Wednesday, February 1, 2012
BILLA IS BACK
THE BILLA IS BACK....
(BILLA=SIVA) JUST summa
என்ன நட்புகளே அனைவரும் நலமா.
கொஞ்ச நாட்கள் கழித்து...
விடுமுறை விரைவாக முடிந்து அரக்க பறக்க ஓடி வர மனம் இல்லாமல் நின்று நிதானமாய் வந்து பார்க்க விரும்பியதால் கொஞ்சம் தாமதம்.மன்னிக்கவும்
சென்று வந்த விடுமுறை அனைத்தும் நிறைந்த அழகான பயணம்
நிறைய (ஏ)மாற்றங்கள் சுற்றத்திலும், எல்லாம் நன்மைக்கே என்று அடுத்த படி நோக்கி நகர்கிறேன்.
நேரம் சரி இல்லை:(
கோவப்படும் ஒரு ஒரு நேரமும் எமனாகி போய்கிறேன் எனக்கே..ஏன் கோவப்பட வேண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் அப்புறம்தான் வருகிறது ..கொஞ்சம் நிதானமாய் இருந்து இருக்கலாம் என்று என்னும்போதும் எல்லாம் முடிந்து போய் இருக்கிறது இனிமேலாவது சற்று நின்று நிதானமாய் செல்ல விரும்புகிறேன். இந்த ஏழரை சனி எனக்கு முன்னால் நின்று நிதானத்தை இழக்க வைக்கிறது.(வீட்டில சொன்னாக நமக்கு நேரம் சரி இல்லையாம்..)வாட் டு டூ. இது செய்தலும் தவறாக படுகிறது, நான் நானாக பார்க்க படவில்லை என்று நினைக்கும்போதுதான் கோவமும் வருத்தமும் வருகிறது என்னதான் சுற்றமும் உறவுகளும் இருந்தாலும் நம் கையில் நாலு காசு இருக்கும் வரைக்கும்தான் நாம் வாழ முடியும்.
பணம்தான் உயிர்:
உயிர் இல்லா அச்சிட்ட காகித பேப்பருக்கு இருக்கும் மதிப்பு
உயிர் உள்ள மனிதருக்கு இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது..
ஒரு செயலும் வருத்தமும்
தவறு செய்ய யாரும் கொஞ்சம் கூட யோசிக்க வில்லை பார்த்த வரையில் பழகிய வரையில் நியமாய் இருப்பதை யாரும் மதிப்பதே இல்லை.அவரவர் வேலை முடிந்தால் சரி .
நேரம் இல்லை :(
நட்பும் சுற்றமும் பார்த்த வரையில்
நின்று பேச யாருக்கும் நேரம் இல்லை...ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் ஊரில் அப்படி எங்க என்ன பண்றங்கானு தெரியல. ஒரு ஒரு விசியமும் தாமதமாய் தான் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது அலுவலகம் முதல் அனைத்தும். தொலை பேசியில் கூட யாரையும் தொடர்பு கொள்ள முடிய வில்லை அனைவரும் அவ்ளோ பிஸி..
தொலைவில்
கண்டுகொண்டு
அருகில் இருந்தும்
வாகனத்தில்
தலையாட்டிவிட்டு
மட்டும் செல்லும்
நட்புகளும்
ஒன்றாய்
நடந்து சென்று
பழகிய நாட்களை
மறக்க செய்கின்றன
சோகம் :
விபத்து
கண் எதிரே இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு ஒருவர் இருந்த கிடந்தது தூரதில் அவர் உறவினர் அடிப்பட்ட நிலையில் அழுதுக்கொண்டு இருந்தது. .
கவனித்ததில் தலைக்கவசம் அணியவில்லை எவரும்.
என்னால் எந்த உதவியும் முடியாமல் போக வருத்தத்தில் ஆண்டவனிடம் மன்னிப்பு கேட்டு அந்த இடம் விட்டு நகர்ந்தாலும் இன்னும் நெஞ்சம் விட்டு அகல வில்லை.
கொஞ்சம் கூட கவனம் இல்லை,பாதுகாப்பு பற்றி அக்கறை இல்லை,சாலைகள் நன்றாக இருந்தும் தவறு நம் மீது இல்லாது இருந்தும் இறப்புகள் பல கண் முன்னே.அவரவர் அவரவர் வேலை பார்த்துக்கொண்டே போய்க்கொண்டே இருக்கின்றனர் அவர்களுடன் நானும்...
தினமும் இட்லி:)
குறைந்த நாள் என்றாலும் இருந்த நாட்களில் வீட்டில் அதிகம் இருந்தேன்.பஞ்சு பஞ்சாய் இட்லி.வகை வகையாய் சட்டினி ,பொடி, சாம்பார் ,என்று எதையும் விட மனம் இல்லை..அம்மா கையால் எல்லாம் சாப்பிட்டு உறக்கம்.அம்மாவுக்கு காய்கறிகள் நறுக்க உதவி என்று நாட்கள் வெகு விரைவாய் சென்றது.
ஒரு நிம்மதி
ஒரு LIC பாலிசி ஒன்று அப்பாவின் பெயரில் போட்டுவிட்டு வந்தது..
ஒரு சந்தோசம். ஒரு இணைய நட்பை அவர் வீட்டுக்கு சென்று பெற்றோருடன் சந்தித்தது அவருடன் அவர் வீட்டில் வடை பாயசம் சாம்பாருடன் ஒரு கட்டு கட்டியது.கொஞ்சம் நேரம் இருந்தாலும் சந்தோசமாய் கழிந்து நெஞ்சில் எப்பொதும் இருக்கும்.
பிறகு சென்று வந்த ஒரே இடம் திருச்செந்தூர் முருகன் கோவில்.
முதன் முறை சென்று இருக்கிறேன்.ஒரு அனுபவம் மேல்சட்டை எல்லாம் இல்லாமல் போக வேண்டும்..அது பற்றி அடுத்த பதிவில் (நாம அடுத்த போஸ்ட் போடணும்ல)
எப்பொதும் தனியாக இல்லை அப்பாவுடன் மட்டும் ஏர்போர்ட் வருவேன் இந்த முறை
அம்மா அப்பா தம்பி அனைவரும் கூட வந்து வழி அனுப்பி (தள்ளி) விட்டனர்...
எங்க பார்த்தாலும் ஒரே பீலிங்க்ஸ் ஒப் இந்தியா..என்னமோ வேற கிரகத்துக்கு போவது போல ஒரு உணர்வு...
போகும்போது இரவில் விமானம் விட்டு இந்தியா மண்ணில் இறங்கும்போது திருப்பாச்சி விஜய் பாணியில் காலை சுழற்றி ஒரு SLOW MOTIONஇறங்கலாம்னு பார்த்தா பின்னாடி இருந்த ஒரு அவசரபயணி ஒரு பார்வை பார்க்க(!) அந்த வழியயை பின்பற்றமால் நல்ல பிள்ளையாய்
வந்ததது குறிப்பிட தக்கது.
பயணம் தொடரும்.
Subscribe to:
Post Comments (Atom)
சில வருடங்களுக்கு முன்....
என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...
-
எல்லாரும் வாங்க வாங்க சாக்லேட் எடுத்துக்கோங்க அட நிறைய எடுத்துக்கோங்க ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா இன்று தேதியில் ...வருடங்களுக்கு முன்ப...
-
குட்டிவாசகம்: பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது இர...
-
பகிர படாத உணர்வுகளை எல்லாம் என் மௌனங்களின் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.. எப்பொதும் மௌனமாய் இருக்கும் நீ என்றாவது ஒரு நாள் புரிந்துகொள...
50 comments:
:) nice narration of the trip Siva! That last photo is really cute!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பில்லாவா? முடியல்ல சாமீஈஈஈஈஈஈ எமனைக் கூப்பிடுங்கோ.. எமனைக் கூப்பிடுங்கோஓஓஓஓ:)))
உண்மைதான் சிவாவின் ஏக்கம் புரிகிறது, நாம் விட்டுவிட்டு வந்தபோது, அல்லது குழந்தையில் விளையாடித்திரிந்த போது இருந்தது போல, நம் ஊரும் மக்களும் இப்போ இல்லை, ஆனால் எம் மனதில் இருப்பது பிரியும்போதிருந்த அதே நிலைமைதான் இப்பவும் இருக்குமென்றும் எதிர்பார்ப்போடு போவோம், ஆனால் அங்கு அனைத்துமே மாறியிருக்கும்.
எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும், இனிமேல் எதையும் எதிர்பாராமல் போய்வரப்பழகோணும்.
//தொலைவில்
கண்டுகொண்டு
அருகில் இருந்தும்
வாகனத்தில்
தலையாட்டிவிட்டு
மட்டும் செல்லும்
நட்புகளும் //
உண்மை நட்பை புரிந்துகொள்ள கடவுள் ஏற்படுத்திக்கொடுத்த ஒரு சந்தர்ப்பம் என எண்ணிட வேண்டியதுதான்.
//குறைந்த நாள் என்றாலும் இருந்த நாட்களில் வீட்டில் அதிகம் இருந்தேன்.பஞ்சு பஞ்சாய் இட்லி.வகை வகையாய் சட்டினி ,பொடி, சாம்பார் ,என்று எதையும் விட மனம் இல்லை..அம்மா கையால் எல்லாம் சாப்பிட்டு உறக்கம்.அம்மாவுக்கு காய்கறிகள் நறுக்க உதவி என்று நாட்கள் வெகு விரைவாய் சென்றது.//
இதுதான் தேவை, விடுமுறை எனப் போனால் வீட்டில் இருந்தால்தான் அது விடுமுறைபோல மனதில் இனிக்கும், பறந்து திரிந்தால், எப்படிக் க்ழிந்தது, என்ன செய்தேன் என்றே தெரியாமல் போய்விடும்.
என் கணவர் சொல்வார், லீவு எடுத்தால் வீட்டில் நின்று சமைத்துச் சாப்பிட்டால்தான் அது லீவுபோல இருக்கும், இல்லையெனில், அதுவும் வேர்க்க்குப் போன பீலிங்ஸ்தான் வரும் என... அது உண்மையே.
//பிறகு சென்று வந்த ஒரே இடம் திருச்செந்தூர் முருகன் கோவில்.
முதன் முறை சென்று இருக்கிறேன்.ஒரு அனுபவம் மேல்சட்டை எல்லாம் இல்லாமல் போக வேண்டும்..அது பற்றி அடுத்த பதிவில் (நாம அடுத்த போஸ்ட் போடணும்ல)//
ஓ.. படத்தோடு போடப்போறீங்களாக்கும்:)) எதுக்கும் முன்னறிவித்தல் கொடுத்துப் போடுங்க:))
கடேசில இருப்பது பொன்னியின் குழந்தைப் படமா? சொல்லிட்டுப் போட்டிருக்கலாமில்ல:)))))).
//(BILLA=SIVA)//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பில்லா இஸ் பாக் ?? பாவம் ஊருல இருந்து ஒரே பீலிங்கா வந்து இருக்கீங்க சோ போனா போவுது பொழைச்சு போங்க :))
நாங்க போன வருஷம் போயிட்டு வந்த போதும் இதே மாதிரி பீலிங்க்ஸ் தான்.
பூஸ் சொன்னது போல எதிர்பார்ப்பு இல்லாம தான் போயிட்டு வரணும் .
//உயிர் இல்லா அச்சிட்ட காகித பேப்பருக்கு இருக்கும் மதிப்பு
உயிர் உள்ள மனிதருக்கு இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது//
ரொம்ப ரொம்ப நிஜம்
//தவறு செய்ய யாரும் கொஞ்சம் கூட யோசிக்க வில்லை பார்த்த வரையில் //
இங்கே வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சோ சிவா ? அந்த தாக்கம் தான். டிரைவருக்கு இல்லே வேலை செய்யும் அம்மாவுக்கு எல்லாம் தாங்க்ஸ் சொன்னால் உறவினர்கள் ஏதோ வேற்று கிரகத்தில் இருந்து வந்திருப்பது போல் பார்க்குறாங்க. இங்கே இருந்து வந்து பிலிம் காமிக்கிறோம் அப்புடின்னு நெனைக்குறாங்க ஹும்
//ஏழரை சனி எனக்கு முன்னால் நின்று நிதானத்தை இழக்க வைக்கிறது//
ஏழரை சனி இருக்கும் போது பாடாய் படுத்தி விட்டு போகும் போது நல்லதை செய்யும் அப்புடின்னு எங்க வீட்டுல சொல்லுவாங்க. சோ கவலைபடாதீங்க . வயசு ஆக ஆக பக்குவம் கோவம் எல்லாம் கொறைஞ்சு கிட்டே வரும் நீங்க இப்போதானே கொழந்தே :))
//ஓ.. படத்தோடு போடப்போறீங்களாக்கும்:)) எதுக்கும் முன்னறிவித்தல் கொடுத்துப் போடுங்க:))//
பூஸ் ஒய் திஸ் கொல வெறி ? சிவாவுக்கு அப்புடி ஒரு எண்ணமே இல்லாம இருந்திருக்கலாம் இப்போ இப்புடி தூண்டி விட்டு அவரு சட்டைய கழட்டினா சல்மான் கான் அப்புடின்னு அடுத்த பதிவு போட போறாரு :))
//இங்கே வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சோ சிவா ? அந்த தாக்கம் தான். டிரைவருக்கு இல்லே வேலை செய்யும் அம்மாவுக்கு எல்லாம் தாங்க்ஸ் சொன்னால் உறவினர்கள் ஏதோ வேற்று கிரகத்தில் இருந்து வந்திருப்பது போல் பார்க்குறாங்க. இங்கே இருந்து வந்து பிலிம் காமிக்கிறோம் அப்புடின்னு நெனைக்குறாங்க ஹும்//
ஹா..ஹா..ஹா.. அதே அதே... சும்மா இல்ல கொல வெறியோட பார்ப்பாங்க... கண்டறியாத வெளிநாட்டைக் கண்டிட்டினம் என:))..
ஆனா இந்த நாட்டில தங்கூஉ சொல்லாட்டில், இங்கயும் கொலவெறியோட பார்க்கிறாங்கப்பா... ஏதோ.. காட்டில இருந்து வந்த சனம்போல இருக்கே... என அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
எங்கினபோய்த் தப்புறது சாமீஈஈஈஈ... ஃபோர் எ சேஞ்:)) மகியை சே..செ.. வாணாம்.. சிவாவைக் கூப்பிடுங்க... சிவாவைக்கூப்பிடுங்க:))
எனக்கும் அதே தான் தோணுச்சு... எல்லாரும் பிஸியா இருக்காங்க... பழைய படி எதிர்பார்ப்பு இருந்தா ஏமாற்றம் தான் மிஞ்சும்னு புரிஞ்சது... வெல்கம் பேக்... ப்ளாக் பிரெண்ட்ஸ் காணோம்னு தேடுறாங்ல்ல அதுக்கு சந்தோசபட்டுக்க வேண்டியது தாங்க...;)
ஹெல்மெட் போட சொன்னா யாரும் கேக்கறதில்ல... என்ன செய்ய? :(
அம்மா கை பக்குவம் எங்கயும் கிடைக்காது ரெம்ப கரெக்ட்... அதுவும் இட்லி சொர்க்கம் தான்...;)
பயணம் தொடரட்டும்..:)எல்லாஞ் சரி, பில்லா கேஸ் கீஸ் போட்டுற போறார் பாத்துக்குங்க...:)
Mahi said...
:) nice narration of the trip Siva! That last photo is really cute!
February 1, 2012 3:32 பம்
//
வாங்க மகிமா
நன்றி
athira said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பில்லாவா? முடியல்ல சாமீஈஈஈஈஈஈ எமனைக் கூப்பிடுங்கோ.. எமனைக் கூப்பிடுங்கோஓஓஓஓ:)))
February 1, 2012 4:17 பம்//
வாங்க பேபி அதிரா
ஓகே ஓகே யாரு வந்தாலும் am பிஸி :)
athira said...
உண்மைதான் சிவாவின் ஏக்கம் புரிகிறது, நாம் விட்டுவிட்டு வந்தபோது, அல்லது குழந்தையில் விளையாடித்திரிந்த போது இருந்தது போல, நம் ஊரும் மக்களும் இப்போ இல்லை, ஆனால் எம் மனதில் இருப்பது பிரியும்போதிருந்த அதே நிலைமைதான் இப்பவும் இருக்குமென்றும் எதிர்பார்ப்போடு போவோம், ஆனால் அங்கு அனைத்துமே மாறியிருக்கும்.
எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும், இனிமேல் எதையும் எதிர்பாராமல் போய்வரப்பழகோணும்.
February 1, 2012 4:24 பம்//
எல்லாம் ஒரு அனுபவம் தானே அடுத்த முறை முயற்சிக்கிறேன்
நானும் ஒரு சாதாரண மனிதன் தானே அதனால் இந்த எதிர்ப்பார்ப்புகள் எனக்கு இல்லை எண்டாலும்
இருப்பவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடிய வில்ல என்ற வருத்தமும் கூட வருகிறது
athira said...
//தொலைவில்
கண்டுகொண்டு
அருகில் இருந்தும்
வாகனத்தில்
தலையாட்டிவிட்டு
மட்டும் செல்லும்
நட்புகளும் //
உண்மை நட்பை புரிந்துகொள்ள கடவுள் ஏற்படுத்திக்கொடுத்த ஒரு சந்தர்ப்பம் என எண்ணிட வேண்டியதுதான்.
February 1, 2012 4:29 பம்//
எதுவும் கடந்து போகும் என்று எண்ணிக்கொண்டேன்
வருத்தப்பட்ட ஒரு ஒரு நிமிடத்திலும்
athira said...
//குறைந்த நாள் என்றாலும் இருந்த நாட்களில் வீட்டில் அதிகம் இருந்தேன்.பஞ்சு பஞ்சாய் இட்லி.வகை வகையாய் சட்டினி ,பொடி, சாம்பார் ,என்று எதையும் விட மனம் இல்லை..அம்மா கையால் எல்லாம் சாப்பிட்டு உறக்கம்.அம்மாவுக்கு காய்கறிகள் நறுக்க உதவி என்று நாட்கள் வெகு விரைவாய் சென்றது.//
இதுதான் தேவை, விடுமுறை எனப் போனால் வீட்டில் இருந்தால்தான் அது விடுமுறைபோல மனதில் இனிக்கும், பறந்து திரிந்தால், எப்படிக் க்ழிந்தது, என்ன செய்தேன் என்றே தெரியாமல் போய்விடும்.
என் கணவர் சொல்வார், லீவு எடுத்தால் வீட்டில் நின்று சமைத்துச் சாப்பிட்டால்தான் அது லீவுபோல இருக்கும், இல்லையெனில், அதுவும் வேர்க்க்குப் போன பீலிங்ஸ்தான் வரும் என... அது உண்மையே.
February 1, 2012 4:31 பம்//
மாம்ஸ் சொல்லி இருப்பது உண்மைதான்.,அதனால் ஒரு திருப்தி இருந்தது ...
athira said...
//பிறகு சென்று வந்த ஒரே இடம் திருச்செந்தூர் முருகன் கோவில்.
முதன் முறை சென்று இருக்கிறேன்.ஒரு அனுபவம் மேல்சட்டை எல்லாம் இல்லாமல் போக வேண்டும்..அது பற்றி அடுத்த பதிவில் (நாம அடுத்த போஸ்ட் போடணும்ல)//
ஓ.. படத்தோடு போடப்போறீங்களாக்கும்:)) எதுக்கும் முன்னறிவித்தல் கொடுத்துப் போடுங்க:))
February 1, 2012 4:32 பம்//
ஆமாம் முருகன் படத்துடன் :) முன் அறிவிப்பா?????
:)
athira said...
கடேசில இருப்பது பொன்னியின் குழந்தைப் படமா? சொல்லிட்டுப் போட்டிருக்கலாமில்ல:)))))).
February 1, 2012 4:34 பம்//
அவ்வ கிரர்ர்ர்ர்
பொன்னியை பார்க்க வில்லை
அந்த பகுதியாக கடந்து போகும்போது சிறு நியாபகம் :)
அந்த படம் சிவா அது போன வருடம் எடுத்தது :)
இந்திரா said...
//(BILLA=SIVA)//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
February 1, 2012 5:31 பம்/
வாங்க மொக்கை அரசி
அரசியல எதேலம் சகஜமப்ப..NANDRI
En Samaiyal said...
பில்லா இஸ் பாக் ?? பாவம் ஊருல இருந்து ஒரே பீலிங்கா வந்து இருக்கீங்க சோ போனா போவுது பொழைச்சு போங்க :))
நாங்க போன வருஷம் போயிட்டு வந்த போதும் இதே மாதிரி பீலிங்க்ஸ் தான்.
பூஸ் சொன்னது போல எதிர்பார்ப்பு இல்லாம தான் போயிட்டு வரணும் .
//உயிர் இல்லா அச்சிட்ட காகித பேப்பருக்கு இருக்கும் மதிப்பு
உயிர் உள்ள மனிதருக்கு இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது//
ரொம்ப ரொம்ப நிஜம்
///
வாங்க வாங்க கிரிஜா அக்கா
ம் பீலிங்க்ஸ் நோ நோ அம வெரி ஹாப்பி நொவ்
பூசார் சொன்னது உண்மைதான் கடைபிடிக்க வேணும்
நன்றி
En Samaiyal said...
//தவறு செய்ய யாரும் கொஞ்சம் கூட யோசிக்க வில்லை பார்த்த வரையில் //
இங்கே வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சோ சிவா ? அந்த தாக்கம் தான். டிரைவருக்கு இல்லே வேலை செய்யும் அம்மாவுக்கு எல்லாம் தாங்க்ஸ் சொன்னால் உறவினர்கள் ஏதோ வேற்று கிரகத்தில் இருந்து வந்திருப்பது போல் பார்க்குறாங்க. இங்கே இருந்து வந்து பிலிம் காமிக்கிறோம் அப்புடின்னு நெனைக்குறாங்க ஹும்
February 2, 2012 12:34 அம//
ஹஹா கொஞ்ச நாள் தான் ஆகிறது ஆறு வருடம் என்று நினைக்கிறேன்...
தேங்க்ஸ் சொன்னாலும் அவர்கள் கூச்சப்படலும் பெரும்பாலும் நான் நன்றி என்றே சொல்ல்வது.அப்படி சொன்னாலும் ஒரு மாதிரியாகதான் பார்க்கின்றனர்
அவ்வவ் நன்றி சொல்வதில் என்ன இருக்கு ..:)
பிலிம் காமிக்கிறோம் அப்புடின்னு நெனைக்குறாங்க ஹும்//ஹஹா பாவம் தான் நீங்க ரொம்ப பட்டு இருப்பீங்க போல :)
மீண்டும் நன்றி
En Samaiyal said...
//ஏழரை சனி எனக்கு முன்னால் நின்று நிதானத்தை இழக்க வைக்கிறது//
ஏழரை சனி இருக்கும் போது பாடாய் படுத்தி விட்டு போகும் போது நல்லதை செய்யும் அப்புடின்னு எங்க வீட்டுல சொல்லுவாங்க. சோ கவலைபடாதீங்க . வயசு ஆக ஆக பக்குவம் கோவம் எல்லாம் கொறைஞ்சு கிட்டே வரும் நீங்க இப்போதானே கொழந்தே :))
February 2, 2012 12:38 அம//
நன்றி சனி பார்த்து பயப்பிட வில்லை.நடப்பது நடக்கட்டும் .நல்லது பண்ணதயும் கிடுதல் பண்ணாம இருந்தா ரொம்ப சந்தோசம்.
:)
En Samaiyal said...
//ஓ.. படத்தோடு போடப்போறீங்களாக்கும்:)) எதுக்கும் முன்னறிவித்தல் கொடுத்துப் போடுங்க:))//
பூஸ் ஒய் திஸ் கொல வெறி ? சிவாவுக்கு அப்புடி ஒரு எண்ணமே இல்லாம இருந்திருக்கலாம் இப்போ இப்புடி தூண்டி விட்டு அவரு சட்டைய கழட்டினா சல்மான் கான் அப்புடின்னு அடுத்த பதிவு போட போறாரு :))
February 2, 2012 12:41 அம//
ஆமாம் கிரிஜாக்க நல்லா கேளுங்க பேபி அதிராவா .
நோ நோ எனக்கு அப்படி பதிவு போடறது போல ஐடியா எல்லாம் இல்லை:)
நன்றி
athira said...
//இங்கே வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சோ சிவா ? அந்த தாக்கம் தான். டிரைவருக்கு இல்லே வேலை செய்யும் அம்மாவுக்கு எல்லாம் தாங்க்ஸ் சொன்னால் உறவினர்கள் ஏதோ வேற்று கிரகத்தில் இருந்து வந்திருப்பது போல் பார்க்குறாங்க. இங்கே இருந்து வந்து பிலிம் காமிக்கிறோம் அப்புடின்னு நெனைக்குறாங்க ஹும்//
ஹா..ஹா..ஹா.. அதே அதே... சும்மா இல்ல கொல வெறியோட பார்ப்பாங்க... கண்டறியாத வெளிநாட்டைக் கண்டிட்டினம் என:))..
ஆனா இந்த நாட்டில தங்கூஉ சொல்லாட்டில், இங்கயும் கொலவெறியோட பார்க்கிறாங்கப்பா... ஏதோ.. காட்டில இருந்து வந்த சனம்போல இருக்கே... என அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
எங்கினபோய்த் தப்புறது சாமீஈஈஈஈ... ஃபோர் எ சேஞ்:)) மகியை சே..செ.. வாணாம்.. சிவாவைக் கூப்பிடுங்க... சிவாவைக்கூப்பிடுங்க:))
February 2, 2012 1:08 அம//
வந்துடேன் வந்துட்டேன் .ஏன் கூப்பிட்டீங்க பேபி அதிரா
ரெண்டு அண்ணாக்களும் நலம் தானே.முன்பே விசாரித்து இருக்கணும்..
..உண்மைதான் தங்க யு நிச்சயம் சொல்லி ஆகணும் .காச பணமா அள்ளிவிடுவோம் நன்றிகளை.
நன்றி பேபி அதிரா
அப்பாவி தங்கமணி said...
எனக்கும் அதே தான் தோணுச்சு... எல்லாரும் பிஸியா இருக்காங்க... பழைய படி எதிர்பார்ப்பு இருந்தா ஏமாற்றம் தான் மிஞ்சும்னு புரிஞ்சது... வெல்கம் பேக்... ப்ளாக் பிரெண்ட்ஸ் காணோம்னு தேடுறாங்ல்ல அதுக்கு சந்தோசபட்டுக்க வேண்டியது தாங்க...;)
ஹெல்மெட் போட சொன்னா யாரும் கேக்கறதில்ல... என்ன செய்ய? :(
அம்மா கை பக்குவம் எங்கயும் கிடைக்காது ரெம்ப கரெக்ட்... அதுவும் இட்லி சொர்க்கம் தான்...;)
பயணம் தொடரட்டும்..:)எல்லாஞ் சரி, பில்லா கேஸ் கீஸ் போட்டுற போறார் பாத்துக்குங்க...:)
February 2, 2012 1:40 எ//
வாங்க வாங்க அப்பாவி
இட்லி மாமி.
ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது,நிறைய இழந்து விட்டு எங்கு பொய் என்ன செய்ய போய்கிறோம் என்று..
நிச்சயமா தற்போது மிக்க சந்தோசம் ப்ளாக் நண்பர்கள் மட்டும்தான் :௦ அம வெரி ஹாப்பி நொவ் ..நொவ்
தற்போது உள்ள சூழ்நிலையில் ஹெல்மெட் அவசியம்.கேட்காதவர்கள் பற்றி VARUTHAPADAVENDIATHU இல்லை
நிச்சயம் இட்லி இட்லிதான் :)
எனது வக்கீல் பேபி அதிரா அவர்கள் பாத்துக்கொள்வர்கள்...கேஷ் எல்லாம்
ம
நன்றி அப்பாவி
பார்த்த வரையில் பழகிய வரையில் நியமாய் இருப்பதை யாரும் மதிப்பதே இல்லை.அவரவர் வேலை முடிந்தால் சரி .
வருத்தமான உண்மை!
அழகான அருமையான பயணப் பதிவுக்கு வாழ்த்துகள்..
//எனது வக்கீல் பேபி அதிரா அவர்கள் பாத்துக்கொள்வர்கள்...கேஷ் எல்லாம்//
அதெல்லாம் பிரித்தானிய நீதிமன்றத்தில, மேன்மைதங்கிய:) நீதிபதி தலைமையில(அது நாந்தேன்:)) நடத்தி சமாளிச்சிடலாம், பணம்தான் பவுண்ட்ஸில வாணும்:)))).
THE BILLA IS BACK....
(BILLA=SIVA) JUST summa
mudiyala....:)
//எங்க பார்த்தாலும் ஒரே பீலிங்க்ஸ் ஒப் இந்தியா..என்னமோ வேற கிரகத்துக்கு போவது போல ஒரு உணர்வு...//
well said..
//சென்று வந்த விடுமுறை அனைத்தும் நிறைந்த அழகான பயணம்
நிறைய (ஏ)மாற்றங்கள் சுற்றத்திலும், எல்லாம் நன்மைக்கே என்று அடுத்த படி நோக்கி நகர்கிறேன்.//
ALL IS WELL...
//எப்பொதும் தனியாக இல்லை அப்பாவுடன் மட்டும் ஏர்போர்ட் வருவேன் இந்த முறை
அம்மா அப்பா தம்பி அனைவரும் கூட வந்து வழி அனுப்பி (தள்ளி) விட்டனர்...///
HAHAHAHAHAHAAAA....:)
KEEP ROCKING...SIVA.
விரும்பினால் இதையும் கவனத்தில் கொள்ளுங்கோ..
http://www.thamilnattu.com/2012/02/blog-post_05.html
டிரெய்னை எடுத்து டிராக்குல வைக்கிற வரைதான் பிராப்ளம் , வைத்ததும் அதை பிடிக்க முடியாது ....ஊஊஊஊ....
இதுவும் கடந்து போகும் :-)
சிவா பில்லாவா எப்போ மாறினார்..??? ((பில்லா--- கடுவன் பூனை ))
பில்லா வந்தாச்சு!! ஆனா வரல.
திரும்ப தூங்கப் போய்ட்டாங்க.
பகிர்வு பற்றி - சில பயணங்களின் பின் எனக்கும் இப்படியான உணர்வு ஏற்பட்டிருக்கிறது சிவா. என்ன செய்வது? இதுவும் கடந்து போகும், காலம் எல்லாவற்றையும் சரிப்படுத்தும் என்று தொடர்ந்து போக வேண்டியதுதான்.
சிவாவின் எழுத்துக்கு ஒரு தனி 'டச்' இருக்கு. எதை எழுதினாலும் மெலிதாக ஒரு நகைச்சுவை நடுவே பின்னி இருக்கும். மாதமொரு இடுகை என்று இல்லாமல் அடிக்கடி தொடர்ந்து எழுதுங்க.
//ஜெய்லானி said...
சிவா பில்லாவா எப்போ மாறினார்..??? ((பில்லா--- கடுவன் பூனை )//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் உண்மையாகவோ? இது என்ன புதுக்கதை?:)))
சிவா...சிவா....சிவாஆஆஆஆஆ.. ஆ ஊ ஓல்ரைட்?..
வாங்க வாங்க ஜெய் அண்ணா
கடுவன் பூனை என்றால் என்ன?
:(
ஜெய்லானி said...
டிரெய்னை எடுத்து டிராக்குல வைக்கிற வரைதான் பிராப்ளம் , வைத்ததும் அதை பிடிக்க முடியாது ....ஊஊஊஊ....
இதுவும் கடந்து போகும் :-)
February 13, 2012 9:38 AM
//
இதை நான் எங்கோ படித்து இருக்கிறேன் :)
நன்றி
punitha said...
பில்லா வந்தாச்சு!! ஆனா வரல.
திரும்ப தூங்கப் போய்ட்டாங்க.
February 19, 2012 5:58 அம//
நான் தூங்கி ரொம்ப நாள் ஆகிட்டு
aamma நீங்க யாரு ????
punitha said...
பகிர்வு பற்றி - சில பயணங்களின் பின் எனக்கும் இப்படியான உணர்வு ஏற்பட்டிருக்கிறது சிவா. என்ன செய்வது? இதுவும் கடந்து போகும், காலம் எல்லாவற்றையும் சரிப்படுத்தும் என்று தொடர்ந்து போக வேண்டியதுதான்.
சிவாவின் எழுத்துக்கு ஒரு தனி 'டச்' இருக்கு. எதை எழுதினாலும் மெலிதாக ஒரு நகைச்சுவை நடுவே பின்னி இருக்கும். மாதமொரு இடுகை என்று இல்லாமல் அடிக்கடி தொடர்ந்து எழுதுங்க.
February 19, 2012 6:03 அம//
ஹஹ்ஹா ஹ செம காமெடி ..what to say..
பார நம்மை நம்பி கூட வாறாங்க.....
நன்றி
athira said...
//ஜெய்லானி said...
சிவா பில்லாவா எப்போ மாறினார்..??? ((பில்லா--- கடுவன் பூனை )//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் உண்மையாகவோ? இது என்ன புதுக்கதை?:)))
February 23, 2012 9:22 பம்//
என்ன கதை ???எனக்கும் சொல்லுங்க பேபி அதிரா
மிக்க நலம் நீங்களும் நலம் தானே
ரெண்டு அண்ணாக்களும் நலம் அறிய அவா..
நன்றி BABY ATHIRAA..
SOON I WILL BE...
பில்லா எங்கே இன்னும்ம் காணோம் ?????
Well written, Siva. Where is the next part?
//நான் தூங்கி ரொம்ப நாள் ஆகிட்டு// ஆஃபீஸ் லீவு விட்டுட்டாங்களா?
//aamma நீங்க யாரு ????// இதென்ன கேள்வி? ஒருத்தர் வந்தாங்கன்னா "வாங்க, உட்காருங்க, காப்பி சாபிடுறீங்களா?ன்னு உபசரிக்காம. உங்க கேள்விலயே பதில் இருக்கு சார், 'திருப்பிப்' படிச்சுப் பாருங்க.
//செம காமெடி// எதுக்கு உங்களை இப்பிடி குறைச்சு மதிப்புப் போடணும் சிவா? நல்லாத்தான் எழுதுறீங்க.
இந்த மனப்போக்கு வேணாம். எங்க தப்புங்கறது உங்களுக்கே தெரியும்ல. திருத்திக்கப் பாருங்க. இன்னும் நல்லா எழுத வரும். வாழ்த்துக்கள்.
vanathy said...
Well written, Siva. Where is the next part?
February 26, 2012 10:25 AM//
Thank you Vanathikka.
வானதிக்காவுக்கு மட்டும் போட்டு இருக்கீங்க, எனக்கு எங்க பதில் காணோம்?
Post a Comment