Tuesday, September 28, 2010

"வாய்ப்புகள் வராது நாம்தான் உருவாக்கணும்.."

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
சிவா2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

சிவா என்பது சுருக்கம்
முழுப்பெயர் நாகநாதன் சிவாசங்கர் (அப்பா பெயர் நாகநாதன்).
காரணம் : இதை பெயர் வைத்த பெற்றோரிடம் கேட்டு சொல்கிறேன்.


3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...

இதுபோல ஒரு அசம்பாவிதம் நடக்கவில்லை....
ஆனால் ஒரு நல்ல வாசகனாக வலைபதிவில் இருக்கிறேன் என்று கூறிகொள்கிறேன்...(ஏன் சார் இருக்கிறவங்க பத்தாதுன்னு நான் வேறையா???)


4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

அட நீங்க நல்ல பதிவு எழுதினால்தானே பிரபலம் ஆகமுடியும். அதைவிட வாசிக்கின்ற அனைத்து பதிவுகளுக்கும் பின்னோட்டம் இடவேண்டும்.அப்போதுதான் பிரபலம் ஆகமுடியும். எந்த இரண்டும் இல்லை.
பிறகு பிரபலம் என்னும் ஆக வில்லை என்பதையும் காலர் தூக்கிவிட்டு சொல்லிகொள்கிறேன்.
ஒருநாள் வலை உலக முதல்வராக ஆவேன் என்பதை பணிவோட தெரிவித்து கொள்கிறேன் (என்ன காரணம் என்றால் Dr .A P.J. அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்று சொல்லி இருப்பதை மனதில் படித்து முயற்சி செய்து வருகிறேன்...(எப்புடி.?)

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்? ...

ம் இல்லை...
எழுதினது நாலு பதிவு அத்தனையும் சொந்த கதைதாங்க...

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
பதிகளின் மூலம் நம்பிக்கையும் வாழ் நாள் முழுவதும் தொடர்ந்து வரும் நட்புகளையும் சம்பாதிக்க...

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஆங்கிலம் - இல்லை(வொர்க் இன் ப்ரோக்ரேச்ஸ்) --எல்லாம் ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற நம்பிக்கையில்.

ஹிந்தி - ஒன்று(வொர்க் இன் ப்ரோக்ரேச்ஸ்) -தேசிய மொழியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல்

தமிழ் - ஒன்று இருக்கும் தமிழுக்கு ஏதோ என்னால் முடிந்த...(நீங்களே நிரப்பி கொள்ளுங்கள்)

(ஒரு ப்ளாக் ஒழுங்கா எழுத முடியல இதில இதுக்கு எவ்ளோ பில்டப்பான்னு நீங்க நினைக்கேறது புரியுது,ஓகே அடுத்த கேள்வி. )

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோவம் நிறைய இருக்கு...பதிவர் பெயரை சொல்லமாட்டேன்...
யாரு அடிவாங்கறது...அப்பறம் வாங்க இத்தபத்தி தனியா சொல்றேன்....
பொதுவா எல்லோரயும் பிடிக்கும் சிலரின் கருத்துகள் பிடிக்கவில்லை அவ்ளோதான். அவர்கள் மீது எப்பொதும் தனி மரியாதையை உண்டு.


9. உங்கள் பதிவைப் பற்றி முதன் முதலில் உங்களைத் தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...

இமா...
என் எழுத்துகளில் உள்ள பிழைகளை நீக்க மட்டும் உதவவில்லை...
எந்தன் தவறுகளை அம்மாவாக,நல்ல குருவாக எடுத்து சொல்லி என்னை நல்வழிபடுத்தும் எனது ஆசிரியை...அவருக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்..

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நல்ல கேள்வி...
இருங்க யேசிக்கேறேன்...
நான் செய்த தவறுகளை மன்னித்து எனக்கு சொல்லி கொடுங்க...எல்லாருக்கும் எல்லாம் தெரியாது.எனக்கும் சுத்தமா ஏதும் தெரியாது...
இப்பவும் எப்பவும் உங்களை போன்ற நல்ல உள்ளங்களின் ஆசிர்வாதம் வேண்டும்.
முடிந்த வரையில் யாரையும் காய படுத்தாதீங்க....
இருக்கின்ற வரையில் உதவுவோம்...


பின்குறிப்பு:
வாழ்க்கை போகும் கொஞ்சம் தூரத்தில என்னையும் உங்களோட பயணத்தில சேர்த்துகோங்க...
இந்த தொடரை யாருக்கு விருப்பம் இருக்கோ என்னை போன்ற புதியவர்கள் தொடரலாம்..

"வாய்ப்புகள் வராது நாம்தான் உருவாக்கணும்.."

(சும்மா.. எல்லாரும் பஞ்ச டயலாக் பேசுறாங்க)
படிச்சிட்டு அடிக்கலாம் வரகூடாது)

நினைவுகள்...


கன
நேரம்
இருக்கவிட்டதில்லை...

யோசிக்காமல்
உந்தன்
நினைவுகள்...!

இதுவரை
சிறைப்பிடிக்கப்பட்ட
வார்த்தைகள்
எல்லாம்
விடுதலை ஆகின்றன
என்னை
விட்டு
அகன்ற
நிமிடங்களில்....!

வழிந்தோடும்
எழுத்துக்களில்
உன்
நினைவுகள்...

எல்லாம்
நிறை குடமாய்....
தளும்பாமல்
நிற்கும்
கண்ணீராய்
என்னுள்.

Monday, September 27, 2010

சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டேன்......

ம். ஒரு வழியா மரத்தடி பக்கமா வந்தாச்சு சாமிய கும்பிட்டுகிட்டு மணிகிட்ட "என்னடா பண்ணணும்? சைக்கிள் எப்படி கீழ விழாம போகுது?" ன்னு கேட்டேன். "இப்படி கேள்வி எல்லாம் கேக்காம இருந்தாதான் சொல்லித் தருவேன்" னு சொன்னான். மெதுவா குரங்கு பிடல் போட்டு இப்படித்தான் மெல்ல மெல்ல ஓட்டணும் என்று சொல்லிக் கொடுத்தான்.

தப்பு தப்பா ஓட்டி, மணிகிட்ட திட்டு வாங்கி - என்ன திட்டினாலும் சிரிச்சுகிட்டே இருப்பேங்க.


இல்லாட்டி மணி சொல்லித்தர மாட்டான். சரியான மொசடு, ஆனால் நல்லவங்க. மறுபடியும் சொல்லிக் கொடுப்பாங்க. அப்புறம் எனக்கு அப்போல இருந்து இப்போது வரைக்கும் ஒரு வாட்டி சொன்னா புரியாது, இரண்டு மூன்று தடவை சொல்லணும். அப்போதான் கப்புனு பிடிச்சிப்பேங்க. யாருமே வராத ரோட்ல ஓரமா ஓட்டி கத்துகிறேன்னு முள்ளுமேல விழுந்து கை கால் எல்லாம் ஸ்ராய்ப்பு ஏற்பட்டது. உடனே மணி "அப்படி அடிப்பட்டா தான் உனக்கு சீக்கிரம் கத்துகிற ஆர்வம் வரும்." னு என்னைய உசுப்பேத்தி நிறைய அடிபட்டு ஒரு வழியா குரங்கு பிடல்ல போற அளவுக்கு கத்துகிட்டேங்க. அப்படி தனியா போகும்போது அவ்ளோ சந்தோசம் என்னோமோ ப்ளைட்ல போறதுபோல.. ம்

சைக்கிள் எடுத்துகிட்டு நேரா பொன்னி வீட்டு பக்கமா சுத்திகிட்டு இருந்தேன்.
பொன்னிய காணும். அப்புறம் பார்த்தா அது சைக்கிள் சீட்ல உக்காந்து எக்கி எக்கி பெடல் போட்டு சைக்கிள் ஓட்டிகிட்டு வருது. எப்படி இருக்கும் நமக்கு. பொன்னி "இப்போதான் குரங்கு பிடலே ஓட்டற. போ போ. உனக்கு எங்க கால் எட்டும்! நீ சைக்கிள் எல்லாம் ஓட்ட முடியாது"ன்னு என்னைய நல்ல ஓட்டிக்கிட்டு இருந்திச்சு. இதுக்குத்தான் இந்த பொன்னி இருக்கிற பக்கமே போறது கிடையாதுங்க.

அப்புறம் ஒரு வழியா சின்ன சைக்கிள் எடுத்து கம்பி மேல போட்டு எப்படியாவது சீட்ல உக்காந்து ஓட்டி கத்துக்கணும்னு வெறியில கீழ விழுந்து அடிபட்டேன். யாரும் நம்மை பாக்கறதுக்குள்ள எழுந்து விடலாம்னு பார்த்தா யாரோ ஒரு புண்ணியவான் எங்க தாத்தா கிட்ட போயி வத்தி வச்சுட்டாங்க. சாயங்காலம் வீட்டுக்கு போன பிறகு என்ன, எனக்கு கச்சேரி ஆரம்பம்தான். சும்மா சொல்லக் கூடாது. எங்க தாத்தா அடிக்கலைங்க. எல்லா மாட்டுக்கும் தண்ணி, வைக்கோல் எல்லாம் என்னைய வைக்கச் சொல்லிட்டு, அதுக்கு காவலா ஒரு ஆள் போட்டுவிட்டு டவுன் பக்கம் போய்ட்டார்.
அப்புறமா எங்க ஆத்தா கிட்ட கெஞ்சி இனிமே சைக்கிள் எடுக்கமாட்டேனு பொய் சொல்லிட்டு ஓடி வந்துவிட்டேங்க...


ஒரு வழியா சைக்கிள் கத்துக்கிட்டேன். அப்புறம் கொஞ்சம் doubles அடிக்கற அளவுக்கு கத்துக்கிட்டேங்க. அப்படியே கைய விட்டு போறது ரொம்ப பிடிக்கும். என்னதான் சைக்கிள் கத்துக்கிட்டாலும் எங்க வீட்டில உடனே சைக்கிள் வாங்கி கொடுக்கல. நான் முதல் ரேங்க் வாங்கினால் சைக்கிள் வாங்கி தருவோம்னு சொல்லிட்டாங்க.

இது எல்லாம் நடக்கிற காரியமா..?

கொஞ்ச வருசத்துக்கு சைக்கிள் பத்தி வீட்டில பேசவே மாட்டேன்.
ம்முனு மறுபடியும் சோகமா மூஞ்ச வச்சுக்கிட்டு இருப்பேன். ஒரு வழியா எட்டாம் வகுப்பில இரண்டவது ரேங்க் வாங்கினேங்க. (நம்புங்க ப்ளீஸ்.) அப்போதான் சைக்கிள் கிடைச்சது. அம்மாகிட்ட "அம்மா, என்னைவிட சின்ன பையன் எல்லாம் சைக்கிள் ஒட்ராங்க. எனக்கும் ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுங்க," ன்னு அடம் பிடித்து வாங்கிட்டேங்க.


புது சைக்கிள் ரெட் கலர். கேப்டன் வண்டி, முதல் தடவை புது சைக்கிள் வாங்கி அத ஓட்டிகிட்டு போற சுகம் இருக்கே. அனுபவித்தால்தான் தெரியும்.. அப்புறம் கைய விட்டு போறது பழகி போச்சு. வாரம் வாரம் சைக்கிள் எண்ணை போட்டு தொடச்சு புதுசு போலவே வச்சு இருப்பேன்.

இந்த சைக்கிள் வாழ்கையில மறக்கவே முடியாது. இது போல உங்களுக்கும் இருந்தால் சொல்லுங்க.

நன்றி வணக்கம்.

Saturday, September 25, 2010

சைக்கிள் ஓட்டிய கதை..


சிவா சைக்கிள் ஓட்டிய கதை..

முன்னொரு காலத்தில அதாவது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது, திரும்ப படியுங்க படித்துக்கொண்டு இருக்கும்போது முழுபரிட்சை முடிந்து எங்கள் தாத்தா வீட்டிக்கு செல்வது வழக்கம்.


தாத்தா வீடு ஒரு பஸ் போகாத கிராமம். அப்போவே தாத்தாகிட்ட ஒரு மாட்டு வண்டி இருந்துச்சு. அதில வைக்கோல் எல்லாம் போட்டு அதில ஜமுக்காளம் போட்டு பேரப்பிள்ளைங்களுக்கு உடம்பு வலிக்குமாம், வைத்து இருப்பார். அதில அம்மா தம்பிங்க நானும் எல்லாம் போவோம். எங்களுக்காக பகோடா அப்புறம் பூந்தி, காரபூந்தி எல்லாம் வாங்கி வச்சுருப்பார். மாட்டு வண்டி கொஞ்ச தூரம் போறதுக்குள்ள எல்லாம் காலி பண்ணிடுவோம்.


அந்த இரண்டு மாதம் போறதே தெரியாதுங்க, டெய்லி எதாச்சும் சேட்டை பண்ணிக்கிட்டு எப்போதும் ஓடிப்பிடிச்சு, திருடன் போலீஸ், புளியமரம் ஏறுறது, மாங்காய் அடிக்கிறது, இந்த

புளியமரம் சோட்டன் இருக்குல, அது எனக்கு ரொம்ப பிடிக்கும். புளிப்பு இருக்கும். அதில உப்பு வச்சு சாப்பிடற சுகம் இருக்கே... உங்களுக்கும் சாப்பிடணும் போல இருக்குமே.. ம்

அப்புறம் என் கூட்டாளிங்கள மறந்து விட்டேனே. பால்வண்டி மணி, எலும்பு பிரபு, மக்கு கிருஷ்ணா, அப்புறம் குட்டி சிவா.. (நாந்தாங்க சின்ன பிள்ளையாக்கும்). எப்போ பார்த்தாலும் அவங்க கூடத்தான் அந்த ஏப்ரல், மே லீவ் போகும்.. அடிக்கிற எல்லா மழை வெயில் எல்லாமே எங்களுக்காகத்தான்...

மணி அப்பா பால் வியாபாரம். பால்வண்டி மணி.. பிரபு அவ்ளோ ஒல்லியா இருப்பான் - எலும்பு பிரபு.. கிருஷ்ணா அப்பா வாத்தியார் (அதான் அறவே படிக்கமாட்டான். பின்ன எப்போ பாரு முழு பரீட்சை லீவிலும் படி படின்னு சொல்லிகிட்டே இருந்தா கோவம் வராதா கிருஷ்ணாவுக்கு) அதனால அவங்க அப்பாவ எப்படி திட்டுவான்னு எங்களுக்கு மட்டுமே தெரியும்... சொல்லி சிரித்துக்கொண்டே இருப்போம்... நேரம் போறதே தெரியாது.


இதில பிரபுவும் நானும் கொஞ்சம் ஏதோ படிப்போம்.. (நம்புங்க).. அதனாலே கிருஷ்ணாவுக்கும் எங்களுக்கும் சண்டை வரும், "உன்னாலதாண்டா எங்க அப்பா என்னைய திட்றார்"னு எங்க மேல அப்போ அப்போ கோவப்படுவான்.

அப்பறம் மணி, நிறைய இவனை பத்தி சொல்லலாம். கொஞ்சமா சொல்றேங்க, அப்புறம் மீதி சொல்கிறேன். மணி வந்து கிருஷ்ணாவுக்கு அண்ணா போல. இவனும் சுத்தமா படிக்க மாட்டாங்க. ஆனால் பிற வேலைகள் சின்ன பசங்களை மிரட்டி மிட்டாய் வாங்கி தின்றது, அப்பறம் என்னைய மாட்டு கொட்டில கட்டி போட்டு பயமுறுத்துதல், அப்புறம் சைக்கிள் நல்ல ஓட்டுவான். களிமண்ணு பொம்மை செய்றதுக்கு அவன்கிட்ட இருந்துதாங்க கத்துகிட்டேன். அப்புறம் அதில எக்ஸ்பெர்ட் ஆகிவிட்டேங்க, அது வேற விசியம்...

குரங்கு பிடல் சைக்கிள் ஓடறதுன்னா என்னனு உங்களுக்கு தெரியும்னு நினைக்கறேன். அதாவது அந்த கம்பிக்குள்ள பிடல் போட்டு ஓடறது தான் குரங்கு பிடல்.. ம் எனக்கு சைக்கிள் ஓட்றதில எல்லாம் பெருசா விருப்பம் இல்லைங்க. எதாச்சும் விளையாடறது, சிரிச்சிகிட்டே பேசிகிட்டு இருக்கிறது ரொம்ப பிடிக்கும்.

ஒரு நாள் எங்க அத்தை பொண்ணு, பேரு பொன்னி - அது எங்கயோ சைக்கிள் ஓட்ட.. அதும் குரங்கு பிடல் அளவுக்குத்தான் ஓட்டும். அதுதான் முதல்ல சைக்கிள் ஓட்டிகிட்டு என்கிட்ட வந்து காமிச்சுக்கிட்டு இருந்திச்சு. என்ன பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்டுச்சுங்க.... என்ன கேள்வி தெரியுமா? "உனக்கு எல்லாம் திங்க தான் தெரியும். சைக்கிள் ஓட்ட தெரியாது"ன்னு சொல்லிட்டுங்க. ரொம்ப அவமானமா போயிட்டு......


எப்படியாவது அந்த லீவில சைக்கிள் ஓட்ட கத்துக்கணும் என்று முடிவு பண்ணி நேரா மணிகிட்ட போய் "டே மணி எனக்கு சைக்கிள் ஓட்ட சொல்லித்தாடா"னு கேட்டா அவன் என்னைய மேலும் ஒரு முறை மொறச்சிட்டு "போடா சொல்லித்தர மாட்டேன்"னு சொல்லிட்டான்.. அப்புறம் அவன ஐஸ் வச்சு "டே மணி, உனக்கு தேன் முட்டாய், பர்பி, டீ cakku, பால் பண்ணு எல்லாம் வாங்கி தாரேன்"னு சொல்லி சேர்த்து வச்சு இருந்த காசு எல்லாம் அவனுக்கு வாங்கிக் கொடுத்து, அப்புறமா சைக்கிள் மாமாக்கிட்ட அழுது பிடிச்சு கேட்டு அந்த சைக்கிளை அப்படியே மெதுவா தள்ளிகிட்டே வந்தது புளிய மரத்தடி பக்கம் வந்தாச்சு.. அப்பறம் ரொம்ப களைப்பா இருக்கு அடுத்த பதிவில சொல்றேங்க...

Monday, September 20, 2010

தேடல்...


!!!

பிரிதலின்
துயரத்தை
புரியவைத்த
இந்த
தேடலின்
தொலைவில்
காணமல்
போய்விட்டேன்.


நட்பும்
நேசமும்
கொஞ்சமும்
குறையாத
கோவமும்
எல்லாம்
அன்பால் வந்த
விளைவுகள்தான்
என்பதை
அழகாய் புரியவைத்தது
இந்தத் தேடல்.


முகம் காணா
தொலைவில் இருந்தும்
அருகில் இருப்பதாய்
ஒரு கற்பனை!

கல்லூரி முடிந்து
வரும்
பிரிவின் துக்கம்
சொல்ல முடியா
வலி..

இதயத்தின்
வலியை
கண்ணீரால்
வெளியேற்ற கூட
முடிவில்லை...

தொண்டையை
விட்டு வரவே மாட்டேன்
என்கிற அழுகை
நீ தூர நடந்ததும்
கொட்டும் மழையாய்...

எல்லாம்
சரியாகிவிடும்
என்று
நம்பிக்கையில்
ஒரு
ஒரு
தினமும்
அனுபவம்
என்ற
வார்த்தையின்
அர்த்தம்
உணர
முயற்சிக்கிறேன்..!

Wednesday, September 15, 2010

என்னத்த சொல்ல...

என்னதான் சொல்லுங்க எவ்ளோதான் காசு கொடுத்தாலும் விடியல் காலையில ஏழு மணி வரையில தூங்கிற தூக்கம்..அம்மா சுட சுட சுட்டு வைக்கும் பஞ்சுபோன்ற இட்லி

அப்பறம் இட்லி பொடி,கூட புதினா சட்னி,கொஞ்சம் மிளகாய் சட்னி(கொஞ்சம் தக்காளியும்)..அத நல்ல வயுறு முட்ட சாப்பிட்டுவிட்டு...

ஸ்கூல் போனபிறகு அங்க வாத்தியார் பாடம் நடத்தும்போது ..


வரும் ஒரு தூக்கம் பாருங்க..அதுவா எல்லாம் ஒரு கனா காலம்...

அப்பறம் நைட் studynu சொல்லிபுட்டு நண்பர்கள்கூட சேர்ந்து அரட்டை அடிச்சு..அப்பறம் நேரம் போனது தெரியாம அவசரம் அவசரமா இரண்டு பக்கங்களை படித்துவிட்டு பிறகு எல்லாம் பரிட்சைக்கு முன்னால அரைமணி நேரம் எல்லாமே மறந்து போனது போல ஒரு பயம் வருமே அந்த பயம் கூட ஒரு சுகம்...

அதைவிட பரீட்சை பேப்பர் கொடுக்கும்போது யாரு யாரு எவ்ளோ மார்க்குன்னு தெரிஞ்சிக்கிற ஒரு ஆர்வம் நம்மைவிட ஒரு பொண்ணு கூட ஒரு மார்க்கு வாங்கிட்டா அது பண்ற அலப்பல் அப்போ நாம படும் வேதனை இது எல்லாம் சொன்னா புரியாதுங்க அனுபவிக்கணும்....


அப்புறம் நம்ம வகுப்புக்கு புதுசா ஒரு பொண்ணு கொஞ்சம் அழகா இருந்துவிட்டால் அதுகிட்ட பேசி ப்ரெண்டா ஆக நாம எடுக்கும் கஜினி முகமதுவின் முயற்சிகள்...என்னத்த சொல்ல....அந்த புள்ள நம்ம கிட்ட கடைசிவரைக்கும் பேசும் நினைக்றீங்க?...அத பத்தி எல்லாம் கேட்க பிடாது...!

பிடித்த எதாவது ஒரு டிரஸ் போட்டுக்கிட்டு..அப்படி கொஞ்சம் ஸ்டைலா நடந்து வரும்போது நம்மை விட நண்பன் ஒரு நல்ல சூப்பர் டிரஸ் போட்டுகிட்டு வந்தா நமக்கு வருமே ஒரு சின்ன பொறாமை....(இது வெளியில சொல்ல மாட்டோம் மனசுக்குள்ளே..


அவன நாம எவ்ளோ திட்டுவோம் தெரியுமா)...
பட் அவன்தான் நம்ம நல்ல நண்பனா இருப்பாங்க...


மீண்டும் (காலையில லேட்டா எழுந்திரிச்சு அம்மாகிட்ட அப்பாகிட்ட இருந்து வரும் வசவும் ஒரு சுகம்தாங்க)... தொடரும்...
பி.கு: (படத்தில் காட்டியுள்ள இட்லி அப்பாவி தங்கமணியின் இட்லி கடை இட்லி அல்ல அல்ல என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்)

Saturday, September 11, 2010

நம்ம அசினும் தமனாவும் அப்பறம் நம்ம அணில் குட்டி

நம்ம அசினும் தமனாவும்...

நம்ம அணில் குட்டி

நம்ம ஊரு தாங்க

இது வீட்டை விட்டு கோவில் கிளம்பும்போது எடுத்த படங்கள்.1

இது வீட்டை விட்டு கோவில் கிளம்பும்போது எடுத்த படங்கள்.1

இது நம்ம பாலடிக்காத்தான் சாமி...

இது நம்ம ஐய்யனார் சாமி வாகனம்ங்கோ ... .

பில்லா..


AM BACK ....

ADA ONUM ELLAINGA..NAN THIRUMBVAUM VANTHUVITEN..

SUMMA ORU VILAMBARAM....

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...