Monday, July 29, 2013

மீண்டும் கிறுக்கல்கள்

நீண்ட நாட்கள் கழித்து
அட ஒரு வருடம் ஓடி போனதே தெரியல...அவ்வவ் பதிவு எழுத மறந்து 
ஒரு வயசுகிட்ட ஆகிப்போனதில ரொம்ப வருத்தமே.....


ஆனாலும் தோணும் பொது வரலாம் என்று நினைத்தாலும்
தொடர்ந்த புதிய வேலைப்பளுவும்  கூடவே கொஞ்சம் உண்மையும் சொல்லனும் என்ன எழுதனும்னு எனக்கு சுத்தமா தெரிய வில்லையா இல்லை ஆமா போ என்ற சோம்பேறி தனமா ஏதோ  ஒன்று வைத்துக்கொள்ளுங்கள்...

இன்று வைத்த அவரைக்காய் சாம்பார்  வைத்து கொஞ்சம் கூடவே உருளை வருவலும் சேர்த்து வைத்து கட்டியதில் லேசாய் உறக்கம் எட்டிப்பார்க்கிறது..இதற்கு இடையில் நாம எப்போ பதிவு எழுதினோம் என்று பார்த்தேன் கடந்த வருடம் ஜூலை 27...

சரி ஒரு வருகைபதிவேடை போட்டு வைப்போம் என்று இந்த பதிவு...

உண்மையான அன்பான உறவுகள் எல்லாம் கிடைத்த இந்த வலைப்பதிவுக்கு கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆகணும்.

சிவா என்ற ஒன்றுமே இல்லாத எனக்கும் கூட பாசமான இமா  அம்மா, பாசமான என் பிறந்த நாள் தவறாது வாழ்த்து சொல்லும் எனது அஞ்சுக்கா,மகிமா, எனக்கு இன்னமும் பெண் பார்த்துக்கொண்டு இருக்கும் பேபி அதிரா அக்கா எல்லாருக்கும் என் அன்பான நன்றிகள்..பிறகு என் பதிவை கூட மதித்து வரும் அனைவருக்கும் என் நன்றிகள்..பிறகு நம்ம மனோ அண்ணாச்சிக்கும் என் பிரியமான நன்றிகள்...
.இப்பவே கண்ணகட்டுதே என சொல்லகூடாது...ஓகே 
இன்னும் கதை கவிதை எல்லாம் இருக்கு..

வாழ்க்கை மிக வேகமாய் யாருக்கும்
பதில் சொல்லாமல் சொல்லிக்கொண்டு போய்க்கொண்டு இருக்கிறது..
இருக்கும் இந்த கொஞ்ச காலத்தில் நாம் நாமாக நமக்கு பிடித்ததுபோல
யாருக்கும் தொல்லை இல்லாது வாழ்ந்து முடித்து விட வேண்டும் என்பது எல்லாரயும் போல எனது விருப்பமும்

சூழ்நிலையும் பிரச்சனைகளும் வசம் வந்து நண்பானாய் சேர்ந்துக்கொள்ள  வழி இல்லாது
அதன் சுழலில் விரும்பி சுற்றிக்கொண்டு நடந்துக்கொண்டே இருக்கிறேன்.

பிரியமான நட்பின் இழப்புகளும் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் கண்ணீர் துளிகளின் அரும்புகளில் இன்னும் எத்தனை இருக்கு என்று கண்ணீர் வற்றிவிடாது கண்ணை துடைத்துக்கொண்டு நடந்த நாட்களும் அதிகம்!


வாழ்க்கை எங்கு சென்று திரும்பும்
என்று தெரியாத
புதிரான எல்லையை  நோக்கி நானும் கடைசி நம்பிக்கையின்
விழும்பில் இதுவே எனது கடைசி தோல்வி
என ஒரு ஒரு முறையும் சொல்லிக்கொண்டு
நாட்களை கடத்திக்கொண்டு இருக்கிறேன்..


ஒரு ஒரு முறையும்
என்னை தவிக்க விட்டு சென்றாலும்
மறுமுறையும்
உனக்காக
காத்து இருக்கிறேன்
ஒரு நாளாவது 
என் அன்பின்
நிழலையாவது புரிந்துகொள்வாய என்று....



ஓகே இது போதும் மீண்டும் எனது கிறுக்கல்களும் புலம்பல்களும் தொடரும்
என்னைப்போன்றவர்கள் இருக்கும் வரையிலும் கடவுளுக்கு வேலை இருந்துகொண்டே இருக்கும்

அன்புடன் அடுத்த பதிவில் சந்திப்போம்..

மனிதனை
மனிதனாக
நேசிக்கும்
அத்தனை
ஜீவனையும்
நேசிக்கிறேன்

இறைவா அனைவரையும் நலமாய் வைத்திரு...



மீண்டும் கிறுக்கல்கள் தொடரும்.....

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வலிகள் புரிகிறது... வரிகள் அருமை...

(நாலாவது - நாளாவது)

உங்களின் விருப்பம் போலவே அனைவருக்கும் விருப்பம் வர வேண்டும்... தொடர்க... வாழ்த்துக்கள்...

அம்பாளடியாள் said...

தொடர்ந்தும் கிறுக்குங்கள் உங்கள் கவிதைகள் வளம் பெற வாழ்த்துக்கள் .

MANO நாஞ்சில் மனோ said...

ஆத்தீ.......இம்புட்டு நீளமா மறுபடியும் கடந்து வருவதற்கு ? ஓகே ஓகே தொடருங்கள் தொடர வாழ்த்துக்கள்...!

Mahi said...

பலநாள் கழித்து பார்ப்பது மகிழ்ச்சி சிவா! கவிதைகள் நன்றாக இருக்கு! தொடருங்க!

Unknown said...

திண்டுக்கல் தனபாலன் said...
வலிகள் புரிகிறது... வரிகள் அருமை...

(நாலாவது - நாளாவது)

உங்களின் விருப்பம் போலவே அனைவருக்கும் விருப்பம் வர வேண்டும்... தொடர்க... வாழ்த்துக்கள்...//



வாங்க அண்ணா..
பிழை திருத்தி விட்டேன் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Unknown said...

Ambal adiyal said...
தொடர்ந்தும் கிறுக்குங்கள் உங்கள் கவிதைகள் வளம் பெற வாழ்த்துக்கள் //



வாருங்கள் அம்பாள்
நன்றி வருகைக்கும்

Unknown said...


MANO நாஞ்சில் மனோ said...
ஆத்தீ.......இம்புட்டு நீளமா மறுபடியும் கடந்து வருவதற்கு ? ஓகே ஓகே தொடருங்கள் தொடர வாழ்த்துக்கள்...!/



கடந்து வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது..:)
நன்றி அண்ணா

Unknown said...

Mahi said...
பலநாள் கழித்து பார்ப்பது மகிழ்ச்சி சிவா! கவிதைகள் நன்றாக இருக்கு! தொடருங்க!//



வாங்க வாங்க மகிமா.
வருகைக்கு எனக்கும் சந்தோசம் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்
நன்றி

Angel said...

அனைத்துமே அருமை சிவா ..இன்னும் நிறைய எழுதுங்க ரொம்ப நல்லா இருக்கு .

இமா க்றிஸ் said...

இறைவன் நிச்சயம் அனைவரையும் நலமாய் வைத்திருப்பார். :-)

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...