Wednesday, September 21, 2011

குட்டிவாசகம்...

குட்டிவாசகம்:

பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை.
பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை.
இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது
இருந்தாலும் சமாளிப்போம் என்ற நம்பிக்கையில்
அன்பான நட்பின் ஆதரவோடு உண்மையான நட்பின் பாசத்தோடு
சந்தோசமாய் வாழ்வோம்..

இருக்கும்
வரையிலும்
மற்றவரை
சந்தோஷப்படுத்தி
வாழ்வோம்.

முடியும் வரையில்
யாரையும்
கஷ்டப் படுத்தாமல்
இருப்போம்.

எவ்வளவு நாள் இருப்போம் யாருக்கும் தெரியாது
இருக்கும்வரை யாரையும் புறம் சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

ஓகே போதும் போதும்......

இப்போ ஒரு
குட்டிக் கிறுக்கல்...

என்னவளின்
சாயம் பூசா
இதழ்
பார்த்து
தாமரை

பிரம்மனிடம்
சண்டை இட்டது!

அவள் இதழ்
என்னைவிட
அழகாய் இருக்க
காரணம்
என்னவென்று?..

சுழலும்
வாழ்க்கைச்சக்கரத்தில்
உன்னோடு இருக்கும்
நிமிடத்தை மட்டும்
சுழலாமல்
இருக்க....

கடிகாரத்தின்
பேட்டரியை
கழற்றி
வைக்கின்றேன்!

அதில்
தவிக்க
வைத்த
நிமிடத்தையும்
சேர்த்து ...!

டிஸ்கி:

இன்று உடன் பிறவா (SIS + FRIEND )தோழிக்கு பிறந்த நாள்
எப்போதும் போல வெற்றிக்கரமாக
முதல் வாழ்த்து சொல்லி வாழ்த்திவிட்டேன்.
இன்று மட்டும் அல்ல எப்போதும் நலமாய் வாழ நீங்களும் வாழ்த்துங்கள்
(முதல் வடை போல முதல் வாழ்த்து சொல்றதுகூட ஒரு சந்தோசம்தாங்க..)
ஹாப்பி பர்த்டே பேபி)

54 comments:

RVS said...

இதழ் கவிதை புன்னகைக்க வைக்கிறது. வாழ்த்துகள்.. உங்களுக்கும் உங்கள் தோழிக்கும். :-))

Mathuran said...

அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்

இந்திரா said...

சந்தோசப்படுத்துறோமோ இல்லையோ..
கஷ்டப்படுத்தாம இருந்தா போதும்.

நல்ல பகிர்வு.
நன்றி.

இமா க்றிஸ் said...

சிவாவின் தோழிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கவிதை என்னவோ கதை சொல்லுதே சிவா!! ;)) கெதியா மருமகளை என் கண்ணுல காட்டுங்க.

Angel said...

குட்டி வாசகம் மிகவும் அருமை .அன்புதான் பிரதானம் .இதைவிட வேறொன்றுமில்லை .கவிதை நல்லா இருக்கு .
உங்க தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

MANO நாஞ்சில் மனோ said...

முடியும் வரையில்
யாரையும்
கஷ்டப் படுத்தாமல்
இருப்போம்.//

எனக்கு பிடித்த வரிகள்...!

MANO நாஞ்சில் மனோ said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மனதார.......

Unknown said...

RVS said...
இதழ் கவிதை புன்னகைக்க வைக்கிறது. வாழ்த்துகள்.. உங்களுக்கும் உங்கள் தோழிக்கும். :-))

//

நன்றி அண்ணா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

Unknown said...

மதுரன் said...
அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்

September 21, 2011 11:48 அம//

நன்றி மதுரன்

வருகைக்கும்

Unknown said...

இந்திரா said...
சந்தோசப்படுத்துறோமோ இல்லையோ..
கஷ்டப்படுத்தாம இருந்தா போதும்.

நல்ல பகிர்வு.
நன்றி.

September 21, 2011 1:22 பம்//

நன்றி தங்கள் வருகைக்கு ..

Unknown said...

இமா said...
சிவாவின் தோழிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கவிதை என்னவோ கதை சொல்லுதே சிவா!! ;)) கெதியா மருமகளை என் கண்ணுல காட்டுங்க.

September 21, 2011 1:44 பம்//

நன்றி இமா,

என்ன கதை சொல்லுது ?

மறுமகளா?கொஞ்ச நாள் நிம்மதியா இருக்க விடமாடீங்களே.

சரி சரி நீங்களே ஒரு நல்ல பொண்ணா பாருங்க:)

Unknown said...

angelin said...
குட்டி வாசகம் மிகவும் அருமை .அன்புதான் பிரதானம் .இதைவிட வேறொன்றுமில்லை .கவிதை நல்லா இருக்கு .
உங்க தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

September 21, 2011 4:00 பம்//

நன்றி ஏஞ்சலின் நீங்கள் சொன்னது ரொம்ப உண்மை

நன்றி தங்கள் வாழ்த்துக்கு வருகைக்கு

Unknown said...

MANO நாஞ்சில் மனோ said...
முடியும் வரையில்
யாரையும்
கஷ்டப் படுத்தாமல்
இருப்போம்.//

எனக்கு பிடித்த வரிகள்...!

September 21, 2011 4:௫௭//

நன்றி அண்ணாச்சி தங்கள் வருகைக்கு.

Unknown said...

MANO நாஞ்சில் மனோ said...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மனதார.......

September 21, 2011 4:57 பம்/

மறுபடியும் நன்றி மனோ அண்ணா

தங்கள் வாழ்த்துக்கு

முற்றும் அறிந்த அதிரா said...

ஆ.. சிவா, கவிதைக்கு முன்னே இருக்கும் வாக்கியங்கள் அப்படியே என் மனதில் உள்ளவையே...

முற்றும் அறிந்த அதிரா said...

கவிதை கலக்கல்....

சிவாவுக்கு வைரஸ் பிடிச்சிட்டுதூஊஊஊஊ:))). இது வேற வைரஸ்ஸ்ஸ்ஸ்:))).

முற்றும் அறிந்த அதிரா said...

பொண்ணைச் செலக்ட் பண்ணிட்டாப்போச்சு?...

இப்போ 3 பெண்கள் தேவைப்படுதே எமக்கு.... எங்கின போவது அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).

Unknown said...

athira said...
ஆ.. சிவா, கவிதைக்கு முன்னே இருக்கும் வாக்கியங்கள் அப்படியே என் மனதில் உள்ளவையே...

September 21, 2011 6:16 பம்//

அப்படியே என் மனதில் உள்ளவையே...

//

அட கடவுளே

பேபி வந்தாச்சா :வாங்க வாங்க (/\)

Unknown said...

athira said...
கவிதை கலக்கல்....

சிவாவுக்கு வைரஸ் பிடிச்சிட்டுதூஊஊஊஊ:))). இது வேற வைரஸ்ஸ்ஸ்ஸ்:))).

September 21, 2011 6:17 ப//

அட எனக்கு ஒரு வைரஸும் வரலை :(

am வெரி குட் :)
அது என்ன வைரஸ்????

Unknown said...

பொண்ணைச் செலக்ட் பண்ணிட்டாப்போச்சு?...

இப்போ 3 பெண்கள் தேவைப்படுதே எமக்கு.... எங்கின போவது அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).

September 21, 2011 6:18 //

என்ன ஆவ்?அதெலாம் முடியாது நீங்க ஒரு பொண்ணாவது பாத்து வைக்கணும்

பட் இப்போ இல்லை எனக்கு எப்போதான் பதினாறு நடக்கு

அப்பரம் பாத்துக்கலாம் இப்போவே பார்த்து வைக்கறது நல்லது இல்லையா...:)

நன்றி பேபி அதிரமா..

தங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும்

முற்றும் அறிந்த அதிரா said...

ஆ.. சிவா மேல படிச்சிட்டு, கொமெண்ட் போடும்போது மறந்தே போயிட்டனே... எனக்கு நானே கர்ர்ர்ர்ர்ர்ர்:))).

உங்கள் தோழிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவ வலையுலகில் இல்லையோ? இருப்பின் எமக்கும் அறிமுகப்படுத்தியிருக்கலாமே...

முற்றும் அறிந்த அதிரா said...

அப்போ ஒரு 14 வயசுப்பொண்ணாப் பார்ப்போமா? ஆனா ஒரே ஒரு பிரச்சனைதான், இப்பவே பார்த்திட்டால், பிறகு சிவாவுக்கு 25 ஆகும்போது, பெண் சிவாவை விட நல்ல உயரமாக வளர்ந்திட்டாலும் வளர்ந்திடுவா... அது ஓக்கேயா சிவா?:)).

முற்றும் அறிந்த அதிரா said...

//அட எனக்கு ஒரு வைரஸும் வரலை :(

am வெரி குட் :)
அது என்ன வைரஸ்????//

வைரஸ் வரவில்லையாயின், ஓக்கை என இருக்க வேண்டியதுதானே?:)) பிறகெதுக்கு.... அதென்ன வைரஸ் என ஆர்ர்ர்ர்ர்ர்ர்ர்வமாக் கேள்வி எல்லாம்:))))))), கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), எங்கிட்டயேவா?:))).

உணவு உலகம் said...

பிறந்த நாளில்,மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அந்த சகோதரிக்கு.
மனம் கொள்ளை கொள்ளும் கவிதை படைத்த உங்களுக்கும்தான்.

Unknown said...

athira said...
ஆ.. சிவா மேல படிச்சிட்டு, கொமெண்ட் போடும்போது மறந்தே போயிட்டனே... எனக்கு நானே கர்ர்ர்ர்ர்ர்ர்:))).

உங்கள் தோழிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவ வலையுலகில் இல்லையோ? இருப்பின் எமக்கும் அறிமுகப்படுத்தியிருக்கலாமே...

September 21, 2011 8:56 பம்//

நன்றி வாழ்த்துக்கு (/\).

அவங்க வலை உலகில் இல்லை..:)

Unknown said...

athira said...
அப்போ ஒரு 14 வயசுப்பொண்ணாப் பார்ப்போமா? ஆனா ஒரே ஒரு பிரச்சனைதான், இப்பவே பார்த்திட்டால், பிறகு சிவாவுக்கு 25 ஆகும்போது, பெண் சிவாவை விட நல்ல உயரமாக வளர்ந்திட்டாலும் வளர்ந்திடுவா... அது ஓக்கேயா சிவா?:)).

September 21, 2011 8:௫//

ஓகே ஓகே உயரம் எல்லாம் பிரச்சனை இல்லை :)

இப்போவே பாருங்க ..))

(pinkurippu வீட்டில அப்பா அம்மாகிட்ட சொல்ல வேணாம் அடி விழும் :()

Unknown said...

athira said...
//அட எனக்கு ஒரு வைரஸும் வரலை :(

am வெரி குட் :)
அது என்ன வைரஸ்????//

வைரஸ் வரவில்லையாயின், ஓக்கை என இருக்க வேண்டியதுதானே?:)) பிறகெதுக்கு.... அதென்ன வைரஸ் என ஆர்ர்ர்ர்ர்ர்ர்ர்வமாக் கேள்வி எல்லாம்:))))))), கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), எங்கிட்டயேவா?:))).//

அட ராம ...!

இது என்ன சோதனை ..ஒரு கேள்வி கேட்க கூடாதா ??

நன்றி பேபி அதிரா :)

Unknown said...

FOOD said...
பிறந்த நாளில்,மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அந்த சகோதரிக்கு.
மனம் கொள்ளை கொள்ளும் கவிதை படைத்த உங்களுக்கும்தான்.

September 22, 2011 8:34 அம/

நன்றி அக்கா OR OFFICER.

உங்கள் அன்பான வாழ்த்துக்கு

ரசித்த கவிதைக்கும்

மாணவன் said...

சிவாவின் அன்புத்தோழிக்கு தாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

Anonymous said...

அருமையான கவிதை...உங்க தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Unknown said...

மாணவன் said...
சிவாவின் அன்புத்தோழிக்கு தாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

September 22, 2011 2:21 பம்/

நன்றி மாணவன் தங்கள் வருகைக்கும்

Unknown said...

ரெவெரி said...
அருமையான கவிதை...உங்க தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

September 23, 2011 1:24 அம//

வாங்க புதுமை கவிகரே

நன்றி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

உங்கள் தோழிக்கு என் வாழ்த்துக்களும்.. கவிதை கலக்கறீங்க... சூப்பர்.. :)

முற்றும் அறிந்த அதிரா said...

உயரமெல்லாம் பிரச்சனை இல்லையா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), இப்போ அப்படித்தான் சொல்லுவீங்க:))).

சிவாவுக்கு இன்னும் வயசிருக்கு..:)) கொஞ்சநாள் போகட்டும்.. நாங்களே பார்க்கிறம் ஓக்கே?:))).

ம.தி.சுதா said...

பற்றரி தீர்ந்திடும் என்று தானே கழட்டி வைக்கிறிங்க..

அருமையான வரிகளுங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்

Unknown said...

அப்பாவி தங்கமணி said...
உங்கள் தோழிக்கு என் வாழ்த்துக்களும்.. கவிதை கலக்கறீங்க... சூப்பர்.. :)

September 23, 2011 10:43 பம்//

வாங்க வாங்க இட்லி மணி

வாழ்க வளமுடன் நன்றி

Unknown said...

athira said...
உயரமெல்லாம் பிரச்சனை இல்லையா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), இப்போ அப்படித்தான் சொல்லுவீங்க:))).

சிவாவுக்கு இன்னும் வயசிருக்கு..:)) கொஞ்சநாள் போகட்டும்.. நாங்களே பார்க்கிறம் ஓக்கே?:))).

September 25, 2011 4:42 அம/

ம் ஓகே நீங்களே சொல்லிடீங்க சோ மறுப்பு இல்லை

உங்கள் விருப்பம் :)

நன்றி பேபி அதிரா

Unknown said...

♔ம.தி.சுதா♔ said...
பற்றரி தீர்ந்திடும் என்று தானே கழட்டி வைக்கிறிங்க..

அருமையான வரிகளுங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்

September 26, 2011 1:36 அம//

வாங்க பிரபலமே

வாழ்க வளமுடன்

இராஜராஜேஸ்வரி said...

பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை.
பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை./

ஒன்ஸ்மோர்.

இராஜராஜேஸ்வரி said...

தோழிக்கு இனிய வாழ்த்துக்கள்.

Unknown said...

சீனுவாசன்.கு said...
நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்த சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!

September 29, 2011 10:21 பம்//

நன்றி வருகைக்கு
வாங்க பழகலாம்

Unknown said...

இராஜராஜேஸ்வரி said...
பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை.
பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை./

ஒன்ஸ்மோர்.

September 30, 2011 1:37 அம//

வாங்க வாங்க ஒன்செமோர் சொல்லனுமா...

ஓகே ஒன்ஸ்மோர்...::)

பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை.
பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை

Unknown said...

athira said...
உயரமெல்லாம் பிரச்சனை இல்லையா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), இப்போ அப்படித்தான் சொல்லுவீங்க:))).

சிவாவுக்கு இன்னும் வயசிருக்கு..:)) கொஞ்சநாள் போகட்டும்.. நாங்களே பார்க்கிறம் ஓக்கே?:))).

September 25, 2011 4:42 அம//

ஓகே மாமி நீங்க பாத்து பண்ணா போதும் :)

கொஞ்ச நாள் அப்ப்டின எவ்ளோ நாள் ?:)
நன்றி பேபி அதிரா

Unknown said...

இராஜராஜேஸ்வரி said...
தோழிக்கு இனிய வாழ்த்துக்கள்.

September 30, 2011 1:37 AM//

நன்றி :)

Anonymous said...

உடன்பிறவா சகோதரர் கேள்வி பட்டு இருக்கேன், உடன்பிறவா சகோதரி கூட கேள்வி பட்டு இருக்கேன்.... ஆனா இது புதுசா இருக்கே!! உடன் பிறவா தோழி.... எனிவெஸ் வாழ்த்துக்கள்.....
கவிதையும் சூப்பரு!!!!

Unknown said...

மொக்கராசு மாமா said...
உடன்பிறவா சகோதரர் கேள்வி பட்டு இருக்கேன், உடன்பிறவா சகோதரி கூட கேள்வி பட்டு இருக்கேன்.... ஆனா இது புதுசா இருக்கே!! உடன் பிறவா தோழி.... எனிவெஸ் வாழ்த்துக்கள்.....
கவிதையும் சூப்பரு!!!!

October 2, 2011 10:08 PM//

மொக்கமாமா நீங்க ரொம்ப அறிவாளி
நன்றி தங்கள் முதல் வருகைக்கும்
வாழ்த்துக்கும்

Bibiliobibuli said...

நானும் மொக்கராசு மாமா மாதிரியே முடியை பிச்சுக்கிட்டேன் சிவா, ஹிஹிஹிஹிஹிஹி.

உங்கள் (SIS + FRIEND ) க்கு என் காலம் கடந்த வாழ்த்துகள்.

என்னமோ மருமகள் கொண்டு வாங்கோன்னும் கதை காதில் விழுது. :))) வயசுக்கு வந்திட்டீங்க அப்போ :)

Bibiliobibuli said...

எங்கட ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவினம் சிவா, 'பிரச்சனை இல்லாத மனிதரும் இல்லை. அர்ச்சனை இல்லாத சாமியும் இல்லை எண்டு.'

Unknown said...

Rathi said...
நானும் மொக்கராசு மாமா மாதிரியே முடியை பிச்சுக்கிட்டேன் சிவா, ஹிஹிஹிஹிஹிஹி.

உங்கள் (SIS + FRIEND ) க்கு என் காலம் கடந்த வாழ்த்துகள்.

என்னமோ மருமகள் கொண்டு வாங்கோன்னும் கதை காதில் விழுது. :))) வயசுக்கு வந்திட்டீங்க அப்போ :)//

வாங்க ரதி நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

தீர விசாரிக்கும் நீங்களே இப்படி நினைக்கலாமா? :)

Unknown said...

Rathi said...
எங்கட ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவினம் சிவா, 'பிரச்சனை இல்லாத மனிதரும் இல்லை. அர்ச்சனை இல்லாத சாமியும் இல்லை எண்டு.//

அட இது புதுசா இருக்கே

நன்றி rathi.

காட்டு பூச்சி said...

//சுழலும்
வாழ்க்கைச்சக்கரத்தில்
உன்னோடு இருக்கும்
நிமிடத்தை மட்டும்
சுழலாமல்
இருக்க....

கடிகாரத்தின்
பேட்டரியை
கழற்றி
வைக்கின்றேன்!//

இது நல்ல ஐடியாவா இருக்கே

Unknown said...

காட்டு பூச்சி said...
//சுழலும்
வாழ்க்கைச்சக்கரத்தில்
உன்னோடு இருக்கும்
நிமிடத்தை மட்டும்
சுழலாமல்
இருக்க....

கடிகாரத்தின்
பேட்டரியை
கழற்றி
வைக்கின்றேன்!//

இது நல்ல ஐடியாவா இருக்கே

October 11, 2011 10:39 PM//

Thanks Kaattu poochi anna..

arul said...

#பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை.
பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை.
இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது
இருந்தாலும் சமாளிப்போம் என்ற நம்பிக்கையில்
அன்பான நட்பின் ஆதரவோடு உண்மையான நட்பின் பாசத்தோடு
சந்தோசமாய் வாழ்வோம்..

இருக்கும்
வரையிலும்
மற்றவரை
சந்தோஷப்படுத்தி
வாழ்வோம்.

முடியும் வரையில்
யாரையும்
கஷ்டப் படுத்தாமல்
இருப்போம்.

எவ்வளவு நாள் இருப்போம் யாருக்கும் தெரியாது
இருக்கும்வரை யாரையும் புறம் சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.#

nalla pathivu unmayana varigal
(www.astrologicalscience.blogspot.com)

Unknown said...

arul said...
//

thanks arul.

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...