Wednesday, January 11, 2012

பொங்கல் வாழ்த்துக்கள் ...

அனைவருக்கும்

வணக்கம்(/\)
வணக்கம்(/\)
வணக்கம்(/\)


அன்பான தைத்திருநாள் வாழ்த்துக்கள்.கடந்த வருடம் ரொம்ப
கடினமான நிமிடங்களும் சந்தோசமான தருணங்களும் கலந்து
அழகாய்க் கடந்து போனது.

அன்பே உருவான பாசமான பதிவு உலக உறவுகள்... மற்றும் கிடைத்த நட்புக்கும் நட்பின் பாசத்துக்கும் அனைத்துக்கும்இறைக்கு நன்றி. (தேங்க்ஸ் பிள்ளையாரப்பா)

பொங்கல் எங்கே வைத்தாலும் பொங்கல் பொங்கல்தான்..
அதனால் எங்கே இருந்தாலும் பொங்கல் வைத்து
கொண்டாடுங்க.

பொங்கலுக்கு ஊருக்குப் போறேன்... .
ஊரில் விளம்பர தட்டி எல்லாம் கட்டி வரவேற்பு பலமாய் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ம்... ரொம்ப வருஷம் கழிச்சு அம்மா, அப்பா, தம்பிங்க எல்லோரும்ம் சேர்ந்து கொண்டாடப் போகிறோம். ஒரு பக்கம் சந்தோசமா இருந்தாலும் மறுபக்கம்... திரும்பி வரப்ப ஒரு கஷ்டம் வரும் அதை நினைத்தால் போக விரும்பவில்லை.போகாமல் இருந்தால் இன்னும் வருத்தம் வரும்.

போக வேண்டாம் என்று இருந்தேன். வீட்டில் இருந்து திரும்பத் திரும்ப அழைப்பு, மறுக்க முடியவில்லை. அதனால் இங்கு உள்ள வேலைகள் எல்லாம் வேகவேகமா முடித்து வேறு ஒரு நண்பரிடம் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன், ஒரு பதினைந்து நாள்... இல்லை இருபது நாட்கள் இருப்பேன்.

பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க வந்துவிடுவேன்
வீட்டில் நெட் வசதி இல்லை..நெட் செல்வது கடினம் தான்
ஊரில் இருக்கும் அத்தனை நாளும் நெட் பக்கம் போகமாட்டேன் விடுமுறை விட்டாச்சு......

பிறகு வீட்டில் அம்மாவுக்கு அப்பாவுக்கு தம்பிக்கு எல்லாம் எனக்கு தெரிந்த சமையல் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். (என்னை சமைக்க விடமாட்டார்கள் என்று தெரியும். கடந்த முறை சாதம் வைத்ததில் அடிப்பிடித்து ஒரு பாத்திரம் பயன்படுத்த முடியாமல் போனது குறிப்பிட வேண்டிய தகவல்.) இந்த முறை அப்படி ஏதும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுவேன். :)

சிவன் கோவில், பெருமாள் கோவில் எல்லாம் போகணும். அங்கே பொங்கல் சாப்பிடணும். (பிரதோஷம் அன்று தயிர்சாதம் புளியோதரை அருமையாய் இருக்கும்.)

சைக்கிள் எடுத்து ஊர் எல்லாம் சுத்தி வரணும். அத்தை பொண்ணு பொன்னிக்கு கல்யாணம் ஆகிட்டான்னு தெரியல, விசாரிக்கணும். :)டிஸ்கி 1:


பிறந்த நாள் வாழ்த்து

வாழ்த்த வயதில்லை இருந்தாலும்
வணங்கி மகிழ்கிறோம்

இவர் பற்றி...

கற்பனையின்
வடிவம்
காகிதமாய் இருந்தாலும்
கண்ணாடி
உடைந்தும் போனாலும்
உருவம் கொடுக்கும்
பிரம்மா.

கண்டிப்பில்
கனிவான
வாத்தியார்
வளர்ந்தும் வளர்ச்சி அடையாத குழந்தைகளுக்கு
அன்பாய் சொல்லி தரும்
அன்னை தெரசா!

ஆமை முதல் பட்டம் பூச்சி வரை இவர் வீட்டில் இடம் உண்டு...

நாளை 13.01.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு அனைத்து உலக தலைவர்களும்,பதிவு உலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவிக்கின்றனர் ..

நானும் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்


HAPPY BIRTHDAY TO YOU IMMA

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


என்றும் நலமாய் வாழ இறைவனை வேண்டுகிறோம்.

நம்ம வீட்டுக்கு வந்தால் நல்லா சாப்பிட்டுதான் போகணும்
வாங்க வாங்க சாப்பிட்டு விட்டு வாழ்த்திட்டு போங்க..


மொய்ப்பணம் பேபி அதிரா வீட்டில் பிடிக்க படுகிறது:)


டிஸ்கி 2:
பிறகு நூறாவது பதிவு போட்ட பிரபல பதிவர் பேபி அதிரா அவர்களுக்கு
நூறு வாழ்த்துக்கள் சொல்லி விடை பெறுகிறோம்
இன்னும் பல நூறு பதிவுகள் போட்டு அனைவரையும் சந்தோஷ படுத்த விரும்புகிறோம்

சும்மா 1....

வாழும் வாழ்க்கை
கடினமாத்தான் இருக்கு
ஆனால் பிடித்து இருக்கிறது.
வாழ்ந்துதான் பார்ப்போமே .
என்னவள் இருக்கிறாள்
என்ற நம்பிக்கையில்..

சும்மா 2....

நாளை நம்பிக்கை மட்டுமே.
இன்று, இந்த நிமிடம்
மட்டும் நிஜம்.
அதனால்
சந்தோசமாய்
அமைதியாய்
இருக்கும் வாழ்வை வாழ்ந்து,
நன்றி சொல்லிப் போவோம்
வாழ்வின் அடுத்த படிக்கட்டுக்கு.

33 comments:

இமா said...

குழப்படிப்பையன். ;))

தாங்ஸ் சிவா. ;)

சந்தோஷமா ஊருக்குப் போய்வாங்க. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Mahi said...

Happy Pongal and Happy Vacation Siva!

Nice party n food & cake!thanks!

angelin said...

சந்தோஷமா ஊருக்கு சென்று வாங்க சிவா .இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும்

இராஜராஜேஸ்வரி said...

HAPPY BIRTHDAY TO YOU IMMA

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

என்றும் நலமாய் வாழ இறைவனை வேண்டுகிறோம்.

இராஜராஜேஸ்வரி said...

பிறகு நூறாவது பதிவு போட்ட பிரபல பதிவர் பேபி அதிரா அவர்களுக்கு
நூறு வாழ்த்துக்கள்

athira said...

ஹையோ நாந்தான் லேட்டா...

சிவா ஊருக்குப் போய் ஒழுங்கான பிள்ளையாக இருந்திட்டு வரோணும்..:).

ரால் கறி சமைச்சுக் கொடுங்கோ..

athira said...

//சைக்கிள் எடுத்து ஊர் எல்லாம் சுத்தி வரணும். அத்தை பொண்ணு பொன்னிக்கு கல்யாணம் ஆகிட்டான்னு தெரியல, விசாரிக்கணும். :)
//

ரொம்ப முக்கியம்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஊருக்குப் போகமுன்பே பொன்னியின் நினைப்பு வந்திட்டுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... அவங்களுக்கு கல்யணம் ஆனா என்ன ஆகாட்டில் என்ன.... உங்களுக்கு நாந்தான் பொண்ணு பார்ப்பேன்... நான் இதில மட்டும் ஸ்ஸ்ஸ்ஸ்ரெடியாத்தான் இருக்கிறேன்:))))) OK?.

athira said...

ஓஓஓஓ எங்கட றீச்சருக்குப் பிறந்தநாளோ? அவ்வ்வ்வ்வ்வ்.. எங்கினமோ நம்பத்தகுந்த வட்டாரம் சொல்லிது 12 என... நாலாம் நம்பரூ?????.. அவ்வ்வ்வ்வ்:))). சரி அது போகட்டும்....


இன்றுபோல் என்றும் பல்லாண்டு காலம்.. சீரும் சிறப்புமாக நோய் நொடியின்றி நீடூழி வாழ வாழ்த்துகிறேன் இமா...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..பிறந்த நாள் வாழ்த்துக்கள்..பிறந்த நாள் வாழ்த்துக்கள்..பிறந்த நாள் வாழ்த்துக்கள்..பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

athira said...

//அனைத்து உலக தலைவர்களும்,பதிவு உலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவிக்கின்றனர் ..//

ஹா..ஹா...ஹா... இதில் நான் அடங்கவில்லைத்தானே?:)))))))

athira said...

//மொய்ப்பணம் பேபி அதிரா வீட்டில் பிடிக்க படுகிறது:) //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. நானே சிவாட மொய் இன்னும் வந்து சேரவில்லை என போஸ்ட்மானை:) கேட்டுக் கேட்டு.. இப்போ என்னைக் கண்டால் போஸ்ட்மான் எடுக்கிறார் ஓட்ட்டம்.. லூசு வருது என்று:))))

athira said...

//டிஸ்கி 2:
பிறகு நூறாவது பதிவு போட்ட பிரபல பதிவர் பேபி அதிரா அவர்களுக்கு
நூறு வாழ்த்துக்கள் சொல்லி விடை பெறுகிறோம்
இன்னும் பல நூறு பதிவுகள் போட்டு அனைவரையும் சந்தோஷ படுத்த விரும்புகிறோம்//

மிக்க நன்றி சிவா.. டிஷம்பருக்குள் 200 ஐத் தொட்டிடலாமோ அவ்வ்வ்வ்வ்?:))).

athira said...

சும்மா 1.. சும்மா சொல்லப்படா.. நல்லாத்தான் இருக்கு நான் சும்மா சொல்லவில்லை தெரியுமோ?:)).

விடுமுறையை இனிதே கழித்து வாங்க சிவா... பொன்னியை நான் கேட்டதாகச் சொல்லிடுங்க:)).

athira said...

பிள்ளையார் ஆருக்கு லெட்டர் எழுதுறாராம்?:)) நான் ஏதோ தேடும்போது 2 நாட்களுக்கு முன் இப்படத்தை கண்டேன்.. பார்க்க சந்தோசமாக இருந்தது.. இப்போ சிவா வீட்டில பிள்ளையார் அவ்வ்வ்வ்:)).. முருகனையும் கும்பிடுங்கோ சிவா.... ஹையோ மீ எஸ்ஸ்ஸ்:)).

இமா said...

வாழ்த்துக்கு அன்பு நன்றிகள் ராஜேஸ்வரி & அதிரா.

Anonymous said...

பொங்கல் வாழ்த்துக்கள் சிவா. சந்தோஷமா விடுமுறைய குடும்பத்தோட கழிச்சிட்டு வாங்க. கவிதை எல்லாம் பொன்னியின் பாதிப்பா ??? இல்லே வேற யாராச்சுமா??

Anonymous said...

//குழப்படிப்பையன். ;))// இருந்தாலும் எவ்ளோ பாசமா எங்களுக்கு எல்லாம் உங்க பிறந்த நாள சொல்லி இருக்காரு.


//ஹா..ஹா...ஹா... இதில் நான் அடங்கவில்லைத்தானே?:)))))))// இதுல நீங்க தான் முதல் இடம் இது தெரியாம இவ்ளோ பவ்வியம் கூடாது பூஸு:))

//மிக்க நன்றி சிவா.. டிஷம்பருக்குள் 200 ஐத் தொட்டிடலாமோ அவ்வ்வ்வ்வ்?:))).// இதுல என்ன சந்தேகம் இந்த மாதிரி ஒரு வாரத்துல இத்தன பதிவு போட்டா உலகம் அழியுறதுக்குள்ள 400 போட்டுறலாம்!

Anonymous said...

//ஓட்ட்டம்.. லூசு வருது என்று:))))// இது சிவாவின் மொய் பணத்த கேக்க முன்னமே அவருக்கும் எல்லாருக்கும் தெரியுமம்ம்ம்ம் :))

Priya said...

நல்லபடியா ஊருக்கு போயிட்டு வாங்க... குடும்பத்தோடு சந்தோஷமா பொங்கல் கொண்டாடுங்க... இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சிவா!

இமாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

athira said...

En Samaiyal said...
//ஓட்ட்டம்.. லூசு வருது என்று:))))// இது சிவாவின் மொய் பணத்த கேக்க முன்னமே அவருக்கும் எல்லாருக்கும் தெரியுமம்ம்ம்ம் :)////

Karrrrrrrrrrrrrr * KarrrrrrrrrRRRRRRRR:))))))))

இமா said...

//இருந்தாலும் எவ்ளோ பாசமா எங்களுக்கு எல்லாம் உங்க பிறந்த நாள சொல்லி இருக்காரு.// ம்... அந்தப் பாசம்தான் சிவாவோட பெரிய ப்ளஸ் கிரி. அதேதான் இருக்கிற மைனசும். ;)

வாழ்த்துக்கு மிக்க நன்றி ப்ரியா. ;)

இமா said...

சிவா.... விடுமுறை முடிஞ்சு வந்ததும் இமாவின் உலகுக்கு வந்து பாருங்க. அப்பிடியே என்னை வாழ்த்திய எல்லோரையும் கூட்டிட்டு வாங்க. ;)

வாழ்த்திய அனைவரும் ஒருமுறை இமாவின் உலகை எட்டிப் பார்க்குமாறு தாழ்மையோடு வேண்டுகிறேன். ;)
பஸ் ரூட் இதோ... ;) http://imaasworld.blogspot.com/2012/01/blog-post_13.html

இமா said...

சிவா.... எங்க வீட்ல யாரும் இல்லையா!! வந்து இருக்கணுமே இப்போ!!!! ??

siva sankar said...

நன்றி நன்றி நன்றி அனைவருக்கும்
பில்லா -2 சிவா is BACK.....

siva sankar said...

அனைவருக்கும் மறுமுறை நன்றிகள் ஆயிரம்...

கொஞ்சம் வேலைப்பளு விரைவில் சந்திக்கிறேன்
அனைவரும் நலமாய் இருக்க என் அன்பான ப்ராத்தனைகளும்

G.M Balasubramaniam said...

புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். ( though belated.)தொடர்பில் இருக்க வேண்டுகிறேன்

athira said...

சிவா.. வெல்கம்.... உடல் இங்க உயிர் அங்க:) போல இருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

siva sankar said...

சிவா.. வெல்கம்.... உடல் இங்க உயிர் அங்க:) போல இருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

February 1, 2012 1:48 அம//ஹஹா ஏன் பேபி athiraa ஏன் எப்படி???

ரெண்டும் இங்கதான் இருக்கு :)

நீங்கதான் பொண்ணு பார்க்க வேணும் அதில் மாற்றம் இல்லை :)

siva sankar said...

இராஜராஜேஸ்வரி said...
HAPPY BIRTHDAY TO YOU IMMA

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

என்றும் நலமாய் வாழ இறைவனை வேண்டுகிறோம்.

January 12, 2012 9:46 PM

//

நன்றி ராஜேஸ்வரி அம்மா

siva sankar said...

Mahi said...
Happy Pongal and Happy Vacation Siva!

Nice party n food & cake!thanks!

January 12, 2012 2:10 PM//

thank you mahima.

siva sankar said...

நன்றி
கிரிஜா அக்கா
பிரியா மேடம்

நன்றி ஐயா
விடுமுறை விரைவில் தொடர்கிறேன்

Jaleela Kamal said...

mm
நீங்களும் பேபி அதிராவைபோல் சூப்பரா பூஸார் போட்டோ அதுவும் கம்பியுட்டரில் பார்கக்வே நல்ல இருக்கு

இமா said...

சிவாமகன்... எனக்கு ஹாப்பி பர்த்டே சொன்னதுக்கு, ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் அனுப்பி இருக்கேன். பெரீ...ய கிஃப்ட். நினைச்சே பார்த்து இருக்க மாட்டீங்க. ம்... மெய்ல் பாருங்க. பார்த்துட்டே.... இருங்க. ;)

siva sankar said...

சிவாமகன்... எனக்கு ஹாப்பி பர்த்டே சொன்னதுக்கு, ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் அனுப்பி இருக்கேன். பெரீ...ய கிஃப்ட். நினைச்சே பார்த்து இருக்க மாட்டீங்க. ம்... மெய்ல் பாருங்க. பார்த்துட்டே.... இருங்க. ;)

March 4, 2012 8:05 AM//

thank you so much..i am so happy.

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...