முஸ்கி :-
அன்பர்களே...
நண்பர்களே....
நிறைய எழுத யோசித்து ஒன்றுமே தோன்றவில்லை
அதனால் எங்கோ படித்த வாசித்த ஒரு சில வரிகளை பகிர்ந்து கொண்டு (ஒரு போஸ்ட் போட எப்படி எல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு..)
இதே போல உங்களுக்கு பிடித்த வரிகளை விட்டு சொல்லுமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்..
ஓகே ஸ்டார்ட் மியூசிக்..
மனதைத் தொட்ட வரிகள் !!!
Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.
- வால்டேர்
Ø பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் - பெர்னாட்ஷா
Ø பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! - பாலஸ்தீனப் பழமொழி
Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. - ப்ரெட்ரிக் நீட்சே
Ø நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். - வின்ஸ்டர் லூயிஸ்
Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்
Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்
Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்
Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல்
Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம்
இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!
Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!
Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை
Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!
Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.
Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.
மீண்டும் வருவேன் விரைவில்...
இப்படிக்கு
உங்கள் வீட்டுப்பிள்ளை சிவா
Subscribe to:
Post Comments (Atom)
சில வருடங்களுக்கு முன்....
என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...
-
குட்டிவாசகம்: பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது இர...
-
எல்லாரும் வாங்க வாங்க சாக்லேட் எடுத்துக்கோங்க அட நிறைய எடுத்துக்கோங்க ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா இன்று தேதியில் ...வருடங்களுக்கு முன்ப...
-
பகிர படாத உணர்வுகளை எல்லாம் என் மௌனங்களின் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.. எப்பொதும் மௌனமாய் இருக்கும் நீ என்றாவது ஒரு நாள் புரிந்துகொள...
23 comments:
தத்துவம் சொல்லுற? சரி... அடுத்து ஜோக்கு, பழமொழினு முன்னேறு
சரிங்க... ஆபிஸர்.. :)
அருண் பிரசாத் said...
தத்துவம் சொல்லுற? சரி... அடுத்து ஜோக்கு, பழமொழினு முன்னேறு///
முதல் வடையை
தட்டி சென்ற அருண் அண்ணன் வாழ்க
தங்கள் வருகைக்கு
நன்றி
@TERROR-PANDIYAN(VAS) said...சரிங்க... ஆபிஸர்.. :)//
வாங்க வாங்க மெகா பாண்டியன் அவர்களே
siva ...nalla irukku ellame..
//Ø நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். - வின்ஸ்டர் லூயிஸ்//
ithuku nee meaning solliye akanum...
Mathi said...
siva ...nalla irukku ellame..
//Ø நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். - வின்ஸ்டர் லூயிஸ்//
ithuku nee meaning solliye akanum...///
அதாவது
போரில் ஒருமுறை வெற்றி எல்லை தோல்வி..
ஆபத்து உடனே சிவலோக பதவி...
கடல் பயணம் ஒருமுறை கப்பல் கவிழ்தலும் பிழைக்க வாய்ப்பு உண்டு.
திருமணம்
"அடிவாங்க நான் தயார் இல்லை என்பதால் நண்பர்கள் பொதுநிலை விளக்கம் தருவார்கள் என்று நம்புகிறேன் ''...
illa nee than tharanum...auto anupava?
மனதை தொட்ட வரிகள்.....நல்ல இருக்கே...
;)) மாட்டிட்டார் சிவா. ;)
அது என்ன எங்க வீட்டுப் பிள்ளை சிவா போ எல்லாம் மாட்டிட்டு இருக்காங்க!! ;)
Mathi said...
illa nee than tharanum...auto anupava?///
நோ நோ
ஆட்டோ
ஜார்ஜ் புஷ்
ஒபாமா
வருவாங்கல
அந்த கார் அனுப்புங்க...
@kousalya மனதை தொட்ட வரிகள்.....நல்ல இருக்கே...
//
வாங்க மகளிர் அணி...
வாங்க கௌசல்யா
;)) மாட்டிட்டார் சிவா. ;)
அது என்ன எங்க வீட்டுப் பிள்ளை சிவா போ எல்லாம் மாட்டிட்டு இருக்காங்க!! ;)
//
என்ன இது சின்னபுள்ளதனமா
உங்க வீட்டுப்பிள்ளை மாட்டுவேனா...
வாங்க இமா..நன்றி வருகைக்கு
அப்படியே சில பல சொந்த தத்துவத்தையும் அடிச்சு விடுறது!
சிவா, என்ன இது ஒரே தத்துவமா இருக்கு. இருங்க படிச்சுட்டு வரேன்.
@சிவா என்கிற சிவராம்குமார் said...
அப்படியே சில பல சொந்த தத்துவத்தையும் அடிச்சு ////
வாங்க சிவராம் அண்ணா
சொந்தமா என்னைக்கு யோசித்து இருக்கோம்
ஓகே ஒன்னு சொல்றேன்
ஒரு ப்ளாக் இருந்த அதில
எப்படிவது நூறு கமெண்ட் வாங்கிடனும் அது
மொக்கை போட்டாவது...
vanathy said...
சிவா, என்ன இது ஒரே தத்துவமா இருக்கு. இருங்க படிச்சுட்டு வரேன்.///
@வானதி
வாங்க வாங்க என்னத்த பண்ண எதவது எழுதலாம்னு பார்த்த அதுக்குள்ள
யாராச்சும் எழுதி அதில நூறு கமெண்ட்ஸ் வாங்கிடறாங்க
அதான் எப்படி.
தத்துவமுத்துக்கள் அருமை..
//Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்//
இது செம ..!!
//குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்//
என்னதான் மொக்கைப் பதிவராக இருந்தாலும் அவரது மொக்கையிலும் நல்ல கருத்துகள் இருக்கும் .. ஹி ஹி ஹி ..
வாங்க அமைதிச்சாரால்
நன்றி தங்கள் வருகைக்கு
ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
//Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்//
இது செம ..!!
December 7, 2010 6:06 PM
//குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்//
என்னதான் மொக்கைப் பதிவராக இருந்தாலும் அவரது மொக்கையிலும் நல்ல கருத்துகள் இருக்கும் .. ஹி ஹி ஹி ..////
அதாவது கோமாளியில் அவரது பதிவை பத்திதானே சொல்றீங்க
..உண்மைதான் அவர் மிக நல்ல மொக்கை பதிவர்
வருகைக்கு நன்றி
என்ன என்ன பெண்கள் பத்தியே நெறைய பழமொழி எல்லாம் இருக்கு போல ...வாட் மேட்டர் சார்,,? ஹா ஹா
அப்பாவி தங்கமணி said...
என்ன என்ன பெண்கள் பத்தியே நெறைய பழமொழி எல்லாம் இருக்கு போல ...வாட் மேட்டர் சார்,,? ஹா ஹா//
பெண்கள் நாட்டின் கண்கள் அதனால ....
வருகைக்கு நன்றி அப்பாவி
Post a Comment