Thursday, May 26, 2011

கிராமத்து கனவிலே...(1)

மிதமான காலைப்பொழுது அழகாய் பகலவன் பல் துலக்கி அதிகாலையிலே எழுந்து விட்டான் போல. அதுவரை கனவில் இருந்தான் ஜீவா. அழகான கிராமம், பெயர் தெரியாத குருவிகளின் ரீங்காரம், குயில்களின் கூவல், பொழுது விடிந்து இரை தேடப் புறப்படும் பறவைகள், அல்லி அதிகமாக இருந்த குளக்கரை ஓரம் ஒற்றை காலில் நடனம் ஆடும் கொக்கு, நானும் இருக்கேன்னு குளக்கரையில் துள்ளிக் குதிக்கும் கெண்டை மீன்கள்...

இதமாய் ஒரு மெல்லிய காற்று படும் படாமலும் வீசிக்கொண்டு இருந்தது. இந்த இளஞ்சூரியன் லேசாய் சுட்டாலும் அது ஒரு வித உத்வேகம் கொடுத்தது. வண்டுகள் எல்லாம் அதன் பணியை தொடங்க ஆரம்பித்து விட்டன. பூக்களின் தேன் வாசம் காற்றில் வந்து கொண்டு இருந்தது.

அந்த சிறு கிராமம் மெல்ல எழுந்து கொண்டு இருந்தது.

அப்போதுதான், "மணி எட்டு ஆக போகுது. இன்னும் அந்த எரும மாடு எந்திரிக்கலையா?" என்று அம்மாவிடம் அப்பா கேட்டது லேசாக காதில் ஒலித்தாலும் அசந்த தூக்கமும் அந்த அழகான கனவும் அவனை படுக்கையில் இருந்து எழ விடவில்லை.

"அவனை விட சின்ன பிளைங்க எல்லாம் காலையில எழுந்து குளித்து அமைதியாக படித்து கொண்டு இருக்கின்றனர். இவனுக்கு மட்டும் ஸ்கூல் இல்லையா?" என்று எப்போதும் பேசும் பாராட்டுகள் ஒரு பக்கம் திரும்பி படுத்தாலும் கேட்டுக் கொண்டேதான் இருந்தது. மெல்ல கனவில் இருந்து எழுந்தான். அம்மா, "இந்தாடா, டீ குடிச்சிட்டு போ." என்று சொல்லி விட்டு அவர் சமையல் வேலையில் மும்முரமாய் இருந்தார்.

மெல்ல சோம்பல் முறித்து எழுந்து போர்வை எல்லாம் மடித்து வைத்து விட்டு குளிக்கச்சென்றான். குளித்து வந்து நேரம் பார்த்தப்போது மணி ஒன்பது ஆகி இருந்தது. 'ஆகா! நேரம் ஆகிவிட்டதே.' என்று உள்மனம் துடித்துக் கொண்டு இருந்தது. மனசுக்குள் புலம்பிக் கொண்டு இருந்தான் ஜீவா. பின்ன! லேட் ஆகி போனால் பள்ளி சென்று அங்கும் திட்டு வாங்க வேண்டுமே. பள்ளியைச் சுற்றி ஓடி வர வேண்டுமே, என்று விரைவாக அம்மா சுட்ட பஞ்சு இட்லியை மிளகாய்ப் பொடியோட தேங்காய் சட்னியையும் விட்டு வைக்காமல் சாப்பிட்டு முடித்து விட்டான்.

மதியம் சாப்பாடும் ரெடி பண்ணி அவன் பையில் வைத்திட்டு "மிச்சம் வைக்காம சாப்பிடு கண்ணா." என்று பாசத்துடன் கூறிய அன்னையின் வார்த்தைக்கு "சரிம்மா." என்று சொல்லிக்கொண்டு தனது மிதி வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
போகும் வழியில் போகும் வழியில் அவனது நண்பர்கள் ராஜேஷும் ,கணேஷும் சேர்ந்து கொண்டனர். மூவரும் இந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பில் நான்காவது குருப்பில் படித்து கொண்டு இருந்தனர். அந்த பள்ளிக்கூடம் அவனது வீட்டில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சரியாக ஒன்பது நாற்பதுக்கு எல்லாம் வகுப்பில் இருந்தனர். இந்த வருடத்தின் முதன் நாள் முதல் இன்று வரை அனைவரும் வருங்காலம் பற்றிய பயத்துடன்... எப்படி படிப்பது என்று பல யோசனைகள் ஒவ்வொரு மாணவருக்கும் இருந்தது.

இதில் ஜீவா சுமாராய்ப் படிப்பவன். ராஜேஷ் அவனுக்கு முன்னால் இருப்பவன், படிப்பதை பொறுத்து இருக்கும். கணேஷ் ஒரு அளவுக்கு படிப்பான். எப்படியோ மூவரும் ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்றாய் படிப்பவர்கள். இன்று பிளஸ் 2 வரை வந்து விட்டனர். இப்படி இருக்க ஜீவா இன்னும் அந்த கிராமத்துக் கனவிலே லயித்து இருந்தான். காரணம் அந்த கனவில் வந்த....

ஓகே மீதி அடுத்த பகுதியில்...

44 comments:

Unknown said...

125..TESTING

இமா க்றிஸ் said...

அதாரு பாதிக்கதைக்குல்லாம் கமண்ட் போட்டிருக்கிறது!!

RVS said...

சிவா.. தன்னிலையில் கதையை ஆரம்பித்து படர்க்கையில் கொண்டு போயிட்டீங்களே! "நான் எழுந்தேன்.." ன்னு ஆரம்பிச்சு... ஜீவா அப்படின்னு எழுதிட்டீங்களே! கிராமம் நல்லா இருக்கு. ;-)

நிரூபன் said...

கிராமத்து வர்ணனையும், காட்சிப் புலச் சித்திரிப்பும் இப் பதிவில் அழகாகக் கோர்க்கப்பட்டிருக்கிறது.
இவை எனது பள்ளிக் கால நினைவுகளையும் கண் முன்னே கொண்டு வருகிறது.
தூய தமிழைப் பதிவில் பாவித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சகோ.

உங்களின் அடுத்த பகுதியினைப் படிப்பதற்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

MANO நாஞ்சில் மனோ said...

ஐயோ இங்கேயும் டீவி சீரியல் மாதிரி தொடரும் போட்டு கொல்றாயின்களே....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஹா தொடருமா...இதெல்லாம் அநியாயம்... ஆனா வர்ணனை நல்லா இருக்கு... சீக்கரம் மிச்சத்த போடுங்க..:)

ரேவா said...

"மணி எட்டு ஆக போகுது. இன்னும் அந்த எரும மாடு எந்திரிக்கலையா?" என்று அம்மாவிடம் அப்பா கேட்டது லேசாக காதில் ஒலித்தாலும் அசந்த தூக்கமும் அந்த அழகான கனவும் அவனை படுக்கையில் இருந்து எழ விடவில்லை.

சிவா இது நீ தானே

ரேவா said...

இப்படி இருக்க ஜீவா இன்னும் அந்த கிராமத்துக் கனவிலே லயித்து இருந்தான். காரணம் அந்த கனவில் வந்த....
என்னது கனவில வந்த............ ஹோ தொடரப் போறியா?...ரைட்டு நீயுமா கிளப்பு கிளப்பு..சரி ஜீவா னு சிவா க்கு புதுபேறு கொடுத்திருக்கயா?...எனக்கு என்ன தெரியாதுன்னு நினைச்சயா?...மீதியையும் எழுது....

Mahi said...

கிராம வர்ணனைகள் நல்லா இருக்கு சிவா! தொடர்கதையாஆஆஆ?

Unknown said...

siva said...
125..TESTING

May 26, 2011 11:39 அம//

ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்னை நானே திட்டிகிறேங்க:(((

Unknown said...

RVS said...
சிவா.. தன்னிலையில் கதையை ஆரம்பித்து படர்க்கையில் கொண்டு போயிட்டீங்களே! "நான் எழுந்தேன்.." ன்னு ஆரம்பிச்சு... ஜீவா அப்படின்னு எழுதிட்டீங்களே! கிராமம் நல்லா இருக்கு. ;-)

May 26, 2011 1:35 பம்//

நன்றி அண்ணா,தவறை திருத்தி இருக்கிறேன் முடிந்த வரையில்,மேலும் உங்கள் ஆதரவுக்கும் வருகைக்கும் நன்றி

Unknown said...

நிரூபன் said...
கிராமத்து வர்ணனையும், காட்சிப் புலச் சித்திரிப்பும் இப் பதிவில் அழகாகக் கோர்க்கப்பட்டிருக்கிறது.
இவை எனது பள்ளிக் கால நினைவுகளையும் கண் முன்னே கொண்டு வருகிறது.
தூய தமிழைப் பதிவில் பாவித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சகோ.

உங்களின் அடுத்த பகுதியினைப் படிப்பதற்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

May 26, 2011 2:07 PM

//
நன்றி நிருபன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

Unknown said...

MANO நாஞ்சில் மனோ said...
ஐயோ இங்கேயும் டீவி சீரியல் மாதிரி தொடரும் போட்டு கொல்றாயின்களே....

May 26, 2011 5:41 பம்//

நோ நோ அண்ணா

எப்படியும் அடுத்த பதிவில் முடித்து விடுகிறேன்...

நன்றி தங்கள் கருத்துக்கு

Unknown said...

அப்பாவி தங்கமணி said...
ஆஹா தொடருமா...இதெல்லாம் அநியாயம்... ஆனா வர்ணனை நல்லா இருக்கு... சீக்கரம் மிச்சத்த போடுங்க..:)

May 26, 2011 11:44 PM

//

எது அநியாயம் ஒரு தொடர நீங்க மட்டும் ஒரு வருடம் போடுவீங்க..அது மட்டும் .....:)
. சீக்கரம் மிச்சத்த போடுங்க..:)

//
ஓகே

Unknown said...

ரேவா said...
"மணி எட்டு ஆக போகுது. இன்னும் அந்த எரும மாடு எந்திரிக்கலையா?" என்று அம்மாவிடம் அப்பா கேட்டது லேசாக காதில் ஒலித்தாலும் அசந்த தூக்கமும் அந்த அழகான கனவும் அவனை படுக்கையில் இருந்து எழ விடவில்லை.

சிவா இது நீ தானே

May 27, 2011 3:18 பம்//

நோ நோ நோ :) Naan avan ellai :)))

Unknown said...

இப்படி இருக்க ஜீவா இன்னும் அந்த கிராமத்துக் கனவிலே லயித்து இருந்தான். காரணம் அந்த கனவில் வந்த....
என்னது கனவில வந்த............ ஹோ தொடரப் போறியா?...ரைட்டு நீயுமா கிளப்பு கிளப்பு..சரி ஜீவா னு சிவா க்கு புதுபேறு கொடுத்திருக்கயா?...எனக்கு என்ன தெரியாதுன்னு நினைச்சயா?...மீதியையும் எழுது....//

ஓகே எழுதலாம் :) உனக்கு தெரியாம இருக்குமா...

என்ன எழுதரதுனுதான் தெரியல :(

Unknown said...

Mahi said...
கிராம வர்ணனைகள் நல்லா இருக்கு சிவா! தொடர்கதையாஆஆஆ?

May 28, 2011 5:15 AM

மகிமா என்ன ஆச்சு
அப்பாவி இட்லிய சாப்டீங்களா ?
ஆஆ நு சொல்றீங்க :)

நன்றி வருகைக்கும்

உணவு உலகம் said...

//siva said...
125..TESTING//
அதென்ன, எல்லோரும் 1 2 3 தானே சொல்வாங்க, நீங்க மட்டும் 1 2 5 சொல்றீங்க!
கிராமிய மணம் வீசும் அருமையான தொடர். வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

கிராமிய வர்ணணையில் எங்களை அழகான கிராமத்துக்கே அழைத்துச் சென்று தென்றலை வீச வைத்த தங்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

Unknown said...

FOOD said...
//siva said...
125..TESTING//
அதென்ன, எல்லோரும் 1 2 3 தானே சொல்வாங்க, நீங்க மட்டும் 1 2 5 சொல்றீங்க!
கிராமிய மணம் வீசும் அருமையான தொடர். வாழ்த்துக்கள்.

May 30, 2011 11:55 PM//

நன்றி ஐயா
தங்கள் வருகைக்கு

Unknown said...

இராஜராஜேஸ்வரி said...
கிராமிய வர்ணணையில் எங்களை அழகான கிராமத்துக்கே அழைத்துச் சென்று தென்றலை வீச வைத்த தங்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

June 1, 2011 8:21 பம்//

அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை.

தங்கள் தளம் போல விளக்கம் அருமை எங்கும் இல்லை

நன்றி தங்கள் வருகைக்கு

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள் .. இனியோ தொடர்ந்து வருவேன் சகோ..

ஆம் யார் இந்த பாபா ராம்தேவ் ? ...

Unknown said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
வாழ்த்துக்கள் .. இனியோ தொடர்ந்து வருவேன் சகோ..

ஆம் யார் இந்த பாபா ராம்தேவ் ? ...

June 2, 2011 3:51 PM

//

நன்றி தங்கள் வருகைக்கு
அந்த ராம் தேவ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டேன் நன்றி

சாகம்பரி said...

கதையை தொடர்கிறேன்.

Unknown said...

சாகம்பரி said...
கதையை தொடர்கிறேன்.

June 5, 2011 10:20 PM

//

நன்றி
டீச்சர்
தங்கள் வருகைக்கும்
தொடர்ந்து இட்ட பின்னோடதுக்கும்

ம.தி.சுதா said...

///// "மணி எட்டு ஆக போகுது. இன்னும் அந்த எரும மாடு எந்திரிக்கலையா?" என்று அம்மாவிடம் அப்பா கேட்டது லேசாக காதில் ஒலித்தாலும்/////

ஹ....ஹ....ஹ.... கடுமையா ஒலித்தாலென்ன லேசா ஒலித்தாலென்ன உறக்கம் உறக்கம் தானே..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio

Angel said...

VERY NICE .
நீங்க எல்லார் BIRTHDAY கும் கவிதை போடுவீங்க .எனக்கு கவித எல்லாம் வராது .உங்களுக்கு and உங்களுடன் பிறந்த நாள் கொண்டாடுபவருக்கு ஒரு B.Day card pottirukken .டைம் இருக்கும் போது ஏன் தமிழ் ப்ளோக்ல பாருங்க.

Unknown said...

♔ம.தி.சுதா♔ said...
///// "மணி எட்டு ஆக போகுது. இன்னும் அந்த எரும மாடு எந்திரிக்கலையா?" என்று அம்மாவிடம் அப்பா கேட்டது லேசாக காதில் ஒலித்தாலும்/////

ஹ....ஹ....ஹ.... கடுமையா ஒலித்தாலென்ன லேசா ஒலித்தாலென்ன உறக்கம் உறக்கம் தானே..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio

June 12, 2011 1:56 PM//

நன்றி நண்பரே
மீண்டும் வாருங்கள்

Unknown said...

angelin said...
VERY NICE .
நீங்க எல்லார் BIRTHDAY கும் கவிதை போடுவீங்க .எனக்கு கவித எல்லாம் வராது .உங்களுக்கு and உங்களுடன் பிறந்த நாள் கொண்டாடுபவருக்கு ஒரு B.Day card pottirukken .டைம் இருக்கும் போது ஏன் தமிழ் ப்ளோக்ல பாருங்க.

June 13, 2011 6:25 //

ஹயோ நன்றி நன்றி நன்றி

ஏஞ்சலின்அக்கா

எதிர்பாராத சந்தோசம்

உங்கள அழகான கார்டுக்கும்

என்னக்காக கூட ஒரு வாழ்த்து பதிவு போட்ட உங்களுக்கும்

இமா அவர்களுக்கும் மிக்க

அன்பான நன்றிகள்.

படிக்காதீங்க.. (இந்திரா) said...

வணக்கம் நண்பரே..
வலையுலகத்துல நானும் நுழைஞ்சிருக்கேன். ஏதோ என்னால முடிஞ்ச இம்சை.

என் ப்ளாக்குக்கு வந்து ஆதரவும் அட்வைசும் குடுக்கணும்னு கேட்டுக்குறேன்.

Unknown said...

Super siva , next what?

Mahi said...

உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்,தொடருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

http://mahikitchen.blogspot.com/2011/06/blog-post_17.html

vinu said...

patttaaasssaaannna start..... wngey next episode.??????????

முற்றும் அறிந்த அதிரா said...

உங்களிடமும் பூ இருக்கா சிவா? சத்தியமாக இப்பத்தான் எனக்குத் தெரியும். இல்லை எனத்தான் நினைத்திருந்தேன், ஏனெனில் முன்பு ஒன்றை ஓபின் பண்ணி பின் மூடிவிட்டபின் திறக்கவில்லை புதிசு என நினைத்திருந்தேன்.

இங்கு எதையும் படிக்கவில்லை, பின்னர் வருகிறேன்.

Unknown said...

நா.மணிவண்ணன் said...
Super siva , next what?

June 19, 2011 9:36 AM
//

I DONT KNEW...:)
NANDRI thangal varugaikku

Unknown said...

Mahi said...
உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்,தொடருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

http://mahikitchen.blogspot.com/2011/06/blog-post_17.html

June 19, 2011 1:40 PM//

am on leave :))
thank you for inviting me..

Unknown said...

vinu said...
patttaaasssaaannna start..... wngey next episode.??????????

July 1, 2011 9:33 AM
//

patasu namathu poichuuuuu:)))

thank u vino.

Unknown said...

athira said...
உங்களிடமும் பூ இருக்கா சிவா? சத்தியமாக இப்பத்தான் எனக்குத் தெரியும். இல்லை எனத்தான் நினைத்திருந்தேன், ஏனெனில் முன்பு ஒன்றை ஓபின் பண்ணி பின் மூடிவிட்டபின் திறக்கவில்லை புதிசு என நினைத்திருந்தேன்.

இங்கு எதையும் படிக்கவில்லை, பின்னர் வருகிறேன்.

July 11, 2011 5:00 PM///

பூ எல்லாம் இல்லை

சும்மா

நீங்க எப்போ வேணா வாங்க ...

வருகைக்கு நன்றி

Unknown said...

இன்றுதான் முதல் வருகிறேன்! நல்லா இருக்கு! எங்கே பாஸ் அடுத்த பாகம்?

சாகம்பரி said...

ஒரு மாதமாக கனவு கலைந்துவிடும் என்று காத்திருக்கிறோம். பாவம் ஜீ.

Unknown said...

ஜீ... said...
இன்றுதான் முதல் வருகிறேன்! நல்லா இருக்கு! எங்கே பாஸ் அடுத்த பாகம்?

July 14, 2011 3:30 PM
//

நன்றி ஜி
மீண்டும் வாங்க
வாழ்க வளமுடன்

Unknown said...

சாகம்பரி said...
ஒரு மாதமாக கனவு கலைந்துவிடும் என்று காத்திருக்கிறோம். பாவம் ஜீ.

July 15, 2011 12:30 அம//

உங்கள் கனவு பலித்து விட்டது

நன்றி டீச்சர்

மாய உலகம் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... அடுத்த்தை படித்துவிட்டு சொல்கிறேன் தொடரும்

Unknown said...

மாய உலகம் said...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... அடுத்த்தை படித்துவிட்டு சொல்கிறேன் தொடரும்

July 23, 2011 7:28 PM.
நன்றி மாய உலகம்
மீண்டும் வாங்க
வாழ்க வளமுடன்

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...