Monday, August 29, 2011

மழையே நீ நல்லா இருப்பியா...


மழை ரொம்ப நல்ல விசயம், ஆனால் ஒரு சிலருக்கு.


"ம்! இந்த பாழாப் போன மழை இருக்கே, நேரம் கேட்ட நேரத்தில வந்து இம்சையா கொடுக்குது," என்ற வசவுகளை கேட்டுக் கொண்டு இருந்த நேரத்தில் பெரு மழை வந்தது. தொப்பலாய் நனையும் முன்பு வீடு போய் சேர வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வண்டியை வேகமாய் செலுத்திக் கொண்டு இருந்தேன்.

அந்த நேரம் வேகமாய் காற்றும் அடித்தது. வண்டியில் வேகமாய்ப் போய் விடலாம்; இருந்தாலும் எதற்கு இவ்ளோ அவசரம் என்று அருகில் இருந்த மரத்தடியில் எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் இருந்த நிழல்குடை கட்டிடத்தில் மழைக்கு நடுங்கிக் கொண்டு என்னைப் போல அங்கே காத்திருக்கும் கூட்டத்துள் நுழைந்தேன்.

தெரிந்த முகமாய் யாரவது இருக்கிறார்களா என்று கண்கள் தேடும்போது இரு காந்தவிழிகள்... என்னைப் பார்த்தும் பாராமலும் நிற்கும் ஒரு காந்த விழியாளைக் கண்டு கொண்டேன்.

கொஞ்சம் சந்தேகம்தான் காந்தக்கண்கள் பார்ப்பது நம்மையா இல்லை வேறு என் அருகில் இருக்கும் யாரையாவதா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். நல்ல வேளை யாரும் இல்லை. ஏன் என்றால் அங்கு இருந்தவர்கள் எல்லாம் அறுபதை தாண்டிய முன்னாள் இளம் வாலிபர்கள். அவ்வாறு திரும்பி பார்க்கும் போது காந்தவிழி புன்னகைக்கவும் தவறவில்லை. இந்த இடத்தில் வைரமுத்து நின்று இருந்தால் ஒரு 'கள்ளிக்காட்டு இதிகாசம்' போல 'உன் புன்னகை காட்டும் இதிகாசம்' என்று கவிதை நூல் வெளியிட்டு இருக்கலாம்.

அந்த மழையிலும் மக்கள் அனைவரும் ஒவ்வொரு கதை பேசிக்கொண்டு இருந்தனர். அதில் ஒரு அக்கா, "என் தங்கச்சி ஊரில இருந்து போனவாரம் போன் போட்டு, அக்கா வத்தல் போட்டு வைக்கா. பசங்கலாம் வத்தல் கேக்கராங்க என்று கேட்டு இருந்தா. இன்னைக்கு வத்தல் போடலாம்னு இருந்தேன். இந்த சனியன் மழை வந்து ஒண்ணும் பண்ண விடாம பண்ணிட்டு," என்று பக்கத்தில் இருக்கும் பாட்டியிடம் அங்கலாய்த்துக் கொண்டு இருந்தது. அதற்கு அந்த பாட்டி சொன்ன பதில் கேட்டு நாங்கள் சிரித்துக் கொண்டோம்.

அந்த காந்த விழி அருகில் இருக்கும் கல்லூரியில் படித்துக் கொண்டு இருப்பது போல கையில் இரண்டு நோட்டுகளும் வைத்து இருந்தது. ஏதோ ஒரு தைரியம் பேச வேண்டும் என்று தோன்றியது.

"மழை எப்போது விடும் என்று தெரியல," என்று பொதுவாக பேச ஆரம்பித்தோம்.
சினிமா போல கனவா இல்லை நனவான்னு தெரியல. இருந்தாலும் உள்ளுக்குள் மனது மழை விடக்கூடாது என்று வேண்டிக் கொண்டு இருந்தது அந்த வத்தல் போட நினைக்கும் அக்காவுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

உள்ளுக்குள் இந்த காந்தவிழியுடன் கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஊரில பேச முடியாது, ஏன் என்றால் எங்காவது நின்றால் கூட "உங்க பையன் அங்க எதுக்கு நிக்கரப்பல?" என்று தகவல் அப்பாவுக்குப் போய்விடும். கொஞ்சம் பயம் அதனால் எங்கும் நிக்கவும் மாட்டேன் காரணம் இன்றி எவரிடமும் பேசுவதும் கிடையாது. தெரிந்த முகம் என்றால் ஒரு புன்னகை அவ்வளவே. ரொம்ப அமைதியான பையன்னு ஊருக்குள்ள நமக்கு ஒரு பேரு. (நீங்க நம்ப மாட்டீங்களே.)

அந்த காந்தவிழி கல்லூரியில் படிப்பதாகவும், புதிதாய் அந்த ஊருக்கு குடி வந்து இருக்கும் போஸ்ட் மாஸ்டர் மகள் என்றும் அறிமுகப் படலம் ஆயிற்று. என்னைப்பற்றி கொஞ்சம் சுருக்கமாய் கூறிக்கொண்டேன். ஒரு விசயம் சொல்ல மறந்து விட்டேன் மழை விடுவதற்குள் நாங்கள் பேசும்போது எல்லாம் பக்கத்தில் இருந்த தாத்தா நூறுமுறை மணி கேட்டு தொல்லை பண்ணிவிட்டார். எனது கடிகாரத்தை அவரிடமே கொடுத்து விடலாம் என்று நினைத்தேன். அவருக்கு மணி பார்க்கத் தெரியுமா என்பது வேறு விசயம்.

மெல்ல மழை பெய்துகொண்டு இருந்தது. முன்பு மழை பிடித்தும் உணராமல் இருந்து இருக்கிறேன். இந்த மழை அழகாய்த் தெரிந்தது கொஞ்ச நேரம் மட்டுமே.

காந்தவிழியுடன் பொதுவான விசயங்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே மழை நிற்கும் போல சத்தம் குறைந்து ஒருவர் ஒருவராய் நகர ஆரம்பித்தனர். கடைசி வரை நின்று கொண்டு இருந்தது நாங்கள் மட்டும் இல்லை; மணி கேட்டு தொல்லை பண்ணின அந்த பல்லு போன தாத்தாவும்தான். பிறகு ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு அவரவர் வீடு நோக்கி நகர ஆரம்பித்தோம்.

மழை நின்று விட்டது அவளின் காந்த விழிகள் என்னைவிட்டு போகவே இல்லை..... நாங்கள் நிஜமாவே பல்லுபோன தாத்தாவை திட்டவில்லை.

நீ வெறும் தூறலை
விட்டுச் சென்றால்
கவலை இல்லை.
அவளின் நினைவுகளை
அல்லவா
தூறிவிட்டு
சென்று விடுகிறாய்.

மழையே நீ நல்லா இருப்பியா...

அந்த மழை வராமல் போய் இருக்கலாம் என்று திட்டிக் கொண்டிருந்தோம்.


டிஸ்கி :
இந்த சின்ன முயற்சிக்கு பதிவில் உள்ள தவறுகளை திருத்தி மாற்றம் பண்ணிகொடுத்த இமா டீச்சர் அவர்களுக்கு மிக்க நன்றியும் அன்பும்..


Thursday, August 18, 2011

நம்ம ஊரு மையினருக்கு பிறந்தநாள் ...



வாழ்த்த வர உங்களுக்கு ....


அண்ணே
நம்ம ஊரைப் பத்தி எப்படி ஒரு ஒரு இடத்தையும்
அப்படியே என்றும் நினைவில் வைத்து
அலை போல என்றும் நீங்காது இருக்கும்
உங்கள் நினைவுக்கும்

கதைமுதல்
கவிதை வரை
கட்டுரையிலும்
விளையாட்டிலும்
மேலும்

கம்ப்யூட்டர் கதைகளை எழுதும் சுஜாதாவை போல
க்ரைம் தொடர் கதைகள் எழுதும் ராஜேஷ்குமார் போல
நகைச்சுவையும் கலந்து
எல்லாம் கலந்த கதம்பமாய்
பதிவுலகில்
திறம் வாய்ந்த ஒரு வேந்தனாய் வளம் வரும்
உங்களுக்கு எந்த தம்பியின் அன்பான
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

என்றும் இளமையுடன் நீண்ட
ஆயுளுடன் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் .

ஒரு ஒரு பதிவையும் லிங்க் கொடுத்து படிப்பதை விட
ஒரு லிங்க் உங்கள் சரித்திரம் பதிவு வரலாற்றில் என்றும் இருக்கும்
என்று நம்புகிறேன்.

வாழ்த்த வயதில்லை
இருந்தலும் வாழ்க வளமுடன்
நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் சந்தோசமாய் இருக்க
எனது அன்பான பிராத்தனைகள் அண்ணா.

இன்னைக்கு நம்ம ஊரு மையினருக்கு பிறந்தநாள்
முடிந்தால் நீங்களும் வாழ்த்துங்கள்
டிஸ்கி : உங்களுக்கு பிடித்த இட்லியும் கூட தேங்காய் சட்னியும்,இட்லிபொடியும்...
.



நம்ம ஊரு மைனர்

Thursday, August 11, 2011

இந்திய வரலாற்றில் முதன் முறையாக....

அன்பார்ந்த பெரியோர்களே!
எனது பதிவை படிக்கும் பிரபலங்களே உங்களுக்காக!
இந்திய வரலாற்றில் முதன் முறையாக!

சீரக இறால் வறுவல் செய்வது எப்படி....ஒரு நிமிஷம் இருங்க சாமிய வேண்டிக்கிறேன்
(/\)சாமி இந்த ப்ளாக் படிக்கறவங்கள மட்டும் காப்பாத்து.

சீரக இறால் வறுவல்-

ஓகே! தேவையான பொருட்கள்...

இறால் - அரை கிலோ, ஏன் என்றால், அதை சுத்தம் செய்த பிறகு கால் கிலோதான் வரும்.
பெரிய வெங்காயம் - நான்கு

சீரகம் - இரண்டு பெரிய ஸ்பூன்
பெரிய சீரகம் (சோம்பு) - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன்
கடுகு-கொஞ்சம்
ஒரு முழு பூண்டு
பிறகு இஞ்சி- (பூண்டு அளவு)... ஒரு குத்துமதிப்பா எடுத்துக்கோங்க.
கறிவேப்பிலை-கொஞ்சம்
மிளகாய்ப்பொடி - சிறிது
எண்ணெய்-தேவையான அளவு.

முதலில் வெங்காயத்தை சிறிது சிறிதாக வெட்ட வேண்டும்.
பிறகு அதில் பாதி எடுத்துக் கொண்டு வெட்டப்பட்ட இஞ்சியும், உரிக்கப்பட்ட பூண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு சீரகம், சோம்பு, கொஞ்சம் கறிவேப்பில்லை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.

பிறகு அடுப்பில் சமையல் பாத்திரத்தை வைத்து, அதாங்க எண்ணை சட்டி வைத்து எண்ணெய் தேவையான அளவு விட்டு நன்கு காயவிடவும். அதில் கடுகு கறிவேப்பிலை போட்டு, உடன் வெங்காயத்தையும் போட்டு நன்கு வதக்கவும். பொன் வறுவல் வந்த உடன் அரைத்த இஞ்சி பூண்டு கரைசல், வெங்காயம் சேர்க்கவும்

பிறகு நன்கு கழுவி மஞ்சள்தூள் போட்டு குளிப்பாட்டி வைக்கப்பட்டுள்ள இறால்களை சட்டியில் போடவும்.
பூண்டு இஞ்சி வாசனை போகும் வரையில் நன்கு வதக்கவும்.

வாசனை குறையும் தறுவாயில் கொஞ்சம் மிளகாய்ப்பொடி போட்டு அதன் மீது கொஞ்சம் எண்ணெய் விட்டு சற்று மிதமான
தீயில் வதக்கவும்.

சூடான சுவையான இறால் வறுவல் ரெடி.

பின்குறிப்பு:
பெயர்க்காரணம்
கடந்த வாரம் இந்த வறுவல் சற்று அதிகமாக சீரகம் சேர்ந்துவிட்டதால் சீரக இறால் வறுவல் என்று அழைக்கப்பட்டது..சுவை சற்று அதிகம் என்பது கூடுதல் தகவல்..:)

வெங்காயம் அதிகமா சேர்த்தால் நன்கு சுவையாக இருக்கும் .
பாதி வெங்காயம் பூண்டுடன் அரைத்தும் விடுவதால் தேங்காய் போடவேண்டியது இல்லை.
மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் இன்னும் தூக்கலாக இருக்கும்.

முக்கிய குறிப்பு:
இதுபோல செய்து எதாவது ஆகிவிட்டால் நிர்வாகம் பொறுப்பு அல்ல...


Saturday, August 6, 2011

எங்க கிராமத்துல நடந்த என்னோட கதை...

இதோ உங்கள் முன்..

ஏம்பா இந்த

கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்பீங்க? - நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்.

அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்.

இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க Clientனு சொல்லுவோம்.

சரி

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு Sales Consultants, Pre-Sales Consultants..... இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், முடியும்னு பதில்
சொல்றது இவங்க வேலை.
இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க?
MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க.

முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்? - அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.
சரி இவங்க போய் பேசின உடனே client project (atwood) கொடுத்துடுவானா?அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்
500
நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?

இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு புலம்ப
ஆரம்பிப்பான்.
அப்புறம்? - அப்பா ஆர்வமானார்.
இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்னு சொல்லுவோம்.
CR-னா?
Change Request.
இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்.
அப்பாவின்
முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

இதுக்கு அவன் ஒத்துபானா?

ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?

சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?

முதல்ல ஒரு டீம் (atwood team) உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. (prabir) இவரது தான் பெரிய தலை.

ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு.

அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு.

அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது.

அப்போ இவருக்கு என்னதான் வேலை? - அப்பா குழம்பினார்.

நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை.

பாவம்பா

ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்.

எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?
ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை.

நான் உன்னோட அம்மா கிட்ட பண்றது மாதிரி?!
இவருக்கு கீழ டெக் லீட், (JH) மோடுல் லீட், (FUN) டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க.

இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?

வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், (gopal) டெஸ்டர்னு (muthukumar,kathir) , அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க.

அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?

இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி.

ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?

அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க

கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?

கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்.

எப்படி?

நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை. இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்.

சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?

அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்.

அப்புறம்?

ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குற மாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்.

அப்புறம்?

அவனே பயந்து போய், எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க. இதுக்கு பேரு Maintanence and Support. இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா.எதுக்குடா இந்த மானங்கெட்ட பொலப்பு...........


டிஸ்கி: இதுஇமெயிலில் வந்த ஒரு கதை ....

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...