Friday, October 22, 2010

வாடிக்கை...!!!




எங்கே போனது இந்த மனித நேயம் எல்லாம் நேற்று வாங்கின "அறை" கனத்தில எல்லாம் வறண்டு போயிட்டு...

இந்த வாசிங் மிசின் கூட இப்போ வர வர மனசாட்சியே இல்லாம இருக்கு...
வாசிங் மிசின் கட புடனு சத்தம் போட்டு துணி மணிகள் எல்லாம் என்னைய தூக்கி கம்பியில காயபோடுனு சத்தம் கொடுத்து நின்றது..

எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வெயிலில் காயபோட போனால் அங்கே
பாழாய் போன மேகம் சூரியனை மறைத்துக்கொண்டு நிக்குது,சரி அடிக்கிற காத்திலவது காயும் நினைச்சு காயபோட்ட அப்போதான் ஊரில இருக்கிற புழுதி மண்ணை எல்லாம் காத்து பத்திரிக்கை வைத்து அழைத்துக்கொண்டு வருது.. !என்ன பண்ண எல்லாம் என்னோட நேரம்..!!

அப்பறம் ஒருவழியா கிளிப் மாட்டி ,விடு விடு என சமையல் அறைக்குள் நுழைகிறேன் ,ஏதோ ரசம்,எத்தன வேகமா சமையல் முடிக்க ரசம் வைக்கலாம் சரி என்று எல்லாம் ரெடி பண்ணிக்கொண்டு காஸ் அடுப்பை பத்த வைத்தல் காஸ் இல்லை..ஹயோ நேரம் வேற ஆகிட்டே இருக்கே..இன்னைக்கும் நல்ல திட்டு வாங்க போறேன்.கூட அடியும் விழுமேனு "நினைத்தப்ப அப்பாவை
திட்டி தீர்த்தேன் நல்ல இடமாம் நல்ல இடம்.. எல்லாம் சுத்த பொய்...

என்னைய காசு கொடுக்காத வேலை ஆளா வைத்து போயட்டங்கலேபொலம்பிகிட்டு இருந்தேன்.அப்புறம் காஸ் போன் பண்ணி அது வந்து ஒரு வழிய மிளகு ரசம் வைத்து உருளைக்கிழங்கு வறுவல் பண்ணியாச்சு..

அப்போதுதான் வாசனையை மோப்பம் பிடித்துகொண்டே என்ன உருளை கிழங்கு வறுவல் போல பக்கத்துவீட்டு பாட்டி உள்ளே சவுண்ட் விட்டுகிட்டே வந்துச்சு,அந்த பாட்டிக்கு பல்லு மட்டும் இல்லை,ஆனால் வாய திறந்தால் போதும் ஊரு கதை எல்லாம் நாறு நார கிழிக்கும்..அப்படி இருந்த கூட பரவல,நா அது பேசறதுக்கு எல்லாம் ஆமம் சாமி போடணும்.

வந்தா சும்மா இருக்குமா,இருக்காது அங்க என்ன இருக்கு எங்க என்ன இருக்கு கேட்டு உயிரை வாங்கிரும்...

அப்பறம் என்ன அதுக்கு ஒரு காபி போட்டு கொடுத்து அனுப்பிவிட்டு எனது வேலையை தொடர்ந்தேன்.சே என்ன வாழ்க்கை..ஒரு பீச் உண்டா ஒரு திருவிழா உண்டா,தினமும் இந்த வீடே கதியா வாழ வேண்டிருக்கு..

"என்னபண்ண எல்லாருக்கும் எல்லாம் அமையுமா?..இப்போ யேசித்து என்ன பயன்!!!!?"

பிறகு ஒரு முக்கியமான வேலை மறந்துவிட்டேன் "இந்த மகி அக்கா (http://mahikitchen.blogspot.com/2010/10/blog-post_19.html)ப்ளாக்ல போட்ட வெந்தய தோசைக்கு ஊற வைத்தது நினைவுக்கு வந்தது."ஓடிபோய் கிரைண்டேற ஓடவிட்டு ஒரு வழிய மாவும் அரைத்து வைத்து விட்டு மணியை பார்த்தேன் அது ஐந்து முப்பது.
அவரசம் அவசரமாய் வீடு பெருக்கி ஒன்டவைது ஒதுங்க வைத்து அப்பா அப்பா எவ்ளோ வேலை,எவ்ளோ வேலை..

இப்போதான் அம்மா பட்ட கஷ்டம் மனசுக்கு வந்துச்சு.. அம்மாவும் இப்படிதான கஷ்டப்பட்டு இருப்பாங்கனு தோன்றியது.அம்மாவை பாக்கனும்போல இருந்துச்சு..என்ன இருந்தாலும் தனிய இருந்தால் இப்படித்தான் கஷ்டபடனும்.மாமனார் மாமியார் இருந்தா எவ்ளோ ஒத்தாசைய இருக்கும் என்று கொஞ்சம் கொஞ்சமாய் புரிந்துகொண்டேன்..!

அப்போது வீட்டுக்கேட்டு திறக்கும் சத்தம் கேட்டது..ஒரு வழிய அடுத்த திட்டு வாங்க என்னை ஆயத்த படுத்திகொண்டு இருந்தேன்.

"எப்படி சமைத்தாலும் என் மனைவிஎன்னை திட்டாமல் போக போவது இல்லை....!!!!

பின்குறிப்பு: (சும்மா ஒரு கற்பனை...)
ஒரு குட்டி கமெடி (எங்கோ ரசித்தது)
என் மனைவி வேகமா ஓடிவந்து ஒரு விசியம் சொன்னாள் ." நமக்கு ஜோசியம் பார்த்த ஜோசியர் செத்து போய்ட்டாராம் ..பிறகு அப்படியானு கேட்டுவிட்டு...(பின்ன பண்ண பாவம் எல்லாம் சும்மா விடுமானு மனசுக்குள் முனுமுனுத்தேன் )

38 comments:

செல்வா said...

நான் தான் முதல் .!!

செல்வா said...

அந்த முதல் குழந்தை படம் கலக்கல் ..!!
எப்படித்தான் இந்த மாதிரி படமெல்லாம் கிடைக்குதோ ..?

செல்வா said...

செம செம .. அதுவும் கடைசில வச்சீங்க பாருங்க ..
கலக்கல் .. நான் கூட அது ஒரு பொண்ணுன்னு நினைச்சேன் .. அந்த மாமனார் , மாமியார் ஒண்ணு சேர்க்கிற கதைன்னு நினைச்சா .., கடைசில இப்படி போட்டுடீங்க .. நல்லா இருக்கு .!!!

Unknown said...

//ப.செல்வக்குமார் said...
நான் தான் முதல் .!!//

வாங்க வாங்க
அண்ணனுக்கு கலர் கொடு....

Unknown said...

@செல்வகுமார்
//அந்த முதல் குழந்தை படம் கலக்கல் ..!!
எப்படித்தான் இந்த மாதிரி படமெல்லாம் கிடைக்குதோ ..?//


எல்லாம் பாடிகாட் முனிஸ்வரர் கூகிள் ஆண்டவர் துணை தான்

Unknown said...

@செல்வகுமார் //செம செம .. அதுவும் கடைசில வச்சீங்க பாருங்க ..
கலக்கல் .. நான் கூட அது ஒரு பொண்ணுன்னு நினைச்சேன் .. அந்த மாமனார் , மாமியார் ஒண்ணு சேர்க்கிற கதைன்னு நினைச்சா.., கடைசில இப்படி போட்டுடீங்க .. நல்லா இருக்கு .!!!///



ரொம்ப நன்றி தங்கள் வருகைக்கு

எல்லாம் நீங்கள் கொடுத்த பயிற்சி..

சைவகொத்துப்பரோட்டா said...

கடைசியில் வச்சீங்களே ட்விஸ்ட், எதிர்பார்க்கல!! கொஞ்சம் எழுத்து பிழைகளை சரி பண்ணுங்களேன் சிவா, நன்றி.

Kousalya Raj said...

interesting......!

அன்பை ஆயுதமாக ஏந்தி வந்திருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...தொடருங்கள்...!

கருடன் said...

உன் கஷ்டத்த நினைத்து கண்னு கலங்குது சிவா.... :))

Unknown said...

சைவகொத்துப்பரோட்டா said...
//கடைசியில் வச்சீங்களே ட்விஸ்ட், எதிர்பார்க்கல!! கொஞ்சம் எழுத்து பிழைகளை சரி பண்ணுங்களேன் சிவா, நன்றி.//


வாங்க அண்ணா..அடுத்த பதிவில் தவறை திருத்தி கொள்கிறேன் .
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

Unknown said...

இமா said...
;)))//

வாங்க வாங்க

Unknown said...

Kousalya said...
interesting......!
வாங்க டாக்டர் கௌசல்யா மேடம்

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

Unknown said...

TERROR-PANDIYAN(VAS) said...
உன் கஷ்டத்த நினைத்து கண்னு கலங்குது சிவா.... :))//


அண்ணே கஷ்டபடரவங்களுக்குதான் அருமை புரியும்:)))
நீங்க இருக்கிறது பெரிய ஆறுதலா இருக்குனே..


நன்றி வருகைக்கு

Priya said...

படிக்க சுவாரஸியமா இருந்தது! நினைச்சேன் இது ஒரு ஆணின் புலம்பல்தானோன்னு... கடைசிவரி அதை உறுதிபடுத்திச்சு.
முதல் படம் ச்சோ சுவீட்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//எப்படி சமைத்தாலும் என் மனைவிஎன்னை திட்டாமல் போக போவது இல்லை....!!!! சும்மா ஒரு கற்பனை...)//

ஹும்கும்... நாங்களும் இதை எல்லாம் கற்பனை தான் பண்ணனும்... ஒரு நாளும் ரங்க்ஸ்க தங்க்ஸ்களுக்கு இந்த ஹெல்ப் எல்லாம் பண்ண போறது இல்லை...


ஆனாலும் ஹா ஹா கற்பனை தான்... சீக்கரம் நிஜத்துலயும் பலிக்க வாழ்த்துக்கள்... ஹா ஹா

Unknown said...

Priya said...
படிக்க சுவாரஸியமா இருந்தது! நினைச்சேன் இது ஒரு ஆணின் புலம்பல்தானோன்னு... கடைசிவரி அதை உறுதிபடுத்திச்சு.
முதல் படம் ச்சோ சுவீட்!//

வாங்க ப்ரியா,
படம் எல்லாம் கூகுளே ஆண்டவர் உதவிதான்..
நன்றி தங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.

Unknown said...

அப்பாவி தங்கமணி said...
//ஹும்கும்... நாங்களும் இதை எல்லாம் கற்பனை தான் பண்ணனும்... ஒரு நாளும் ரங்க்ஸ்க தங்க்ஸ்களுக்கு இந்த ஹெல்ப் எல்லாம் பண்ண போறது இல்லை...


ஆனாலும் ஹா ஹா கற்பனை தான்... சீக்கரம் நிஜத்துலயும் பலிக்க வாழ்த்துக்கள்... ஹா ஹா///

வாங்க அப்பாவி(இட்லி கடை தங்கமணி )
எப்போ பாரு கமெடிபண்ணிக்கிட்டு ....
ஹும் ஹெல்ப் பண்ணிட்டமட்டும்....:)

நன்றி தங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.

இமா க்றிஸ் said...

சிவா, //சீக்கரம் நிஜத்துலயும் பலிக்க வாழ்த்துக்கள்...// ;))) அப்போ டெய்லி தயிர்சாதம் சமைச்சு சமாளிச்சிரலாம் இல்ல! ;)

என்னெவென்றாலும் தமிழில் இத்தனை பதில்களையும் பார்க்கையில்... சிவாதானா இது! என் கண்ணையே என்னால் நம்பமுடியவில்லையே. ;))

Unknown said...

@இமா said..., //சீக்கரம் நிஜத்துலயும் பலிக்க வாழ்த்துக்கள்...// ;))) அப்போ டெய்லி தயிர்சாதம் சமைச்சு சமாளிச்சிரலாம் இல்ல! ;)----நிச்சயமாக

என்னெவென்றாலும் தமிழில் இத்தனை பதில்களையும் பார்க்கையில்... சிவாதானா இது! என் கண்ணையே என்னால் நம்பமுடியவில்லையே. ;))--



கண்ணால் காண்பது பொய் ,கேட்பதும் பொய்

தீர விசாரிப்பதும்....தெரியவில்லை:)))

வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!
தமிழே என் மூச்சு
என்பேச்சு !
வாழ்க தமிழ் !


இப்படி குட்டி குட்டி சொல்லி கொடுத்த எங்க தமிழ் டீச்சருக்கு நன்றி//

Mahi said...

நானும் வந்துட்டேன் சிவா! மீ த 21ஸ்ட்!! :)

கதை நல்லா இருக்கு.சீக்கிரம் நிஜமாவே மாவரைக்க வாழ்த்துக்கள்!

////இப்படி குட்டி குட்டி சொல்லி கொடுத்த எங்க தமிழ் டீச்சருக்கு நன்றி////டீச்சர்,இன்னும் கொஞ்சம் குட்டி,சிவாவை பிழையில்லாம எழுதவைங்க!:)

Mahi said...

நானும் வந்துட்டேன் சிவா! மீ த 21ஸ்ட்!! :)

கதை நல்லா இருக்கு.சீக்கிரம் நிஜமாவே மாவரைக்க வாழ்த்துக்கள்!

////இப்படி குட்டி குட்டி சொல்லி கொடுத்த எங்க தமிழ் டீச்சருக்கு நன்றி////டீச்சர்,இன்னும் கொஞ்சம் குட்டி,சிவாவை பிழையில்லாம எழுதவைங்க!:)

Unknown said...

நானும் வந்துட்டேன் சிவா! மீ த 21ஸ்ட்!! :)---

வாங்க வாங்க மகி அக்கா..


கதை நல்லா இருக்கு.சீக்கிரம் நிஜமாவே மாவரைக்க வாழ்த்துக்கள்!---//ஏன் இந்தகொலைவெறி நல்லாதானே போய்கிட்டு இருக்கு ..//

வாங்க வாங்க மகி அக்கா..
நீங்களும் எனக்கு குட்டி குட்டி சொல்லிகுடுக்கலமே
இந்த சிவா குட்டிக்கு..

நன்றி தங்கள் வருகைக்கு

இமா க்றிஸ் said...

இனிமேல் குட்டுறதுக்கு இடமில்ல மகி. ;)
1. குட்டிக் குட்டி, ஏற்கனவே குட்டியா இருக்கிற சிவாக்குட்டி இன்னும் குட்டியாப் போயிரும், பாவம். ;)
2. எனக்கும் கை வலிக்குது.
3. கனவுல வேற ஏஞ்சல் வந்து திட்டும்.

;))))

Unknown said...

@இமா said...
இனிமேல் குட்டுறதுக்கு இடமில்ல மகி. ;) 1. குட்டிக் குட்டி, ஏற்கனவே குட்டியா இருக்கிற சிவாக்குட்டி இன்னும் குட்டியாப் போயிரும், பாவம். ;)
2. எனக்கும் கை வலிக்குது.
3. கனவுல வேற ஏஞ்சல் வந்து திட்டும். ///



1.ஆமாம்
ஆமாம் ...குட்ட இடம் இல்லை
சொல்லி கொடுத்தால் கேட்டுபோம் 2..இரண்டு வாட்டி சொல்லி தரவேணும்..
3.;))))
அது யாரு????எனக்கு தெரியாம..angel???

இமா க்றிஸ் said...

றெக்கை எல்லாம் வச்சு... பட்டு மாதிரி வெள்ளை ட்ரெஸ் போட்டு இருக்குமே, தெரியாதா!!

Unknown said...

றெக்கை எல்லாம் வச்சு... பட்டு மாதிரி வெள்ளை ட்ரெஸ் போட்டு இருக்குமே, தெரியாதா!!---//

ஹும்கும்....

Mathi said...

சிவா ... சொன்ன விதம் மிக அழகு ...பின் குறிப்பை மட்டும் நம்ப முடியல ..
அம்மா பட்ட கஷ்டம் எல்லாம் என்றாவது ஒரு நாளில் எல்லோரும் நினைப்பர்

Unknown said...

நன்றி மதி
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும்
சில சமயம்..நம்ப முடியாது
ஆனாலும் ஏற்றுகொள்ளவேண்டும்..

Jaleela Kamal said...

. சிவா நல்ல கற்பனை இவ்வள்வா அதுவும் தோசைக்கு வேற ஊற போட்டாச்சா//
வ்வாஷிங் மிஷின் என்றதும்.,தங்கை பயன் ஒரு வயது இது போல் வாஷிங் மிஷின் தட தட ந்னு சத்தம் வந்தா குழ்ந்தைகள் பயந்து வீலுன்னு அழும், ஆனால் இவன் ஓட்டி போய் தான் தான் அத பிடிச்சி நிறுத்துவது போ டைட்டா பிடிச்சிட்டு நிறபான் அந்த ஞாபகம் வந்து விட்ட்து..

னீங்க சொல்வது போல் அம்மா படும் கஷ்டம் ஒரு கால்த்தில் தான் பிள்ளைகள் நினைத்து பார்ப்பார்கள்

Jaleela Kamal said...

pthivu poodda anree vanthupadiththu sirssiddu pooyddeen, font pirassaniyal ippa thaan varamudiwthathu,

Unknown said...

Jaleela Kamal said...
. சிவா நல்ல கற்பனை இவ்வள்வா அதுவும் தோசைக்கு வேற ஊற போட்டாச்சா//
வ்வாஷிங் மிஷின் என்றதும்.,தங்கை பயன் ஒரு வயது இது போல் வாஷிங் மிஷின் தட தட ந்னு சத்தம் வந்தா குழ்ந்தைகள் பயந்து வீலுன்னு அழும், ஆனால் இவன் ஓட்டி போய் தான் தான் அத பிடிச்சி நிறுத்துவது போ டைட்டா பிடிச்சிட்டு நிறபான் அந்த ஞாபகம் வந்து விட்ட்து..


வாங்க அக்கா
நானே என் ப்ளாக் பக்கம் வந்து ரொம்ப நாள் ஆகின்றது
நன்றி உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்

yeskha said...

ஹிட் கவுண்ட் வைங்கப்பா..........

yeskha said...

ஹிட் கவுண்ட் வைங்கப்பா..........

Unknown said...

வாங்க யாசிக சார்

வருகைக்கு நன்றி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger TERROR-PANDIYAN(VAS) said...

உன் கஷ்டத்த நினைத்து கண்னு கலங்குது சிவா.... :))
//
எனக்கும்தான் டெரர் சாப்..

ஜல்தி ஆவோ...

Unknown said...

பட்டாபட்டி.. said...
Blogger TERROR-PANDIYAN(VAS) said...

உன் கஷ்டத்த நினைத்து கண்னு கலங்குது சிவா.... :))
//
எனக்கும்தான் டெரர் சாப்.. ///


வாங்க வாங்க
பட்டா பட்டி அண்ணே
உங்க வருகை
என் கஷ்டம் போய்விட்டது

Ramesh said...

கடைசி லைன் செம...

Unknown said...

வாங்க ரமேஷ் அண்ணே.

மிக்க நன்றி தங்கள் கருத்துக்கும்
வருக்கைக்கும்

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...