Wednesday, May 9, 2012

மீண்டும் அடுத்த கடிதத்தில்..
எப்படி இருக்க பொன்னி நலமா
அத்தையும் மாமாவும் நலமாய் இருப்பார்கள் என்று நம்புகிறேன்
இங்கு நண்பர்கள் அனைவரும் நலம்

கடந்த முறை வந்த போது சில நிமிடங்கள் தான் உன்னை பார்த்தாலும் அதிகம் பேச முடியவில்லை சூழ்நிலையும் சந்தர்ப்பமும் இடைவெளியை ஏற்படுத்தி கொடுத்துக்கொண்டே இருக்கிறது இருந்தாலும் இந்த தூரத்தின் பயணத்தில் எல்லாம் நீ அறிவாய் என்று அமைதியாய் ஏற்றுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு முறையும் வரும் வரை காத்து இருந்து வந்த பிறகு விரைவில் சென்று விடுவாய் என்று சொல்லும் ஒரு ஒரு நேரத்திலும் வரும் வலிகள் கண்ணீராய் வெளிப்படுகையில் தூசி விழுந்தது என்று துடைக்கும் உனது பாங்கிலும் நலம் விசாரிப்பிலும் அன்பாய் பார்க்கும் ஒரு பார்வைக்கும் பதில் தெரியாமல் மருகுகிறேன்.

இந்த பாசம் எப்பொதும் வேண்டும் என்றுதான் தள்ளி போய்க்கொண்டு இருக்கிறேன்
கணக்கிலா அன்பை கொட்ட நீ இருக்கும்போது என் ஆயுசுக்கும் பாசம் தர நான் இருக்கிறேன் என்று சொல்ல முடியாமல் இருக்கிறேன் எனக்குள் மட்டும் சொல்லிக்கொண்டு.

ஊருக்குள் எங்க மாமா வந்து இருக்காக என்று சொல்லும்போது உன் கண்ணில் காணும் சந்தோசத்தை காண திரும்ப எப்போது வருவேன் என்று ஏங்குகிறேன்.

பிறகு நம்ம அசின்னு தமன்னா

எல்லாம் வீட்டில் விற்று விட்டதை அறிந்தும் தற்போது ஹன்சிகா
மட்டும் வைத்து இருப்பதை அறிந்து கொஞ்சம் வருத்தம் முற்றேன்.

புல்லறுத்து கொண்டு நேராக அசினுக்கும் தமனவுக்கும் நீ புல் வைக்கும் சாக்கில் பேசிக்கொண்டே போவது எனக்கு பிடிக்கும். பாவம் வாய் இருந்தால் அழுது இருக்கும் என்னை போல..

எல்லாம் விட்டு தனியாக இருப்பது சற்று கடினம்தான் என்று சொல்லிக்கொண்டே வீட்டில் மாப்ளை பார்த்துக்கொண்டு இருக்காக என்று வார்த்தைகளை முழுங்கி சொல்லும்போது என்ன சொல்வது நிஜமாய் அந்த நிமிடங்கள் கனக்கிறது.

கடந்த முறை மாமா அத்தை சொல்லும்போது வேலை இல்லாத சூழ்நிலையில் எப்படி பேசுவது என்று தெரியாமல் இருந்து விட்ட நிலையில் திரும்பவும் உங்கள் வீட்டில் வேறு வரன் பார்க்கும் செய்தி கொஞ்சம் தடுமாற்றம் கொடுக்கிறது.

என் சார்பில் பேச யாரும் இல்லை என்ன பேசவது என்று தெரியவும் இல்லை
இருந்தாலும் ஒரு நம்பிக்கையில் வாழ்கிறேன்.

எட்டாம் வகுப்பு தேர்வில் முதல் மார்க் வாங்கியதற்க நீ கொடுத்த இங்க்பேனா இன்னமும் பத்திரமாய் இருக்கிறது.

பிறகு விரைவில் ஊருக்கு வருகிறேன்
ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடு,கவலை படாத பொன்னி எல்லாம் சரி வரும்

மீண்டும் அடுத்த
கடிதத்தில்...
சும்மா 1 :)

மழை வரும் நேரத்தில்
குடை இல்லாமல் நனைகிறேன்
உன் நினைவுகளில்

டிஸ்கி :
சும்மா ஒரு கற்பனையில் எழுதியது
இக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே :)

61 comments:

Mahi said...

Was it a serious letter or "Siri-yas" letter Siva? Little confusing what to comment...

Nice clicks of Thamanna & Hansika! ;)

VijiParthiban said...

எப்படி இருக்க பொன்னி நலமா .....அசின்னு தமன்னா.........ஹன்சிகா......மழை வரும் நேரத்தில்
குடை .......கற்பனை மிகவும் அருமையாக இருக்கிறது சிவா அவர்களே.

MANO நாஞ்சில் மனோ said...

எட்டாம் வகுப்பு தேர்வில் முதல் மார்க் வாங்கியதற்க நீ கொடுத்த இங்க்பேனா இன்னமும் பத்திரமாய் இருக்கிறது.//

காதலின் ஆழம் நன்றாக புரிகிறது!!!!

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது கற்பனையா...?? படிச்சா அப்பிடி தெரியலையே...??

Anonymous said...

ரொம்ப ரொம்ப டச்சிங் ஆ இருக்கு ....

இது நிஜம் தான் எண்டு மனசுசொல்லுது ...

படிச்சி முடிச்சப்புறம் மனம் கொஞ்சம் கனத்துப் போச்சிங்க

Anonymous said...

ஓவர் பீலிங்க்ஸ் உடம்புக்கு ஆகாது சார் ...

Anonymous said...

அந்த மஞ்சள் கலர் பட்டு பாவாடை சட்டை தான் பொன்னி அக்கா வா ..?....

Anonymous said...

ஒவ்வொரு முறையும் வரும் வரை காத்து இருந்து வந்த பிறகு விரைவில் சென்று விடுவாய் என்று சொல்லும் ஒரு ஒரு நேரத்திலும் வரும் வலிகள் கண்ணீராய் வெளிப்படுகையில் தூசி விழுந்தது என்று துடைக்கும் உனது பாங்கிலும் நலம் விசாரிப்பிலும் அன்பாய் பார்க்கும் ஒரு பார்வைக்கும் பதில் தெரியாமல் மருகுகிறேன்./////////

நிறைய அன்புங்க ..எனக்கே இதைப் படிக்க பீலிங்க்ஸ் ஒப் இந்தியா வா இருக்கு தெரியுமா ...

Anonymous said...

இந்த பாசம் எப்பொதும் வேண்டும் என்றுதான் தள்ளி போய்க்கொண்டு இருக்கிறேன்
கணக்கிலா அன்பை கொட்ட நீ இருக்கும்போது என் ஆயுசுக்கும் பாசம் தர நான் இருக்கிறேன் என்று சொல்ல முடியாமல் இருக்கிறேன் எனக்குள் மட்டும் சொல்லிக்கொண்டு.//

மீண்டும் பீலிங்க்ஸ் ஒப் இந்திய வா இருக்கே ....குரு வே எனக்கு நிறைய நிறைய திஸ்ஸு அனுப்பி கொடுங்கள் ...

Siva sankar said...

Mahi said...
Was it a serious letter or "Siri-yas" letter Siva? Little confusing what to comment...

Nice clicks of Thamanna & Hansika! ;)

May 9, 2012 11:41 AM //

Well come mahima,

hm its just writtings only mahima..

Thank you

Siva sankar said...

VijiParthiban said...
எப்படி இருக்க பொன்னி நலமா .....அசின்னு தமன்னா.........ஹன்சிகா......மழை வரும் நேரத்தில்
குடை .......கற்பனை மிகவும் அருமையாக இருக்கிறது சிவா அவர்களே.

May 9, 2012 12:27 PM //

வாங்க விஜிக்கா
நன்றி தங்கள் பாராட்டுக்கும் வருகைக்கும்
(அவர்களே எல்லாம் வேண்டாம் அக்கா )

Siva sankar said...

MANO நாஞ்சில் மனோ said...
எட்டாம் வகுப்பு தேர்வில் முதல் மார்க் வாங்கியதற்க நீ கொடுத்த இங்க்பேனா இன்னமும் பத்திரமாய் இருக்கிறது.//

காதலின் ஆழம் நன்றாக புரிகிறது!!!!

May 9, 2012 12:34 PM /

வாங்க மனோ அண்ணா

ம் நன்றி வருகைக்கு

Siva sankar said...

MANO நாஞ்சில் மனோ said...
என்னாது கற்பனையா...?? படிச்சா அப்பிடி தெரியலையே...??

May 9, 2012 12:35 PM //

நம்பித்தான் ஆகவேணும் :)
ஹஹஹா
மீண்டும் நன்றி

Siva sankar said...

கலை said...
ரொம்ப ரொம்ப டச்சிங் ஆ இருக்கு ....

இது நிஜம் தான் எண்டு மனசுசொல்லுது ...

படிச்சி முடிச்சப்புறம் மனம் கொஞ்சம் கனத்துப் போச்சிங்க//

வாங்க கலை ஆன்ட்டி
(இல்லை அம்முக்குட்டி அக்காவா)

என்னது இது கலை ஆன்ட்டியா

ஒரு தவறும் இல்லாமல்

பின்னோட்டம்

ஹே ஸ்வீட் எடு கொண்டாடு :)

Anonymous said...

நம்பித்தான் ஆகவேணும் :)
ஹஹஹா
மீண்டும் நன்றி///

காது குத்தி கம்மல் போட்டு விடான்கள்

Siva sankar said...

கலை said...
ஓவர் பீலிங்க்ஸ் உடம்புக்கு ஆகாது சார் ...

May 9, 2012 1:28 PM //
அட ராம எனக்கு ஒரு பீலிங்கும்ஸ் இல்லை கலை
நன்றி மேடம்

Siva sankar said...

கலை said...
அந்த மஞ்சள் கலர் பட்டு பாவாடை சட்டை தான் பொன்னி அக்கா வா ..?....

May 9, 2012 1:31 PM //

இருந்தா நல்லாத்தான் இருக்கும் :)

கலை ஆன்ட்டி
உங்கள் கவிதையும் மிகவும் அருமை
அழகான பாசம் மலர்

Siva sankar said...

கலை said...
ஒவ்வொரு முறையும் வரும் வரை காத்து இருந்து வந்த பிறகு விரைவில் சென்று விடுவாய் என்று சொல்லும் ஒரு ஒரு நேரத்திலும் வரும் வலிகள் கண்ணீராய் வெளிப்படுகையில் தூசி விழுந்தது என்று துடைக்கும் உனது பாங்கிலும் நலம் விசாரிப்பிலும் அன்பாய் பார்க்கும் ஒரு பார்வைக்கும் பதில் தெரியாமல் மருகுகிறேன்./////////

நிறைய அன்புங்க ..எனக்கே இதைப் படிக்க பீலிங்க்ஸ் ஒப் இந்தியா வா இருக்கு தெரியுமா ...

May 9, 2012 1:38 PM //

மிக்க நன்றிங்க,
என்னங்க ஒரே மரியாதையை எல்லாம் அவ்வ....
எனக்கே கொஞ்சம் சந்தேகமா இருக்கு
யாரு நம்ம கலை மேடம் அவர்களா என்று

Siva sankar said...

கலை said...
இந்த பாசம் எப்பொதும் வேண்டும் என்றுதான் தள்ளி போய்க்கொண்டு இருக்கிறேன்
கணக்கிலா அன்பை கொட்ட நீ இருக்கும்போது என் ஆயுசுக்கும் பாசம் தர நான் இருக்கிறேன் என்று சொல்ல முடியாமல் இருக்கிறேன் எனக்குள் மட்டும் சொல்லிக்கொண்டு.//

மீண்டும் பீலிங்க்ஸ் ஒப் இந்திய வா இருக்கே ....குரு வே எனக்கு நிறைய நிறைய திஸ்ஸு அனுப்பி கொடுங்கள் ...

May 9, 2012 1:39 PM //

ம நோ பீலிங்க்ஸ் ஸ்டார்ட் தி மியூசிக் ஆடுங்கடா
என்ன சுத்தி ஐயானாறு வெட்டுக்கத்தி....
கிடா வெட்டி பொங்கல் வச்சா ....

ஓகே டிச்சு வேணாம் ..கைக்குட்டை பார்சல் பண்ண சொல்லுங்க
நன்றி கலை

Siva sankar said...

கலை said...
நம்பித்தான் ஆகவேணும் :)
ஹஹஹா
மீண்டும் நன்றி///

காது குத்தி கம்மல் போட்டு விடான்கள்

May 9, 2012 1:57 PM //

மைலார்ட்
சொன்ன யாருமே நம்ப மாட்றாங்க மைலார்ட்
என்ன செய்வது ?

Anonymous said...

ஒரு தவறும் இல்லாமல்

பின்னோட்டம்

ஹே ஸ்வீட் எடு கொண்டாடு :)///

இனிமேல் பார்த்து பின்னூட்டம் போடுறேன் ..என்னால் முடிந்த அளவுக்கு பிழையை குறைக்க முயல்கிறேன் ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Siva sankar said...

கலை said...
ஒரு தவறும் இல்லாமல்

பின்னோட்டம்

ஹே ஸ்வீட் எடு கொண்டாடு :)///

இனிமேல் பார்த்து பின்னூட்டம் போடுறேன் ..என்னால் முடிந்த அளவுக்கு பிழையை குறைக்க முயல்கிறேன் ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

May 9, 2012 2:10 PM

கலை ஆன்ட்டி
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை
இங்கு நீங்கள் எப்படி வேண்டும் என்றாலும் இடலாம்
நீங்கள் எப்போதும் போலவே இடுங்கள்

தவறுகள்
மெருகேற்றும்
நம்மை
உணரும்போது :)

இமா said...

க.கா.போ இமா. ;))

அசினையும் தமனாவையும் எப்போ வித்தாங்க!! ;(( எனிவேஸ்.. அடிமாட்டுக்கு விற்கலைல்ல!

இராஜராஜேஸ்வரி said...

ஹன்சிகா ரொம்ப அழகு !

angelin said...

வரும் வலிகள் கண்ணீராய் வெளிப்படுகையில் தூசி விழுந்தது என்று துடைக்கும் உனது பாங்கிலும் நலம் விசாரிப்பிலும் அன்பாய் பார்க்கும் ஒரு பார்வைக்கும் பதில் தெரியாமல் மருகுகிறேன்./

பொன்னியின் செல்வனுக்கு :)))))))))

பாராட்ட வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன் .
மனதை பிசைந்த வரிகள் சிவா .ஆரம்பம் மனதில் ஊடுருவி கொண்டிருக்கும்போது சமாளிப்பதர்க்காய் நகைசுவையாய் முடிதாற்போல் இருக்கிறது .

angelin said...

சிவா மஞ்சு விரட்டுக்கா வளக்கிராங்க ஹன்சிக்காவை ???????

angelin said...

மழைகவிதை மிக அருமை .
கற்பனையே இவ்ளோ அழகா !!!!!!!!!!so நிஜம் .

athira said...

கொஞ்சம் முடியல்ல:((( விரைவில் வருகிறேன்...

அப்பாவி தங்கமணி said...

It doesn't feel like "karpanai" with the way you narrated...;) anyway, nambarom...:)

Very nice write up

athira said...

//எப்படி இருக்க பொன்னி நலமா //

நீ இங்கு நலமே.... நான் அங்கு நலமோ?.......

athira said...

பொன்னி பேபியாக இருக்கேக்கை எடுத்த படமோ? சூப்பராக இருக்கிறா... சிவா வாறாரோ என வாசலைப் பார்ப்பதுபோல இருக்கு:)))...

அதுசரி இந்த புளொக் வச்சிருப்பது, சிவாட அப்பா அம்மாவுக்குத் தெரியுமோ? இல்ல ச்ச்ச்சும்மாதான் கேட்டேன்:))

athira said...

//இந்த பாசம் எப்பொதும் வேண்டும் என்றுதான் தள்ளி போய்க்கொண்டு இருக்கிறேன்
கணக்கிலா அன்பை கொட்ட நீ இருக்கும்போது என் ஆயுசுக்கும் பாசம் தர நான் இருக்கிறேன் என்று சொல்ல முடியாமல் இருக்கிறேன் எனக்குள் மட்டும் சொல்லிக்கொண்டு.////

எப்பூடி சிவா? எப்பூடி இப்பூடியெல்லாம்? கலக்கிட்டீங்க... அப்பூடியே டச்ச்ச்ச்ச்ச் ஆச்சு:)))

athira said...

//பிறகு நம்ம அசின்னு தமன்னா ///

சிவா கொஞ்ச நாளைக்கு ஒளிச்சிருங்கோ:)) தமனா ரசிகர்கள் தேடீனமாம் சிவாவை:))

athira said...

//எல்லாம் விட்டு தனியாக இருப்பது சற்று கடினம்தான் என்று சொல்லிக்கொண்டே வீட்டில் மாப்ளை பார்த்துக்கொண்டு இருக்காக என்று வார்த்தைகளை முழுங்கி சொல்லும்போது என்ன சொல்வது நிஜமாய் அந்த நிமிடங்கள் கனக்கிறது.
////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உப்பூடிச் சொல்லிச் சொல்லியே “அணிலை மரமேற விட்ட நாயின் நிலைமை” ஆகிடாமல் பார்த்துக்கொள்ளுங்க சிவா... டக்குப் பக்கெனக் களம் குதித்து பொன்னியைக் கடத்திட்டு வந்திடுங்க:)))).. நாங்க இருக்கிறோம் மிச்சத்தைக் கவனிக்க:))... புரூவ் ரீடிங்க்கு றீச்சர் இருக்கிறா.. பிறகென்ன பயம் சிவா...:)))

athira said...

///பிறகு விரைவில் ஊருக்கு வருகிறேன்
ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடு,கவலை படாத பொன்னி எல்லாம் சரி வரும்
///

சே..சே..சே... பொன்னி உவர் சரிப்பட்டு வரமாட்டார்.. நீங்க இரவோட இரவாக சூட்கேசைத் தூக்கிட்டு சிவாட ரூம் கதவைத் தட்டுங்க:)).. நாங்க இருக்கிறோம்.. கெ.கி கள்:)) இருக்கப் பயமெதுக்கு:)))....

Siva sankar said...

இமா said...
க.கா.போ இமா. ;))

அசினையும் தமனாவையும் எப்போ வித்தாங்க!! ;(( எனிவேஸ்.. அடிமாட்டுக்கு விற்கலைல்ல!

May 9, 2012 3:02 PM //

வாங்க இமா
ம் எனக்கே தெரியாது விற்றது :)
ஆனால் வித்துட்டாங்க :(!
நன்றி

Siva sankar said...

இராஜராஜேஸ்வரி said...
ஹன்சிகா ரொம்ப அழகு !

May 9, 2012 3:11 PM /
வாங்க ராஜேஸ்வரி மேடம்
நன்றி உங்கள் ரசிப்புக்கும்

Siva sankar said...

angelin said...
வரும் வலிகள் கண்ணீராய் வெளிப்படுகையில் தூசி விழுந்தது என்று துடைக்கும் உனது பாங்கிலும் நலம் விசாரிப்பிலும் அன்பாய் பார்க்கும் ஒரு பார்வைக்கும் பதில் தெரியாமல் மருகுகிறேன்./

பொன்னியின் செல்வனுக்கு :)))))))))

பாராட்ட வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன் .
மனதை பிசைந்த வரிகள் சிவா .ஆரம்பம் மனதில் ஊடுருவி கொண்டிருக்கும்போது சமாளிப்பதர்க்காய் நகைசுவையாய் முடிதாற்போல் இருக்கிறது .

May 9, 2012 4:02 PM /
வாங்க அஞ்சு அக்கா
ம் பொன்னியின் செல்வனா???
மிக்க நன்றி அக்கா வருகைக்கும்

Siva sankar said...

angelin said...
சிவா மஞ்சு விரட்டுக்கா வளக்கிராங்க ஹன்சிக்காவை ???????

May 9, 2012 4:04 PM /

என்னது மஞ்சு விரட்டுக்கா
நோ நோ வீட்டில் ஒரு கன்று இருக்கணும்
அதற்காகதான் அக்கா

Siva sankar said...

angelin said...
மழைகவிதை மிக அருமை .
கற்பனையே இவ்ளோ அழகா !!!!!!!!!!so நிஜம் .

May 9, 2012 4:07 PM //

ஹஹஹா நன்றி
ஏதோ சொல்றீங்க

Siva sankar said...

அப்பாவி தங்கமணி said...
It doesn't feel like "karpanai" with the way you narrated...;) anyway, nambarom...:)

Very nice write up

May 10, 2012 12:50 AM /

வாங்க இட்லிகடை அப்பாவி அக்கா
உங்க கடை இட்லி எல்லாம் எப்படி வியாபாரம் ?:)
நன்றி உங்கள் வருகைக்கும்

Siva sankar said...

athira said...
//எப்படி இருக்க பொன்னி நலமா //

நீ இங்கு நலமே.... நான் அங்கு நலமோ?.......

May 10, 2012 4:49 AM //

வாங்க வாங்க பேபி அதிரா
இன்னம் காணலையே என்று பார்த்தேன்
நலமோ//ம் நலம் இல்லை :)

Siva sankar said...

athira said...
கொஞ்சம் முடியல்ல:((( விரைவில் வருகிறேன்...

May 10, 2012 12:15 AM /

என்ன ஆச்சு பேபி அதிரா
ரெஸ்ட் எடுத்து வாங்க அவசரம் இல்லை
எண்ட ப்ளாக் எங்க போக போது...

Siva sankar said...

athira said...
பொன்னி பேபியாக இருக்கேக்கை எடுத்த படமோ? சூப்பராக இருக்கிறா... சிவா வாறாரோ என வாசலைப் பார்ப்பதுபோல இருக்கு:)))...

அதுசரி இந்த புளொக் வச்சிருப்பது, சிவாட அப்பா அம்மாவுக்குத் தெரியுமோ? இல்ல ச்ச்ச்சும்மாதான் கேட்டேன்:))

May 10, 2012 4:50 AM //
ஏன் ஏன் எப்படி
பொன்னி ஒரு கற்பனை

ம் எல்லாம் நேரம் :)
அப்பா அம்மாவுக்கா நோ நோ
யாருக்குமே தெரியாது eppudi naangalam usaarla...:)

Siva sankar said...

athira said...
//இந்த பாசம் எப்பொதும் வேண்டும் என்றுதான் தள்ளி போய்க்கொண்டு இருக்கிறேன்
கணக்கிலா அன்பை கொட்ட நீ இருக்கும்போது என் ஆயுசுக்கும் பாசம் தர நான் இருக்கிறேன் என்று சொல்ல முடியாமல் இருக்கிறேன் எனக்குள் மட்டும் சொல்லிக்கொண்டு.////

எப்பூடி சிவா? எப்பூடி இப்பூடியெல்லாம்? கலக்கிட்டீங்க... அப்பூடியே டச்ச்ச்ச்ச்ச் ஆச்சு:)))

May 10, 2012 4:54 AM //

ஹஹா அது தானவே வருது :ஹஹா
நன்றி பேபி அதிரா
ஏதோ சுமாரகதான் எழுதி இருக்கிறேன்.
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

Siva sankar said...

athira said...
//பிறகு நம்ம அசின்னு தமன்னா ///

சிவா கொஞ்ச நாளைக்கு ஒளிச்சிருங்கோ:)) தமனா ரசிகர்கள் தேடீனமாம் சிவாவை:))

May 10, 2012 4:55 AM /
சரி பேபி அதிரா நான் எங்க ஒளிந்து இருக்கிறேன் யாருகிட்டயும்
சொல்லிடாதீங்கோ :)

Siva sankar said...

athira said...
//எல்லாம் விட்டு தனியாக இருப்பது சற்று கடினம்தான் என்று சொல்லிக்கொண்டே வீட்டில் மாப்ளை பார்த்துக்கொண்டு இருக்காக என்று வார்த்தைகளை முழுங்கி சொல்லும்போது என்ன சொல்வது நிஜமாய் அந்த நிமிடங்கள் கனக்கிறது.
////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உப்பூடிச் சொல்லிச் சொல்லியே “அணிலை மரமேற விட்ட நாயின் நிலைமை” ஆகிடாமல் பார்த்துக்கொள்ளுங்க சிவா... டக்குப் பக்கெனக் களம் குதித்து பொன்னியைக் கடத்திட்டு வந்திடுங்க:)))).. நாங்க இருக்கிறோம் மிச்சத்தைக் கவனிக்க:))... புரூவ் ரீடிங்க்கு றீச்சர் இருக்கிறா.. பிறகென்ன பயம் சிவா...:)))

May 10, 2012 4:57 AM /

ம் மிக்க நன்றி நீங்கதான் எனக்கு பொண்ணு பார்க்கிறேன்னு என்று சொல்லி இருக்கீங்க..
அதான் அமைதியாக இருக்கிறேன்.:)_
இனி உங்கள் அட்ரஸ் கண்டு பிடிக்கணும்
ஓடி வர வேணும் என்றால் :)
நன்றி பேபி அதிரா

Siva sankar said...

athira said...
///பிறகு விரைவில் ஊருக்கு வருகிறேன்
ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடு,கவலை படாத பொன்னி எல்லாம் சரி வரும்
///

சே..சே..சே... பொன்னி உவர் சரிப்பட்டு வரமாட்டார்.. நீங்க இரவோட இரவாக சூட்கேசைத் தூக்கிட்டு சிவாட ரூம் கதவைத் தட்டுங்க:)).. நாங்க இருக்கிறோம்.. கெ.கி கள்:)) இருக்கப் பயமெதுக்கு:)))....

May 10, 2012 4:59 AM /

அவ்வ
அது என்ன கெ.கி கள்:)?
நீங்க இருப்பீங்க அது உண்மை ஆனால் என்ட நிலைமை யோசிச்சு பாருங்கோ :(
நன்றி பேபி அதிரா வருகைக்கும் அனைத்து
கருத்துரைக்கும் :)

athira said...

//Siva sankar said...
athira said...
//எப்படி இருக்க பொன்னி நலமா //

நீ இங்கு நலமே.... நான் அங்கு நலமோ?.......

May 10, 2012 4:49 AM //

வாங்க வாங்க பேபி அதிரா
இன்னம் காணலையே என்று பார்த்தேன்
நலமோ//ம் நலம் இல்லை :)/////

என்னாது நலமில்லையா?:))) அவ்வ்வ்வ்வ்வ்..... கடவுளே ஆராவது அம்பூலன்ஸ்க்கு அடியுங்கோவன்:))

vanathy said...

hm its just writtings only mahima..//இப்படி சோகத்தை கரைச்சு ஊத்திப்போட்டு... கர்ர்ர்ர்ர். நானும் கதறியழுது கொண்டே லெட்டரைப் படிச்சா. இப்படியா கற்பனை என்று சொல்றது.
நான் இப்பவே சொல்றேன் சிவா. இந்த ஸ்காட்லன்ட் அக்கா, நியூஸி ஆன்டி யாரையும் நம்பி பிரயோசனம் இல்லை. உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்.
அசின், பிசின், தமன்னா எல்லோரும் சூப்பரா போஸ் குடுக்கிறாங்க.

இமா said...

//நியூஸி ஆன்டி யாரையும் நம்பி பிரயோசனம் இல்லை.// இதை சிவா சொல்லட்டும் பார்க்கலாம். ;)

Siva sankar said...

athira said...
//Siva sankar said...
athira said...
//எப்படி இருக்க பொன்னி நலமா //

நீ இங்கு நலமே.... நான் அங்கு நலமோ?.......

May 10, 2012 4:49 AM //

வாங்க வாங்க பேபி அதிரா
இன்னம் காணலையே என்று பார்த்தேன்
நலமோ//ம் நலம் இல்லை :)/////

என்னாது நலமில்லையா?:))) அவ்வ்வ்வ்வ்வ்..... கடவுளே ஆராவது அம்பூலன்ஸ்க்கு அடியுங்கோவன்:))வேணாம் வேணாம் நலம் நலம் நலம்

:)

Siva sankar said...

vanathy said...
hm its just writtings only mahima..//இப்படி சோகத்தை கரைச்சு ஊத்திப்போட்டு... கர்ர்ர்ர்ர். நானும் கதறியழுது கொண்டே லெட்டரைப் படிச்சா. இப்படியா கற்பனை என்று சொல்றது.
நான் இப்பவே சொல்றேன் சிவா. இந்த ஸ்காட்லன்ட் அக்கா, நியூஸி ஆன்டி யாரையும் நம்பி பிரயோசனம் இல்லை. உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்.
அசின், பிசின், தமன்னா எல்லோரும் சூப்பரா போஸ் குடுக்கிறாங்க.

May 11, 2012 9:25 PM /

ஏனுங்க அக்கா நீங்க வேற
நோ நோ யாரு அந்த ஸ்காட்லான்ட் போலீஸ்..(பேபி அதிராவா இருக்குமோ)
ம் நோ நோ நான் உங்க எல்லாரயும் நம்பி இருக்கேன் அக்கா
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

Siva sankar said...

இமா said...
//நியூஸி ஆன்டி யாரையும் நம்பி பிரயோசனம் இல்லை.// இதை சிவா சொல்லட்டும் பார்க்கலாம். ;)

May 12, 2012 8:40 AM /
உங்கள் அனைவரையும் நம்பித்தான் இந்த பிளாக் ஓடிக்கொண்டு இருக்கிறது ....
நன்றி நன்றி நன்றி
அனைவர்க்கும்
கருத்து இட்டவங்களுக்கும்
இடதவங்களுக்கும்..

Siva sankar said...

அனைவருக்கும்
எனது அன்பான இனிய அன்னையர் தின வாழ்த்துக்களும்

Anonymous said...

சிவா நானும் வான்ஸ் எ போல உங்க லெட்டர் எ படிச்சிட்டு எப்படியாவது பொன்னியோட சேர்த்து வைக்கணுமுன்னு இல்லாத மூளைய;)) கசக்கி யோசிச்சிட்டு வந்தா இப்படி கற்பனை ன்னு சொல்லிட்டீங்களே ??? நம்ப முடிய வில்லை வில்லை வில்லை !!!!

Anonymous said...

காதல்ன்னு வந்திட்டா மிஸ் பண்ணிட கூடாது சிவா. வேலை மீதி எல்லாம் அப்புறம். பேசுற விதத்துல பேசினா பெரியவங்க மனசு கரையும்ம்ம் உங்களுக்காக காத்தும் இருப்பாங்க. நேரத்த கடத்தாம சட்டு புட்டுன்னு ஒரு முடிவ எடுங்க . எப்படியும் அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லே அக்கான்னு தான் சொல்ல போறீங்க!

Anonymous said...

:)).. நாங்க இருக்கிறோம்.. கெ.கி கள்:)) இருக்கப் பயமெதுக்கு:)))....// கெ. கிஸ் ன்னா கெட்ட கிருமிகள் சிவா.

//ஸ்காட்லன்ட் அக்கா, நியூஸி ஆன்டி யாரையும் நம்பி பிரயோசனம் இல்லை. உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்.// ஹீ ஹீ வான்சுக்கு ரெம்ப தைரியம் தான் :))

// இதை சிவா சொல்லட்டும் பார்க்கலாம். ;)// சபாஷ் சரியான போட்டி

Siva sankar said...

En Samaiyal said...
சிவா நானும் வான்ஸ் எ போல உங்க லெட்டர் எ படிச்சிட்டு எப்படியாவது பொன்னியோட சேர்த்து வைக்கணுமுன்னு இல்லாத மூளைய;)) கசக்கி யோசிச்சிட்டு வந்தா இப்படி கற்பனை ன்னு சொல்லிட்டீங்களே ??? நம்ப முடிய வில்லை வில்லை வில்லை !!!!

May 13, 2012 5:29 PM //
வாங்க கிரி அக்கா
உங்கள் மூளைக்கு எல்லாம் இப்போது வேலை இல்லை :)ஹஹா

Siva sankar said...

En Samaiyal said...
காதல்ன்னு வந்திட்டா மிஸ் பண்ணிட கூடாது சிவா. வேலை மீதி எல்லாம் அப்புறம். பேசுற விதத்துல பேசினா பெரியவங்க மனசு கரையும்ம்ம் உங்களுக்காக காத்தும் இருப்பாங்க. நேரத்த கடத்தாம சட்டு புட்டுன்னு ஒரு முடிவ எடுங்க . எப்படியும் அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லே அக்கான்னு தான் சொல்ல போறீங்க!

May 13, 2012 5:35 PM //
(காதல் வந்தால் )
ஹ்க்ஹும் இருக்கிற பிரச்சனை பத்தாது என்று நீங்க வேற
நீங்க சொல்றது எல்லாம் நல்லாத்தான் இருக்கு
ஆனால் யாரு சொன்ன கேட்கிறா....:)

Siva sankar said...

En Samaiyal said...
:)).. நாங்க இருக்கிறோம்.. கெ.கி கள்:)) இருக்கப் பயமெதுக்கு:)))....// கெ. கிஸ் ன்னா கெட்ட கிருமிகள் சிவா.

//ஸ்காட்லன்ட் அக்கா, நியூஸி ஆன்டி யாரையும் நம்பி பிரயோசனம் இல்லை. உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்.// ஹீ ஹீ வான்சுக்கு ரெம்ப தைரியம் தான் :))

// இதை சிவா சொல்லட்டும் பார்க்கலாம். ;)// சபாஷ் சரியான போட்டி

May 13, 2012 5:39 PM //

அட டா
என்னைய அடிவாங்க வைக்க அவ்ளோ ஆசையா உங்களுக்கும்
நன்றி அக்கா

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...