Friday, December 24, 2010

Employed in Foreign...

முஸ்கி : நான் வாசித்த ஒரு மெயிலில் வந்த கவிதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தூக்கம் விற்ற காசுகள்

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!

விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்...?

தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!

எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயணத்தூனூடே
விற்றுவிட்டு கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!

மரஉச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!

பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!

நண்பர்களோடு ஆற்றில்
விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி
கண்ணாமூச்சி - பம்பரம் - கிட்டிபுல் - கோலி - பட்டம் என
சீசன் விளையாட்டுக்கள்!

ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளுர்
உலககோப்பை கிரிக்கெட்!

இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!

பழையசடங்குகள்
மறுத்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!

சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!

இவையெதுவுமே கிடைக்காமல்
" கண்டிப்பாய் வரவேண்டும்"
என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு
ஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து ஏழைகள்தான்!

காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!

ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே...
கரைந்துவிடுகிறார்கள்;!

" இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு.....
முதல் பார்வை...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ?

ஒவ்வொருமுறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு

இப்படி புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்

அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்.....
தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!

12 comments:

Anonymous said...

ஏற்கனவே படிச்சது தான் இருந்தாலும் இப்போ படிக்கும் போதும் வலி :(

Arun Prasath said...

படிச்சிருக்கேன்.... ஆனா ஒரு சோகம் தோன்றது உண்மை தான்

Unknown said...

உண்மைதான் அண்ணாச்சி
இதுவும் கடந்து போகும்
என்ற நம்பிக்கையில்
ஒரு ஒரு நாளும்
நகர்ந்து விடும்
என்ற நம்பிக்கையில் உங்களில் ஒருவனாக நானும்...

Mathi said...

so sad while reading !!!
NO PAIN NO GAIN !!
FUTURE WILL BE SUPER !!

middleclassmadhavi said...

//so sad while reading !!!
NO PAIN NO GAIN !!
FUTURE WILL BE SUPER !!//
வழிமொழிகிறேன்

செல்வா said...

//ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளுர்
உலககோப்பை கிரிக்கெட்!///

செம செம .. உண்மைலேயே ரொம்ப கலக்கலா கவிதை அண்ணா ..
ஆனா இத நான் முன்னாடியே படிச்சிட்டேன் .. இருந்தாலும் இப்பத் படிக்கும் போதும் நல்லா இருக்கு .!

vanathy said...

ஒரே பீலீங்ஸ் ஆகிப் போச்சு! நல்ல கவிதை.

Unknown said...

நன்றி
@Balaji saravana ,
@Arun Prasath
@Mathi
@middleclassmadhavi
@கோமாளி செல்வா
@vanathy
அனைவருக்கும் எனது அன்பான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

மாணவன் said...

//அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்.....
தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!//

இதே உணர்வுகளுடன்தான் “பணத்தைத்தேடி பாசத்தைத் தொலைத்து” கடல்தாண்டி வாழ்ந்துகொண்டிருக்கிறோம்....

நன்றி நண்பரே அயல்நாட்டில் பணிபுரியும் நண்பர்களின் வலிகளை உணர்வுகளுடன் வரிகளாக பதிவு செய்ததற்கு,

இந்த வரிகளை எழுதிய நண்பருக்கும் எனது வாழ்த்துக்களூம் நன்றிகளும் பல,,,,,

enrenrum16 said...

ஹ்..ம்..ம்..இன்னும் ஒரு வரி எழுதியிருந்தால் ஊரிலிருக்கும் சொந்த பந்தங்களும் பழைய நினைவுகளும் சேர்ந்து அழுதிருப்பேன் போங்க...ஒன்றை விற்றுத்தான் மற்றது வாங்கணும்னு சும்மாவா சொல்லியிருக்காங்க...

Unknown said...

மாணவன் said...
//அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்.....
தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!//

இதே உணர்வுகளுடன்தான் “பணத்தைத்தேடி பாசத்தைத் தொலைத்து” கடல்தாண்டி வாழ்ந்துகொண்டிருக்கிறோம்....

நன்றி நண்பரே அயல்நாட்டில் பணிபுரியும் நண்பர்களின் வலிகளை உணர்வுகளுடன் வரிகளாக பதிவு செய்ததற்கு,

இந்த வரிகளை எழுதிய நண்பருக்கும் எனது வாழ்த்துக்களூம் நன்றிகளும் பல,,,,,

//

வாங்க மாணவன் ஐயா

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பா

Unknown said...

enrenrum16 said...
ஹ்..ம்..ம்..இன்னும் ஒரு வரி எழுதியிருந்தால் ஊரிலிருக்கும் சொந்த பந்தங்களும் பழைய நினைவுகளும் சேர்ந்து அழுதிருப்பேன் போங்க...ஒன்றை விற்றுத்தான் மற்றது வாங்கணும்னு சும்மாவா சொல்லியிருக்காங்க...//


வாங்க வாங்க பதினாறு sago
தங்கள் வருகைக்கு நன்றி
நோ நோ cry cry..

just sharing only.be smile.

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...