Saturday, December 18, 2010

கடலை போடறது....(கடலை.)..!



முஸ்கி:

நாம இப்போ பார்க்க போற விசியம் கடலை போடறது பத்தி இல்லை...கடலை பத்தி..அதாவது நிலக்கடலை..வேர்க்கடலை...
உங்கள் எல்லாருக்கும் தெரிந்த விசயம் இருந்தாலும் ஒரு போஸ்ட் போட்ட என்ன என்று யோசிக்கும்போது .....

எங்கயோ வாசித்த சில தகவல்கள் :


கடலை என்பது மிகவும் உடல் பருமன் குறைய, ரத்தம் சீராக ஓட, ரத்த அழுத்தம் குறைய, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது. புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்கள் அழிய, நரம்புகள் நன்றாகச் செயல்பட, நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைய, பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க, கடைகளில் எளிதாக குறைந்த விலையில் கிடைக்கும்..

[B]கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.
[/B] வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி 3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப்பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிடவேண்டும்.


கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே? உடலுக்குக் கெடுதி இல்லையா? தண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும்.

இதை நீரின் கொதிநிலை என்பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள். எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட
கொழுப்புகள் உருவாகிவிடும். கடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய் களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது. ஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320. இதனால் கடலை எண் ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது.

அதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது. அதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும். ஆனால் சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.

[B]வேர்க்கடலை எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்? [/B]

வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு.

வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச்சத்து அதிகமாக உள்ளது.

அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச்சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.

[B]சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவா?[/B]

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.

வேர்க்கடலையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு.

எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம்.

மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன் களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.


[B]வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன? [/B]

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு.

எனவே வேர்க் கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக் காது; குறையும்.

வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடு வதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.

வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன.

அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்து விடுகின்றன. நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள். இப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும் போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.


ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டு விடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும். வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகச் செயல்படுகின்றன. இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.


[B]வேர்க்கடலை ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்? [/B] ..அதாவது உங்க இஷ்டத்துக்கு சாப்பிட்டால் ஒன்னும் ஆகாது அடுத்த நாள் ரெஸ்ட் எடுக்க வேண்டி வரும்...நாம மேட்டருக்கு வருவோம்..

வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடு வதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிடவேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன. ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம். வேர்க்கடலையை சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக்கூடியது.

மிக்க நன்றி பொறுமையுடன் வாசித்தமைக்கு



கடலை போடறதுக்கு பதிலா கடலை சாப்பிடலாமே அப்படி யாரவது நினைத்தால் உங்கள் வாழ்க்கை அமோகம் ஆகும்."ஏதனும் தவறுகள் இருப்பினும் பொறுத்து கமெண்டில் அருள்க"

20 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

கடலை போட்டா, ச்சே...சாப்பிட்டா இவ்ளோ நன்மை இருக்கா! நன்றி சிவா.

Mathi said...

சிவா ..வர வர ..ரொம்ப தான் தத்துவம் , அறிவுரை என்று சொல்லிட்டே இருக்கிறே ?
என்ன ஆச்சு ? இருந்தாலும் தெரியாத தகவல்கள் ...நன்றி பகிர்வுக்கு

Anonymous said...

அப்ப கடலை போடுறது நல்லது தான்

Mathi said...

உங்களை ஒரு தொடர் பதிவிருக்கு அழைத்திருக்கிறேன்

Mathi said...

உங்களை ஒரு தொடர் பதிவிருக்கு அழைத்திருக்கிறேன்

சுபத்ரா said...

Smoke Point
கடலை எண்ணெய் பற்றிய தகவல்கள்
Glycemic Index
Aflotoxin - Fungus

இவை அனைத்தும் தெரியாத தகவல்கள். சிறந்த பதிவு. மிக்க நன்றி.

Unknown said...

சைவகொத்துப்பரோட்டா said...
கடலை போட்டா, ச்சே...சாப்பிட்டா இவ்ளோ நன்மை இருக்கா! நன்றி சிவா.//


முதலில் கடலை போட்ட அண்ணன் சாரி
கமென்ட் போட்ட புரோட்டா அண்ணன் வாழ்க

Unknown said...

சிவா ..வர வர ..ரொம்ப தான் தத்துவம் , அறிவுரை என்று சொல்லிட்டே இருக்கிறே ?
என்ன ஆச்சு ? இருந்தாலும் தெரியாத தகவல்கள் ...நன்றி பகிர்வுக்கு//



வாங்க வாங்க மதி

நன்றி தங்கள் கருத்துக்கு ..

என்ன ஆச்சு?அதாங்க எனக்கும் தெரியலை.

Unknown said...

@மதி
உங்களை ஒரு தொடர் பதிவிருக்கு அழைத்திருக்கிறேன்///

..அட நம்மை கூட அழைத்து இருக்கங்கள.! ..


நன்றிங்க

நன்றிங்க

Unknown said...

@கல்பனா said...
அப்ப கடலை போடுறது நல்லது தான்//


வாங்க பிரபல பதிவர் கல்பனா அவர்களே..

கடலை போடறது நல்லதாணு எனக்கு தெரியாதுங்க...
கடலை சாபிட்றது நல்லதுங்க .:)

நன்றி தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்

Unknown said...

@சுபா.

smoke Point
கடலை எண்ணெய் பற்றிய தகவல்கள்
Glycemic Index
Aflotoxin - Fungus

இவை அனைத்தும் தெரியாத தகவல்கள். சிறந்த பதிவு. மிக்க நன்றி///



வாங்க இந்த பதிவை முழுமையா படித்த பிரபல பதிவர் சுபத்ரா அவர்களே வருக....//



நன்றி தங்கள் வருகைக்கு

மீண்டும் வருக..

மாணவன் said...

//கடலை போடறது....(கடலை.)..//

தலைப்பை பார்த்துட்டு வேற மாதிரி நினைச்சி வந்தேன்,
கடலையைப் பற்றி சிறப்பான பயனுள்ள தகவல்களை சொல்லி அசத்திட்டீங்க சூப்பர்...

இதுபோன்ற தகவல்களை இன்னும் பதிவு செய்யுங்கள்

பகிர்வுக்கு நன்றி

மாணவன் said...

வேர்க்கடலை.. படமும் கடைசியில் கடலை மிட்டாய் படமும் அருமை

கடலை மிட்டாய் நீங்க செஞ்சதா?

ஹிஹிஹி.......

vanathy said...

good post!

Unknown said...

@ மாணவன்
வேர்க்கடலை.. படமும் கடைசியில் கடலை மிட்டாய் படமும் அருமை

கடலை மிட்டாய் நீங்க செஞ்சதா?

ஹிஹிஹி.......//


நன்றி மாணவன்
தொடர்ந்து தரும்
கருத்திருக்கும் வருகைக்கும்
நன்றி
(மிட்டாய் கூகுளே உதவி )

Unknown said...

@vanathy said...
good post!//



வாங்க வானதி

நன்றி தங்கள் வருகைக்கு.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//கடலை போடறதுக்கு பதிலா கடலை சாப்பிடலாமே அப்படி யாரவது நினைத்தால் உங்கள் வாழ்க்கை அமோகம் ஆகும் //
என்ன ஆச்சு சிவா?...ஒகே ஒகே...

Unknown said...

அப்பாவி தங்கமணி said...//கடலை போடறதுக்கு பதிலா கடலை சாப்பிடலாமே அப்படி யாரவது நினைத்தால் உங்கள் வாழ்க்கை அமோகம் ஆகும் //
என்ன ஆச்சு சிவா?...ஒகே ஒகே...///



ஒன்னும் ஆகவில்லைங்க சும்மா ...நன்றி தங்கள் தொடர்ந்த பின்னோட்டம் அனைத்துக்கும்.

Jaleela Kamal said...

கடலை பற்றி விளாவாரியான் பதிவு
வேர்கடலை உருண்டை, ரொம்ப பிடிக்கும், மீன் சாப்பாடு சாப்பிட்டால் வேர்கடலை உருண்டை சாப்பிடுவோம்

Unknown said...

Jaleela Kamal said...
கடலை பற்றி விளாவாரியான் பதிவு
வேர்கடலை உருண்டை, ரொம்ப பிடிக்கும், மீன் சாப்பாடு சாப்பிட்டால் வேர்கடலை உருண்டை சாப்பிடுவோம்

December 29, 2010 8:46 PM//
நன்றி தங்கள் தொடர்ந்த பின்னோட்டம் அனைத்துக்கும்.

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...