Wednesday, April 13, 2011

என்ன தலைப்பு வைக்க....?பொறுப்பு உணர்ச்சி :

நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு
இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம
ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!

நேத்து:
அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!


ஒரு குட்டி கதை:
அதாவது ஒரு காலத்தில் ராமு சோமு என்ற நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்
அவர்களில் சோமு ராமுவிடம் ராமு ராமு உனக்கு நல்ல நண்பனாக எப்பொதும் இருப்பேன்னு சொல்லிக்கிட்டு வந்தான் இதைக் கேட்ட ராமு உன்னை போல நண்பன் கிடைக்க குடுத்து வச்சு இருக்கணும் சொல்லி நன்றி சொன்னான் அப்போ அந்த வழிய ஒரு கரடி வந்துட்டு...
உடனே சோமு ஹயோ ஹயோ என்ன பண்றது தெரியலே அப்படின்னு ஓடி போய் மரத்து மேல் ஏறி அமர்ந்து கொண்டான் அப்பறம் ராமுக்குதான் மரம் ஏற தெரியாதே உடனே ஒரு யோசனை செய்தான் ராமு கரடி அருகில் வருவது போல் இருந்ததும் கீழே விழுந்து செத்து போனவன் போல கிடந்தான்..
கரடி அருகில் வந்து முகந்து பாத்து தூர போயிட்டு..அப்புறம் கரடி போனதும் சோமு ஓடி வந்து
ராமு கரடி உன் காதில என்னடா சொன்னிச்சு உன்ன எதுமே பண்ண வில்லையே என்ன சொல்லிடு போய்ட்டுன்னு கேட்டான்..அதற்கு ராமு துன்பம் வரும்போது கூட யாரு இருக்காங்களோ அவங்கதான் உண்மையான நண்பன் அப்டின்னு சொல்லிட்டு போனது என்றான். இதை கேட்ட சோமு வெட்கி தலை குனிந்தான். தனது தவறை மன்னிக்கும் மாறும் கேட்டான்..அப்பறம் இருவரும் நண்பர்களை சந்தோசமாய்
சென்றார்கள்....

தத்துவம் : அதிக அன்பும் மனதை கணக்கும் சுமை ஆகும்

வாசித்ததில் பிடித்தது:

குருநாதர் தான் வெளியூர் சென்று திரும்பும்முன் தான் எழுதிய நூலைப் படித்து முடித்துவிடுமாறு குருகுலத்தில் சீடர்களிடம் சொல்லிச் சென்றார் அந்த குருநாதர். எல்லோரும் முழுமையாகப் படித்து முடித்திருந்தார்கள். ஒரே ஒரு சீடர், அதில் ஒரேயொரு வரியை மட்டுமே படித்ததாக சொன்னார். மிகக்கடுமையாய் ஏசினார் குரு.

சீடர் முகம் வாடவில்லை. ஓங்கி அறைந்தார் குரு. அந்த இளைஞர் வருந்தவில்லை. சிறிது நேரம் போனது. அமைதியடைந்த குரு, அந்த சீடரை அழைத்து ”நீ படித்த வரி என்ன?” என்று கேட்டார். ”உன் கோபத்தைக் கட்டுப்படுத்து. எப்போதும் நிதானமாக இரு” என்பதே அந்த வாசகம். வெட்கித் தலை கவிழ்ந்தார் குரு. அந்த குரு, துரோணர். அந்த சீடர் தருமர்.....

20 comments:

அருண் பிரசாத் said...

ACCIDENT ஜோக் செம...

Chitra said...

சீடர் முகம் வாடவில்லை. ஓங்கி அறைந்தார் குரு. அந்த இளைஞர் வருந்தவில்லை. சிறிது நேரம் போனது. அமைதியடைந்த குரு, அந்த சீடரை அழைத்து ”நீ படித்த வரி என்ன?” என்று கேட்டார். ”உன் கோபத்தைக் கட்டுப்படுத்து. எப்போதும் நிதானமாக இரு” என்பதே அந்த வாசகம்.


..... Super!!!

MANO நாஞ்சில் மனோ said...

//அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!//

ஹா ஹா ஹா கொய்யால சரக்கு கூடி போச்சு போல ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

//தத்துவம் : அதிக அன்பும் மனதை கணக்கும் சுமை ஆகும் //

சின்ன வயசுல பாடப்புத்தகத்தில் படித்த கத மாதிரி இருக்கு...

RVS said...

"ரெண்டு ஜோ ரெண்டு கதை" நல்லா இருந்தது சிவா! ;-)

siva said...

@அருண் பிரசாத் said...
ACCIDENT ஜோக் செம...

//

நன்றி அருண் அண்ணா

siva said...

@ Chitra said...
..... Super!!!//

நன்றி சித்ரா மேடம்

siva said...

MANO நாஞ்சில் மனோ said...//ஹா ஹா ஹா கொய்யால சரக்கு கூடி போச்சு போல ஹா ஹா ஹா....//

கடவுளே உங்க காமெடிக்கு அளவே இல்லையா?

siva said...

//தத்துவம் : அதிக அன்பும் மனதை கணக்கும் சுமை ஆகும் //

MANO நாஞ்சில் மனோ said...//
சின்ன வயசுல பாடப்புத்தகத்தில் படித்த கத மாதிரி இருக்கு...

April 13, 2011 4:02 பம்//பாஸ் இப்போ சிவா பள்ளிகூடத்தில படிச்சுகிட்டு இருக்கிற கதைகள்

நன்றி தங்கள் வருகைக்கு

siva said...

@RVS said...
"ரெண்டு ஜோ ரெண்டு கதை" நல்லா இருந்தது சிவா! ;-)

// நன்றி மைனர்
மீண்டும் வருக

Priya said...

//என்ன தலைப்பு வைக்க....?// அட இந்த தலைப்பும் நல்லாயிருக்கே:-)

நீங்க‌ வாசித்ததில் பிடித்தது என‌க்கும் பிடித்திருந்த‌து.

அப்பாவி தங்கமணி said...

//Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான் //
அது சரி...சூப்பர்...:)))

//அதிக அன்பும் மனதை கணக்கும் சுமை ஆகும்//
வாஸ்துவம்...:)

//உன் கோபத்தைக் கட்டுப்படுத்து. எப்போதும் நிதானமாக இரு//
Easier said than done இதுக்கு ரெம்ப பொருந்தும்...:))

angelin said...

"அதிக அன்பும் மனதை கணக்கும் சுமை ஆகும்"
Thats true .

siva said...

Priya said...
//என்ன தலைப்பு வைக்க....?// அட இந்த தலைப்பும் நல்லாயிருக்கே:-)

நீங்க‌ வாசித்ததில் பிடித்தது என‌க்கும் பிடித்திருந்த‌து.

April 15, 2011 10:12 PM//

வாங்க ஓவிய பிரியா மேடம் நன்றி வருகைக்கு

siva said...

அப்பாவி தங்கமணி said...
//Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான் //
அது சரி...சூப்பர்...:)))

//அதிக அன்பும் மனதை கணக்கும் சுமை ஆகும்//
வாஸ்துவம்...:)

//உன் கோபத்தைக் கட்டுப்படுத்து. எப்போதும் நிதானமாக இரு//
Easier said than done இதுக்கு ரெம்ப பொருந்தும்...:))

April 15, 2011 10:26 PM//

வாங்க அப்பாவி நன்றி

siva said...

@angelin said...
"அதிக அன்பும் மனதை கணக்கும் சுமை ஆகும்"
Thats true .//

வாங்க ஏஞ்சலின் மேடம் வருகைக்கு நன்றி

விமலன் said...

கணக்கும் கதையுமாய் நகரும் கணங்களில் வாழ்க்கை நிரம்பித் தழும்புகிறது

போளூர் தயாநிதி said...

"ரெண்டு ஜோ ரெண்டு கதை" நல்லா இருந்தது ...

siva said...

விமலன் said...
கணக்கும் கதையுமாய் நகரும் கணங்களில் வாழ்க்கை நிரம்பித் தழும்புகிறது

April 19, 2011 1:13 AM//

நன்றி விமலன் ஐயா

siva said...

@போளூர் தயாநிதி said...
"ரெண்டு ஜோ ரெண்டு கதை" நல்லா இருந்தது ...

April 21, 2011 6:49 பம்//நன்றி தயாநிதி

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...