Sunday, April 24, 2011

எனக்குப் பிடித்த நாட்களும் நிமிடங்களும்...


இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதரும் ஒரு விதம், ஏன் ஒவ்வொரு தனி உலகம் என்றே சொல்லலாம்..

நான் சந்தித்த ஒரு சில நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்...

மும்முரமாய் மீன் குழம்பு வைத்துகொண்டு இருக்கும்போது ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது.
என் நண்பன் ரமேஷ் பத்து வருடம் கழித்து தொலை பேசியில் அழைத்து தன்னைக் கண்டுபிடிக்குமாறு கூறிய தினம், பிறகு கண்டு பிடிக்க இயலாமல் "நீங்கள் யாரு என்று கூறுங்கள்," என்று கெஞ்சி அவனிடம் திட்டு வாங்கி பிறகு நலம் விசாரித்து பழைய கதைகள் எல்லாம் பேசி சிறிது மகிழ்ந்த தினம் நேற்று.


பிறகு சாப்பிட்டு விட்டு அருகில் உள்ள பூங்காவுக்கு ஒரு நடைப்பயணத்தில்...
ஒரு அண்ணன் தங்கை இருவருக்கும் ஐந்தும் நான்கும் வயது இருக்கும். தன் தங்கை அழ அண்ணன் ஒரு கையில் இருந்த சாக்லட்டை அந்த தங்கையிடம் கொடுத்துக் கொண்டு இருந்த காட்சி மிக அழகானது. தங்கையும் பாதி கடித்துவிட்டு மீதியைத் திரும்ப அண்ணனுக்கு "இந்தா அண்ணே நீயும் சாப்பிடு," என்று கொடுத்த அந்தப் பாசமான காட்சி இன்னும் மனதில்....

முன்னர் ஒரு மாலை நேரத்தில் குட்டிக் குட்டிக் குழந்தைகள் மிக அழகாய் ஓடி விளையாடிக் கொண்டு இருந்தபொது அவர்களைக் கவனித்துக் கொண்டு இருக்கையில் ஒரு சின்னப் பையன் ஏதோ ஒன்றுக்குப் பிடிவாதம் பிடித்து, தரையில் விழுந்து புரண்டு பிறகு ஒருசில நிமிடத்தில் அதை மறந்து எழுந்து மற்றக் குழந்தைகளோட விளையாடச் சென்றது... அருமையான கணம்.


பிறகு பூங்காவில் வேகமாய் ஓடி வந்த ஒரு குட்டிப் பாப்பா கால் தவறி கீழே விழுந்துவிட்டது. அந்த நேரத்தில் யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, பார்க்க வில்லை என்றவுடன் வேகமாய் ஒரு புன்னகையுடன் விழுந்த அடி தெரியாமல் மறைத்துக் கொண்டு நடந்து சென்றதை தூரத்தில் இருந்து பார்க்கையில் மனதில் ஒரு நம்பிக்கை...


அருகில் உள்ள மரப்பலகையில் 'ஒரு காலத்தில் நானெல்லாம் அப்படி இப்பிடி' என்று மகிழ்ச்சியுடன் பழங்கதை கட்டிக்கொண்டு இருந்த பெருசுகள்.
அவர்கள் புன்னகையில் வாழ்ந்து மகிழ்ந்த சந்தோசம். அவர்களுக்குள் எவ்வளவோ சோகம் இருப்பினும் காட்டிக் கொள்ளாமல் அந்த நண்பர்கள் பேசிக் கொண்டு இருப்பதைக் கவனித்த நிமிடத்தில் நாளை நாமும் இப்படிதானே பேசிக்கொண்டு இருப்போம் என்று மனதில் சிரித்துகொண்டு இருக்கையில் ஒரு வித சந்தோசம்...

வாழ்க்கையில் இந்த நிமிடம் மட்டுமே இருப்பதாய் நினைத்து இருக்கும் நிமிடத்தை சந்தோசமாய் அமைதியாய் நகர்த்த வேண்டும் என்று எண்ணி வரும் பிரச்சனைகளை மன உறுதியுடன் எதிர்கொள்ள அவ்விடத்தை விட்டு மெல்ல காற்றடிக்கும் திசையில் நடக்க ஆரம்பித்தேன்....

நட்பில் பிரிவு என்பது இல்லை
அப்படி பிரிந்தால் அது நட்பு இல்லை

எதிர்பாரா அன்புதான் எப்போதும்
சந்தோசம் தரும்...




வாசித்தமைக்கு நன்றி
வாங்க வாங்க எல்லாம் வெயிலில் வந்து இருப்பீங்க. ஜில்னுனு ஐஸ்கிரீம் சாப்பிடுங்க...



மீண்டும் சந்திப்போம்....

43 comments:

MANO நாஞ்சில் மனோ said...

//தங்கையும் பாதி கடித்துவிட்டு மீதியைத் திரும்ப அண்ணனுக்கு "இந்தா அண்ணே நீயும் சாப்பிடு," என்று கொடுத்த அந்தப் பாசமான காட்சி இன்னும் மனதில்....//

கவிதை.....

MANO நாஞ்சில் மனோ said...

// தரையில் விழுந்து புரண்டு பிறகு ஒருசில நிமிடத்தில் அதை மறந்து எழுந்து மற்றக் குழந்தைகளோட விளையாடச் சென்றது... அருமையான கணம்.//

இதை பார்க்கும் போது நாமும் குழந்தையாகிறோம் இல்லையா....

MANO நாஞ்சில் மனோ said...

ம்ம்ம் நல்லா ரசிச்சுகிட்டு இருந்துருக்கீங்க போங்க....

MANO நாஞ்சில் மனோ said...

//எதிர்பாரா அன்புதான் எப்போதும்
சந்தோசம் தரும்...///


ரிப்பீட்டே......

இமா க்றிஸ் said...

//இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதரும் ஒரு விதம், ஏன் ஒவ்வொரு தனி உலகம் என்றே சொல்லலாம்.// உண்மைதான் ;)

//நாளை நாமும் இப்படிதானே பேசிக்கொண்டு இருப்போம்...// குட்டி சிவாவுக்கு இப்போ எதுக்கு இந்தச் சிந்தனையாம்!! ;))

தெருவில் போகும் போது வரும் போது குட்டீஸைக் கண்டால் அப்பிடியே நின்று விடுவீங்களோ! ;)

அழகான இடுகை சிவா.

RVS said...

நிறைய சிறுவயது பாசமலர்கள் பத்தி எழுதியிருக்கீங்க...
இதில மன்னையில் நடந்தது எதுவும் இருக்கா தம்பி?
நல்லா இருந்தது... ;-))

சுபத்ரா said...

எவ்வளவு அருமையான தருணங்கள். உனக்குள்ளே இவ்வளவு ரசனை இருப்பதை எண்ணிப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது சிவா!!

அப்புறம் எனக்குச் சாக்லேட் ஐஸ்க்ரீம் மட்டும் போதும்…எல்லாம் வேண்டாம் :-)

ரேவா said...

எதிர்பாரா அன்புதான் எப்போதும்
சந்தோசம் தரும்...


உண்மைதான் சிவா....அழகான ரசனை....அதோடு படிக்கையில், எதோ ஒரு ஏக்கமும் தொற்றிக் கொண்டது...

Unknown said...

/தங்கையும் பாதி கடித்துவிட்டு மீதியைத் திரும்ப அண்ணனுக்கு "இந்தா அண்ணே நீயும் சாப்பிடு," என்று கொடுத்த அந்தப் பாசமான காட்சி இன்னும் மனதில்....//

கவிதை.....

April 24, 2011 6:24//

:)கவிதை எப்படியா இருக்கும்...

நன்றி தலைவா..

Unknown said...

// தரையில் விழுந்து புரண்டு பிறகு ஒருசில நிமிடத்தில் அதை மறந்து எழுந்து மற்றக் குழந்தைகளோட விளையாடச் சென்றது... அருமையான கணம்.//

இதை பார்க்கும் போது நாமும் குழந்தையாகிறோம் இல்லையா....//



திருத்தம் சிவா மட்டும் குழந்தை ஆகிறேன் :)

சும்மா நம் அனைவரும் குழந்தைகள் தான்

Unknown said...

MANO நாஞ்சில் மனோ said...
ம்ம்ம் நல்லா ரசிச்சுகிட்டு இருந்துருக்கீங்க போங்க....

April 24, 2011 6:27 பம்//



ம் ம் எப்போவதாவது மாலை நேரம் இருக்கும் போது..

நன்றி மனோ அனைத்து கருத்துக்கும்

Unknown said...

இமா said...
//இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதரும் ஒரு விதம், ஏன் ஒவ்வொரு தனி உலகம் என்றே சொல்லலாம்.// உண்மைதான் ;)....ம்

//நாளை நாமும் இப்படிதானே பேசிக்கொண்டு இருப்போம்...// குட்டி சிவாவுக்கு இப்போ எதுக்கு இந்தச் சிந்தனையாம்!! ;)) எப்போதும் எப்படி இருக்க முடியாதுல...

தெருவில் போகும் போது வரும் போது குட்டீஸைக் கண்டால் அப்பிடியே நின்று விடுவீங்களோ! ;) --ஆம் நானும் குழந்தை தானே :)

அழகான இடுகை சிவா.

//


நன்றி இமா தங்கள் வருகைக்கும் நீண்ட மறுமொழிக்கும்

Unknown said...

@RVS said...
நிறைய சிறுவயது பாசமலர்கள் பத்தி எழுதியிருக்கீங்க...
இதில மன்னையில் நடந்தது எதுவும் இருக்கா தம்பி?
நல்லா இருந்தது... ;-))

April 24, 2011 8:22 பம்//



வாங்க மையினர்

ம் மன்னையில வேறு சில விசியங்கள் நடந்தது...அது பற்றி அடுத்த ஒரு பதிவில்...



நன்றி அண்ணா

Unknown said...

எவ்வளவு அருமையான தருணங்கள். உனக்குள்ளே இவ்வளவு ரசனை இருப்பதை எண்ணிப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது சிவா!!

அப்புறம் எனக்குச் சாக்லேட் ஐஸ்க்ரீம் மட்டும் போதும்…எல்லாம் வேண்டாம் :-)

April 24, 2011 9:49 பம்//



வாங்க பிரபலம் பதிவர்

நன்றி தங்கள் வருகைக்கு

ஓகே உனக்கு ஒரு பாக்கெட் சாக்லேட் ஐஸ்க்ரீம் பார்சல் ...

Unknown said...

@ரேவா said...
எதிர்பாரா அன்புதான் எப்போதும்
சந்தோசம் தரும்...


உண்மைதான் சிவா....அழகான ரசனை....அதோடு படிக்கையில், எதோ ஒரு ஏக்கமும் தொற்றிக் கொண்டது...

April 24, 2011 10:02 பம்//



நன்றி தோழி உன் வருகைக்கும் கருத்துக்கும்

என்ன ஏக்கம் நோ நோ பீலிங்க்ஸ் லேட் ஸ்டார்ட் மியூசிக் ஒரு டான்ஸ் ...ஓகே

இருக்கிற நிமிடம் சந்தோசமா இருங்க.

செல்வா said...

நீங்க உண்மைலேயே சிறந்த ரசிகர் அண்ணா :-)
வாய்ப்பே இல்ல. ரொம்ப அருமையான தருணங்கள். உங்களோட இந்தப் பதிவப் படிச்சதும் எனக்கு இதே மாதிரி ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்துச்சு!

காலைல ஒன்பது மணி இருக்கும். சின்ன பசங்க எல்லாம் பள்ளிக்கூடம் போயிட்டு இருந்தாங்க. ஒரு பொண்ணு மட்டும் ( இரண்டாவது படிக்கலாம் ) கைல ஒரு ரூபாய் காசோட அந்தக் கடைக்கிட்ட வந்துச்சு! ( செவியூர் பஸ் ஸ்டாப் , நான் பஸ்சுக்கு நின்னுட்டு இருந்தேன் )

அங்க இரண்டு காயின் போன் இருந்துச்சு! இரண்டுமே அந்தப் பாப்பாவுக்கு எட்டல. பக்கத்துல இருந்தா ஒரு திண்டுமேல ஏறிச்சு! அப்புறம் அவுங்க அப்பாவுக்குப் போன் பண்ணிச்சு!

" அப்பா , நீ எங்க இருக்குற ? "
" *** "
" அம்மா ஒரு ரூபாதான் கொடுத்தா , நீ எப்ப வருவ ? "
" *** "
" கண்டிப்பா வருவியா ? அம்மா அடிக்கறா ? சரி வச்சிடறேன் ! "

அப்படின்னு சொல்லிட்டு போன கட் பண்ணிட்டு இன்னொரு ஒரு ரூபாய எடுத்து அங்க இருந்த ஒரு மிட்டாய் குடுங்க அப்படின்னு நீட்டுச்சு!

" அது இரண்டு ரூபா ! "

" சரி இது குடுங்க ! " அப்படின்னு , வேற முட்டாய் வாங்கிட்டு பக்கத்துல இன்னொரு பொண்ணு இருந்துச்சு , அத கூட்டிட்டு சர்ட்டத் தூக்கி அந்த முட்டாய வாய்ல வச்சு ரொம்ப கஷ்டப்பட்டு ரண்டா கடிச்சிட்டு அந்தப் பொண்ணுக்குப் பாதி குடுத்திட்டு , ரண்டுபேரும் அப்படியே பள்ளிக்கூடத்துக்குப் போனாங்க :-)

மாணவன் said...

அழகான ரசனையுடன் அருமையா எழுதியிருக்கீங்க சிவா வாழ்த்துக்கள் :)

மாணவன் said...

// கோமாளி செல்வா said...
நீங்க உண்மைலேயே சிறந்த ரசிகர் அண்ணா :-)
வாய்ப்பே இல்ல. ரொம்ப அருமையான தருணங்கள். உங்களோட இந்தப் பதிவப் படிச்சதும் எனக்கு இதே மாதிரி ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்துச்சு!//

செல்வா என்னா இது //செல்வா கதைகள// இங்க வந்து எழுதிகிட்டு...பிச்சுபுடுவேன் பிச்சு... :))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Lovely post... the way you narrated added colours to those minutes and brought it in front of our eyes...:)

Unknown said...

கோமாளி செல்வா said...
நீங்க உண்மைலேயே சிறந்த ரசிகர் அண்ணா :-)
வாய்ப்பே இல்ல. ரொம்ப அருமையான தருணங்கள். உங்களோட இந்தப் பதிவப் படிச்சதும் எனக்கு இதே மாதிரி ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்துச்சு!//



மிக்க நன்றி செல்வா

தங்கள் ரசனை மிக அருமை குட்டி கதை போல...

நன்றி தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும்

Unknown said...

மாணவன் said...
அழகான ரசனையுடன் அருமையா எழுதியிருக்கீங்க சிவா வாழ்த்துக்கள் :)

April 25, 2011 9:48 பம்//



நன்றி மாணவன் சார்

மிக்க நன்றி மீண்டும் வருக

Unknown said...

அப்பாவி தங்கமணி said...
Lovely post... the way you narrated added colours to those minutes and brought it in front of our eyes...:)

April 25, 2011 9:57 PM//

Thank you Very Much Appavi.:)

Unknown said...

மாணவன் said...
// கோமாளி செல்வா said...
நீங்க உண்மைலேயே சிறந்த ரசிகர் அண்ணா :-)
வாய்ப்பே இல்ல. ரொம்ப அருமையான தருணங்கள். உங்களோட இந்தப் பதிவப் படிச்சதும் எனக்கு இதே மாதிரி ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்துச்சு!//

செல்வா என்னா இது //செல்வா கதைகள// இங்க வந்து எழுதிகிட்டு...பிச்சுபுடுவேன் பிச்சு... :))

April 25, 2011 9:50 பம்//



அண்ணா அவரை திட்டாதீங்க அவர் மிகவும் நல்லவர்..:) நன்றி தங்கள் அடுத்த கருத்துக்கு

Unknown said...

எனக்கு ஒட்டு போட்ட அனைத்து நண்பர்களுக்கும்
வாசித்த அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி

Priya said...

அழகான ரசனை! குழந்தைகளை போலவே மெண்மையான அழகான பதிவு!

vanathy said...

சிவா, அடடா! சூப்பரா எழுதி இருக்கிறீங்க. அழகான பதிவு. குழந்தைகள் என்றால் பிடிக்குமோ???

Mahi said...

அழகழகான கணங்களை சேமித்து வைத்திருக்கீங்க சிவா!
குட்டிப்பசங்களை நல்லா அப்ஸர்வ் பண்ணியிருக்கீங்க.:)

Unknown said...

@Priya said...
அழகான ரசனை! குழந்தைகளை போலவே மெண்மையான அழகான பதிவு!

April 26, 2011 7:44 //



மிக்க நன்றி ப்ரியா.

மீண்டும் வருக..

Unknown said...

vanathy said...
சிவா, அடடா! சூப்பரா எழுதி இருக்கிறீங்க. அழகான பதிவு. குழந்தைகள் என்றால் பிடிக்குமோ???

April 26, 2011 8:51 //



நன்றி வானதி அக்கா.

நானும் ஒரு குழந்தை தானே எனவே பிடிக்கும்.

நன்றி வருகைக்கு

Unknown said...

Mahi said...
அழகழகான கணங்களை சேமித்து வைத்திருக்கீங்க சிவா!
குட்டிப்பசங்களை நல்லா அப்ஸர்வ் பண்ணியிருக்கீங்க.:)

April 27, 2011 8:09 //



நன்றி மகிமா

குட்டி பசங்களுக்கு குட்டி பசங்களை பத்தி கொஞ்சம் தெரியும் :)

Nagasubramanian said...

படிக்கும் போதே சில்லிடுகிறது நெஞ்சம்

Anonymous said...

வர வர உங்கள் எழுத்துக்களில் நல்ல தேர்ச்சி தெரிகிறது சிவா..


தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

Mathi said...

very nice post siva..keep blogging.

ம.தி.சுதா said...

/////எதிர்பாரா அன்புதான் எப்போதும்
சந்தோசம் தரும்.../////

இந்த வரி மனசை ரொம்பவே தொட்டுட்டுதுங்க...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

Unknown said...

@Nagasubramanian said...
படிக்கும் போதே சில்லிடுகிறது நெஞ்சம்

April 27, 2011 7:23 //



நன்றி நாகசுப்பிரமணியன்

மீண்டும் வருக

Unknown said...

இந்திரா said...
வர வர உங்கள் எழுத்துக்களில் நல்ல தேர்ச்சி தெரிகிறது சிவா..


தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

April 28, 2011 3:00 //



நன்றி பிரபலபதிவர் இந்திரா அவர்களே

மீண்டும் வருக

Unknown said...

Mathi said...
very nice post siva..keep blogging.

April 28, 2011 5:52 //



நன்றி மதி

Unknown said...

♔ம.தி.சுதா♔ said...
/////எதிர்பாரா அன்புதான் எப்போதும்
சந்தோசம் தரும்.../////

இந்த வரி மனசை ரொம்பவே தொட்டுட்டுதுங்க...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

April 29, 2011 12:05 //



நன்றி சகோ சுதா

மீண்டும் வருக

டக்கால்டி said...

சிலாகித்தேன்..அருமை..

Unknown said...

@டக்கால்டி said...
சிலாகித்தேன்..அருமை..

April 30, 2011 4:04 AM
நன்றி டகால்டி

test said...

//குட்டிப் பாப்பா கால் தவறி கீழே விழுந்துவிட்டது. அந்த நேரத்தில் யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, பார்க்க வில்லை என்றவுடன் வேகமாய் ஒரு புன்னகையுடன் விழுந்த அடி தெரியாமல் மறைத்துக் கொண்டு நடந்து//
குட்டிப் பாப்பா கால் தவறி கீழே விழுந்துவிட்டது. அந்த நேரத்தில் யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, பார்க்க வில்லை என்றவுடன் வேகமாய் ஒரு புன்னகையுடன் விழுந்த அடி தெரியாமல் மறைத்துக் கொண்டு நடந்து//
Very Nice! :-)

ரசிகன் said...

வலைசரத்தில் கோகுல் சொல்லி வந்தேன்...

நீங்கள் குறிப்பிட்ட இந்த நிமிடங்கள் வாழ்க்கையால் நிரம்பி இருக்கிறது. மிக குறிப்பாக அண்ணன் தங்கை பரிமாறிக் கொள்ளும் அன்பு மிகவும் ரசிக்கும் படி அமைந்தது.

அன்பை விதைக்க வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஹைஈஈஈஈ ரொம்ப சுப்பரா இக்குதே ...

எங்களைப் பெருமைப்படுத்தி எழுதியமைக்கு மிக்க நன்றி அங்கிள்

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...