Friday, July 15, 2011

கிராமத்து கனவிலே...(2)..The end

ஜீவா சுமாராய்ப் படிப்பவன். ராஜேஷ் அவனுக்கு முன்னால் இருப்பவன், படிப்பதைப் பொறுத்து முடிவுகள் இருக்கும். கணேஷ் ஒரு அளவுக்கு படிப்பான். எப்படியோ மூவரும் ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்றாய் படிப்பவர்கள், இன்று பிளஸ் 2 வரை வந்து விட்டனர்.

இப்படி இருக்க ஜீவா இன்னும் அந்த கிராமத்துக் கனவிலே லயித்து இருந்தான். காரணம் அந்த கனவில் வந்த....

ஐந்தாம் வகுப்பில் காலணாவுக்கு கடலை மிட்டாயும் மீதிக்கு தேன்மிட்டாயும் வாங்கிகிட்டு
அவனுக்குக் கொடுக்க வேண்டும் என்று மெனக்கெட்டு அவனது அருகில் வந்து யாரும் பார்க்காம போது அவனிடம் கொடுத்து சாப்பிடச் சொல்லும் அவனோட அத்தை பொண்ணு ரேவதி தான் அவன் கனவுக்கு காரணம்.


ரேவதியைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிட்டு. இப்போது எப்படி இருப்பா!! அப்போ

'குண்டு பொண்ணு' அப்டின்னு கிண்டல் பண்ணிட்டு இருப்போம். இப்போ பார்த்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

உப்புக்கும் காரணம் இல்லாத ஒரு சின்னக் குடும்பச் சண்டையில் இரு குடும்பமும் வெகு தொலைவு பிரிந்து விட்டார்கள்.

அப்போது ராஜேஷ், "ஏய் ஜீவா! தமிழ் வாத்தி வாந்துட்டாரடா." என்று எழுப்பிவிட்டான்.

கன நேரம் எல்லாம் மறந்து ரேவதியை பற்றி நினைத்துக் கொண்டு இருந்தான்.

ஜீவா பொதுவாக எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டான், சோம்பேறியும் கிடையாது. அதே சமயம் "அவன் வேலையில் சமத்தாக இன்று வரை இருந்து இருக்கிறான்." என்று மற்றவர்கள் கூறக் கேட்டு இருக்கிறான்.

இந்த சமயத்தில் திடீரெண்டு ரேவதி நினைவுக்கு வரவும் ஒரு வித மனக்கலக்கம் அடைந்து இருந்தான்.

இந்த வருடம் விடுமுறையில் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று உள்மனம் சொல்லிகொண்டே இருந்தது.

நாட்கள் நகர்ந்தன. காலாண்டு, அரையாண்டு, மூன்றாம் பருவத் தேர்வும் பள்ளி இறுதித் தேர்வும் நெருங்கிவிட்டது.

இந்த தேர்வு நல்லபடியாக எழுத வேண்டும் என்று தந்தை அறிவுரை கூறிகொண்டே இருந்தார். "சரி, சரி" என்று கேட்டுக்கொண்டே அவனால் முடிந்த அளவுக்கு தேர்வையும் எழுதி முடித்து இருந்தான்.


அவனது எண்ணம் எல்லாம் நகரத்தில் இருக்கும் கல்லூரியில் படிக்க வேண்டும்.


பள்ளி தேர்வுகள் வெளி வந்தன. அவனும் நண்பனும் முதல் வகுப்பில் தேறி இருந்தனர். இருவரில் ராஜேஷ் கணேஷை விட கூடுதல் மதிப்பெண்கள் பெற்று இருந்தான்.

ஜீவாவும் பள்ளியில் மூன்றாம் இடம் பெற்று இன்ஜினியரிங் கல்லூரி செல்லும் தனது கனவை நிஜமாக்கிக் கொண்டான்.

இதற்கு இடையில் கிராமத்தில் முக்கிய தலைவர் ஒருவர் திருமணத்தில் இரு குடும்பங்களும் சந்தித்துக் கொண்டன. ஜீவா எதிர்பார்க்கவே இல்லை, இப்படி ரேவதியைப் பார்ப்போம் என்று.

திருமணத்தில் பரிமாறும் இடத்தில் ஜீவாவும் நண்பர்களும் சேர்ந்து அங்கு இருந்தவர்களுக்கு பரிமாறி கொண்டு இருந்தனர்.


அப்போது "ஏன்பா, சாம்பார் கொஞ்சம் இங்க போடு." என்ற ஒரு தேன்குரல். ஜீவாதான் அது என்று ரேவதிக்குத் தெரியாது.

ஜீவாவுக்கு மட்டும் தெரியும் அந்த குண்டு விழி பார்வையும், அழகான கன்னக்குழி அழகும் இவள்தான் ரேவதி என்று புரிந்து கொண்டான். ரேவதிக்கும் எங்கோ பார்த்த நியாபகம் என்று யோசித்து அறிந்து கொண்டாள்.

சம்பிரதாய விசாரிப்புகளுக்குப் பிறகு இருவரும் பால்ய நினைவுகள் பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது அவள் தந்தை குரல் கேட்டு பிறகு சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.

அந்த நேரம் மாமாவின் மேல் வந்த கோவத்துக்கு அளவே இல்லை. பின்னாடி அவன் நண்பன் ராஜேஷ் வந்து, "யாருடா அது? சொல்லவே இல்லை." அப்படி இப்படி என்று இவனை இன்னும் உசுப்பேற்றிக் கொண்டு இருந்தான்.

அந்த திருமணத்தில் மீண்டும் இரு உறவுகளும் பழசு மறந்து வழக்கம் போல பேசிக்கொண்டு இருந்தது இருவருக்கும் மனதில் ஒரு சந்தோசத்தை கொடுத்தது.

இந்த வருடம் கல்லூரிக்கு செல்வது பற்றி அவனது பெற்றோர் பேசிக்கொண்டு இருந்தனர்.
அந்த சமயத்தில் வீட்டில் பின்பக்கக் கூடத்தில் ரேவதி கண்களில் நேசமும், குறும்பு பார்வைகளும், ஜீவாவை பேச விடாமல் திணறடித்துக்கொண்டு
தலையாட்டி பொம்மையாக வைத்து இருந்தது. பிறகு தொலை பேசி எண்கள் பரிமாறப்பட்டன

அதற்குள் சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதற்கான எண்ணத்தின் அறிகுறிகள் இரு பெற்றோர்களிடமும் இருந்தது.

பிறகு மூன்று ஆண்டுகள் ஜீவா ரேவதி உபயத்தால் ஒரு தொலைபேசி நிறுவனம் நன்கு செழித்து வளந்தது இவர்கள் நேசத்தைப் போல.

படிப்பு முடிந்ததும் நல்ல வேலையில் ஜீவா சேர்ந்தான். திருமணப் பத்திரிகை அச்சடித்து கிராமத்து வீட்டில் திருமணம்


வெகு சிறப்பாக நடைபெற்றது.


டிஸ்கி:

* கதையில வில்லன் அப்டின்னு யாரும் வரலைன்னு கவலைப்படக் கூடாது.
வேகமாய் முடித்த காரணம் 'மண்டையில் அவ்வளோதான் மசாலா இருக்கு.' என்று எண்ணிக்கொள்ளவும்

* சூழ்நிலையும் சாதகமாக இல்லை, அதனால் அதிகம் ப்ளாக் பக்கம் வரமுடிவது இல்லை.

*எழுதுவதை விட வாசிப்பது பிடிக்கின்றது. ஆனால் மீண்டும் நேரம் கிடைக்கும் போது என்னுடைய மொக்கைகள் தொடரும்.

*அப்பாட இன்னும் கொஞ்ச நாளைக்கு வரமாட்டேனு சந்தோசமா ஒரு சிரிப்பு சிரிக்கிறீங்கள்
ம் ம் ம்
ஓகே ஸ்வீட் எடு கொண்டாடு....:)
மீண்டும் பொறுமையுடன்
படித்தமைக்கு நன்றி

31 comments:

Unknown said...

இதுவரை யாரு கமெண்ட் போடாத காரணத்தால் ..
மீ தி fistuu
எப்புடி...

Angel said...

No No இது அழுகுணி ஆட்டம் .நான் தான் ஃபர்ஸ்டு .
எனக்கு இந்த ஸ்வீட்லாம் வேணாம் .i want then muttaai ,. (தேன்முட்டாய்).

vanathy said...

ம்ம்ம்...கதையும் எழுதியாச்சு. கொஞ்சம் சஸ்பென்ஸ் வைச்சு எழுதியிருக்கலாம்.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

mee da pesddduuuuuu:)).

அடடா... சிவா... தூசு தட்டிட்டார், நாந்தான் இப்போ.. அதுவும் ஒரு ஆக்சிடண்ட் போல கண்ணில பட்டுது... உடனே வந்தேன் ஓடி:)).

இப்பூடியெல்லாம் கதை எழுதுவீங்களோ? நிஜம்போலவே இருக்கு.

இவ்ளோ ஈசியா ரேவதியைக் கைப்புடிச்சிட்டாரே.. அவ்வ்வ்:)).

//* கதையில வில்லன் அப்டின்னு யாரும் வரலைன்னு கவலைப்படக் கூடாது. //

ஆர் சொன்னது வில்லன் இல்லை என:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்போ சிவா ஆரூஊஊஊஊஉ:))).

இமா க்றிஸ் said...

ஹச்சும்! அது ஒண்டும் இல்ல.. தூசு மூக்கில ஏறீட்டுது. ;)
//ஆர் சொன்னது வில்லன் இல்லை என// எனக்கும் //'குண்டு பொண்ணு' அப்டின்னு கிண்டல் பண்ணிட்டு இருப்போம்.// பார்க்க கொஞ்சம் டவுட்டா தான் இருக்கு அதீஸ். ;))

ம.தி.சுதா said...

/////சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதற்கான எண்ணத்தின் அறிகுறிகள் இரு பெற்றோர்களிடமும் இருந்தது.
////

இது பல பெரியாரிடம் காண் கூடு காணக்கூடிய ஒரு ஆதங்கம் சகோதரா.. அருமையான ஆக்கம்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

ரேவா said...

ஹ ஹ ஹ..ஸ்டோரி ஆரம்பிச்சதும் முடிச்சுட்ட, நல்லாத்தான் இருந்தது..அடிக்கடி பதிவு போடு சிவா

சாந்தி மாரியப்பன் said...

ஏன்ன்ன்.. கதை நல்லாத்தானே இருக்கு. சாதுவான வில்லனா ஈகோ இருந்து, ரெண்டு குடும்பமும் திருந்தியிருக்குதே :-))

சாந்தி மாரியப்பன் said...

ஏன்ன்ன்.. கதை நல்லாத்தானே இருக்கு. சாதுவான வில்லனா ஈகோ இருந்து, ரெண்டு குடும்பமும் திருந்தியிருக்குதே :-))

Unknown said...

siva said...
இதுவரை யாரு கமெண்ட் போடாத காரணத்தால் ..
மீ தி பிஸ்தூ//



ஹ்க்கும் உன்ன அடிச்சுக்க யாரும் இல்ல :)(எனக்கு நானே பதில்)

Unknown said...

angelin said...
No No இது அழுகுணி ஆட்டம் .நான் தான் ஃபர்ஸ்டு .
எனக்கு இந்த ஸ்வீட்லாம் வேணாம் .i want then muttaai ,. (தேன்முட்டாய்).

July 18, 2011 8:20 பம்//



சரி சரி, மிட்டாய் எடுத்துக்கோங்க ரெண்டு மிட்டாயும் உங்களுக்குத்தான்..

நீங்கதான் fistuu

அக்கா நன்றி தங்க வருகைக்கு

Unknown said...

vanathy said...
ம்ம்ம்...கதையும் எழுதியாச்சு. கொஞ்சம் சஸ்பென்ஸ் வைச்சு எழுதியிருக்கலாம்.

July 18, 2011 8:43 PM

/

அக்கோவ் இது பொய் கதைன்னு சொல்றேங்கலே சும்மா மொக்கை..
இருந்தாலும் நன்றி தங்கள் வருகைக்கு

Unknown said...

athira said...
mee da pesddduuuuuu:)).----

ஓகே நீங்கள் பிசட்டு :)

அடடா... சிவா... தூசு தட்டிட்டார், நாந்தான் இப்போ.. அதுவும் ஒரு ஆக்சிடண்ட் போல கண்ணில பட்டுது... உடனே வந்தேன் ஓடி:))...

நன்றி நன்றி உங்கள் கடமை உணர்ச்சிக்கு..:)

இப்பூடியெல்லாம் கதை எழுதுவீங்களோ?/// நிஜம்போலவே இருக்கு..//

.நிஜம் இல்லை நம்பாதிங்கோ....

இவ்ளோ ஈசியா ரேவதியைக் கைப்புடிச்சிட்டாரே.. அவ்வ்வ்:))..


.**ஏன் ஏன் இப்படி கதையில கூட கைபிடிக்க கூடாதா?**

//* கதையில வில்லன் அப்டின்னு யாரும் வரலைன்னு கவலைப்படக் கூடாது. //

ஆர் சொன்னது வில்லன் இல்லை என:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்போ சிவா ஆரூஊஊஊஊஉ:))).--மீ ஒன்லி டைரக்டர் ஒப் திஸ் ஸ்டோரி...

**அம நாட் வில்லன் ..வில்லன் எங்க மாமாதான்..**
நன்றி தங்கள் வருகைக்கு

Unknown said...

இமா said...
ஹச்சும்! அது ஒண்டும் இல்ல.. தூசு மூக்கில ஏறீட்டுது. ;)
//ஆர் சொன்னது வில்லன் இல்லை என// எனக்கும் //'குண்டு பொண்ணு' அப்டின்னு கிண்டல் பண்ணிட்டு இருப்போம்.// பார்க்க கொஞ்சம் டவுட்டா தான் இருக்கு அதீஸ். ;))

July 19, 2011 4:18 அம/

வாங்க வாங்க என்ன டவுட் உங்களுக்கு..?
ம் என்ன சிரிப்பு ..:

Unknown said...

FOOD said...
Nice story.

July 19, 2011 9:45 AM//

Thank you.

Unknown said...

FOOD said...
Share ur thoughts regularly.

July 19, 2011 9:46 அம//



எங்க நண்பரே

முடிந்த வரையில் முயற்சிக்கிறேன் நன்றி தங்களின் மேலான வருகைக்கு

Unknown said...

♔ம.தி.சுதா♔ said...
/////சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதற்கான எண்ணத்தின் அறிகுறிகள் இரு பெற்றோர்களிடமும் இருந்தது.
////

இது பல பெரியாரிடம் காண் கூடு காணக்கூடிய ஒரு ஆதங்கம் சகோதரா.. அருமையான ஆக்கம்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

July 19, 2011 1:45 பம்/





வாங்க பிரபல பதிவர் அவர்களே

நன்றி தங்கள் அருகைக்கும் கருத்துக்கும்

Unknown said...

ரேவா said...
ஹ ஹ ஹ..ஸ்டோரி ஆரம்பிச்சதும் முடிச்சுட்ட, நல்லாத்தான் இருந்தது..அடிக்கடி பதிவு போடு சிவா

July 19, 2011 2:00 பம்//



வாங்க கவிதை மேடம்

நன்றி

அடிக்கடி லீவேதான் போடுவேன்

பதிவு எல்லாம் ....மாட்டேன் :)

Unknown said...

அமைதிச்சாரல் said...
ஏன்ன்ன்.. கதை நல்லாத்தானே இருக்கு. சாதுவான வில்லனா ஈகோ இருந்து, ரெண்டு குடும்பமும் திருந்தியிருக்குதே :-))

July 19, 2011 7:57 ப//



வாங்க வாங்க சாரல்


நன்றி தங்கள் வருகைக்கு

சாகம்பரி said...

சில அவார்ட் படங்கள் முடித பின்னும் இருக்கையைவிட்டு எழவிடாமல் சிந்திக்க வைக்கும். கதை முடிந்துவிட்டதா? இன்னும் இருக்கிறதா? என்று தெரியாமல் திரையையே பார்த்து நிற்போம். சிவா சார், கதை முடிஞ்சுதா இல்லையா?

Anonymous said...

சிவா அண்ணாவ்,


கதை நல்லா இருக்கு ஆனா கொஞ்சம் அதுல சொந்த அனுபவம் ஏதும் கலந்திருக்கும் போல தெரியுதே!! Anyway சாப்பாடு பிரமாதம் !

M.R said...

கதை நன்றாக உள்ளது சகோ .

பகிர்வுக்கு நன்றி சகோ..

மாய உலகம் said...

என்னங்க கல்யாண்ம் முடிஞ்சுடுச்சா... கதையில் எல்லாமே பாசிட்டிவ்... ம்ம்ம் நிஜ லைப்ல மட்டும் ஏங்க இது மாதிரில்லாம் நடக்குறதில்ல..

வாழ்த்துக்கள்

Anonymous said...

கதையில் நீங்கள் தான் வில்லன் சிவா...சீக்கிரம் முடித்ததுக்காக...

ரசித்தேன்...

Unknown said...

சில அவார்ட் படங்கள் முடித பின்னும் இருக்கையைவிட்டு எழவிடாமல் சிந்திக்க வைக்கும். கதை முடிந்துவிட்டதா? இன்னும் இருக்கிறதா? என்று தெரியாமல் திரையையே பார்த்து நிற்போம். சிவா சார், கதை முடிஞ்சுதா இல்லையா?

July 20, 2011 12:27 பம்//



நன்றி டீச்சர்

கதை மீண்டும் தொடரும் :))

Unknown said...

En Samaiyal said...
சிவா அண்ணாவ்,


கதை நல்லா இருக்கு ஆனா கொஞ்சம் அதுல சொந்த அனுபவம் ஏதும் கலந்திருக்கும் போல தெரியுதே!! Anyway சாப்பாடு பிரமாதம் !

July 23, 2011 8:01 அம//



அக்காவோ

நன்றி நன்றி

அனுபவமா இல்லை....

நன்றி மீண்டும் வருக

Unknown said...

M.R said...
கதை நன்றாக உள்ளது சகோ .

பகிர்வுக்கு நன்றி சகோ..

July 23, 2011 3:20 பம்//



நன்றி சகோ

மீண்டும் வருக

Unknown said...

மாய உலகம் said...
என்னங்க கல்யாண்ம் முடிஞ்சுடுச்சா... கதையில் எல்லாமே பாசிட்டிவ்... ம்ம்ம் நிஜ லைப்ல மட்டும் ஏங்க இது மாதிரில்லாம் நடக்குறதில்ல..

வாழ்த்துக்கள்

July 23, 2011 7:22 பம்//



என்ன சார் பண்றது உண்மைதான் நீங்கள் சொல்வது

நிஜம் வேற எது பதிவு சும்மா

இப்படி இருந்த எப்படி இருக்கும் :)

Unknown said...

everie said...
கதையில் நீங்கள் தான் வில்லன் சிவா...சீக்கிரம் முடித்ததுக்காக...

ரசித்தேன்...

July 23, 2011 7:49 பம்//



நன்றி அண்ணா

எனக்கு நம்பியாரை ரொம்ப பிடிக்கும்

நன்றி தங்கள் ரசனைக்கும் வருகைக்கும்

புதியஜீவன் said...

சொந்த கதைங்களா?

Unknown said...

புதியஜீவன் said...
சொந்த கதைங்களா?--noooo

July 30, 2011 12:05 AM
வாங்க புதிய ஜீவன்
உங்கள் கதைக்களம் அருமை
வாழ்க வளமுடன்

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...