Monday, February 27, 2012

வணக்கம்

வணக்கம்



(வணக்கம் எல்லாம் நல்லாத்தான் சொல்ற)
ப்ளாக் ஒன்று இருப்பதே மறந்து போயிட்டு
அந்த அளவுக்கு சூழ்நிலை உருவாகி விட்டது
கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாம் சரி செய்து வருவதருக்குள் ஒரு மாதம் என்னை கேட்காமல்ஓடி விட்டது .

என்னங்க பண்றது ஒரு பிரச்சனை முடிந்த கையோட வேற பிரச்சனை
ஒன்று ரெடியா இருக்கு..

யாருக்கு பிடிச்சு இருக்கோ இல்லையோ எனக்கு பிரச்சனைகளை மிகவும் பிடித்து இருக்கிறது.
எவ்ளோ அடிச்சாலும் தாங்குறத போல எவ்ளோ நாள்தான் ஓடிட்டு இருக்கிறது.
ஒரு வழியா பிரச்சனைகளை பட்டியல் இட்டு ஓரம் வைத்து விட்டு வருகிறேன்.

ம் கொஞ்சம் அசந்து யோசிக்கும்போது

தோன்றியது
வாழ்க்கை
ஏன் எதுக்கு எப்படின்னு
எப்படி வாழ்வது சரியாய் இருக்கும் பல கேள்விகள்,சந்தேகங்கள் எழுகிறது.
எந்த அளவுகோல் போதும் என்ற நிலையை கொடுக்கும் என ஏகப்பட்ட கணைகள் தொடர்கிறது.

ஒன்று புரிந்து கொண்டேன் ரொம்ப யோசிக்கவே கூடாது யோசிச்ச அப்பறம் எதுவுமே இருக்காது.

தற்போது யாருக்கும் உதவி செய்தலும் பின்னால் எனக்கு உபத்திரம் ரெடியாக இருக்கும் என்று பட்சி சொன்னாலும் கேட்பதில்லை..உதவ முடியாமல் இருக்கும் தருணத்தில் மனசாட்சிக்கு வேற பதில் சொல்ல வேண்டி இருக்கு.

என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப ஒன்னும் பண்ண வேணாம் அது அது நடக்க வேண்டிய நேரத்தில தான நடக்கும் நீ இப்போ
ஒழுங்கா ப்ளாக் எழுதி மக்களை காப்பாத்து என்று கட்டளை இட்ட ஒரு குரல்
என்னை இங்கே திரும்ப கிறுக்க வைத்து இருக்கிறது.

ஹ்க்கும் அப்படியே எழுதி விட்டாலும் அப்படின்னு யாரோ அங்க நினைப்பது உணர முடிகிறது.விடுங்க விடுங்க அரசியல இதெல்லாம் சாதாரணம்...

வாழ்க்கையின் போராட்டங்களை சந்தோசமாய் ஏற்றுக்கொள்ள துணிந்துவிட்டேன்

தங்கிவிட்ட
வலிகளும்
பழகிவிட்ட
ஏமாற்றமும்
எதுவும் கடந்து போகும் என்ற நிலையும்
உணர்ந்து தொடர்கிறேன்..

காபி,காபி
ஒரு சிறுகதையில் கணவன் மனைவி அன்பாய் தரும் காப்பியை இப்படி வர்ணிக்கிறான்
கணவன் '' காபி,காபி,என்று சொல்லிக்கொண்டே ஒரு திரவத்தை குடித்தேன் ''சக்கரை இருந்ததா என்றால் தெரியவில்லை ,சூடு இருந்ததாய் (நமக்கு என்னைக்கு இருந்து இருக்கு )நினைத்துக்கொண்டு குடித்தேன் என்றான் கணவன் .ஆக அந்த காப்பி எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன். சினத்தை குறைக்க ஒரு புன்னகை தோன்றியது.



விரும்புகிறேன்

உறக்கத்தில்
உன் விழி ஓரம்
அருகும்
புன்னகையாய்
பூத்திருக்க
விரும்புகிறேன்

ம் ..
காற்றுடன்
கலந்துவிடேன்
என்கிறது மனம்
உன் நெற்றியில் தவழும்
முடியை பார்க்கும்போது
எல்லாம்....

கோவத்தை கூட அன்பாய் காட்டு என்ற இனிய பழமொழி நியாபகம் வருகிறது..
அதனால் கவிதை எல்லாம் படித்து விட்டு கோவபடமா கம்மேன்ட்ல காட்டுங்க

டிஸ்கி :
தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அகில உலக பேபி அதிரா ரசிகர் மன்றம் சார்பில்
நகைச்சுவை அரசி பேபி அதிரா
அவர்களுக்கு பதினாறாவது((பேசியபடி அமௌன்ட் செட்டில் பண்ணிடவும்)
பிறந்த நாள் வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday, February 1, 2012

BILLA IS BACK




THE BILLA IS BACK....

(BILLA=SIVA)
JUST summa

என்ன நட்புகளே அனைவரும் நலமா.
கொஞ்ச நாட்கள் கழித்து...


விடுமுறை விரைவாக முடிந்து அரக்க பறக்க ஓடி வர மனம் இல்லாமல் நின்று நிதானமாய் வந்து பார்க்க விரும்பியதால் கொஞ்சம் தாமதம்.மன்னிக்கவும்

சென்று வந்த விடுமுறை அனைத்தும் நிறைந்த அழகான பயணம்
நிறைய (ஏ)மாற்றங்கள் சுற்றத்திலும், எல்லாம் நன்மைக்கே என்று அடுத்த படி நோக்கி நகர்கிறேன்.


நேரம் சரி இல்லை:(
கோவப்படும் ஒரு ஒரு நேரமும் எமனாகி போய்கிறேன் எனக்கே..ஏன் கோவப்பட வேண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் அப்புறம்தான் வருகிறது ..கொஞ்சம் நிதானமாய் இருந்து இருக்கலாம் என்று என்னும்போதும் எல்லாம் முடிந்து போய் இருக்கிறது இனிமேலாவது சற்று நின்று நிதானமாய் செல்ல விரும்புகிறேன். இந்த ஏழரை சனி எனக்கு முன்னால் நின்று நிதானத்தை இழக்க வைக்கிறது.(வீட்டில சொன்னாக நமக்கு நேரம் சரி இல்லையாம்..)வாட் டு டூ. இது செய்தலும் தவறாக படுகிறது, நான் நானாக பார்க்க படவில்லை என்று நினைக்கும்போதுதான் கோவமும் வருத்தமும் வருகிறது என்னதான் சுற்றமும் உறவுகளும் இருந்தாலும் நம் கையில் நாலு காசு இருக்கும் வரைக்கும்தான் நாம் வாழ முடியும்.

பணம்தான் உயிர்:

உயிர் இல்லா அச்சிட்ட காகித பேப்பருக்கு இருக்கும் மதிப்பு
உயிர் உள்ள மனிதருக்கு இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது..

ஒரு செயலும் வருத்தமும்
தவறு செய்ய யாரும் கொஞ்சம் கூட யோசிக்க வில்லை பார்த்த வரையில் பழகிய வரையில் நியமாய் இருப்பதை யாரும் மதிப்பதே இல்லை.அவரவர் வேலை முடிந்தால் சரி .

நேரம் இல்லை :(


நட்பும் சுற்றமும் பார்த்த வரையில்
நின்று பேச யாருக்கும் நேரம் இல்லை...ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் ஊரில் அப்படி எங்க என்ன பண்றங்கானு தெரியல. ஒரு ஒரு விசியமும் தாமதமாய் தான் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது அலுவலகம் முதல் அனைத்தும். தொலை பேசியில் கூட யாரையும் தொடர்பு கொள்ள முடிய வில்லை அனைவரும் அவ்ளோ பிஸி..

தொலைவில்
கண்டுகொண்டு
அருகில் இருந்தும்
வாகனத்தில்
தலையாட்டிவிட்டு
மட்டும் செல்லும்
நட்புகளும்

ஒன்றாய்
நடந்து சென்று
பழகிய நாட்களை
மறக்க செய்கின்றன

சோகம் :
விபத்து
கண் எதிரே இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு ஒருவர் இருந்த கிடந்தது தூரதில் அவர் உறவினர் அடிப்பட்ட நிலையில் அழுதுக்கொண்டு இருந்தது. .
கவனித்ததில் தலைக்கவசம் அணியவில்லை எவரும்.

என்னால் எந்த உதவியும் முடியாமல் போக வருத்தத்தில் ஆண்டவனிடம் மன்னிப்பு கேட்டு அந்த இடம் விட்டு நகர்ந்தாலும் இன்னும் நெஞ்சம் விட்டு அகல வில்லை.

கொஞ்சம் கூட கவனம் இல்லை,பாதுகாப்பு பற்றி அக்கறை இல்லை,சாலைகள் நன்றாக இருந்தும் தவறு நம் மீது இல்லாது இருந்தும் இறப்புகள் பல கண் முன்னே.அவரவர் அவரவர் வேலை பார்த்துக்கொண்டே போய்க்கொண்டே இருக்கின்றனர் அவர்களுடன் நானும்...

தினமும் இட்லி:)


குறைந்த நாள் என்றாலும் இருந்த நாட்களில் வீட்டில் அதிகம் இருந்தேன்.பஞ்சு பஞ்சாய் இட்லி.வகை வகையாய் சட்டினி ,பொடி, சாம்பார் ,என்று எதையும் விட மனம் இல்லை..அம்மா கையால் எல்லாம் சாப்பிட்டு உறக்கம்.அம்மாவுக்கு காய்கறிகள் நறுக்க உதவி என்று நாட்கள் வெகு விரைவாய் சென்றது.

ஒரு நிம்மதி

ஒரு LIC பாலிசி ஒன்று அப்பாவின் பெயரில் போட்டுவிட்டு வந்தது..

ஒரு சந்தோசம். ஒரு இணைய நட்பை அவர் வீட்டுக்கு சென்று பெற்றோருடன் சந்தித்தது அவருடன் அவர் வீட்டில் வடை பாயசம் சாம்பாருடன் ஒரு கட்டு கட்டியது.கொஞ்சம் நேரம் இருந்தாலும் சந்தோசமாய் கழிந்து நெஞ்சில் எப்பொதும் இருக்கும்.

பிறகு சென்று வந்த ஒரே இடம் திருச்செந்தூர் முருகன் கோவில்.
முதன் முறை சென்று இருக்கிறேன்.ஒரு அனுபவம் மேல்சட்டை எல்லாம் இல்லாமல் போக வேண்டும்..அது பற்றி அடுத்த பதிவில் (நாம அடுத்த போஸ்ட் போடணும்ல)

எப்பொதும் தனியாக இல்லை அப்பாவுடன் மட்டும் ஏர்போர்ட் வருவேன் இந்த முறை
அம்மா அப்பா தம்பி அனைவரும் கூட வந்து வழி அனுப்பி (தள்ளி) விட்டனர்...

எங்க பார்த்தாலும் ஒரே பீலிங்க்ஸ் ஒப் இந்தியா..என்னமோ வேற கிரகத்துக்கு போவது போல ஒரு உணர்வு...

போகும்போது இரவில் விமானம் விட்டு இந்தியா மண்ணில் இறங்கும்போது திருப்பாச்சி விஜய் பாணியில் காலை சுழற்றி ஒரு SLOW MOTIONஇறங்கலாம்னு பார்த்தா பின்னாடி இருந்த ஒரு அவசரபயணி ஒரு பார்வை பார்க்க(!) அந்த வழியயை பின்பற்றமால் நல்ல பிள்ளையாய்

வந்ததது குறிப்பிட தக்கது.
பயணம் தொடரும்.

சமையல் ராணி கொடுத்தது

சமையல் ராணி கொடுத்தது
விருதுக்கு நன்றி ஜலில் அக்கா

Total Pageviews

நம்பவே முடியலைங்கோ ...

நம்பவே முடியலைங்கோ ...
விருது கொடுத்த மகிக்கு நன்றி

About Me

My photo

Hilo

Welcome With Vanakkam..


Followers

வந்து போன மகாத்மாக்கள் ...

There was an error in this gadget