Saturday, September 25, 2010

சைக்கிள் ஓட்டிய கதை..


சிவா சைக்கிள் ஓட்டிய கதை..

முன்னொரு காலத்தில அதாவது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது, திரும்ப படியுங்க படித்துக்கொண்டு இருக்கும்போது முழுபரிட்சை முடிந்து எங்கள் தாத்தா வீட்டிக்கு செல்வது வழக்கம்.


தாத்தா வீடு ஒரு பஸ் போகாத கிராமம். அப்போவே தாத்தாகிட்ட ஒரு மாட்டு வண்டி இருந்துச்சு. அதில வைக்கோல் எல்லாம் போட்டு அதில ஜமுக்காளம் போட்டு பேரப்பிள்ளைங்களுக்கு உடம்பு வலிக்குமாம், வைத்து இருப்பார். அதில அம்மா தம்பிங்க நானும் எல்லாம் போவோம். எங்களுக்காக பகோடா அப்புறம் பூந்தி, காரபூந்தி எல்லாம் வாங்கி வச்சுருப்பார். மாட்டு வண்டி கொஞ்ச தூரம் போறதுக்குள்ள எல்லாம் காலி பண்ணிடுவோம்.


அந்த இரண்டு மாதம் போறதே தெரியாதுங்க, டெய்லி எதாச்சும் சேட்டை பண்ணிக்கிட்டு எப்போதும் ஓடிப்பிடிச்சு, திருடன் போலீஸ், புளியமரம் ஏறுறது, மாங்காய் அடிக்கிறது, இந்த

புளியமரம் சோட்டன் இருக்குல, அது எனக்கு ரொம்ப பிடிக்கும். புளிப்பு இருக்கும். அதில உப்பு வச்சு சாப்பிடற சுகம் இருக்கே... உங்களுக்கும் சாப்பிடணும் போல இருக்குமே.. ம்

அப்புறம் என் கூட்டாளிங்கள மறந்து விட்டேனே. பால்வண்டி மணி, எலும்பு பிரபு, மக்கு கிருஷ்ணா, அப்புறம் குட்டி சிவா.. (நாந்தாங்க சின்ன பிள்ளையாக்கும்). எப்போ பார்த்தாலும் அவங்க கூடத்தான் அந்த ஏப்ரல், மே லீவ் போகும்.. அடிக்கிற எல்லா மழை வெயில் எல்லாமே எங்களுக்காகத்தான்...

மணி அப்பா பால் வியாபாரம். பால்வண்டி மணி.. பிரபு அவ்ளோ ஒல்லியா இருப்பான் - எலும்பு பிரபு.. கிருஷ்ணா அப்பா வாத்தியார் (அதான் அறவே படிக்கமாட்டான். பின்ன எப்போ பாரு முழு பரீட்சை லீவிலும் படி படின்னு சொல்லிகிட்டே இருந்தா கோவம் வராதா கிருஷ்ணாவுக்கு) அதனால அவங்க அப்பாவ எப்படி திட்டுவான்னு எங்களுக்கு மட்டுமே தெரியும்... சொல்லி சிரித்துக்கொண்டே இருப்போம்... நேரம் போறதே தெரியாது.


இதில பிரபுவும் நானும் கொஞ்சம் ஏதோ படிப்போம்.. (நம்புங்க).. அதனாலே கிருஷ்ணாவுக்கும் எங்களுக்கும் சண்டை வரும், "உன்னாலதாண்டா எங்க அப்பா என்னைய திட்றார்"னு எங்க மேல அப்போ அப்போ கோவப்படுவான்.

அப்பறம் மணி, நிறைய இவனை பத்தி சொல்லலாம். கொஞ்சமா சொல்றேங்க, அப்புறம் மீதி சொல்கிறேன். மணி வந்து கிருஷ்ணாவுக்கு அண்ணா போல. இவனும் சுத்தமா படிக்க மாட்டாங்க. ஆனால் பிற வேலைகள் சின்ன பசங்களை மிரட்டி மிட்டாய் வாங்கி தின்றது, அப்பறம் என்னைய மாட்டு கொட்டில கட்டி போட்டு பயமுறுத்துதல், அப்புறம் சைக்கிள் நல்ல ஓட்டுவான். களிமண்ணு பொம்மை செய்றதுக்கு அவன்கிட்ட இருந்துதாங்க கத்துகிட்டேன். அப்புறம் அதில எக்ஸ்பெர்ட் ஆகிவிட்டேங்க, அது வேற விசியம்...

குரங்கு பிடல் சைக்கிள் ஓடறதுன்னா என்னனு உங்களுக்கு தெரியும்னு நினைக்கறேன். அதாவது அந்த கம்பிக்குள்ள பிடல் போட்டு ஓடறது தான் குரங்கு பிடல்.. ம் எனக்கு சைக்கிள் ஓட்றதில எல்லாம் பெருசா விருப்பம் இல்லைங்க. எதாச்சும் விளையாடறது, சிரிச்சிகிட்டே பேசிகிட்டு இருக்கிறது ரொம்ப பிடிக்கும்.

ஒரு நாள் எங்க அத்தை பொண்ணு, பேரு பொன்னி - அது எங்கயோ சைக்கிள் ஓட்ட.. அதும் குரங்கு பிடல் அளவுக்குத்தான் ஓட்டும். அதுதான் முதல்ல சைக்கிள் ஓட்டிகிட்டு என்கிட்ட வந்து காமிச்சுக்கிட்டு இருந்திச்சு. என்ன பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்டுச்சுங்க.... என்ன கேள்வி தெரியுமா? "உனக்கு எல்லாம் திங்க தான் தெரியும். சைக்கிள் ஓட்ட தெரியாது"ன்னு சொல்லிட்டுங்க. ரொம்ப அவமானமா போயிட்டு......


எப்படியாவது அந்த லீவில சைக்கிள் ஓட்ட கத்துக்கணும் என்று முடிவு பண்ணி நேரா மணிகிட்ட போய் "டே மணி எனக்கு சைக்கிள் ஓட்ட சொல்லித்தாடா"னு கேட்டா அவன் என்னைய மேலும் ஒரு முறை மொறச்சிட்டு "போடா சொல்லித்தர மாட்டேன்"னு சொல்லிட்டான்.. அப்புறம் அவன ஐஸ் வச்சு "டே மணி, உனக்கு தேன் முட்டாய், பர்பி, டீ cakku, பால் பண்ணு எல்லாம் வாங்கி தாரேன்"னு சொல்லி சேர்த்து வச்சு இருந்த காசு எல்லாம் அவனுக்கு வாங்கிக் கொடுத்து, அப்புறமா சைக்கிள் மாமாக்கிட்ட அழுது பிடிச்சு கேட்டு அந்த சைக்கிளை அப்படியே மெதுவா தள்ளிகிட்டே வந்தது புளிய மரத்தடி பக்கம் வந்தாச்சு.. அப்பறம் ரொம்ப களைப்பா இருக்கு அடுத்த பதிவில சொல்றேங்க...

17 comments:

செல்வா said...

//பால்வண்டி மணி, எலும்பு பிரபு,மக்கு கிருஷ்ணா,அப்புறம் குட்டி சிவா..(நாந்தாங்க சின்ன பிள்ளையாக்கும்)//

அட பேரு எல்லாம் செமையா இருக்கு ..!!

செல்வா said...

///எதில பிரபுவும் நானும் கொஞ்சம் ஏதோ படிப்போம்..(நம்புங்க)..//
என்ன படிப்பீங்க .. குமுதம் ., ஆனந்த விகடன் ..?!?

செல்வா said...

//சின்ன பசங்களை மிரட்டி மிட்டாய் வங்கி தின்றது அப்பறம் என்னயா மாட்டு கொட்டில கட்டி போட்டு பயமுறுத்துதல்//

அவரு கிட்ட இருந்துதான் நீங்க புடுங்கி தின்னுடுவீங்கலாமே ..?!?

செல்வா said...

//எதாச்சும் விளையாடறது சிரிச்சிகிட்டே பேசிகிட்டு இருக்கிறது ரொம்ப பிடிக்கும்.//

ஹி ஹி .. அஞ்சாங்கள் , அப்புறம் பாண்டியன் குழி , இந்த விளையாட்டு தானே நீங்க விளையாடுறது ..!!

செல்வா said...

//தேன் முட்டாய்,பர்பி,டீ cakku ,பால் பண்ணு எல்லாம் வாங்கி தாரேன்னு சொல்லி சேர்த்து வச்சு இருந்த காசு எல்லாம் அவனுக்கு வாங்கிகொடுத்து//
அதுலயும் பாதிய ஆட்டைய போட்டு நீங்களே சாபிட்டீங்க தானே .!!

கருடன் said...

நல்லா எழுதி இருக்கிங்க சிவா!! ஆனா இந்த தெடரும் சொன்னா தான் நமக்கு பிடிக்கா மாட்டுது... அவ்வ்வ்வ்


(உங்க ப்ளாக் பெயர் ரொம்ப பிடிச்சி இருக்கு.... :) )

கருடன் said...

//என்ன கேள்வி தெரியுமா? "உனக்கு எல்லாம் திங்க தான் தெரியும். சைக்கிள் ஓட்ட தெரியாது"ன்னு சொல்லிட்டுங்க. ரொம்ப அவமானமா போயிட்டு......//

இது பெருமைபட வேண்டிய விஷயம் பாஸ்....


(பிரபல பதிவர் போல Comment Moderation எல்லாம் போட்டு இருக்கிங்க...)

சிவராம்குமார் said...

அந்த குரங்கு பெடல் வார்த்தையை கேட்டவுடனே சின்ன வயசு ஞாபகம் வருது... சைக்கிள் ஓட்ட பழகும் போது கீழே விழுந்து ரெண்டு காலும் புல்லா அடி பட்டாலும் திரும்பி திரும்பி அந்த வாடகை சைக்கிள் ஓட்டிய காலமெல்லாம் மறக்கவே முடியாது....

இமா க்றிஸ் said...

;) சிவாவுக்கு இன்னும் சைக்கிள் உருட்டின களைப்பு தீரலயா?

அந்த 'அவமானம்' போட்டோ அழகா இருக்கு. ;)

Unknown said...

@செல்வகுமார்
அட பேரு எல்லாம் செமையா இருக்கு ..!!
வாங்க செல்வா குமாரா...
நன்றி..
என்ன படிப்பீங்க .. குமுதம் ., ஆனந்த விகடன் ..?!?
ஹ்க்கும் பள்ளிகூட புக்ஸ் படிக்கவே நேரம் இல்லை.
அப்போலாம் தங்கமலர்,சிறுவர் மலர் மட்டும்தாங்க...
@செல்வகுமார்
அவரு கிட்ட இருந்துதான் நீங்க புடுங்கி தின்னுடுவீங்கலாமே ..?!?..
என்னைய என்ன உங்கள போலன்னு நினைச்ட்டேன்களா..
@செல்வகுமார்
ஹி ஹி .. அஞ்சாங்கள் , அப்புறம் பாண்டியன் குழி , இந்த விளையாட்டு தானே நீங்க விளையாடுறது ..!!
அஞ்சங்கள் தெரியாது,பல்லாம்குழி தெரியும்.அது என்ன பாண்டியன் குழி???
அதுலயும் பாதிய ஆட்டைய போட்டு நீங்களே சாபிட்டீங்க தானே --
இல்லை அவனே போனாபோகுதுனு கொஞ்சம் கொடுப்பாங்க..:)பார்க்க வச்சு திண்ணா வயுறு வலிக்கும்மா..)

Unknown said...

@சிவராம்குமார் said...
அந்த குரங்கு பெடல் வார்த்தையை கேட்டவுடனே சின்ன வயசு ஞாபகம் வருது... சைக்கிள் ஓட்ட பழகும் போது கீழே விழுந்து ரெண்டு காலும் புல்லா அடி பட்டாலும் திரும்பி திரும்பி அந்த வாடகை சைக்கிள் ஓட்டிய காலமெல்லாம் மறக்கவே முடியாது....

அட ஆமாங்க சிவராம்குமார் பால்யம் எப்போதுமே பசுமையானது.
தங்கள் வருகைக்கு நன்றி

Unknown said...

@ TERROR-PANDIYAN(VAS) said...
நல்லா எழுதி இருக்கிங்க சிவா!! ஆனா இந்த தெடரும் சொன்னா தான் நமக்கு பிடிக்கா மாட்டுது... அவ்வ்வ்வ்
(உங்க ப்ளாக் பெயர் ரொம்ப பிடிச்சி இருக்கு.... :) )--நன்றி நன்றி

ரொம்ப நன்றி பாண்டியன் அண்ணா...விரைவில் தொடரும்...

Unknown said...

@ TERROR-PANDIYAN(VAS) said...

//என்ன கேள்வி தெரியுமா? "உனக்கு எல்லாம் திங்க தான் தெரியும். சைக்கிள் ஓட்ட தெரியாது"ன்னு சொல்லிட்டுங்க. ரொம்ப அவமானமா போயிட்டு......//
இது பெருமைபட வேண்டிய விஷயம் பாஸ்...நீங்க சொல்லிடீங்கள பாஸ் இனிமே பெருமை படுகிறேன்.


(பிரபல பதிவர் போல Comment Moderation எல்லாம் போட்டு இருக்கிங்க...)...அண்ணே நான் ஒரு சாதரண உங்களைபோல பிரபல பதிவர்களோட வாசகன் மட்டுமே...:)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//முன்னொரு காலத்தில அதாவது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது//
கி.மு 200 தானே... ஒகே ஒகே...


ம்ம்.. அத்தை மகள் ரத்தினம் தான் inspiration ஆ சைக்கிள் ஒட்டி பழகினதுல.. ஒகே ஒகே... அடப்பாவி இதுல தொடர் பதிவு வேறயா? Too much I say

Unknown said...

@ அப்பாவி தங்கமணி said...

///முன்னொரு காலத்தில அதாவது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது//
கி.மு 200 தானே... ஒகே ஒகே...---நோ நோ இயர் எப்படி சொல்லகூடாது
ம்ம்.. அத்தை மகள் ரத்தினம் தான் inspiration ஆ சைக்கிள் ஒட்டி பழகினதுல.. ஒகே ஒகே... அடப்பாவி இதுல தொடர் பதிவு வேறயா? Too much I செ///

"அத்தை மகளுக்கு வேற இடத்தில திருமணம் ஆகிவிட்டது :((((((...அப்பாவி
நோ நோ இயர் எப்படி சொல்லகூடாது --பப்ளிக்(place )
எல்லாம் உங்க பதிவின் தாக்கம்தான் :)))ஹிஹிஹி "

Jaleela Kamal said...

இந்த பதிவு, சைக்கிள், மாட்டு வண்டி எல்லாம் என் 7 வகுப்பை நினைவு கூற வைக்கிரது

சுபத்ரா said...

வைக்கோல் போட்ட மாட்டுவண்டி
திருடன் போலீஸ்
மரம் ஏறுறது
மாங்கா பறிக்கிறது
புளியங்காய உப்புல தொட்டு திங்கிறது (சாப்பிடுறது இல்ல)
பட்ட பெயர்கள்
மிட்டாய்
சைக்கிள் ஓட்டுறது
களிமண் பொம்மை செய்றது
பெடல்ல மிதிச்சு சைக்கிள் ஓட்டுறது
ஐயோ...........அப்புறம்
தேன் மிட்டாய்
பர்பி
கேக்
பால் பன் :-)

ஸ்ஸ்ஸஸப்ப்பா... கலக்கிட்ட சிவா :-)
எல்லாமே சின்ன வயசுல ஊர்ல enjoy பண்ணுனது :-)

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...