Sunday, August 4, 2013

பட்டாம்பூச்சி..

பட்டாம்பூச்சி..

அழகான காலம் பள்ளியில் கால் அரை முழு பரீட்சை விடுமுறை எல்லாம்..அப்படி பட்ட ஒரு விடுமுறையில் மாமா வீட்டுக்கு சென்று இருந்த போது..

மாமா எனக்கு பாப்பாத்தி பிடிச்சு தாரியா என்று வெட்கத்துடன் கேட்ட பொன்னி ஏக்கத்துடன் கேட்டது சந்தோசம் ஒரு புறம் என்றாலும் அதை துரத்திக்கொண்டு ஓடவேண்டும் என்ற கவலையும் கூட இருந்தது...

சரி சரி இரு வரேன் என்று என்னோமோ வேட்டைக்கு போறது போல கிளம்பியாச்சு..(பிடிக்காட்டி கொஞ்சம் கேவலம்தான் இல்லையா) ஒரு கருப்பு சிகப்பா புள்ளிப்போட்ட பட்டாம்பூச்சியாய் தேடி ஒரு ஒரு தும்பை செடியையும் பூவாய் கடந்து செல்ல பின்னே வரும் பொன்னியை வரதே என்று சைகையில் சொல்லி ஒரு பட்டாம்பூச்சியை  பிடிக்க மிகவும் மௌனமாய் ஆயத்தம் ஆனேன்.


ஒரு செகப்பு கொண்டைப்பூவை தாண்டி பச்சைப்பசேல் இருக்கும் தோட்டத்தில் இருக்கும் செவந்தி பூக்களையும்  தாண்டி  தும்பைபூ செடியில் வெள்ளை தும்பை பூவின் மீது அமர்ந்து இருக்கும்  கருப்பு செகப்பு புள்ளிப்போட்ட அழகான வண்ணத்து பூச்சி அமர்ந்து இருக்க லாகவமாய் அதை பிடிக்க எத்தனிக்கையில் பறந்து போனது ஏமாற்றமே என்னைவிட பொன்னிக்கு 



தூரமாய் அவள் சோகமாய் பார்ப்பது போல எனக்கு தோன்றின நிமிடம் துரத்திக்கொண்டு போனேன் அடுத்த பாப்பாத்தியை தேடி செடிகளுக்கு அழுத்தம் கொடுக்குகாத வகையில் மெல்லமெல்ல எட்டிப்  பிடித்தேன்..இம்முறை ஜெயம்...

ஐ பாப்பாத்தி என்று ஓடிவரும் பொன்னிக்கு கொடுக்கமால் கொஞ்ச நேரம் மாட்டேன் போ என்று கூட சொல்லலாம் என நினைத்தாலும் அவளை அந்த கணம் கூட காக்க வைக்க தோன்ற வில்லை. உடனே அவள் கைகளில் பொத்திக்கொடுக்கையில் அவளில் கண்களில் மிதந்த 
சந்தோசமும் பறந்து விடுமோ என்ற பயமும் ஒரு சேர பார்க்கையில் அழகாய் இருந்தது அவளின் வெட்கமும்..

நொடி நேரம் அவளின் சந்தோசம் எப்பிடி என்று  பார்க்கிறது அவளின் கையில் இருந்த பட்டாம் பூச்சி. அவளில் கைகளை விட்டு பிரிய மனம் இல்லமால் இருப்பதை போல தோன்றியது எனக்கு..

அதே நேரம் பறந்து போ என்று தாமரை கைகளால் விரித்து பறக்க சொல்லிவிட்டாள்.அது சிறகை லேசாய் அசைத்து பறக்கிறது.சில விநாடி கண நேரம் சந்தோசமாய் இருந்த ரெண்டு பட்டாம் பூச்சிகளும் மீண்டும் வருவது  எப்போது?



ஒரு புன்னகையை என்னை நோக்கி வீசியதில் மாமா இன்னொரு பட்டாம்'பூச்சி பிடிச்சு தாரியா என்று கேட்பது போல இருந்தது..

அழகான காலம் மீண்டும் வர வேண்டும்....


பின்குறிப்பு :

முழுவதும் கற்பனையே 
புகைப்படங்கள் தேங்க்ஸ் கூகிள் (/\)
அத்தைபொண்ணுக்காக இந்த பதிவு...




சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...