Tuesday, May 17, 2011

அழகாக்க புன்னகை பூக்கும் பூக்களுடன் நானும்.....

திறக்கப்பட்ட
ஜன்னலில்
எதிர்ப்பட்ட
தென்றல்...




நினைவு தரும்
கணத்தில்
விழியோரம்
விரும்பி வரும்
அரும்புகள்...




கானலாய்
மாறும்
கவலைகள் ...


தனிமை
தீப்பெட்டிக்குள்
அடைக்கப் பட்ட
இரவுகள்..



பக்குவபடதா
நிலையில்
புகுத்தப் பட்ட
கஷ்டங்கள்...!


நம்பிக்கை எனும்
வழி
கொண்டு வந்த
நட்புகள்.





போகும் வழியில்
நாளைப் பற்றி
யோசிக்காத
புன்னகைத்த
பூக்கள்..



இவை எல்லாம்
என்னை இன்னும் யோசிக்க வைக்கின்றன.

இருக்கும் ஒவ்வொரு நொடியையும்
இனிமையாய் மாற்றிக் கொள்ள வேண்டுமென..

வாழ்க்கை எனும் நாட்காட்டியில்
முடிந்து போன விசயங்கள் பற்றி யோசிப்பதில்
பயன் இல்லை என்று
கடந்து போன நாட்கள் உணர்த்துகின்றன..

அருமையாய் ஆண்டவன் கொடுத்த நிமிடத்தை
அழகாக்க புன்னகை பூக்கும் பூக்களுடன்
நானும்...


நானும்...

முடிந்த வரையில்
முடியாதவர்களுக்கு
உதவி செய்து
கடக்கும் நாட்களை
நட்புகளோடு பகிர்ந்து கொண்டு
நாட்கள் மட்டும் அல்ல,
இருக்கும் நிமிடங்களும்
சந்தோசமாய் நகரும்
என்ற நம்பிக்கையோடு........


19 comments:

RVS said...

நல்லாத்தான் இருக்கு. ஆனால் அது என்ன தீப்பெட்டிக்குள் அடைக்கப்பட்ட இரவுகள்? ;-))

Unknown said...

Nice

Chitra said...

போகும் வழியில்
நாளைப் பற்றி
யோசிக்காத
புன்னகைத்த
பூக்கள்..

.... very nice.

தலைப்புதான் எனக்கு புரியவில்லை. கவிதைகள் ரொம்ப அருமையாக வந்து இருக்கின்றன.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Good one..:)

ரேவா said...

வாழ்க்கை எனும் நாட்காட்டியில்
முடிந்து போன விசயங்கள் பற்றி யோசிப்பதில்
பயன் இல்லை என்று
கடந்து போன நாட்கள் உணர்த்துகின்றன..

நான் மிகவும் ரசித்த வரிகள் இவை தான் சிவா...
கவிதை நல்லா இருக்கு

vanathy said...

கவிஞர் சிவா, சூப்பர் கவிதைகள். கலக்கல்.

...αηαη∂.... said...

கவிதையும் நல்லா இருக்கு படமும் நல்லா இருக்கு...

Lali said...

Nice one! Each line expresses different experience and causes as well.. Keep going :) Greetings!

http://karadipommai.blogspot.com/

Unknown said...

RVS said...
நல்லாத்தான் இருக்கு. ஆனால் அது என்ன தீப்பெட்டிக்குள் அடைக்கப்பட்ட இரவுகள்? ;-))

May 17, 2011 4:47 PM

//

வாங்க மையினர் வாள்.அது சும்மா ...
நன்றி வருகைக்கு

Unknown said...

நா.மணிவண்ணன் said...
Nice

May 17, 2011 5:25 ப//



வாங்க பாஸ் நீங்க எப்போ தொடர் கதைய போடுவீங்க ?

Unknown said...

Chitra said...
போகும் வழியில்
நாளைப் பற்றி
யோசிக்காத
புன்னகைத்த
பூக்கள்..

.... very nice.

தலைப்புதான் எனக்கு புரியவில்லை. கவிதைகள் ரொம்ப அருமையாக வந்து இருக்கின்றன.

May 17, 2011 10:25 PM

//

தலைப்புதான் எனக்கு புரியவில்லை//அதானக்க epothu fashion..:)

நன்றி வருகைக்கு

Unknown said...

அப்பாவி தங்கமணி said...
Good one..:)

May 17, 2011 10:45 PM//

Thank you...appavi.

Unknown said...

ரேவா said...
வாழ்க்கை எனும் நாட்காட்டியில்
முடிந்து போன விசயங்கள் பற்றி யோசிப்பதில்
பயன் இல்லை என்று
கடந்து போன நாட்கள் உணர்த்துகின்றன..

நான் மிகவும் ரசித்த வரிகள் இவை தான் சிவா...
கவிதை நல்லா இருக்கு

May 17, 2011 11:53 பம்//



ரொம்ப நல்லவங்களா நீங்க இதைகூட ரசிச்சு படிக்கிறீங்க...நன்றி வருகைக்கு

உன் கருத்துக்கும் ரசிப்புக்கும் :)

Unknown said...

vanathy said...
கவிஞர் சிவா, சூப்பர் கவிதைகள். கலக்கல்.

May 19, 2011 9:32 AM

//

யாருப்பா அங்க வானதி அக்காவுக்கு சூடா ஒரு காப்பே வித் வடை சொல்லுங்க .:))
என்னை கவிகர்னு சொன்னதுக்கு
நன்றி கதை அரசி
...

Unknown said...

@ ...αηαη∂.... said...
கவிதையும் நல்லா இருக்கு படமும் நல்லா இருக்கு...

May 21, 2011 6:09 PM//

நன்றி Anand.

Unknown said...

Lali said...
Nice one! Each line expresses different experience and causes as well.. Keep going :) Greetings!

http://karadipommai.blogspot.com/
//

Thanks for coming.

and thank you for ur nice comments.

your blog so beautiful.

சாகம்பரி said...
This comment has been removed by the author.
சாகம்பரி said...

பூக்களும் குழந்தைகளும்
உதடுகளில் சிரிப்பை
வரையும் தூரிகைகள்.


very cute - your kavithai also.

Unknown said...

பூக்களும் குழந்தைகளும்
உதடுகளில் சிரிப்பை
வரையும் தூரிகைகள்.


very cute - your kavithai also.

June 5, 2011 10:18 PM

நன்றி

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...