Monday, August 29, 2011
மழையே நீ நல்லா இருப்பியா...
மழை ரொம்ப நல்ல விசயம், ஆனால் ஒரு சிலருக்கு.
"ம்! இந்த பாழாப் போன மழை இருக்கே, நேரம் கேட்ட நேரத்தில வந்து இம்சையா கொடுக்குது," என்ற வசவுகளை கேட்டுக் கொண்டு இருந்த நேரத்தில் பெரு மழை வந்தது. தொப்பலாய் நனையும் முன்பு வீடு போய் சேர வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வண்டியை வேகமாய் செலுத்திக் கொண்டு இருந்தேன்.
அந்த நேரம் வேகமாய் காற்றும் அடித்தது. வண்டியில் வேகமாய்ப் போய் விடலாம்; இருந்தாலும் எதற்கு இவ்ளோ அவசரம் என்று அருகில் இருந்த மரத்தடியில் எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் இருந்த நிழல்குடை கட்டிடத்தில் மழைக்கு நடுங்கிக் கொண்டு என்னைப் போல அங்கே காத்திருக்கும் கூட்டத்துள் நுழைந்தேன்.
தெரிந்த முகமாய் யாரவது இருக்கிறார்களா என்று கண்கள் தேடும்போது இரு காந்தவிழிகள்... என்னைப் பார்த்தும் பாராமலும் நிற்கும் ஒரு காந்த விழியாளைக் கண்டு கொண்டேன்.
கொஞ்சம் சந்தேகம்தான் காந்தக்கண்கள் பார்ப்பது நம்மையா இல்லை வேறு என் அருகில் இருக்கும் யாரையாவதா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். நல்ல வேளை யாரும் இல்லை. ஏன் என்றால் அங்கு இருந்தவர்கள் எல்லாம் அறுபதை தாண்டிய முன்னாள் இளம் வாலிபர்கள். அவ்வாறு திரும்பி பார்க்கும் போது காந்தவிழி புன்னகைக்கவும் தவறவில்லை. இந்த இடத்தில் வைரமுத்து நின்று இருந்தால் ஒரு 'கள்ளிக்காட்டு இதிகாசம்' போல 'உன் புன்னகை காட்டும் இதிகாசம்' என்று கவிதை நூல் வெளியிட்டு இருக்கலாம்.
அந்த மழையிலும் மக்கள் அனைவரும் ஒவ்வொரு கதை பேசிக்கொண்டு இருந்தனர். அதில் ஒரு அக்கா, "என் தங்கச்சி ஊரில இருந்து போனவாரம் போன் போட்டு, அக்கா வத்தல் போட்டு வைக்கா. பசங்கலாம் வத்தல் கேக்கராங்க என்று கேட்டு இருந்தா. இன்னைக்கு வத்தல் போடலாம்னு இருந்தேன். இந்த சனியன் மழை வந்து ஒண்ணும் பண்ண விடாம பண்ணிட்டு," என்று பக்கத்தில் இருக்கும் பாட்டியிடம் அங்கலாய்த்துக் கொண்டு இருந்தது. அதற்கு அந்த பாட்டி சொன்ன பதில் கேட்டு நாங்கள் சிரித்துக் கொண்டோம்.
அந்த காந்த விழி அருகில் இருக்கும் கல்லூரியில் படித்துக் கொண்டு இருப்பது போல கையில் இரண்டு நோட்டுகளும் வைத்து இருந்தது. ஏதோ ஒரு தைரியம் பேச வேண்டும் என்று தோன்றியது.
"மழை எப்போது விடும் என்று தெரியல," என்று பொதுவாக பேச ஆரம்பித்தோம்.
சினிமா போல கனவா இல்லை நனவான்னு தெரியல. இருந்தாலும் உள்ளுக்குள் மனது மழை விடக்கூடாது என்று வேண்டிக் கொண்டு இருந்தது அந்த வத்தல் போட நினைக்கும் அக்காவுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.
உள்ளுக்குள் இந்த காந்தவிழியுடன் கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஊரில பேச முடியாது, ஏன் என்றால் எங்காவது நின்றால் கூட "உங்க பையன் அங்க எதுக்கு நிக்கரப்பல?" என்று தகவல் அப்பாவுக்குப் போய்விடும். கொஞ்சம் பயம் அதனால் எங்கும் நிக்கவும் மாட்டேன் காரணம் இன்றி எவரிடமும் பேசுவதும் கிடையாது. தெரிந்த முகம் என்றால் ஒரு புன்னகை அவ்வளவே. ரொம்ப அமைதியான பையன்னு ஊருக்குள்ள நமக்கு ஒரு பேரு. (நீங்க நம்ப மாட்டீங்களே.)
அந்த காந்தவிழி கல்லூரியில் படிப்பதாகவும், புதிதாய் அந்த ஊருக்கு குடி வந்து இருக்கும் போஸ்ட் மாஸ்டர் மகள் என்றும் அறிமுகப் படலம் ஆயிற்று. என்னைப்பற்றி கொஞ்சம் சுருக்கமாய் கூறிக்கொண்டேன். ஒரு விசயம் சொல்ல மறந்து விட்டேன் மழை விடுவதற்குள் நாங்கள் பேசும்போது எல்லாம் பக்கத்தில் இருந்த தாத்தா நூறுமுறை மணி கேட்டு தொல்லை பண்ணிவிட்டார். எனது கடிகாரத்தை அவரிடமே கொடுத்து விடலாம் என்று நினைத்தேன். அவருக்கு மணி பார்க்கத் தெரியுமா என்பது வேறு விசயம்.
மெல்ல மழை பெய்துகொண்டு இருந்தது. முன்பு மழை பிடித்தும் உணராமல் இருந்து இருக்கிறேன். இந்த மழை அழகாய்த் தெரிந்தது கொஞ்ச நேரம் மட்டுமே.
காந்தவிழியுடன் பொதுவான விசயங்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே மழை நிற்கும் போல சத்தம் குறைந்து ஒருவர் ஒருவராய் நகர ஆரம்பித்தனர். கடைசி வரை நின்று கொண்டு இருந்தது நாங்கள் மட்டும் இல்லை; மணி கேட்டு தொல்லை பண்ணின அந்த பல்லு போன தாத்தாவும்தான். பிறகு ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு அவரவர் வீடு நோக்கி நகர ஆரம்பித்தோம்.
மழை நின்று விட்டது அவளின் காந்த விழிகள் என்னைவிட்டு போகவே இல்லை..... நாங்கள் நிஜமாவே பல்லுபோன தாத்தாவை திட்டவில்லை.
நீ வெறும் தூறலை
விட்டுச் சென்றால்
கவலை இல்லை.
அவளின் நினைவுகளை
அல்லவா
தூறிவிட்டு
சென்று விடுகிறாய்.
மழையே நீ நல்லா இருப்பியா...
அந்த மழை வராமல் போய் இருக்கலாம் என்று திட்டிக் கொண்டிருந்தோம்.
டிஸ்கி :
இந்த சின்ன முயற்சிக்கு பதிவில் உள்ள தவறுகளை திருத்தி மாற்றம் பண்ணிகொடுத்த இமா டீச்சர் அவர்களுக்கு மிக்க நன்றியும் அன்பும்..
Subscribe to:
Post Comments (Atom)
சில வருடங்களுக்கு முன்....
என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...
-
எல்லாரும் வாங்க வாங்க சாக்லேட் எடுத்துக்கோங்க அட நிறைய எடுத்துக்கோங்க ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா இன்று தேதியில் ...வருடங்களுக்கு முன்ப...
-
குட்டிவாசகம்: பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது இர...
-
பகிர படாத உணர்வுகளை எல்லாம் என் மௌனங்களின் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.. எப்பொதும் மௌனமாய் இருக்கும் நீ என்றாவது ஒரு நாள் புரிந்துகொள...
62 comments:
ம்.. ;) தாங்ஸ் சிவா. கார்ட் அழகா இருக்கு.
? மழைல நனைஞ்சு ஜூரமா? ஹும்! சிவா டாக்டருக்கே டாக்டர் வேண்டி இருக்கு. பார்த்து பத்திரமா இருங்க. ;)
நான் பெருசா ஒண்ணும் பண்ணல மக்கள்ஸ். பார்த்தாலே தெரியுதுல்ல. ;))
நல்ல முயற்சி சிவா. வாழ்த்துகள். :-)
//எல்லாம் அறுபதை தாண்டிய முன்னாள் இளம் வாலிபர்கள். //
இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குணா :))
கவிதையும் நல்லா இருக்கும்.
அந்த கிழவர் பத்தி சொன்னது இயல்பா இருக்கு :))
ஹையோ... பதிவு வந்து ஒரு நாளா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), எனக்குத் தெரியேல்லையே.. இப்பத்தானே மேல வந்திருக்கு... ரீச்சருக்கு மட்டும் இப்போ ஒயுங்கா தெரிஞ்சிட்டுதே அவ்வ்வ்வ்வ்:) நில்லுங்க படிச்சிட்டு வாறன்.
//ரொம்ப அமைதியான பையன்னு ஊருக்குள்ள நமக்கு ஒரு பேரு. (நீங்க நம்ப மாட்டீங்களே.) //
ம்ஹூம்... துப்பாக்கி முனையில் கேட்டாலும் நம்ப மாட்டமே:)).
மழைக் கதை நிஜக் கதைபோலவே இருக்கே.... அப்பாவின் ஃபோன் நெம்பரைக் கொஞ்சம் அனுப்பி வைக்க முடியுமோ எனக்கு:))).
//நீ வெறும் தூறலை
விட்டுச் சென்றால்
கவலை இல்லை.
அவளின் நினைவுகளை
அல்லவா
தூறிவிட்டு
சென்று விடுகிறாய். //
உண்மையிலயே சிவா எழுதிய கவிதையா.... கலக்கல் ஹைக்கூ... ரொம்ப ரசிக்கிறேன்.
மழையைத் திட்டதீங்க, மழை வந்ததால... உங்களுக்கும் காதல் என்றால் எப்பூடி இருக்கும் என்னென்ன மாறுதல்கள் ஏற்படும் என தெரிந்திருக்குமே... களவையும் கற்று மற என மழை கற்றுத்தந்திருக்கு... ஓக்கேயா? மாத்தி யோசிக்கோணும் சிவா.
இமா ரீச்சர் இப்போ “எடிட்டர்” ஆகிட்டாவா அவ்வ்வ்வ்வ்வ்வ்:)), வாழ்த்துக்கள்... கவனம் ள, ழ:))).
;) //அப்பாவின் ஃபோன் நெம்பரைக் கொஞ்சம் அனுப்பி வைக்க முடியுமோ// நானே தாறன்.. 546987535476598 ;)
//இமா ரீச்சர் இப்போ “எடிட்டர்” ஆகிட்டாவா// இல்ல... ;) வாசிக்கேக்க வி'ள'ங்காமல் இருந்தால் இதுவோ! இதுவோ என்று எ'ழு'திக் கேட்கிறது. இம்முறை சிவாக்குட்டி டிஸ்கி போட வேணும் எண்டு பப்'ளி'க் ஆக்கிப்போட்டார்.
ம்.. ;) தாங்ஸ் சிவா. கார்ட் அழகா இருக்கு. //
நன்றி வருகைக்கும்
RVS said...
நல்ல முயற்சி சிவா. வாழ்த்துகள். :-)
August 30, 2011 4:53 பம்//
நன்றி அண்ணா
RVS said...
நல்ல முயற்சி சிவா. வாழ்த்துகள். :-)
August 30, 2011 4:53 பம்//
நன்றி அண்ணா
நல்லாயிருந்தது...கலக்குங்கள் நண்பரே...
Hurricane Irene தந்த புயல் மழை பாதிப்பை பற்றி இருக்குமோ என்று வாசிக்க ஆரம்பித்தேன்.
athira said...
ஹையோ... பதிவு வந்து ஒரு நாளா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), எனக்குத் தெரியேல்லையே.. இப்பத்தானே மேல வந்திருக்கு... ரீச்சருக்கு மட்டும் இப்போ ஒயுங்கா தெரிஞ்சிட்டுதே அவ்வ்வ்வ்வ்:) நில்லுங்க படிச்சிட்டு வாறன்.
August 30, 2011 5:10 PM
//
ம்ம் நீங்க தான் தூங்கிடீன்கள் அதான் உங்களை எழுப்ப வில்லை :)
கோமாளி செல்வா said...
//எல்லாம் அறுபதை தாண்டிய முன்னாள் இளம் வாலிபர்கள். //
இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குணா :))
கவிதையும் நல்லா இருக்கும்.
அந்த கிழவர் பத்தி சொன்னது இயல்பா இருக்கு :))
August 30, 2011 4:57 பம்//
வாங்க கோமாளி செல்வா அவர்களே
நன்றி தங்கள் கருத்துக்கு
athira said...
//ரொம்ப அமைதியான பையன்னு ஊருக்குள்ள நமக்கு ஒரு பேரு. (நீங்க நம்ப மாட்டீங்களே.) //
ம்ஹூம்... துப்பாக்கி முனையில் கேட்டாலும் நம்ப மாட்டமே:)).
August 30, 2011 5:13 பம்/
நீங்க நம்ப வேணாம் ஏன் எண்டால் அது நான் இல்லை :)
athira said...
மழைக் கதை நிஜக் கதைபோலவே இருக்கே.... அப்பாவின் ஃபோன் நெம்பரைக் கொஞ்சம் அனுப்பி வைக்க முடியுமோ எனக்கு:))).
//நீ வெறும் தூறலை
விட்டுச் சென்றால்
கவலை இல்லை.
அவளின் நினைவுகளை
அல்லவா
தூறிவிட்டு
சென்று விடுகிறாய். //
உண்மையிலயே சிவா எழுதிய கவிதையா.... கலக்கல் ஹைக்கூ... ரொம்ப ரசிக்கிறேன்.
August 30, 2011 5:15 பம்/
நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
எது நிஜம் அல்ல கதை
ஒரு மழை பெய்த தருணத்தில் தோன்றிய கதை பத்து நிமிடத்தில் தப்பும் தவறுமாய் எழுதிய கதை
திருத்தி கொடுத்தாங்கோ...
கவிதை எல்லாம் இல்லை
நீங்க கிண்டல் பண்ணகூடாது
athira said...
மழையைத் திட்டதீங்க, மழை வந்ததால... உங்களுக்கும் காதல் என்றால் எப்பூடி இருக்கும் என்னென்ன மாறுதல்கள் ஏற்படும் என தெரிந்திருக்குமே... களவையும் கற்று மற என மழை கற்றுத்தந்திருக்கு... ஓக்கேயா? மாத்தி யோசிக்கோணும் சிவா.
இமா ரீச்சர் இப்போ “எடிட்டர்” ஆகிட்டாவா அவ்வ்வ்வ்வ்வ்வ்:)), வாழ்த்துக்கள்... கவனம் ள, ழ:))).
//
அட இதுகூட நல்லாத்தான் இருக்கு
எந்த கதியில் வரும் நீதி - களவையும் கற்று மற என மழை கற்றுத்தந்திருக்கு...
ரொம்ப நாளா அவங்கதான் எடிட்டர்....:)
நன்றி பேபி அதிரா
வருகைக்கும் வரிசையான கருத்துக்கும்
ரெவெரி said...
நல்லாயிருந்தது...கலக்குங்கள் நண்பரே...
August 30, 2011 9:43 பம்/
நன்றி நண்பரே
Chitra said...
Hurricane Irene தந்த புயல் மழை பாதிப்பை பற்றி இருக்குமோ என்று வாசிக்க ஆரம்பித்தேன்.
August 30, 2011 9:49 பம்/
வாங்க புனைகை புயல் சித்ரா அக்கா
ம் அந்த மழை தந்த பதிப்பு இல்லை இது நேற்று பெய்த மழையில் எழுதிய ...
நன்றி வருகைக்கு
//இமா said...
;) //அப்பாவின் ஃபோன் நெம்பரைக் கொஞ்சம் அனுப்பி வைக்க முடியுமோ// நானே தாறன்.. 546987535476598 ;)//
karrrrrrrrrrrrrrrrrrrrrr இந்த நெம்பருக்கு அடிக்கிறேன்ன்ன்ன் அடிக்கிறேன்ன்ன் அவர் எடுக்கிறாரே இல்லை:))).. ஃபோன் ரிங்கூஊஊ பண்ணிக் கேட்டால், உடனே எடுத்துக் ஹலோ சொல்லச் சொல்லுங்க சிவா:)))).... கடவுளே என்னாகப்போகுதோ:)))..
FOOD said...
மிக இயல்பான பதிவு.
August 31, 2011 7:43 பம்/
நன்றி அண்ணா வருகைக்கு
athira said...
//இமா said...
;) //அப்பாவின் ஃபோன் நெம்பரைக் கொஞ்சம் அனுப்பி வைக்க முடியுமோ// நானே தாறன்.. 546987535476598 ;)//
karrrrrrrrrrrrrrrrrrrrrr இந்த நெம்பருக்கு அடிக்கிறேன்ன்ன்ன் அடிக்கிறேன்ன்ன் அவர் எடுக்கிறாரே இல்லை:))).. ஃபோன் ரிங்கூஊஊ பண்ணிக் கேட்டால், உடனே எடுத்துக் ஹலோ சொல்லச் சொல்லுங்க சிவா:)))).... கடவுளே என்னாகப்போகுதோ:)))..
September 1, 2011 5:41 அம//
சிவா உன் இமேஜ் தேமகே பண்ண யாரோ சதி பண்றாங்க
சிக்காத ஈஸ்காப்பு
அப்பாகிட்ட போன் இல்லை :)
அக்கதையில் வந்த சம்பவம் யாவும்
கற்பனை மட்டுமே.
நன்றி பேபி அதி
Present sir... :)
எப்பூடி! எங்க ப்ளாக்ல இருந்து வந்தமில்ல.
மறுபடியும் மழை வந்தால் எங்கே இருந்தாலும் அங்கே தான் போவீங்களா :)
//மறுபடியும் மழை வந்தால் எங்கே இருந்தாலும் அங்கே தான் போவீங்களா :) // ;))) போவீங்களா சிவா??????
Rathi said...
Present sir... :)
எப்பூடி! எங்க ப்ளாக்ல இருந்து வந்தமில்ல.
மறுபடியும் மழை வந்தால் எங்கே இருந்தாலும் அங்கே தான் போவீங்களா :)
September 3, 2011 12:27 பம்/
வாங்க சிந்தனை வாதி ...
ம் வருகைக்கு நன்றி
மறுபடி மழை வந்தால் அங்கே போகமாட்டேன்..யாரவது வீட்டில மாட்டி விட்ட்ருவாங்கோ
அப்படி போனால் சொல்றேன் ..:)
இமா said...
//மறுபடியும் மழை வந்தால் எங்கே இருந்தாலும் அங்கே தான் போவீங்களா :) // ;))) போவீங்களா சிவா??????
September 3, 2011 12:42 //
m m போவேன் என்று சொல்ல மாட்டேன்..:)
கதையா கவிதையா? தாத்தா பற்றிய அபிப்ராயம் நன்றாக இருக்கிறது.
சாகம்பரி said...
கதையா கவிதையா? தாத்தா பற்றிய அபிப்ராயம் நன்றாக இருக்கிறது.
September 3, 2011 2:29 பம்
யாருக்கு தெரியும்:)
... கவிதை அல்லவே கதையும் அல்லவே teacher.
நன்றி வருகைக்கு
//இமா said...
//மறுபடியும் மழை வந்தால் எங்கே இருந்தாலும் அங்கே தான் போவீங்களா :) // ;))) போவீங்களா சிவா?????//
போவீங்களா சிவா? போவீங்களா சிவா? அடுத்த தடவை மழை வரும் முன், அப்பாவுக்கு ஒரு மொபைல் வாங்கிக் கொடுத்திடுங்க:)))).
athira said...
//இமா said...
//மறுபடியும் மழை வந்தால் எங்கே இருந்தாலும் அங்கே தான் போவீங்களா :) // ;))) போவீங்களா சிவா?????//
போவீங்களா சிவா? போவீங்களா சிவா? அடுத்த தடவை மழை வரும் முன், அப்பாவுக்கு ஒரு மொபைல் வாங்கிக் கொடுத்திடுங்க:)))).
September 5, 2011 3:15 PM
இங்க மழை பெய்யவே இல்லை
அப்படி மழை வந்தாலும் எங்கயும் போகமாட்டேன்
நன்றி பேபி அதிராமா
டிஸ்கி: என்ன உங்கட போஸ்ட் காணும் ?
அடடே கவிதை சூப்பரா இருக்கே...!!!
MANO நாஞ்சில் மனோ said...
அடடே கவிதை சூப்பரா இருக்கே...!!!
September 9, 2011 3:55 PM
வாங்க அண்ணாச்சி
எப்படி இருக்கீங்க
அறிவியலும் கலக்குறீங்க
நன்றி வருகைக்கு
ம்ம்ம்ம்.... மழை இன்னும் ஒயலேன்னு நினைக்கிறன்..... :))
நீ வெறும் தூறலை
விட்டுச் சென்றால்
கவலை இல்லை.
அவளின் நினைவுகளை
அல்லவா
தூறிவிட்டு
சென்று விடுகிறாய்.
உங்கள் ஆக்கங்கள் அருமையாக உள்ளது
வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .......
Rathi said...
ம்ம்ம்ம்.... மழை இன்னும் ஒயலேன்னு நினைக்கிறன்..... :))
September 9, 2011 8:10 பம்//
வாங்க ரதி மேடம் ..:)/|
ஆமாமா மழை சோன்னு அடைமழையா பெய்யுது..........
அடடா மழைடா அடை மழைடா :)
அம்பாளடியாள் said...
நீ வெறும் தூறலை
விட்டுச் சென்றால்
கவலை இல்லை.
அவளின் நினைவுகளை
அல்லவா
தூறிவிட்டு
சென்று விடுகிறாய்.
உங்கள் ஆக்கங்கள் அருமையாக உள்ளது
வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .......
September 9, 2011 8:52 ப//
வாங்க நன்றி உங்கள் பாராட்டுக்கும்
வருகைக்கும் மிக்க நன்றி
அட நம்ம மொக்கை ப்ளொக்ஸ் கூட ஆயிரம் தடவைக்கு மேல் வந்து பார்த்து திட்டிட்டு பொய் இருக்காங்கலாம்..(Widget appadithaanga kaattichu)
வந்தவங்க இனிமே வரபோரவங்க அல்லாருக்கும் வணக்கம்(/\) அப்புறம் நன்றி .(/\).:)
//வாங்க ரதி மேடம் ..:)/|
ஆமாமா மழை சோன்னு அடைமழையா பெய்யுது..........
அடடா மழைடா அடை மழைடா :)//
ம்ம்ம்ம்... ரீச்சர், மேடம்... அப்புறம் அடுத்தது என்ன... :)
நம்ம காட்டில மழை பெய்யுது... இளையராஜா பாடினதப்பா :))))
கன்னிமுயற்சியிலேயே பின்னியிருக்கீங்க...
ரசிக்கும்படியாக இருந்தது.. வாழ்த்துக்கள்!!
Rathi said...
//வாங்க ரதி மேடம் ..:)/|
ஆமாமா மழை சோன்னு அடைமழையா பெய்யுது..........
அடடா மழைடா அடை மழைடா :)//
ம்ம்ம்ம்... ரீச்சர், மேடம்... அப்புறம் அடுத்தது என்ன... :)
நம்ம காட்டில மழை பெய்யுது... இளையராஜா பாடினதப்பா :))))//
ஹஹா
சாமி மழையே வேணாம், ஆளை விடுங்க வேற பாட்டு எல்லாம் நமக்கு வேணாம்...இந்த மழை வேணவே வேணாம்..
சிவா எஸ்கேப்...
தமிழ் புலவர் ரதி அவர்களே. (/|)
நன்றி தங்கள் அடுத்த வருகைக்கு
சிசு said...
கன்னிமுயற்சியிலேயே பின்னியிருக்கீங்க...
September 13, 2011 4:11 பம் வாங்க வாங்க
நன்றி தங்கள் வருகைக்கு ..
நீங்கள் அவரு ரசிகர் மன்றத்தை சேர்ந்தவரா?
சும்மா தமாசு:)
தங்கம்பழனி said...
ரசிக்கும்படியாக இருந்தது.. வாழ்த்துக்கள்!!
September 14, 2011 1:10 அம/
வாங்க தங்கம் பழனி அவரகளே
நன்றி தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
'உன் புன்னகை காட்டும் இதிகாசம்' என்று கவிதை நூல் ரசிக்கும்படியாக இருந்தது.. வாழ்த்துக்கள்!!
இராஜராஜேஸ்வரி said...
'உன் புன்னகை காட்டும் இதிகாசம்' என்று கவிதை நூல் ரசிக்கும்படியாக இருந்தது.. வாழ்த்துக்கள்!!
September 14, 2011 1:11 பம்//
நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும்
//நீ வெறும் தூறலை
விட்டுச் சென்றால்
கவலை இல்லை.
அவளின் நினைவுகளை
அல்லவா
தூறிவிட்டு
சென்று விடுகிறாய்//
gud try siva! congratss!! :)
தக்குடு said...
//நீ வெறும் தூறலை
விட்டுச் சென்றால்
கவலை இல்லை.
அவளின் நினைவுகளை
அல்லவா
தூறிவிட்டு
சென்று விடுகிறாய்//
gud try siva! congratss!! :)
September 19, 2011 3:39 அம//
வாங்கோ அண்ணா
நீங்கள்தான் இந்த புகழ் மிக்க ஐம்பதாவது கமெண்டுக்கு சொந்த காரர்
நன்றி நன்றி
entha blog வரலாற்றில் 50 (எப்படியோ தேத்தி கம்மெண்டு வந்தாச்சு:))
கருத்து சொன்ன அனைவருக்கும் அன்பன பிரபலங்கள் அனைவருக்கும்
நன்றி நன்றி நன்றி
52 ;))
mee da first
சிவாவைக் காணேல்லை....
சிவாவைக் காணேல்லை....
சிவாவைக் காணேல்லை....
சிவாவைக் காணேல்லை....
சிவாவைக் காணேல்லை....
மீ அம்பத்தி ஃபோர்:))))))
;) 5 x 11
///இமா said...
;) 5 x 11
///
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் உப்பூடிப் பப்புளிக்கில வயசைச் சொல்லப்புடா இமா:))))...
ஹையோ...... ரன்னிங் ஸூஸ் போட்டுக்கொண்டு என்னைக் கலைக்கிறா... காப்பாத்த்த்த்த்ங்ங்ங்ங்ங்கோ மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))))
krrr. ;)
வதந்திகளை நம்பாதீர்.
இமா said...
52 ;))
September 19, 2011 5:44 பம்//
என்ன இது 52 ?? :)
athira said...
mee da first
சிவாவைக் காணேல்லை....
சிவாவைக் காணேல்லை....
சிவாவைக் காணேல்லை....
சிவாவைக் காணேல்லை....
சிவாவைக் காணேல்லை....
//
பேபி பேபி அதிரா நான் இங்க இருக்கேன் ....
கண்டு பிடியுங்கோ பார்போம் :)
கொஞ்சம் நிறைய கடமைகள் ...
அதனால ப்ளாக் பக்கம் வரமுடிய வில்லை :(
விரைவில் பாக்கலாம் ...!
நன்றி பேபி அதிராமா
athira said...
மீ அம்பத்தி ஃபோர்:))))))
September 20, 2011 5:44 அம//ஓகே
மீ ஒன்லி ட்வென்டி ஃபோர்:(24)
athira said...
///இமா said...
;) 5 x 11
///
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் உப்பூடிப் பப்புளிக்கில வயசைச் சொல்லப்புடா இமா:))))...
ஹையோ...... ரன்னிங் ஸூஸ் போட்டுக்கொண்டு என்னைக் கலைக்கிறா... காப்பாத்த்த்த்த்ங்ங்ங்ங்ங்கோ மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))))
September 21, 2011 12:13 அம//
ஹஹஹா அப்படீய சங்கதி ஓகே ஓகே மக்களே எல்லாரும் நோட் பண்ணிக்கோங்க
பேபி அதிர வயது 5 x 11....
இமா said...
krrr. ;)
வதந்திகளை நம்பாதீர்.
September 21, 2011 3:53 அம//
ஆம் நம்ப வேண்டாம் பேபி அதிரவை விட கொஞ்சம் கம்மியாக இருக்காலம் என்று நம்பபடுகிறது :)
யாரும் நம்ப மாட்டாங்க...
நன்றி (/\) இமா
நன்றி சிவா. ;)
Post a Comment