்தாலும் முழு மனதோடு செய்ய வேண்டும் என்ற எண்ணமும் என்னை எந்த பதிவு உலக பக்கம் வர விடமால் செய்து விட்டது.

நீங்கள் அனைவரும் நலமாய் இருக்க இப்போதும் வேண்டிக்கொண்டு இருக்கிறேன்...யாரயும் மறக்க வில்லை பதிவு பக்கம் போகாமல் இருக்காலம் 
அன்பான என் உறவுகளை எப்படி மறப்பேன்...

எழுதியது சிலதான் எல்லாமே கொஞ்சம் மொக்கைதான். 
எனக்கு கிடைத்த உறவுகள் எல்லாமே வாழ்க்கையின் அர்த்தம் புரிய வைத்தன. ஏன் எழுதுகிறேன் என்று தெரியாமால் இருந்த எனக்கு 
நல்ல நட்புகளின் அரவணைப்பு மிகப்பெரிய சந்தோசத்தை நம்பிக்கை
ஏன் சில நேரம் சின்ன சின்ன கஷ்டமும் கொடுத்து இருக்கிறது.
எல்லாம் கடந்து போகும் என்று புலியூர் பூசரின் அறிவுரை எப்போதும் 
நினைவில் இருக்கிறது..

எல்லாருக்கும் நன்றி என்ற ஒரு சொல்லில் எழுதி அதைமுடிக்க விரும்ப வில்லை. அதற்கும் மேல் ஒரு அன்பு.
ஒரு சில அன்பானவர்களுக்கு அவர்களின் மீதுள்ள அன்பை பகிர விரும்புகிறேன் ஒரு ஒருத்தருக்கும் ஒரு பிரச்சனைகள் கடந்து அதை கடக்கும் சூழ்நிலையில் நானும் இருந்துகொண்டு இருக்கிறேன். என் அம்மா இம்மாவின் அன்பும் பிராத்தனையும் இல்லை  என்றால் பதிவு பக்கம் நான் இருந்து இருக்கமாட்டேன். அப்புறம் அத்தை பொண்ணு பொன்னி 


அவள் அன்பில் பாசத்தில் அது எல்லாம் உணர மட்டும் தான் முடியும். பிறகு என் உடன் பிறவா அக்கா காகிகத பூக்கள்  பிறகு என் தளம் வரும் அனைவருக்கும் 
என் அன்பாய் நன்றியை அற்பணித்து...

பிறக்க போகும் புது வருடம் அனைவருக்கும் 
எல்லாம் கிடைக்கும் வருடமாய் 
நலமாய் இருக்க புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்...


இருக்கிற ஒரு ஒரு நிமிடமும் எந்த ஒரு பிரதி பலனும்  எதிர்பாராமல் இருக்கும்  தருணத்திலும் தனிமை நிரம்பிய பொழுதுகளிலும் 
மிக சந்தோசமாய் இருப்பதை உணர்கிறேன்.

கஷ்டம் எல்லாம் பார்த்தாச்சு இனி என்ன இருக்கு...என்கிற சராசரி மனிதனாய் 
எல்லாம் ஏற்றுக்கொண்டு அடுத்து நன்மை வரும் என்ற நம்பிக்கையோடு 
நகர தொடங்குகிறேன்..

சாமி வர போற வருஷம் மொக்கைய எழுதாம நல்லதா ஒரு நாலு விசியம் எழுதி..(அப்படியே எழுதிட்டாலும்) எனக்கு தெரிந்த வற்றை எழுதாலாம் என்று இருக்கிறேன்.......எங்கயோ படிச்சது..

நமக்கு பிடிக்காத படங்களை பார்க்க எப்படி நாம் தவிர்க்க நினைக்கிறோமோ...
அதை போல காயபடுத்தும் நினைவுகளை தவிர்ப்பதும் நம்மால் முடியும்...
பிடித்த படம் மட்டும் பார்க்க நினைப்பது போல நம்மை சந்தோஷ படுத்தும் 
தருணங்களை நினைப்போம் சந்தோசமாய் வாழ தொடங்குவோம்...
வாழ்க்கை ஒரு முறை தானே...!

ஓகே நன்றி மீண்டும் சந்திப்போம்.....
9 comments:

Cherub Crafts said...

//எங்கேயோ படிச்சது // சத்தியமான உண்மை தம்பி.

Cherub Crafts said...

அம்மாவுக்கும் அக்காவுக்கும் நீங்க சந்தோஷமா இருந்தா அதுவே பெரிய சந்தோஷம் .
எங்க சிவா குட்டி எப்பவும் ப்ரொபைல் படத்தில் இருபதுபோல சந்தோஷமா சிரிச்சிட்டே இருக்கணும் இதுதான் எனது விண்ணப்பம் வேண்டுதல் எல்லாம்

Cherub Crafts said...

வரப்போகும் புத்தாண்டு என் தம்பிக்கு எல்லா ஆனந்தத்தையும் அள்ளித்தரனும்னு இறைவனிடம் வேண்டுகிறேன்

Siva sankar said...

So sweet anjukka

thank you...

asha bhosle athira said...

அடடா பில்லா றிட்டேனா இல்ல மறுபடியும் முருங்கில் ஏறியாச்சோ? நலம்தானே சிவா?

பொன்னிக் கதை உண்மையா இல்ல கற்பனையா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்? ஒரு தடவை உண்மைபோல சொல்லுவீங்க மறுதடவை பொய்யாக்கி ஜோக்காக்கி விடுவீங்க.. இந்த சுவீட் சிக்ஸ் டீன் குழம்பிக் குழம்பி தெளிகிறேன்ன்..பொன்னி விஷயத்தில்..

இம்மி அம்மாவையும் காணமே எங்கும்.. நான் அவவிக் கேட்டதாகச் சொல்லிடுங்க..
புது வருட வாழ்த்துக்கள்.. இவ்வருடத்தில் பொன்னியைக் கைப்பிடிக்க வாழ்த்துக்கள்.. சும்மா பிடிக்கிறேல்லை.. கல்யாணம் கட்டி, பிடிக்கச் சொன்னேனாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

இதுவும் கடந்து போகும்.... நான் நியூ வருடத்துக்குச் சொன்னேன்:)..

இமா said...

//அம்மாவுக்கும் அக்காவுக்கும் நீங்க சந்தோஷமா இருந்தா அதுவே பெரிய சந்தோஷம் .
எங்க சிவா குட்டி எப்பவும் ப்ரொபைல் படத்தில் இருபதுபோல சந்தோஷமா சிரிச்சிட்டே இருக்கணும் இதுதான் எனது விண்ணப்பம் வேண்டுதல் எல்லாம் //

நான் சொல்ல நினைத்ததை எனக்கும் சேர்த்து எழுதிய ஏஞ்சலுக்கு என் அன்பு நன்றி.

சந்தோஷமாக இருங்க சிவா மகன். நேரம் கிடைக்கும் போது ஒரு போஸ்ட் போடுங்க.

இமா said...

//இம்மி அம்மாவையும் காணமே எங்கும்.. நான் அவவிக் கேட்டதாகச் சொல்லிடுங்க..// :-) விசாரிச்சதுக்கு நன்றி அதீஸ்.

இமா said...

வாழ்த்துக்கள் சிவாமகன். :-) ஷெட்யூல் பண்ணியிருந்தேன். நான் வரும்வரை வெளியாகவே இல்லை. http://imaasworld.blogspot.co.nz/2014/06/blog-post_5001.html

Ramesh Ramar said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News

சமையல் ராணி கொடுத்தது

சமையல் ராணி கொடுத்தது
விருதுக்கு நன்றி ஜலில் அக்கா

Total Pageviews

நம்பவே முடியலைங்கோ ...

நம்பவே முடியலைங்கோ ...
விருது கொடுத்த மகிக்கு நன்றி

About Me

My photo

Hilo

Welcome With Vanakkam..


Followers

வந்து போன மகாத்மாக்கள் ...