Sunday, November 11, 2012

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்அனைவருக்கும்


வணக்கம்


வணக்கம்


வணக்கம்


முதலில் வாழ்த்து
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்


எல்லாரும் நலமுடன் நீண்ட ஆயுளுடன் நீடித்த சந்தோசத்துடன் இருக்க இறையை வேண்டிக்கொண்டு...


நீண்ட நாட்கள் ஆகிவிட்டது அனைவரையும் பார்க்க வேணும் போல இருக்கு இருந்தாலும் சூழ்நிலை சரிவர அமைய வில்லை, இருந்தாலும் எல்லாம் விரைவில் சரி ஆகும் நம்பிகையுடன் கிடைக்கும் நேரத்தில் பதிவு..


ஒரு நாள் கூடவிடுமுறை இல்லை தினமும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்,சற்று நேரம் கிடைத்தாலும் உறங்கத்தான் சரியாக இருக்கிறது .


எல்லாரும் முறுக்கு அதிரசம் லட்டு எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பார்சல் மறக்காமல் அனுப்புங்க அப்படியே ஸ்வீட்ஸ் சாப்பிட்டு போங்க.


சாமி இந்த வருஷம் எல்லாருக்கும் நல்லபடியா இருக்கணும்


கவிதை மாதிரி


நிலாச் சாரலில்

தினமும்

நனைய விரும்புகிறேன்


துவட்ட

உன்

நினைவு

இருக்கிறது


என்ற நம்பிக்கையில்!!!பின் குறிப்பு :

பக்கத்துக்கு வீட்டு குட்டீஸ் உடன் இந்த வருடம் கொண்டாட போகிறேன்

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்


இன்றே கம்பி மத்தாப்பு எல்லாம் கொளுத்த ஆரம்பிச்சாச்சு.....மீண்டும் சந்திப்போம்...Friday, July 27, 2012

மறுபடியும்...

வணக்கம் வணக்கம்
அனைவருக்கும்

கொஞ்சம் தாமதம் மன்னிக்கவும்...

காரணம் எப்போதும் போல வேலைகள் அதிகம்
கடமைகளும் சேர்ந்து என்னை கவலை இல்லாது வேகமாய் ஓட செய்து விட்டது.
அன்பான வலை உலக உறவுகள்,நட்புகள் இவர்கள் கொண்டுள்ள பாசம் என்னை மீண்டும்
வர வைத்து இருக்கிறது.

உண்மையில் வாழ்க்கை இத்தனை வேகம் நகரும் என்று எதிர்பார்க்க வில்லை.திடீர் திடீர் திருப்பங்கள் வரும் மர்ம நாவல் போல தொடர்கிறது.அதுகூட படிக்கும்போதுதான் வாழ்வின் திருப்பங்கள் மிக மிக சுவாரசியமாய் நகர்கிறது...

ஒரு சுழலின் வேகத்துக்கு ஈடுகொடுத்து அடுத்த கரைக்கும் தொடுவதருக்குள் அடுத்த அடுத்த சுழல்! என்ன இருந்தாலும் சமாளித்து மெதுவாய் ஆற அமர உணர்கிறேன் வாழ்வின்
ஒரு சிறிய கணத்தை!இன்னும் நிறைய இருக்கிறது என்று உணரும்போது சிறிது மயக்கம் .
இருந்தாலும் சமாளித்து விடுவேன் என்ற நம்பிக்கையின் ஊடே போகிறேன் விடை தெரியாத வாழ்வை நோக்கி....

இத்தனை கஷ்டம் இருந்தாலும் அன்பான உறவுகள் நட்புகள் கூட இருக்கும்போது கஷ்டங்கள் தெரிவது இல்லை. சூழ் நிலையும் சந்தர்ப்பமும் சரியாய் இல்லாது போனாலும் மீண்டும் நேரம் கிடைக்கும்போது எல்லாம் வலை உலக உறவுகளை சந்திக்க வருவேன் என்ற நம்பிக்கையோட..

இது மகிமாவுக்கு ஒரு சின்ன கிப்ட்இது அஞ்சு அக்காவுக்கு உங்களுக்கு.
இது பேபி அதிராவுக்கு
இது கிரி அக்காவுக்குஇமா அவர்களுக்குபிறகு அனைவருக்கும்இது என் அத்தை பொண்ணு பொன்னிக்கு...


மறுபடியும் ஒரு மழை
ஒரு மாலை நேரத்தில்
மழைவரும் பொழுதில்
சில துளி சாரலில்
ஒற்றை குடையில்
இருவரும் இருக்கும்போது
மிதக்கும்
மௌனம்
ஒரு கவிதை ஆகிறது....

ஓகே மீண்டும் சந்திபோம் விரைவில்
இந்தியா ஒலிம்பிக்கில் நிறைய பதக்கம் பெற்று வர
எங்கள் சங்கம் வாழ்த்துகிறது..

Tuesday, May 29, 2012

தூங்கும் போதும் நீ அழகுதான் .....


முயற்சித்து
நடந்து கொண்டு
இருக்கிறேன்
புதிய பாதை
நோக்கி
அங்கும்
ரெட்டை கோடுகளாய்
ரயில் தண்டவாளம்
எது வரை
போகும்....


பூ ஒன்றுக்கு
உனது புன்னகை
வேண்டுமாம்
கொஞ்சம்
எட்டிப்பார்த்து
விட்டு போயேன்!!தூங்கும் போதும்
நீ அழகுதான்
மெல்ல முழிக்கும்
போதும் அழகுதான்
காரணம் அது
உன் வீட்டு
செல்ல நாய்க்குட்டி..!

Monday, May 14, 2012

சின்ன சின்ன நியாபகங்கள்

அதாவது ஒரு காலத்தில் கி.மு, கி.பி,கோ எல்லாம் உடனே போய்ட கூடாது ஓகே..

ஏழாவது படிக்கும்போது நடந்த ஒரு சின்ன சம்பவம்...

நானு,லவா (குமார்) அவனுக்கு முடி சுருட்டை சுருட்டையா இருக்கும் அதனால அந்த பேரு)
அப்புறம் பாத்திர கடை மகேஷு அப்பறம் ரமேஷ் அப்புறம் கதை மாதவன் நாங்க ஒரு குரூப் பிறகு மாதவன் கதை சொல்லும்ஸ்பெஷலிஸ்ட்.
சமுக அறிவியல் ஆசிரியர் வருவார் வந்து யாரவது ஒரு பையன எழுப்பி விட்டு நீ நாலாம் பாடம் முதலாம் பானிப்பட்டு போர்ல இருந்து படின்னு சொல்லிட்டு தூக்கம் கொள்ள ஆரம்பித்து விடுவார்..திடிரென்று யாரையாவது ஒருவனை எழுப்பி அவனை படிக்கச் சொல்லுவார்,அவர் தூங்கறது யாருக்கும் தெரியா கூடாதாம்.நாங்க மனசுக்குள்ள திட்டுவோம்...மகேஷ் திட்டறதுதான் செம சிரிப்பா இருக்கும்..செம விட்டு அடிச்சுக்கிட்டு இருப்போம்.

அப்புறம் அந்த அதிக சத்தம்போட்டு ஒரு பையன் மைக் இல்லாம படிக்கும் சுகுமார் அவ்வளோ சத்தமா படிப்பான். பயபுள்ள உள்ள மைக் ஏதும் வச்சு இருக்கோணு அவன் படிச்சு முடித்ததும் நாங்க கிண்டல் பண்ணுவோம்.அவன் அவன் கடமையே என்று படிக்க நாங்கள் எங்கள் கடமையை செய்துகொண்டு யாரு கவனிச்சா நாங்க ஒரு பக்கம் அமைதியா பட கதை கேட்டுக்கொண்டு இருப்போம்.

நம்ம கதை மாதவன் விலாவரியா அப்படி இப்படி என்று அழகா சொல்லுவான். அவனுக்கு மதியம் கடலை மிட்டாய் வாங்கி கொடுத்தால்தான் மீதி கதை தொடரும் அது வேறு விசியம்இப்படி இருக்கையில்ல ஒரு நாள் வாத்தியார் எழுந்து அவன் விட்ட இடத்தில இருந்து படின்னு சொல்ல நம்ம லவாகிட்ட சொல்ல அவன் வேற பக்கம் படிக்க ஒரே சிரிப்பு அலை..அப்பறம் நடந்தது என்ன உங்களுக்கு தெரிந்து இருக்குமே.செம திட்டு அடி வேற லாவவுக்கு எங்களுக்கு ரொம்ப கஷ்டமா போயிட்டு.அதனால நாங்க உடனே மீட்டிங் போட்டு நம்மல்ல ஒருத்தர் யாரும் படிச்சா அதை கவனிக்கணும் என்று கேட்கும்போது இந்த வரி என்று காட்டணும்..அப்பறம் அடி வாங்கறது இல்லை அந்த பொறுப்பு நம்மகிட்ட வந்தாச்சு..

பிறகு பரீட்சை பற்றி இந்த பாடத்தில் நம்ம மகேஷு பதில் எழுதி இருந்தான் பாருங்க அட இப்படி எல்லாம் நாங்க எழுதுவான்னு நினைச்சுக்கூட பார்க்கவில்லை."இந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது அதனால் மார்க் போடவேண்டாம்" என்று எழுதி இருந்தான் ".அடுத்தநாள் பேப்பர் கொடுக்கும்போது வாத்தியார் அதை படித்து காமித்து நாலுபோடு போட்டது வேறு கதை.

இப்போ பார்த்தாலும் என்னடா அப்படித்தான் இன்னும் எழுதிக்கிட்டு இருக்கியான்னு கேட்டு கிண்டல் பண்றது உண்டு.

ஒரு ஒரு நாளும் ஒரு கலாட்டா நடக்கும்,ஊரில உள்ள கதை எல்லாம் திரைக்கதை போல மாதவன் சொல்லுவான் என்னன்னா சொன்ன படத்தோட கதைய திரும்ப வேற கதை கேக்கும்போது அதை மிக்ஸ் பண்ணி சொல்லும்போது பிடிச்சுடுவோம்..டே இந்த கதை நேத்து சொன்ன அப்டின்னு கேட்ட இல்லடா மறந்து போச்சுன்னு சொல்லி அடிவாங்காம தப்பிடுவான்.ஆனால் அவன் இப்போ கதை சொன்னாலும் கேக்கலாம்.இப்படி பல கதை இருக்கு நேரம் கிடைக்கும்போது சொல்றேன்.ஓகே ஸ்டார்ட் மியூசிக்
இந்த வாரம் அனைவருக்கும் இனிதே தொடரட்டும்.

அன்புடன்
சிவா

படங்கள் உதவி
நன்றி கூகிள்

Wednesday, May 9, 2012

மீண்டும் அடுத்த கடிதத்தில்..
எப்படி இருக்க பொன்னி நலமா
அத்தையும் மாமாவும் நலமாய் இருப்பார்கள் என்று நம்புகிறேன்
இங்கு நண்பர்கள் அனைவரும் நலம்

கடந்த முறை வந்த போது சில நிமிடங்கள் தான் உன்னை பார்த்தாலும் அதிகம் பேச முடியவில்லை சூழ்நிலையும் சந்தர்ப்பமும் இடைவெளியை ஏற்படுத்தி கொடுத்துக்கொண்டே இருக்கிறது இருந்தாலும் இந்த தூரத்தின் பயணத்தில் எல்லாம் நீ அறிவாய் என்று அமைதியாய் ஏற்றுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு முறையும் வரும் வரை காத்து இருந்து வந்த பிறகு விரைவில் சென்று விடுவாய் என்று சொல்லும் ஒரு ஒரு நேரத்திலும் வரும் வலிகள் கண்ணீராய் வெளிப்படுகையில் தூசி விழுந்தது என்று துடைக்கும் உனது பாங்கிலும் நலம் விசாரிப்பிலும் அன்பாய் பார்க்கும் ஒரு பார்வைக்கும் பதில் தெரியாமல் மருகுகிறேன்.

இந்த பாசம் எப்பொதும் வேண்டும் என்றுதான் தள்ளி போய்க்கொண்டு இருக்கிறேன்
கணக்கிலா அன்பை கொட்ட நீ இருக்கும்போது என் ஆயுசுக்கும் பாசம் தர நான் இருக்கிறேன் என்று சொல்ல முடியாமல் இருக்கிறேன் எனக்குள் மட்டும் சொல்லிக்கொண்டு.

ஊருக்குள் எங்க மாமா வந்து இருக்காக என்று சொல்லும்போது உன் கண்ணில் காணும் சந்தோசத்தை காண திரும்ப எப்போது வருவேன் என்று ஏங்குகிறேன்.

பிறகு நம்ம அசின்னு தமன்னா


எல்லாம் வீட்டில் விற்று விட்டதை அறிந்தும் தற்போது ஹன்சிகா
மட்டும் வைத்து இருப்பதை அறிந்து கொஞ்சம் வருத்தம் முற்றேன்.

புல்லறுத்து கொண்டு நேராக அசினுக்கும் தமனவுக்கும் நீ புல் வைக்கும் சாக்கில் பேசிக்கொண்டே போவது எனக்கு பிடிக்கும். பாவம் வாய் இருந்தால் அழுது இருக்கும் என்னை போல..

எல்லாம் விட்டு தனியாக இருப்பது சற்று கடினம்தான் என்று சொல்லிக்கொண்டே வீட்டில் மாப்ளை பார்த்துக்கொண்டு இருக்காக என்று வார்த்தைகளை முழுங்கி சொல்லும்போது என்ன சொல்வது நிஜமாய் அந்த நிமிடங்கள் கனக்கிறது.

கடந்த முறை மாமா அத்தை சொல்லும்போது வேலை இல்லாத சூழ்நிலையில் எப்படி பேசுவது என்று தெரியாமல் இருந்து விட்ட நிலையில் திரும்பவும் உங்கள் வீட்டில் வேறு வரன் பார்க்கும் செய்தி கொஞ்சம் தடுமாற்றம் கொடுக்கிறது.

என் சார்பில் பேச யாரும் இல்லை என்ன பேசவது என்று தெரியவும் இல்லை
இருந்தாலும் ஒரு நம்பிக்கையில் வாழ்கிறேன்.

எட்டாம் வகுப்பு தேர்வில் முதல் மார்க் வாங்கியதற்க நீ கொடுத்த இங்க்பேனா இன்னமும் பத்திரமாய் இருக்கிறது.

பிறகு விரைவில் ஊருக்கு வருகிறேன்
ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடு,கவலை படாத பொன்னி எல்லாம் சரி வரும்

மீண்டும் அடுத்த
கடிதத்தில்...
சும்மா 1 :)

மழை வரும் நேரத்தில்
குடை இல்லாமல் நனைகிறேன்
உன் நினைவுகளில்

டிஸ்கி :
சும்மா ஒரு கற்பனையில் எழுதியது
இக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே :)

Thursday, April 19, 2012

இன்னொரு நிஜம்...


எதிலிருந்தும் விலகிவிட முடியும்
என்று தோன்றவில்லை.
நெருங்கிவிடவும் கூடவில்லை
என்பதுதான் துயரமான
இன்னொரு நிஜம்.
-வண்ணதாசன்.

Thursday, April 12, 2012

தனியே ஒரு நடைப்பயணம்.தூக்கம் வராத பொழுதில்
தனியே ஒரு நடைப்பயணம்...

இரவு
போக்கில்
நடந்து

தலை அசைத்து பேசி மகிழும்
மரங்களை
கண்டு முகம் மலர்ந்து
என்ன பேசிக்கொண்டன என்று யோசித்த போது

மரங்களை பார்த்தேன்
அடர்ந்த புன்னகையை தென்றலாய்
மேலும் வீசி
என்னை மௌனிக்க செய்தது

அமைதியாய் நடக்க ஆரம்பித்தேன்
ஏதோ ஒன்று கொஞ்சம் யோசிக்க செய்தது

அலுவலகம்
போகும்போது
வரும்போதும் சரி
நிதானமாய் போவோம்
என்ற வார்த்தைகூட வேகமாய்தான்
வருகிறது...

விடியலில் ஆசையாய் அசதியில்
ஐந்து நிமிட குட்டி தூக்கமும்
அவசரகதில் எழுந்து
பறந்து பறந்து
தொலைந்து போகிறது கனவுகள் எல்லாம் ...எழுந்து எங்கே செல்கிறோம்
இறுதியில்
ஒன்றுமே இல்லமால் போகும்
நமக்காக
இவ்வளவு வேகமாய்
செல்கிறோம்பொய்யாய் நடிக்கும்
உலகத்தில் நானும் இருக்கேன் என்று நடித்துக்கொண்டே
இருக்க எனக்கு பிடிக்கவில்லை
இருந்தாலும்
யாருக்காகவது
நடித்தே ஆகவேண்டி இருக்கிறது

என் கனவுகள் எல்லாம் இங்கு இல்லை என்பது மட்டும் நிஜம்.


டிஸ்கி:
பதிவு உலக மற்றும் அனைவரும் நலமாய் இருக்க பிராத்திக்கிறேன் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பதற்றத்தில் இருந்து விடுபட வேண்டுகிறேன்.
ஒரு சுனாமி பாதிப்பே இன்னும் முடிய வில்லை முழுவதும் மறுபடியும் என்றால்...வார்த்தைகள் இல்லை..

Wednesday, March 14, 2012

சந்தோசமாக...!

பகிர படாத
உணர்வுகளை
எல்லாம்
என் மௌனங்களின் மூலம்
தெரியப்படுத்த
விரும்புகிறேன்..

எப்பொதும்
மௌனமாய் இருக்கும் நீ
என்றாவது ஒரு நாள்
புரிந்துகொள்வாய் என
பத்திரமாய்
வைத்து இருக்கிறேன்...!

தினம் தினம்
பேசும் வார்த்தைகள்
எல்லாம்

நிமிடமாய்
கரைந்து
போனாலும்

மௌனமாய்
உன் கண்கள்
பேசும்
வார்த்தைகளை...

என்மனம்
ஆயுள் முழுவதும்
அசைபோட்டுக்கொண்டு
இருக்கும்.....!

மறுக்கப்பட்ட
விடுதலை போல
சிறைப்பட்டேன்
உந்தன்
பார்வையில்....!

இருக்கும் வரையில்
உன் நினைவோடு
வாழ்ந்து...

இறந்தும்விடுவேன்..
சந்தோசமாக.

Wednesday, March 7, 2012

மழை!!!

உன் இரு
விழிகளும்
மழைத்துளியில்
விளையாடும்
கன நேரம்
கரைந்து
போகிறேன்!மழையில்
விழாத
உனது நிழலை
பிடிக்கும்
நாளுக்காய்
மழையில்
நனைந்து
காத்து
இருக்கிறேன்!
மெல்லிய
சாரலில்
வானவில்லாய்
உன் புன்னகை!

இடி
மின்னலாய்
கோவப்பார்வை!குடை
இருந்தும்
நனைந்து
நான்!

எப்போது முடியும்
இந்த
மழை!!!

Monday, March 5, 2012

பார்வை....

உன்னைத்
தொடர்ந்த நாட்கள்..
அழகாய் வாழ்ந்த நாட்கள்..
நீயும் பேசவில்லை
அதை நானும்
எதிர்பார்க்கவில்லை!!!


ஆனாலும்..
அந்த ஒரு பார்வை
பார்க்கும்
நிமிடத்திற்காக
உன்னை நான்
தொடர்ந்தேன்..!!!

ஒரு முறைப்பா
இல்லை அழைப்பா
எனக்குத் தெரியாது
ஆனால்
பிடிக்கும்..!!!

உந்தன்
பார்வையின்
நிழலையும்
தொட்டது
இல்லை நான்..!

பேச நினைக்கும்
நேரத்தில்
விலகிப் போனாய்,

யாரும் நம்மைப் பற்றி
பேசிவிடக் கூடாது
என்பதற்காக

எந்தன்
நேசம்
தொடரவும்
இல்லை,

முடியவும்
இல்லை!!!

DISKI:)
எல்லாம் முன்பு எழுதிய கிறுக்கியவை
கோடி நன்றிகள் இமா டீச்சர் :)

Monday, February 27, 2012

வணக்கம்

வணக்கம்(வணக்கம் எல்லாம் நல்லாத்தான் சொல்ற)
ப்ளாக் ஒன்று இருப்பதே மறந்து போயிட்டு
அந்த அளவுக்கு சூழ்நிலை உருவாகி விட்டது
கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாம் சரி செய்து வருவதருக்குள் ஒரு மாதம் என்னை கேட்காமல்ஓடி விட்டது .

என்னங்க பண்றது ஒரு பிரச்சனை முடிந்த கையோட வேற பிரச்சனை
ஒன்று ரெடியா இருக்கு..

யாருக்கு பிடிச்சு இருக்கோ இல்லையோ எனக்கு பிரச்சனைகளை மிகவும் பிடித்து இருக்கிறது.
எவ்ளோ அடிச்சாலும் தாங்குறத போல எவ்ளோ நாள்தான் ஓடிட்டு இருக்கிறது.
ஒரு வழியா பிரச்சனைகளை பட்டியல் இட்டு ஓரம் வைத்து விட்டு வருகிறேன்.

ம் கொஞ்சம் அசந்து யோசிக்கும்போது

தோன்றியது
வாழ்க்கை
ஏன் எதுக்கு எப்படின்னு
எப்படி வாழ்வது சரியாய் இருக்கும் பல கேள்விகள்,சந்தேகங்கள் எழுகிறது.
எந்த அளவுகோல் போதும் என்ற நிலையை கொடுக்கும் என ஏகப்பட்ட கணைகள் தொடர்கிறது.

ஒன்று புரிந்து கொண்டேன் ரொம்ப யோசிக்கவே கூடாது யோசிச்ச அப்பறம் எதுவுமே இருக்காது.

தற்போது யாருக்கும் உதவி செய்தலும் பின்னால் எனக்கு உபத்திரம் ரெடியாக இருக்கும் என்று பட்சி சொன்னாலும் கேட்பதில்லை..உதவ முடியாமல் இருக்கும் தருணத்தில் மனசாட்சிக்கு வேற பதில் சொல்ல வேண்டி இருக்கு.

என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப ஒன்னும் பண்ண வேணாம் அது அது நடக்க வேண்டிய நேரத்தில தான நடக்கும் நீ இப்போ
ஒழுங்கா ப்ளாக் எழுதி மக்களை காப்பாத்து என்று கட்டளை இட்ட ஒரு குரல்
என்னை இங்கே திரும்ப கிறுக்க வைத்து இருக்கிறது.

ஹ்க்கும் அப்படியே எழுதி விட்டாலும் அப்படின்னு யாரோ அங்க நினைப்பது உணர முடிகிறது.விடுங்க விடுங்க அரசியல இதெல்லாம் சாதாரணம்...

வாழ்க்கையின் போராட்டங்களை சந்தோசமாய் ஏற்றுக்கொள்ள துணிந்துவிட்டேன்

தங்கிவிட்ட
வலிகளும்
பழகிவிட்ட
ஏமாற்றமும்
எதுவும் கடந்து போகும் என்ற நிலையும்
உணர்ந்து தொடர்கிறேன்..

காபி,காபி
ஒரு சிறுகதையில் கணவன் மனைவி அன்பாய் தரும் காப்பியை இப்படி வர்ணிக்கிறான்
கணவன் '' காபி,காபி,என்று சொல்லிக்கொண்டே ஒரு திரவத்தை குடித்தேன் ''சக்கரை இருந்ததா என்றால் தெரியவில்லை ,சூடு இருந்ததாய் (நமக்கு என்னைக்கு இருந்து இருக்கு )நினைத்துக்கொண்டு குடித்தேன் என்றான் கணவன் .ஆக அந்த காப்பி எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன். சினத்தை குறைக்க ஒரு புன்னகை தோன்றியது.விரும்புகிறேன்

உறக்கத்தில்
உன் விழி ஓரம்
அருகும்
புன்னகையாய்
பூத்திருக்க
விரும்புகிறேன்

ம் ..
காற்றுடன்
கலந்துவிடேன்
என்கிறது மனம்
உன் நெற்றியில் தவழும்
முடியை பார்க்கும்போது
எல்லாம்....

கோவத்தை கூட அன்பாய் காட்டு என்ற இனிய பழமொழி நியாபகம் வருகிறது..
அதனால் கவிதை எல்லாம் படித்து விட்டு கோவபடமா கம்மேன்ட்ல காட்டுங்க

டிஸ்கி :
தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அகில உலக பேபி அதிரா ரசிகர் மன்றம் சார்பில்
நகைச்சுவை அரசி பேபி அதிரா
அவர்களுக்கு பதினாறாவது((பேசியபடி அமௌன்ட் செட்டில் பண்ணிடவும்)
பிறந்த நாள் வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday, February 1, 2012

BILLA IS BACK
THE BILLA IS BACK....

(BILLA=SIVA)
JUST summa

என்ன நட்புகளே அனைவரும் நலமா.
கொஞ்ச நாட்கள் கழித்து...


விடுமுறை விரைவாக முடிந்து அரக்க பறக்க ஓடி வர மனம் இல்லாமல் நின்று நிதானமாய் வந்து பார்க்க விரும்பியதால் கொஞ்சம் தாமதம்.மன்னிக்கவும்

சென்று வந்த விடுமுறை அனைத்தும் நிறைந்த அழகான பயணம்
நிறைய (ஏ)மாற்றங்கள் சுற்றத்திலும், எல்லாம் நன்மைக்கே என்று அடுத்த படி நோக்கி நகர்கிறேன்.


நேரம் சரி இல்லை:(
கோவப்படும் ஒரு ஒரு நேரமும் எமனாகி போய்கிறேன் எனக்கே..ஏன் கோவப்பட வேண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் அப்புறம்தான் வருகிறது ..கொஞ்சம் நிதானமாய் இருந்து இருக்கலாம் என்று என்னும்போதும் எல்லாம் முடிந்து போய் இருக்கிறது இனிமேலாவது சற்று நின்று நிதானமாய் செல்ல விரும்புகிறேன். இந்த ஏழரை சனி எனக்கு முன்னால் நின்று நிதானத்தை இழக்க வைக்கிறது.(வீட்டில சொன்னாக நமக்கு நேரம் சரி இல்லையாம்..)வாட் டு டூ. இது செய்தலும் தவறாக படுகிறது, நான் நானாக பார்க்க படவில்லை என்று நினைக்கும்போதுதான் கோவமும் வருத்தமும் வருகிறது என்னதான் சுற்றமும் உறவுகளும் இருந்தாலும் நம் கையில் நாலு காசு இருக்கும் வரைக்கும்தான் நாம் வாழ முடியும்.

பணம்தான் உயிர்:

உயிர் இல்லா அச்சிட்ட காகித பேப்பருக்கு இருக்கும் மதிப்பு
உயிர் உள்ள மனிதருக்கு இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது..

ஒரு செயலும் வருத்தமும்
தவறு செய்ய யாரும் கொஞ்சம் கூட யோசிக்க வில்லை பார்த்த வரையில் பழகிய வரையில் நியமாய் இருப்பதை யாரும் மதிப்பதே இல்லை.அவரவர் வேலை முடிந்தால் சரி .

நேரம் இல்லை :(


நட்பும் சுற்றமும் பார்த்த வரையில்
நின்று பேச யாருக்கும் நேரம் இல்லை...ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் ஊரில் அப்படி எங்க என்ன பண்றங்கானு தெரியல. ஒரு ஒரு விசியமும் தாமதமாய் தான் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது அலுவலகம் முதல் அனைத்தும். தொலை பேசியில் கூட யாரையும் தொடர்பு கொள்ள முடிய வில்லை அனைவரும் அவ்ளோ பிஸி..

தொலைவில்
கண்டுகொண்டு
அருகில் இருந்தும்
வாகனத்தில்
தலையாட்டிவிட்டு
மட்டும் செல்லும்
நட்புகளும்

ஒன்றாய்
நடந்து சென்று
பழகிய நாட்களை
மறக்க செய்கின்றன

சோகம் :
விபத்து
கண் எதிரே இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு ஒருவர் இருந்த கிடந்தது தூரதில் அவர் உறவினர் அடிப்பட்ட நிலையில் அழுதுக்கொண்டு இருந்தது. .
கவனித்ததில் தலைக்கவசம் அணியவில்லை எவரும்.

என்னால் எந்த உதவியும் முடியாமல் போக வருத்தத்தில் ஆண்டவனிடம் மன்னிப்பு கேட்டு அந்த இடம் விட்டு நகர்ந்தாலும் இன்னும் நெஞ்சம் விட்டு அகல வில்லை.

கொஞ்சம் கூட கவனம் இல்லை,பாதுகாப்பு பற்றி அக்கறை இல்லை,சாலைகள் நன்றாக இருந்தும் தவறு நம் மீது இல்லாது இருந்தும் இறப்புகள் பல கண் முன்னே.அவரவர் அவரவர் வேலை பார்த்துக்கொண்டே போய்க்கொண்டே இருக்கின்றனர் அவர்களுடன் நானும்...

தினமும் இட்லி:)


குறைந்த நாள் என்றாலும் இருந்த நாட்களில் வீட்டில் அதிகம் இருந்தேன்.பஞ்சு பஞ்சாய் இட்லி.வகை வகையாய் சட்டினி ,பொடி, சாம்பார் ,என்று எதையும் விட மனம் இல்லை..அம்மா கையால் எல்லாம் சாப்பிட்டு உறக்கம்.அம்மாவுக்கு காய்கறிகள் நறுக்க உதவி என்று நாட்கள் வெகு விரைவாய் சென்றது.

ஒரு நிம்மதி

ஒரு LIC பாலிசி ஒன்று அப்பாவின் பெயரில் போட்டுவிட்டு வந்தது..

ஒரு சந்தோசம். ஒரு இணைய நட்பை அவர் வீட்டுக்கு சென்று பெற்றோருடன் சந்தித்தது அவருடன் அவர் வீட்டில் வடை பாயசம் சாம்பாருடன் ஒரு கட்டு கட்டியது.கொஞ்சம் நேரம் இருந்தாலும் சந்தோசமாய் கழிந்து நெஞ்சில் எப்பொதும் இருக்கும்.

பிறகு சென்று வந்த ஒரே இடம் திருச்செந்தூர் முருகன் கோவில்.
முதன் முறை சென்று இருக்கிறேன்.ஒரு அனுபவம் மேல்சட்டை எல்லாம் இல்லாமல் போக வேண்டும்..அது பற்றி அடுத்த பதிவில் (நாம அடுத்த போஸ்ட் போடணும்ல)

எப்பொதும் தனியாக இல்லை அப்பாவுடன் மட்டும் ஏர்போர்ட் வருவேன் இந்த முறை
அம்மா அப்பா தம்பி அனைவரும் கூட வந்து வழி அனுப்பி (தள்ளி) விட்டனர்...

எங்க பார்த்தாலும் ஒரே பீலிங்க்ஸ் ஒப் இந்தியா..என்னமோ வேற கிரகத்துக்கு போவது போல ஒரு உணர்வு...

போகும்போது இரவில் விமானம் விட்டு இந்தியா மண்ணில் இறங்கும்போது திருப்பாச்சி விஜய் பாணியில் காலை சுழற்றி ஒரு SLOW MOTIONஇறங்கலாம்னு பார்த்தா பின்னாடி இருந்த ஒரு அவசரபயணி ஒரு பார்வை பார்க்க(!) அந்த வழியயை பின்பற்றமால் நல்ல பிள்ளையாய்

வந்ததது குறிப்பிட தக்கது.
பயணம் தொடரும்.

Wednesday, January 11, 2012

பொங்கல் வாழ்த்துக்கள் ...

அனைவருக்கும்

வணக்கம்(/\)
வணக்கம்(/\)
வணக்கம்(/\)


அன்பான தைத்திருநாள் வாழ்த்துக்கள்.கடந்த வருடம் ரொம்ப
கடினமான நிமிடங்களும் சந்தோசமான தருணங்களும் கலந்து
அழகாய்க் கடந்து போனது.

அன்பே உருவான பாசமான பதிவு உலக உறவுகள்... மற்றும் கிடைத்த நட்புக்கும் நட்பின் பாசத்துக்கும் அனைத்துக்கும்இறைக்கு நன்றி. (தேங்க்ஸ் பிள்ளையாரப்பா)

பொங்கல் எங்கே வைத்தாலும் பொங்கல் பொங்கல்தான்..
அதனால் எங்கே இருந்தாலும் பொங்கல் வைத்து
கொண்டாடுங்க.

பொங்கலுக்கு ஊருக்குப் போறேன்... .
ஊரில் விளம்பர தட்டி எல்லாம் கட்டி வரவேற்பு பலமாய் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ம்... ரொம்ப வருஷம் கழிச்சு அம்மா, அப்பா, தம்பிங்க எல்லோரும்ம் சேர்ந்து கொண்டாடப் போகிறோம். ஒரு பக்கம் சந்தோசமா இருந்தாலும் மறுபக்கம்... திரும்பி வரப்ப ஒரு கஷ்டம் வரும் அதை நினைத்தால் போக விரும்பவில்லை.போகாமல் இருந்தால் இன்னும் வருத்தம் வரும்.

போக வேண்டாம் என்று இருந்தேன். வீட்டில் இருந்து திரும்பத் திரும்ப அழைப்பு, மறுக்க முடியவில்லை. அதனால் இங்கு உள்ள வேலைகள் எல்லாம் வேகவேகமா முடித்து வேறு ஒரு நண்பரிடம் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன், ஒரு பதினைந்து நாள்... இல்லை இருபது நாட்கள் இருப்பேன்.

பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க வந்துவிடுவேன்
வீட்டில் நெட் வசதி இல்லை..நெட் செல்வது கடினம் தான்
ஊரில் இருக்கும் அத்தனை நாளும் நெட் பக்கம் போகமாட்டேன் விடுமுறை விட்டாச்சு......

பிறகு வீட்டில் அம்மாவுக்கு அப்பாவுக்கு தம்பிக்கு எல்லாம் எனக்கு தெரிந்த சமையல் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். (என்னை சமைக்க விடமாட்டார்கள் என்று தெரியும். கடந்த முறை சாதம் வைத்ததில் அடிப்பிடித்து ஒரு பாத்திரம் பயன்படுத்த முடியாமல் போனது குறிப்பிட வேண்டிய தகவல்.) இந்த முறை அப்படி ஏதும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுவேன். :)

சிவன் கோவில், பெருமாள் கோவில் எல்லாம் போகணும். அங்கே பொங்கல் சாப்பிடணும். (பிரதோஷம் அன்று தயிர்சாதம் புளியோதரை அருமையாய் இருக்கும்.)

சைக்கிள் எடுத்து ஊர் எல்லாம் சுத்தி வரணும். அத்தை பொண்ணு பொன்னிக்கு கல்யாணம் ஆகிட்டான்னு தெரியல, விசாரிக்கணும். :)டிஸ்கி 1:


பிறந்த நாள் வாழ்த்து

வாழ்த்த வயதில்லை இருந்தாலும்
வணங்கி மகிழ்கிறோம்

இவர் பற்றி...

கற்பனையின்
வடிவம்
காகிதமாய் இருந்தாலும்
கண்ணாடி
உடைந்தும் போனாலும்
உருவம் கொடுக்கும்
பிரம்மா.

கண்டிப்பில்
கனிவான
வாத்தியார்
வளர்ந்தும் வளர்ச்சி அடையாத குழந்தைகளுக்கு
அன்பாய் சொல்லி தரும்
அன்னை தெரசா!

ஆமை முதல் பட்டம் பூச்சி வரை இவர் வீட்டில் இடம் உண்டு...

நாளை 13.01.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு அனைத்து உலக தலைவர்களும்,பதிவு உலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவிக்கின்றனர் ..

நானும் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்


HAPPY BIRTHDAY TO YOU IMMA

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


என்றும் நலமாய் வாழ இறைவனை வேண்டுகிறோம்.

நம்ம வீட்டுக்கு வந்தால் நல்லா சாப்பிட்டுதான் போகணும்
வாங்க வாங்க சாப்பிட்டு விட்டு வாழ்த்திட்டு போங்க..


மொய்ப்பணம் பேபி அதிரா வீட்டில் பிடிக்க படுகிறது:)


டிஸ்கி 2:
பிறகு நூறாவது பதிவு போட்ட பிரபல பதிவர் பேபி அதிரா அவர்களுக்கு
நூறு வாழ்த்துக்கள் சொல்லி விடை பெறுகிறோம்
இன்னும் பல நூறு பதிவுகள் போட்டு அனைவரையும் சந்தோஷ படுத்த விரும்புகிறோம்

சும்மா 1....

வாழும் வாழ்க்கை
கடினமாத்தான் இருக்கு
ஆனால் பிடித்து இருக்கிறது.
வாழ்ந்துதான் பார்ப்போமே .
என்னவள் இருக்கிறாள்
என்ற நம்பிக்கையில்..

சும்மா 2....

நாளை நம்பிக்கை மட்டுமே.
இன்று, இந்த நிமிடம்
மட்டும் நிஜம்.
அதனால்
சந்தோசமாய்
அமைதியாய்
இருக்கும் வாழ்வை வாழ்ந்து,
நன்றி சொல்லிப் போவோம்
வாழ்வின் அடுத்த படிக்கட்டுக்கு.

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...