Saturday, November 20, 2010

அன்புள்ள தோழிக்கு...

'அவசியம் கலந்து கொள்ள வேண்டும்,' என்று அவர்களிடம் எனது திருமணப் பத்திரிகையைக் கொடுத்து விட்டுத் திரும்பி வரும்போது ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. காலம் பின்னோக்கி நகர்ந்தது. கடந்த காலத்தின் நிமிடங்களை நானும் புரட்டிப் பார்க்கின்றேன் ...

எத்தனை கனவுகள்! எல்லாம் காலத்தின் போக்கில், சூழ்நிலையின் சுழலில்
சிக்கிக் கலைந்து போனது.. அழாத நாட்களும் சந்தோசம் குறையாத நாட்களும் நெஞ்சைவிட்டு அகல மறுக்கின்றன.. காலம்தான் எத்தனை வேகமாய் மாறுகிறது.. இல்லை மனிதர்கள் இல்லை.. மனம் காலத்தை விட மிக வேகமாய் மாறியதை உணர்ந்தேன்..

பல முறை உன்னை சந்தித்து இருக்கிறேன் எதுவும் தோன்றவில்லை ஒரு முறை நீ விடுமுறையில் சென்றபோது நானும் ஒரு சராசரியாய் உணர்ந்தேன் ஒரு உறவின் பிரிவின் வலியை.மறுக்கவும் மறைக்கும் முடியவில்லை.!

விடுமுறை முடிந்து அவர்கள் வீட்டில் செய்த அச்சு முறுக்கையும் அதிரசத்தையும் எனக்க எடுத்து வந்து கொடுத்தபோது என்னை பற்றி நினைக்க கூட ஒருவர் இருக்கிறாங்க நினைத்த சந்தோஷமான நாட்கள் அவை.

விடுமுறை முடிந்து உன் வீட்டில் செய்த அச்சுமுறுக்கையும் அதிரசத்தையும் எனக்காக எடுத்து வந்து கொடுத்தபோது என்னைப் பற்றி நினைக்கக் கூட ஒருவர் இருக்கிறாங்க என்று நினைத்த சந்தோஷமான நாட்கள் அவை.

ஒரு சின்னத் தலைவலி வந்தாலும் பெரும் பாடு படும் உன் மனம் எனக்கு மிகப் பிடிக்கும். அதற்காகவே பலமுறை எனக்கு தலைவலி வந்தது உண்டு. என்னைப் போலவே பலரும் இருந்து இருப்பார்கள் என்று நம்புகிறேன். சின்னச் சின்னப் பொய்களும் எனக்கு பிடித்துப் போன நாட்கள்.

இன்னும் ஒரு முறை ஒரு கேள்வி என்னிடம்....
பதில் சொல்ல முடியாத தருணங்கள்; பெருமூச்சில் சுவாசித்த பல நிமிடங்கள்; எதார்த்தம் உணர, ஏற்றுக்கொள்ள மறுத்த நாட்கள்... "அடுத்த பிறவி பிறந்தால் நீ என்னவாகப் பிறக்க நினைக்கிறாய்?" என்று கேட்ட கேள்விக்குப் பதில் மறுத்து
ஒரு மௌனப் புன்னகை தாமரை மொட்டு போல உதிர்த்துவிட்டுச் சென்றது இன்னமும் மனதில் வாடாமல் இருக்கிறது.

இப்படி எளிதாய்க் கேட்கும் பல கேள்விகளுக்கான விடைகளுக்கு மௌனம் மட்டுமே பதிலாய்க் கொடுத்திருக்கிறேன். இருந்தாலும், "அதி புத்திசாலிகள் அமைதியாக இருப்பார்கள் என்று எங்கோ படித்து நினைவுக்கு வருகிறது," என்று என்னை விட்டு கொடுக்காமல் அரவணைத்துச் செல்லும் நாட்களை இனி எங்கே தேடுவேன்..

தினமும் பேசின வார்த்தைகள் நினைவில் இல்லை.
திட்டிய ஆராதனைகள் அறவே மறந்து விட்டது....

சூழ்நிலையின் சந்தர்ப்பத்தால் நீ என்னை விட்டுச் சென்ற நிமிடம் தவிர ஏதும் நினைவில் இல்லை...அதைவிடப் பெரிய தண்டனை... அந்த நிமிடம் போல கொடுமையான நிமிடமும் இல்லை...அதுபோல நாட்கள் எதுவும் இல்லை...


பிரிவும் சந்திப்பும் நிரந்தரம் இல்லை இருந்தாலும்...
இந்தத் தண்டனையை மெல்ல மெல்ல ஏற்றுகொள்ளக் காலம் கற்றுக் கொடுத்தது...
அனுபவங்களும் வலிகளும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு புதிய வாழ்கையைத் தேடி நானும் எனது பயணத்தைத் தொடர்கிறேன்.

எத்தனை அடி அடித்தாலும் திரும்பத் திரும்ப அம்மாவைத் தேடி வரும் ஒரு குழந்தையைப் போல நான் உன்னுடன் வந்த நினைவுகளைத் திரும்ப எதாவது ஒரு சம்பவம் ஞாபகத்துக்குக் கொண்டு வரும் என்பதை மறுக்கமுடியாது...

இப்படிக்கு அழியாத அழகான நினைவுகளுடன்...
43 comments:

siva said...

hilo
123...

mike testing am back....

ப.செல்வக்குமார் said...

ஐ . வடை வடை ..!!

ப.செல்வக்குமார் said...

//நானும் ஒரு சராசரியாய் உணர்ந்தேன் ஒரு உறவின் பிரிவின் வலியை.மறுக்கவும் மறைக்கும் முடியவில்லை.!
//

இந்த வரிகள் உண்மைலேயே களக்கா இருக்கு அண்ணா ., தொடர்ந்து எழுதுங்க ..!!

ப.செல்வக்குமார் said...

//இருந்தலும் அதி புத்திசாலிகள் அமைதியை இருப்பார்கள் என்று எங்கோ படித்து நினைவுக்கு வருகிறது என்று என்னை விட்டு கொடுக்காமல் அரவணைத்து செல்லும் நாட்கள் இனி எங்கே
தேடுவேன்..//

வாய்ப்பே இல்லை அண்ணா ., கண்டிப்பா உங்களுக்குள்ள ஒரு கவிஞர் சத்தியமா இருக்கார் .. இந்த வரிகள் படிக்கும் போது எனக்கு சிலிர்ப்பா இருந்துச்சு .!

LK said...

சோகத்தையும் அழகாக சொல்ல முடியும் என்று இன்று கண்டுகொண்டேன். நன்றி

TERROR-PANDIYAN(VAS) said...

அப்பா ராசா இது லவ்வா இல்லை நட்பா?? தெளிவா சொல்லி தொலைங்கடா... எல்லாரும் இங்க ல்வவர ப்ரியமான தோழி, அன்பு தோழி சொல்லி தான் சாவடிக்கிறாங்க... :)))

வெறும்பய said...

அருமை நண்பரே.. நினைவுகள் எவ்வளவு சுகமானதோ அவ்வளவு வெளியானதும் கூட...

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) said...

அப்பா ராசா இது லவ்வா இல்லை நட்பா?? தெளிவா சொல்லி தொலைங்கடா... எல்லாரும் இங்க ல்வவர ப்ரியமான தோழி, அன்பு தோழி சொல்லி தான் சாவடிக்கிறாங்க... :)))

//

யாராவது லவ் பண்ணினா உனக்கு பொறுக்காதே.. ஒரு பொண்ணும் உன்ன திரும்பி பார்க்கனன்னு தானே இப்படி வயித்தில அடிச்சு அழுற... கவலைப்படாத நம்ம போலீசு கிட்ட உனக்கு ஒரு பொண்ணு பார்க்க சொல்றேன்...

இம்சைஅரசன் பாபு.. said...

//அப்பா ராசா இது லவ்வா இல்லை நட்பா?? தெளிவா சொல்லி தொலைங்கடா... எல்லாரும் இங்க ல்வவர ப்ரியமான தோழி, அன்பு தோழி சொல்லி தான் சாவடிக்கிறாங்க... :))) //

நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா ??????...................
உன் சந்தேகத்துல தீய வைக்க ................து...... .இதுல்லாம் உனக்கு ஒரு ...........................

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல இருக்கு உங்களோட நினைவுகள் .........கூடவே உங்களோட எழுத்தின் நடையும் ...........சூப்பர்

siva said...

ப.செல்வக்குமார் said...
ஐ . வடை வடை ..!!

//இருக்கிறது இரண்டு பேரு ஒன்னு நானு இன்னும் ஒன்னு நீங்க எதுக்கு எதுக்கு வடைக்கு சண்டை....உங்களுக்குத்தான் வடை அப்புறம் எல்லா புகழும்...மிக்க நன்றி செல்வா //

siva said...

ப.செல்வக்குமார் said...
//இருந்தலும் அதி புத்திசாலிகள் அமைதியை இருப்பார்கள் என்று எங்கோ படித்து நினைவுக்கு வருகிறது என்று என்னை விட்டு கொடுக்காமல் அரவணைத்து செல்லும் நாட்கள் இனி எங்கே
தேடுவேன்..//

வாய்ப்பே இல்லை அண்ணா ., கண்டிப்பா உங்களுக்குள்ள ஒரு கவிஞர் சத்தியமா இருக்கார் .. இந்த வரிகள் படிக்கும் போது எனக்கு சிலிர்ப்பா இருந்துச்சு .!///

இருக்கும் இருக்கும்,சாரி செல்வா நீ இருக்கும்போது அப்படி சொல்லி இருக்க கூடாது..//

எப்படி எல்லாம் உசுபெத்த கூடாது ..மிக்க நன்றி தங்கள் javascript:void(0)வருகைக்கும் வரவேருபுரைக்கும்

siva said...

TERROR-PANDIYAN(VAS) said...
அப்பா ராசா இது லவ்வா இல்லை நட்பா?? தெளிவா சொல்லி தொலைங்கடா... எல்லாரும் இங்க ல்வவர ப்ரியமான தோழி, அன்பு தோழி சொல்லி தான் சாவடிக்கிறாங்க... :)))

///
வாங்க வாங்க மெகா கவி பாண்டியன் அண்ணா..
அமைதி அமைதி தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

siva said...

வெறும்பய said...
அருமை நண்பரே.. நினைவுகள் எவ்வளவு சுகமானதோ அவ்வளவு வெளியானதும் கூட...

//வாங்க வாங்க அண்ணா தங்கள் வருகைக்கும் நன்றி/

siva said...

@ LK said...
சோகத்தையும் அழகாக சொல்ல முடியும் என்று இன்று கண்டுகொண்டேன். நன்றி..

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

மிக்க நன்றி கார்த்திக் அண்ணா

siva said...

@இம்சைஅரசன் பாபு.. said...
//அப்பா ராசா இது லவ்வா இல்லை நட்பா?? தெளிவா சொல்லி தொலைங்கடா... எல்லாரும் இங்க ல்வவர ப்ரியமான தோழி, அன்பு தோழி சொல்லி தான் சாவடிக்கிறாங்க... :))) //

நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா ??????...................
உன் சந்தேகத்துல தீய வைக்க ................து...... .இதுல்லாம் உனக்கு ஒரு .................

நல்ல இருக்கு உங்களோட நினைவுகள் .........கூடவே உங்களோட எழுத்தின் நடையும் ...........சூப்பர்..//


மிக்க நன்றி உங்கள் ப்ளாக் மிக அழகா இருக்குண்ணா..

தங்கள் வருகைக்கு நன்றியும் சந்தோசங்களும்

சௌந்தர் said...

உங்கள் நினைவுகள் நல்லா சோகமா இருக்கு.... :( யாரு அவங்க காதலியா...

siva said...

வெறும்பய said...
TERROR-PANDIYAN(VAS) said...

அப்பா ராசா இது லவ்வா இல்லை நட்பா?? தெளிவா சொல்லி தொலைங்கடா... எல்லாரும் இங்க ல்வவர ப்ரியமான தோழி, அன்பு தோழி சொல்லி தான் சாவடிக்கிறாங்க... :)))

//

யாராவது லவ் பண்ணினா உனக்கு பொறுக்காதே.. ஒரு பொண்ணும் உன்ன திரும்பி பார்க்கனன்னு தானே இப்படி வயித்தில அடிச்சு அழுற... கவலைப்படாத நம்ம போலீசு கிட்ட உனக்கு ஒரு பொண்ணு பார்க்க சொல்றேன்....""

///ஹ ஹா //

dheva said...

//இப்படிக்கு அழியாத அழகான நினைவுகளுடன்... ///


அட என்ன இது ஒரு இடத்துல போய் ஸ்டரக் ஏன் ஆகுறீங்க....கைய வீசிப்போட்டு மேல நீந்துங்க பாஸ்.....

உபயம்: ஒரே காதல்/ நட்பும் ஊரில் இல்லையடா......!!!!!

அன்பரசன் said...

//எத்தனை அடி அடித்தாலும் திரும்பத் திரும்ப அம்மாவைத் தேடி வரும் ஒரு குழந்தையைப் போல நான் உன்னுடன் வந்த நினைவுகளைத் திரும்ப எதாவது ஒரு சம்பவம் ஞாபகத்துக்குக் கொண்டு வரும் என்பதை மறுக்கமுடியாது... //

உண்மைதான்

Priya said...

//பதில் சொல்ல முடியாத தருணங்கள்; பெருமூச்சில் சுவாசித்த பல நிமிடங்கள்; எதார்த்தம் உணர, ஏற்றுக்கொள்ள மறுத்த நாட்கள்...//.....யாவுமே அழகான நினைவுகள்!

இமா said...

;) பாராட்டுக்கள் சிவா.

Mathi said...

//பிரிவும் சந்திப்பும் நிரந்தரம் இல்லை இருந்தாலும்...
இந்தத் தண்டனையை மெல்ல மெல்ல ஏற்றுகொள்ளக் காலம் கற்றுக் கொடுத்தது...
அனுபவங்களும் வலிகளும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு புதிய வாழ்கையைத் தேடி நானும் எனது பயணத்தைத் தொடர்கிறேன். //


ரொம்ப நல்ல இருக்கு ...

இது கூட நல்ல இருக்கு ...

//ஒரு சின்னத் தலைவலி வந்தாலும் பெரும் பாடு படும் உன் மனம் எனக்கு மிகப் பிடிக்கும். அதற்காகவே பலமுறை எனக்கு தலைவலி வந்தது உண்டு. /// veryyyy nice

siva said...

@dheva said...
//இப்படிக்கு அழியாத அழகான நினைவுகளுடன்... ///

அட என்ன இது ஒரு இடத்துல போய் ஸ்டரக் ஏன் ஆகுறீங்க....கைய வீசிப்போட்டு மேல நீந்துங்க பாஸ்.....
உபயம்: ஒரே காதல்/ நட்பும் ஊரில் இல்லையடா......!!!!!வாங்க வாங்க தேவா அண்ணே..

என்று முதல் அண்ணன் அறிவுரை நடைமுறைக்கு வருகிறது.

siva said...

@அன்பரசன் //எத்தனை அடி அடித்தாலும் திரும்பத் திரும்ப அம்மாவைத் தேடி வரும் ஒரு குழந்தையைப் போல நான் உன்னுடன் வந்த நினைவுகளைத் திரும்ப எதாவது ஒரு சம்பவம் ஞாபகத்துக்குக் கொண்டு வரும் என்பதை மறுக்கமுடியாது... //

உண்மைதான்..///

வாங்க அன்பரசன் அண்ணா...

தங்கள் வருகைக்கு நன்றி

siva said...

@ இமா said...
;) பாராட்டுக்கள் சிவா.//

வாங்க இமா

எல்லாம் தங்கள் ஆசீர்வாதம்..வருகைக்கு மிக்க நன்றி

siva said...

@ Priya said...
//பதில் சொல்ல முடியாத தருணங்கள்; பெருமூச்சில் சுவாசித்த பல நிமிடங்கள்; எதார்த்தம் உணர, ஏற்றுக்கொள்ள மறுத்த நாட்கள்...//.....யாவுமே அழகான நினைவுகள்//வாங்க ப்ரியா..

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

siva said...

Mathi said...
//பிரிவும் சந்திப்பும் நிரந்தரம் இல்லை இருந்தாலும்...
இந்தத் தண்டனையை மெல்ல மெல்ல ஏற்றுகொள்ளக் காலம் கற்றுக் கொடுத்தது...
அனுபவங்களும் வலிகளும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு புதிய வாழ்கையைத் தேடி நானும் எனது பயணத்தைத் தொடர்கிறேன். //
ரொம்ப நல்ல இருக்கு ...
இது கூட நல்ல இருக்கு ...
//ஒரு சின்னத் தலைவலி வந்தாலும் பெரும் பாடு படும் உன் மனம் எனக்கு மிகப் பிடிக்கும். அதற்காகவே பலமுறை எனக்கு

தலைவலி வந்தது உண்டு. /// veryyyy நிசே///


வாங்க மதி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

siva said...

@செல்வா

இந்த பதிவு பக்கத்துக்கும்
பிரபல பதிவர் அனைவரையும் வரவழைத்த பெருமைக்கு உரியவர்
அண்ணன் செல்வா (கோமாளி ப்ளாக் சொந்தக்காரர் )
அவர்களே வாழ்க வாழ்க..தாங்கள் புகழ் ஓங்குக...
நன்றி

vanathy said...

சிவா, நல்லா இருக்கு. இது உங்கள் அனுபவமா? காதலா? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க, சார்.

siva said...

@வானதி
சிவா, நல்லா இருக்கு. இது உங்கள் அனுபவமா? காதலா? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க, சார்.///

வாங்க வாங்க
நட்பா காதலா
இரண்டுமே இல்லை....


தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி வானதி

அப்பாவி தங்கமணி said...

Lovely post... well chosen words

siva said...

@அப்பாவி தங்கமணி said...
Lovely post... well chosen words..

மீண்டும் தங்கள் வருகைக்கு நன்றி அப்பாவி ...

THOPPITHOPPI said...

அருமை
ஆனால் ரொம்ப நீளம்

எஸ்.கே said...

மிக நன்றாக சரளமாக எழுதியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!

siva said...

வாங்க
தொப்பி தொப்பி
நன்றி வருகைக்கு..//

எஸ்.கே said...
மிக நன்றாக சரளமாக எழுதியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!//
வாங்க எஸ் கே அண்ணா
வருகைக்கு மிக்க நன்றி

Anonymous said...

//பிரிவும் சந்திப்பும் நிரந்தரம் இல்லை இருந்தாலும்...
இந்தத் தண்டனையை மெல்ல மெல்ல ஏற்றுகொள்ளக் காலம் கற்றுக் கொடுத்தது...//

உண்மை தான் சிவா..

அது இருக்கட்டும்.
என்ன நம்ம கடைப் பக்கம் ஆளையே காணோம்???????

அருண் பிரசாத் said...

உங்களை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_03.html

நன்றி

siva said...

இந்திரா said...
//பிரிவும் சந்திப்பும் நிரந்தரம் இல்லை இருந்தாலும்...
இந்தத் தண்டனையை மெல்ல மெல்ல ஏற்றுகொள்ளக் காலம் கற்றுக் கொடுத்தது...//

உண்மை தான் சிவா..

அது இருக்கட்டும்.
என்ன நம்ம கடைப் பக்கம் ஆளையே காணோம்?????//

கண்டிப்பா வருவோம் சிறிது கால நிலை மாற்றம்

தங்கள் வருகைக்கு நன்றி இந்திரா

siva said...

அருண் பிரசாத் said...
உங்களை வலைசரத்தில்அறிமுகப்படுத்தியுள்ளேன்

நன்றி//


மிக்க நன்றி அருண் அண்ணா.விரைவில் தங்கள் பக்கம் வருகிறேன்

அறிமுகத்திற்கு மிக்க நன்றி

Mahi said...
This comment has been removed by the author.
Mahi said...

//அனுபவங்களும் வலிகளும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு புதிய வாழ்கையைத் தேடி நானும் எனது பயணத்தைத் தொடர்கிறேன்./
உண்மையான வார்த்தைகள் சிவா!

siva said...

//அனுபவங்களும் வலிகளும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு புதிய வாழ்கையைத் தேடி நானும் எனது பயணத்தைத் தொடர்கிறேன்./
உண்மையான வார்த்தைகள் சிவா!///

வாங்க மகி ...
என்னைப்போலவே நீங்கதான் first
..வருகைக்கு நன்றி ...

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...