Saturday, February 26, 2011

அன்புத் தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்


எல்லாரும் வாங்க வாங்க
சாக்லேட் எடுத்துக்கோங்க
அட நிறைய எடுத்துக்கோங்க

ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா
இன்று
தேதியில்
...வருடங்களுக்கு
முன்பு பிறந்த நம்ம தோழி ஒருவருக்கு பிறந்த நாள்
அதுவும் எந்த மாதம் கடைசிக்கும் முந்தின நாள்
அதாங்க நாளைக்கு (27.02.2011)
எல்லாரும் வாழ்த்துங்க...

ஓகே
சிங் பர்த்டே சாங்
ஹாப்பி
பர்த்டே டு யு
பர்த்டே டு யு
பர்த்டே டு யு

அன்புத் தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்


நட்பை
புரிந்து
தவறை
மெல்ல குட்டி
அன்பால்
திருத்தி
என்னை
நல்வழிப்படுத்தும்
என்நட்பே



கண்ணில்
காற்றுப்பட்டாலும்
கண்கலங்குவாய்
என் நட்பே

நின்
நட்பின்
அன்பைச் சொல்ல
எந்த
மொழியிலும் இல்லை
இந்த பிறவியும்
எனக்கு
போதவில்லை
என்றும்
எல்லா நலமும் பெற்று
என்றும்
உன் நட்பாய் இருக்க

அன்பிலும்
கருணையிலும்
குறைவில்லாத
நலத்தை
கொடுக்கும்
இறைவனை
வேண்டுகிறேன்


எத்துனை துன்பம்
வந்தாலும்
கண் கலங்காதே
வரும்காலம்
நலமாய்
இருக்கும்
என் நட்பே

பாசமான
அன்பில்
உன்
நட்பின்
நினைவில்
எதோ ஒரு மூலையில்
நானும்
நீ எப்பொதும்
நலமாய் இருக்க
வேண்டிக்கொண்டு இருப்பேன்

ஹாப்பி பர்த்டே
.
என்றும் நட்புடன்
உன் நண்பன்


டிஸ்கி:வாழ்த்து தெரிவித்த தெரிவிக்க போகும் அன்பு உள்ளங்களுக்கு எல்லாம்
நன்றிகள் ..

Friday, February 18, 2011

டீக்கடை.....(ஐம்பதாவது பதிவாம் )

முஸ்கி : சும்மா கற்பனை ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு.....





"ஏய்! அவன் இப்படி பண்ணுவானு எதிர்பார்க்கவே இல்லடா.. கூட இருந்தே இப்படி பண்ணுவானு.. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பண்ணிட்டு நம்மை எல்லாம் தலை குனிய வச்சுட்டு போய்ட்டான். அவன் மட்டும் என் கையில சிக்கினான்னு வை, மவனே அவன் காலிடா," என்றான் குமார்.

சதீஷ் "ஏன்டா அவனுக்கு மூளை இப்படி நாசமா போனது? எப்போவும் ஒண்ணும் தெரியாதவன் போல இருப்பான். நானும் எதிர்பார்க்கவில்லை, எனக்கு மண்டை வெடிச்சிடும் போல இருக்குடா," என்று அவன் பங்குக்கு
புலம்பித் தள்ளினான்.

"இதுக்குத்தான் அவன நம்மகூட சேர்க்காதீங்கனு அப்போவே சொன்னேன்," என்ற ரமேஷ் "நீங்க தான் பாவம் அது இதுன்னு சொல்லிவிட்டு இப்போ வந்து பொலம்பிக்கிட்டு இருக்கீங்க," என்று அவர்களை உசுப்பி விட்டான். "எனக்கு அப்போவே தெரியும். இந்த ராஸ்கல் எதாச்சும் பண்ணிட்டு நம்மை நாளைக்கு மாட்டிவிடாம போகமாட்டான் என்று," அவர்களை இன்னும் ஏத்தி விட்டுக் கொண்டு இருந்தான்.

சரி, விடுங்க அப்படி என்னதான் பண்ணிட்டான்னு கேக்கறீங்களா? அந்த மூணாவது தெரு மாரி.. நல்லவந்தாங்க எந்த பழக்கமும் இல்லை. ஆனாலும் இவர்களோடு எப்படியோ ஒட்டிக் கொண்டான். டெக்னிசியனாக ஒரு கம்பனியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தான். பார்க்க சுமாராக இருந்தாலும் கொஞ்சம் அமைதியானவன். ஒரு கோவில் திருவிழாவில் அந்த கமலாவின் கருவிழியில் எப்படியோ மாட்டிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் பார்வையால் மனதை பரிமாறிக் கொண்டு... நம்ம
தமிழ் வாத்தியார் ராமசாமி பொண்ணு கமலாவ டாவடிச்சு... பொண்ண கூட்டிக்கிட்டு ஊரை விட்டு ஓடிட்டான்.

'எப்பவும் இந்த எடுபட்ட வீணாப் போன நண்பர்கள் கூட சேர்ந்துகொண்டு டீக்கடையில் போற வரவங்களை கிண்டல் பண்ணி காலத்தை ஓட்டினாலும், பையன் கில்லாடி தான் அந்த வாத்தியாருக்கு ஒரே பொண்ணு எப்படியும் அவர்களைக் கண்டு பிடிச்சு அடிய போட்டாலும் கடைசியா மருமகனா ஏத்துப்பாங்கனு ஒரு திட்டம் போட்டு பொண்ணை கொண்டு போய்ட்டான்,' என்று ஒன்றுக்கு நூறாக கிராமத்துக்குள் பேசிகொண்டார்கள்.

அவன் நண்பர்கள் எங்கு சென்றாலும் அவர்களையும் விடவில்லை தெரு மக்கள்.
ஒருவருக்கொருவர் மாறி மாறிக் கேள்வி கேட்டு ஒருவழி செய்து விட்டனர். எத்தனையோ முறை "அவன் எங்கு சென்றான் என்று தெரியாது," என்று கூறியும் விடவில்லை.

அந்த வாத்தியார் பாவம் நல்லவர். என்ன, திருக்குறள் தவறாகச் சொன்னால் முட்டி போடச் சொல்லுவார். திரும்பச் சரியாகச் சொல்லும் வரையிலும் விடமாட்டார்.

அவர் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. சொல்லித் திருந்தாத ஜென்மங்கள் பட்டுத் திருந்தட்டும் என்று சொல்லிவ் விட்டு அவர் வேலையைப் பார்க்கத் தன்னை மாற்றிக்கொண்டு விட்டார்.

கிராமத்திலும் ஒரு மாதம் மட்டும் அந்த பேச்சு இருந்து கொண்டுதான் இருந்தது. அவர் காதில் விழுந்தால் அப்போது அவர் கண்கள் கொஞ்சம் கலங்கும் தாய். இல்லாமல் பாசம் காட்டி வளர்த்த பெண் அல்லவா? இருந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் அமைதியாய், 'தன் பெண் எங்கு இருந்தாலும் நலமாய் இருக்கட்டும்,' என்று வேண்டிக் கொண்டார்.

ஒரு சில உறவினர்கள் கூறும் கேலிப் பேச்சும் உற்ற நண்பர்கள் கூறும் ஆதரவும் அவரை ஏதும் செய்யவில்லை. மாறாக அவரின் மௌனம் அதிகம் ஆகியது. அந்த மௌனமே அனைவரின் பேச்சையும் குறைக்கச் செய்தது.

ஒரு வருடம் கழித்து ஒரு நாள் அவரின் மகள் கைக் குழந்தையுடன் கணவனோடு பிறந்த ஊருக்கு வருகிறாள். ஊரே வியப்புடன் பார்க்கின்றது. அவன் மிக நல்ல படியாக அவளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்பதை அவளது புன்முறுவலில்,

முகத்தில் காட்டிய சந்தோஷத்தில் அனைவரும் அறிந்து கொண்டனர். ஒருவர் ஒருவராக விசாரிக்கத் தொடங்கினர்.

அனைவரிடமும் தன் கணவன் ஒரு நல்ல வேலை கிடைத்து வேறு ஊரில் தங்கிவிட்டதாகக் கூறினாள். அனைவரும் திட்டிய திட்டுகளை எல்லாம் மறந்துவிட்டு "நல்லபடியா இரும்மா," என்று வாழ்த்தி விட்டு அவளது வீடு வரைக்கும் வந்து அவளது தந்தையிடம் சமாதனம் பேசி ஏற்றுக்கொள்ளுமாறு கூறினர்.

தந்தையைக் கண்டதும் ஓடிச் சென்று காலில் விழுந்து அழ அவர் மனம் இளகி, பேரப்பிள்ளையும் மகளையும் அழைத்துக் கொண்டு வீட்டு சாமிமாடம் நோக்கிச் சென்றார். அவரின் மௌனமும் மெல்ல குழந்தையின் கொஞ்சலில் கரைந்தது.

ம்.. நம்ம மாரிமுத்து வீட்டில் முதலில் எற்றுக் கொள்ளாவிட்டாலும் பிறகு ஒருவழியாக அவர்களும் சம்மதம் சொல்லிவிட்டனர்.

அவனது நண்பர்கள் ரமேஷ், குமார் எல்லாம் வந்து அவனை கிண்டல், கேலியோடு கொஞ்சம் அடியும் போட்டு மீண்டும் டீக்கடையில் ஐக்கியம் ஆனார்கள்.


டிஸ்கி: இந்த வார தத்துவம்
"தோழி இருந்தா எனக்கு ஒரு கேர்ள் பிரண்டு இருக்குன்னு சொல்லலாம்
ஒரு கேர்ள் பிரண்டு இருந்தா எனக்கு ஒரு தோழி இருக்காங்கனு சொல்ல முடியாது...."

Monday, February 14, 2011

எனது தேவதைக்கு....!!!



உன்னை
பார்த்த
நிமிடங்கள்
நடைப்பயில்கிறது
என் நினைவுகளில் ...!

கனத்தை
உணரும்
நிமிடங்கள்
உன்னோட
நினைவை
நினைத்து
முடிக்கும்
நிமிடங்கள்!

எப்போதும்
உன்னை
நினைக்கிறேன்
என்று பொய் சொல்ல
விரும்பவில்லை
என்ன...
ஆனாலும்
நினைக்காமலும்
இல்லை!




எதாவது ஒரு தருணம்
விழியின் ஓரத்தில்
கரைவது
என்னை
அறியாமல்
விழும்
துளிகள்.
இன்னும்
கன்னத்தில்...!!!

ரோஜா

கொடுத்தது இல்லை
அது உன்னைப் பார்த்து
வெட்கப்படும்
என்பதால்...!

வண்ண வண்ண
வாழ்த்து அட்டைகள்
கொடுத்ததும் இல்லை
வெற்றான
வார்த்தைகளில்
என் அன்பை
முடித்துவிட
விரும்பவில்லை ...!

பரிசு பொருளும்

கொடுத்தது இல்லை
பழசாகி விடும்
என்பதால் ..!

எப்பொதும்
உனக்காய்
புத்தம்
புதிதாய்


துடித்து..
நினைத்து...
வாழ்ந்து
கொண்டு
இருக்கும்....


ஒரே ஒரு
இதயத்தைக்
கொடுத்து
விடுகிறேன்
பத்திரமாய்
வைத்துக்கொள்
என் தேவதையே ...

Friday, February 11, 2011

காதலி கிடைக்க ஒரு சில யோசனைகள் .... (Dont worry.)


இந்த பதிவு ஒரு ஜாலிக்காக யாரயும் கஷ்ட படுத்த இல்லை..
(எல்லாம் சகோ தம்பி அண்ணா என்று அழைத்து உயிரை வாங்குகிறது என்று புலம்பும்
என் உயிர் நண்பன் ஒருவனுக்காக இந்த பதிவு )

யாரவது தேவதைய பார்த்து இருந்தா சொல்லுங்க
இதுவரை எந்த தேவதையையும் நான் பார்க்க வில்லை என்று.
நினைப்பவர்கள் கவலை வேண்டாம்...

இந்த வருடமாவது
காதலிக்க
ஒரு தோழி கிடைக்கணும் சாமி...அப்பிடின்னு
நம்ம முருகனை வேண்டிக்கிட்டு...

ஒரு தோழி கிடைக்க
முக்கிய விதிமுறைகள்
என்ன என்ன ?

முதலில் ஒரு வேலை ...
கொஞ்சம் லட்சணம் ...
கொஞ்சம் ஸ்டைல்
கொஞ்சம் மொக்கை
கொஞ்சம் ரொமாண்டிக்
கொஞ்சம் பொய்
கொஞ்சம் கூட நேர்மை இல்லாமல் இருத்தல் அவசியம்
சொல்ல மறந்துவிட்டேன்
போன் கார்டு
கிரெடிட் கார்டு அவசியம்..

முக்கிய விதிகள் :
அவள் தோழிகளை
மறந்தும் கூட விசாரித்து விடவோ
பார்த்து விடவோ கூடாது


பிறகு இதர விதிமுறைகள்
ஒரு நாளைக்கு இருபத்தி மூன்று மணி நேரம்
பேசிகொண்டே அல்லது பேசுவதை
கேட்டுக்கொண்டே இருக்கவேணும்

ஒரு
காதல் கடிதம் கண்டிப்பாய் எழுத தெரிந்து இருக்க வேண்டும்.

கண்ணே மணியே அப்படி ஆரம்பிக்கணும்
தப்பு தப்பா எழுதணும்

கைக்கூ

அவள் நம்மிடம் கெஞ்சும்போது
சாமிகிட்ட வரம் கேக்கலாம்
சாமியே நம்மகிட்ட வரம் கேட்டா...
அப்படின்னு
உளறவேண்டும்

உன் கண்கள்
அந்த வெள்ளி
நிலவின்
சிறு துண்டு
என்று
வஞ்சனை இல்லாமல்
பொய் சொல்ல வேண்டும்

உன் பார்வைகள்
சூரியனை
மங்க வைக்கும்
ஒளிக்கதிர்கள்
என்று
உண்மை சொல்ல வேண்டும்

தூங்கமுடியல
சாப்பிட முடியல
என் வீட்டு
ஜன்னல் முதல் கொண்டு
உன்வரவை
எதிர்பார்த்து
கொண்டு இருக்கிறது
என்று எல்லாம்
அள்ளிவிட வேண்டும்

பக்கம் பக்கமாக
பிழை இல்லாமல்
புத்தம் புதிதாய்
கவிதை எழுத தெரியவில்லையே ...

எது எல்லாம்
பண்ணியும்

காதலி கிடைக்காதவர்கள்
நம்பிக்கை தளரவேண்டாம் ..உங்கள் ஆயுள் நீளம் என்று சந்தோஷ பட்டுக்கொள்ளவும்.
அம்மா அப்பா பார்க்கும் பெண்ணுக்கு
லவ் லெட்டர் எழுதவும்...

டிஸ்க்கி:)
(ஊரில லவ் பண்ணாத
உங்க சொந்தகாரவங்க இருந்தா
தொடர்பு கொள்ளவும் )

Tuesday, February 8, 2011

சேமிப்பு குணம்......



அம்மா என்று அழுது கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் மூன்றாவது படிக்கும் ஒரே மகன் ராஜேஷ்,உள்ளே இருந்து பதறிக் கொண்டு அவனது தாய் மகேஸ்வரி ஓடிவந்தாள், தைத்துக்கொண்டு இருந்த தையல் எந்திரத்திடம் இருந்து...
"என்ன கண்ணு? ஏன்டா தங்கம் பள்ளிக்கூடம் போகலை? போன உடனே திரும்பி வந்துவிட்ட" என்று கேட்டுக்கொண்டே. அவனது விழியோரம் இருக்கும் கண்ணீரை கண்டு அவளது கண்களும் கசிந்துவிட்டது.

"டீச்சர் பீஸ் கட்டலை என்று வீட்டுக்கு சென்று வாங்கிட்டு வர சொன்னாங்க அம்மா." அவன் படிப்பது சாதாரண பள்ளிக்கூடம் தான். அதிலும் அந்த பீஸ் இந்த பீஸ் என்று கேட்டு ஒரு வழி பண்ணிவிட்டனர். "கண்ணு நாந்தான் நாளைக்கு வந்து கட்றேன்னு சொன்னேன்லப்பா'" என்றாள். "நீ இதே தான்மா டெய்லி சொல்ற. கிளாஸ்ல எல்லாரும் பீஸ் கட்டிட்டாங்க அம்மா. டீச்சர் என்னை ஏன்டா பீஸ் கட்டவில்லை என்று கேக்கும்போது என்னை எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்க அம்மா. நீ சீக்கிரம கட்டிடுமா," என்று சொல்லி அழுது கொண்டே உள்ளே ஓடினான்.

அவளும் என்னதான் செய்வாள் அவளது கணவன் இறந்து ஒரு வருடம் ஆகிறது. பிடிவாதமாக மறுமணம் செய்து கொள்ளவில்லை; நல்ல வேளை அவள் கணவன் விட்டுச்சென்ற சிறிய சொந்த வீடு ஒன்று இருந்தது. தனது மகனுக்காக வாழ வேண்டும் என்று ஒரு வைரக்கியத்தோடு குற்றம் சொன்ன உறவுகளை எல்லாம் தள்ளி வைத்து விட்டு அவளுக்கு தெரிந்த இந்த தையல் வேலையை வைத்துக் கொண்டு அன்புமகனை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்று காலங்களை கடந்து வருகிறாள்...

இப்போது எல்லாம் முன்பு போல அதிக வருமானம் இல்லை. இருந்தாலும் கிடைக்கும் சொற்ப வருமானம் அவர்கள் இரண்டு பேருக்கும் போதுமானதாக இருந்தது. இப்படி எதிர்பாராமல் வரும் செலவுகளை ஒரு சில நேரம் சமாளிக்கக் கொஞ்சம் கடினமாக இருக்கிறது.

காதோரம் இருக்கும் ஒரு கல்லுதோடு நினைவுக்கு வந்தது. உடனே ஓடிச் சென்று அருகில் உள்ள மீனாட்சி அடகுக் கடையில் வைத்துப் பள்ளிக்குக் கட்ட வேண்டும், என்று வீட்டுக்குள் பணத்துடன் வந்தாள். தனது மகன் சிரித்த முகத்துடன் "அம்மா என்கிட்ட நூத்தி எழுபது ஐம்பது பைசா இருக்கும்மா, இந்தாம்மா'" என்றான்.

ஏதுடா உனக்கு எவ்ளோ பணம் என்று கேட்ட அவள் கோவத்துடன் போது
"அம்மா தினமும் நீ மிட்டாய் வாங்கிச் சாப்பிடக் கொடுக்கும் ஒரு ஒரு ரூபாயும் சேர்த்து வைத்து இருந்தேன்மா," என்றான் அந்த மூன்றாம் வகுப்புச் சிறுவன். அந்த நேரம் அவள் உள்ளம் அளவில்லா பூரிப்பு அடைந்தது. தினமும் தன் கஷ்டம் உணர்ந்து வளர்ந்து இருக்கும் தனது மகனை அள்ளி முத்தம் கொடுத்து "என் தங்கம்," என்றாள். அந்த நேரம் அவளுக்கு வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இளமையில் வறுமையை எவ்வளவு தூரம் அறிந்து இருக்க வேண்டும், அதனால்தானே சேமிக்கும் பழக்கம் இந்தச் சின்ன வயதில் வந்து இருக்கிறது. சிறுவயதில் அவளும் தன மகன் போல சிறு சிறுக சேமித்து வைத்து இருப்பது அவளுக்கு நினைவுக்கு வந்தது. தான் சொல்லி கொடுக்காமலே இப்படி சேமிக்கும் குணம் வந்ததை எண்ணி மகிழ ஆரம்பித்தாள்.

இனிமேல் தான் மகன் பள்ளிக்கு பீஸ் அவ்வப்போதே கட்டிவிட வேண்டும் என்ற தீர்மானத்துடன் மகனைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டுத் தனது தையல் மிசினுடைய இன்னும் வேலைகளை விரிவாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது மகன் தந்த சந்தோசத்தை மனதில் வைத்துகொண்டு வாழ்க்கையின் கஷ்டங்களை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்தாள் அவளது வாழ்க்கை பயணத்தை......

பிஸ்கி:

எனது சின்ன முயற்சி மொக்கைய இருந்தாலும் திட்டவோ
எண்ணினாலும் சலிக்காமல் கம்மேண்டில் கொட்டவும்..
எவ்ளோ படங்களை திரும்ப திரும்ப பார்க்கிறோம் அதில இந்த கதையும் மனசில வைத்துககொளுங்கள்....

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...