முன் குறிப்பு:- (இது கவிதை இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்..)
பொறாமை எண்ணங்கள்
மொட்டில் கருக வேண்டும் ..!
நல் எண்ணங்கள்
அது
பூவாய் மலர வேண்டும்...!
அளவில்லா
பொறுமை வேண்டும்!
இளமையில் வறுமை
இல்லாத உலகம் வேண்டும்..!
காசு கேட்காது
கல்விதரும் குரு வேண்டும்..!
பெண்ணைச் சிறுமைப்படுத்தா
உலகம் வேண்டும்...!
கொடுக்கும் எண்ணங்கள்
கோடி கோடியாய்
மல்லிகை மலர்க்கொடியாய்ப்
பரவ வேண்டும்...!
பார் எங்கும்
அமைதிப் பூக்களின்
வாசனை
தாமரையாய்
மணம் வீசும்
சாலையில்
துள்ளலுடன் செல்லும்
பள்ளிக் குழந்தைகளின்
நடுவே
நானும் நடைபோட வேண்டும்....!
முடிவில்
முடிவு இல்லாத நட்பு வேண்டும்...!!
Tuesday, October 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
சில வருடங்களுக்கு முன்....
என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...
-
எல்லாரும் வாங்க வாங்க சாக்லேட் எடுத்துக்கோங்க அட நிறைய எடுத்துக்கோங்க ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா இன்று தேதியில் ...வருடங்களுக்கு முன்ப...
-
குட்டிவாசகம்: பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது இர...
-
பகிர படாத உணர்வுகளை எல்லாம் என் மௌனங்களின் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.. எப்பொதும் மௌனமாய் இருக்கும் நீ என்றாவது ஒரு நாள் புரிந்துகொள...
10 comments:
//பார் எங்கும்
அமைதிப் பூக்களின்
வாசனை
தாமரையாய்
மணம் வீசும் //
எந்த “பார்“னு சொல்லவே இல்லையே..
:)))
எல்லாம் கிடைக்க வாழ்த்துக்கள்
//அமைதிப் பூக்களின்
வாசனை
தாமரையாய்
மணம் வீசும்
சாலையில்
துள்ளலுடன் செல்லும்
பள்ளிக் குழந்தைகளின்
நடுவே
நானும் நடைபோட வேண்டும்....!//
ஆஹா!! இன்னும் நாலு பல்லு வர முன்னால நடக்க ஆரம்பிச்சுருவீங்க. பிறகு ஸ்கூலுக்குப் போகலாம். கவலை வேண்டாம் சிவா. ;))
வேண்டிய அனைத்தும் கிடைத்திட வாழ்த்துக்கள் சிவா.
கவிதை இல்லை என சொன்னாலும் கவிதையாகவே வந்து இருக்கிறது எண்ணங்கள்!
நன்றி //எந்த “பார்“னு சொல்லவே இல்லையே..
:)))//
-இந்திரா தங்களுக்கு தெரிந்தது எனக்கு தெரியாமல் இருக்கலாம்"
மிக்க நன்றி
//அருண் பிரசாத் said...
எல்லாம் கிடைக்க வாழ்த்துக்கள்
//
நன்றி
அருண் அண்ணே
தங்கள் வருகைக்கு
இமா said...
//ஆஹா!! இன்னும் நாலு பல்லு வர முன்னால நடக்க ஆரம்பிச்சுருவீங்க. பிறகு ஸ்கூலுக்குப் போகலாம். கவலை வேண்டாம் சிவா. ;))
நன்றி இமா
"எனக்கு பல் முளைத்து விட்டது அட்மிசன் கொடுக்கமட்ரங்க..."
நன்றி தங்கள் வருகைக்கு
//கவிதை இல்லை என சொன்னாலும் கவிதையாகவே வந்து இருக்கிறது எண்ணங்கள்!//
நன்றி ப்ரியா.
தங்கள் கருத்துக்கும்
வருகைக்கும்
//பார் எங்கும்
அமைதிப் பூக்களின்
வாசனை
தாமரையாய்
மணம் வீசும்
சாலையில்
துள்ளலுடன் செல்லும்
பள்ளிக் குழந்தைகளின்
நடுவே
நானும் நடைபோட வேண்டும்....!//
இது கலக்கல் அண்ணா .. எனக்கும் அது மாதிரி கிடைக்க ஆசைதான் .!!
//எந்த “பார்“னு சொல்லவே இல்லையே..
:)))//
ஓ , இது வேறயா ..?
//ஆஹா!! இன்னும் நாலு பல்லு வர முன்னால நடக்க ஆரம்பிச்சுருவீங்க. பிறகு ஸ்கூலுக்குப் போகலாம். கவலை வேண்டாம் சிவா. ;))
//
இன்னும் நீங்க சின்ன குழந்தையா ..?
@செல்வா
//இது கலக்கல் அண்ணா .. எனக்கும் அது மாதிரி கிடைக்க ஆசைதான் .!!--//
நிச்சயம் கிடைக்கும்...செல்வா.
""//எந்த “பார்“னு சொல்லவே இல்லையே..
:)))//""
ஓ , இது வேறயா ..?"" அவங்ககிட்ட கேட்டு சொல்றேன் செல்வா
//இன்னும் நீங்க சின்ன குழந்தையா ..???//
அட அமாம் ராசா எது தெரிமா இன்னும் கமெண்ட் போட்டுக்கிட்டு இருக்கேங்க,,,
Post a Comment