Monday, September 20, 2010

தேடல்...


!!!

பிரிதலின்
துயரத்தை
புரியவைத்த
இந்த
தேடலின்
தொலைவில்
காணமல்
போய்விட்டேன்.


நட்பும்
நேசமும்
கொஞ்சமும்
குறையாத
கோவமும்
எல்லாம்
அன்பால் வந்த
விளைவுகள்தான்
என்பதை
அழகாய் புரியவைத்தது
இந்தத் தேடல்.


முகம் காணா
தொலைவில் இருந்தும்
அருகில் இருப்பதாய்
ஒரு கற்பனை!

கல்லூரி முடிந்து
வரும்
பிரிவின் துக்கம்
சொல்ல முடியா
வலி..

இதயத்தின்
வலியை
கண்ணீரால்
வெளியேற்ற கூட
முடிவில்லை...

தொண்டையை
விட்டு வரவே மாட்டேன்
என்கிற அழுகை
நீ தூர நடந்ததும்
கொட்டும் மழையாய்...

எல்லாம்
சரியாகிவிடும்
என்று
நம்பிக்கையில்
ஒரு
ஒரு
தினமும்
அனுபவம்
என்ற
வார்த்தையின்
அர்த்தம்
உணர
முயற்சிக்கிறேன்..!

24 comments:

சிவராம்குமார் said...

//தொண்டையை
விட்டு வரவே மாட்டேன்
என்கிற அழுகை
நீ தூர நடந்ததும்
கொட்டும் மழையாய்...//

எளிமையான ஆனால் மிக அருமையான பிரவாகம்!

Anonymous said...

//தொண்டையை
விட்டு வரவே மாட்டேன்
என்கிற அழுகை
நீ தூர நடந்ததும்
கொட்டும் மழையாய்...//

வலி மிகுந்த வரிகளானாலும் ரசிக்கவைத்த வார்த்தைகள்.

அருண் பிரசாத் said...

உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள் சிவா. வாழ்த்துக்கள்!

இமா க்றிஸ் said...

உணர்ந்து விழுந்த வசனங்களோ என்று தோன்றுகிறது.

அருமை சிவா.

செல்வா said...

//தொண்டையை
விட்டு வரவே மாட்டேன்
என்கிற அழுகை
நீ தூர நடந்ததும்
கொட்டும் மழையாய்...//

தேடல் அப்படின்னு தலைப்பு பார்த்ததும் பயந்துட்டேன் ..!!
நல்ல வேளை நீங்க கவிதை எழுதிருக்கீங்க ..
உங்களுக்கு அழுகை வருதா , இல்ல மழை வருதா ..?
அட ச்சே எனக்கு ஏன் நல்ல கமெண்ட் வர மாட்டேங்குது ..!?!

Unknown said...

@வாங்க செல்வகுமார். தேடல் அப்படின்னு தலைப்பு பார்த்ததும் பயந்துட்டேன் ..!!
நல்ல வேளை நீங்க கவிதை எழுதிருக்கீங்க ..
உங்களுக்கு அழுகை வருதா , இல்ல மழை வருதா ..?
அட ச்சே எனக்கு ஏன் நல்ல கமெண்ட் வர மாட்டேங்குது ..!?!
--எதுக்கு எல்லாம் பயப்பிடலாமா,நீங்க சிங்கம்ல.
படிச்சிட்டு உங்களக்கு என்ன வரதுன்னு சொல்லுங்க
நன்றி

Unknown said...

இமா said...

உணர்ந்து விழுந்த வசனங்களோ என்று தோன்றுகிறது.

அருமை சிவா.--என்னது வசனமா???தெரியலைங்க..எனக்கும் ஒண்ணும் தெரியாதுங்க.

ஏதோ தோன்றதை எழுதறேங்க.
வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி இமா.

Unknown said...

@அருண் பிரசாத் said...
உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள் சிவா. வாழ்த்துக்கள்!

நன்றி அருண் அண்ணா.

Unknown said...

@இந்திரா said...
வலி மிகுந்த வரிகளானாலும் ரசிக்கவைத்த வார்த்தைகள்.

மிக்க நன்றி இந்திரா
தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்.

Unknown said...

சிவராம்குமார் said...
எளிமையான ஆனால் மிக அருமையான பிரவாகம்!.

மிக்க நன்றி ராம்குமார் அண்ணா.
தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்.
நன்றி.!

இமா க்றிஸ் said...

சிவாவுக்கு இமாவின் உலகத்தில் ( http://imaasworld.blogspot.com/2010/08/blog-post_11.html ) ஒரு அழைப்புக் காத்திருக்கிறது. ;) தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். ;)

அன்புடன் இமா

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்லா இருக்கு உங்க "தேடல்...". சொந்த அனுபவமோ?

Unknown said...

@அப்பாவி தங்கமணிநல்லா இருக்கு உங்க "தேடல்...". சொந்த அனுபவமோ?
ம் இருக்கலாம்..(இல்லைன்னு சொன்ன காப்பி அடிதேனு சொல்லிட்ட..?)
வாங்க அப்பாவி அக்கா
தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி...

Unknown said...

@இமா சிவாவுக்கு இமாவின் உலகத்தில் ( http://imaasworld.blogspot.com/2010/08/blog-post_11.html ) ஒரு அழைப்புக் காத்திருக்கிறது. ;) தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். ;)
என்னையும் மதித்து தொடர்பதிவுக்கு அழைத்த
தங்கள் அழைப்புக்கு
மிக்க நன்றி
விரைவில்...

Priya said...

தேடல் கவிதை அருமையாக இருக்கிறது.

Unknown said...

Priya said...
தேடல் கவிதை அருமையாக இருக்கிறது.
@ priya
தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்.
நன்றி.!

thiyaa said...

எளிமையான நடையில் ஒரு அருமையான கவிதை படித்த சந்தோசம்....திருப்தி

Unknown said...

@வாங்க தியா.
தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்.
நன்றி.!

Anonymous said...

//இதயத்தின்
வலியை
கண்ணீரால்
வெளியேற்ற கூட
முடிவில்லை...//

very very nice..

Unknown said...

( தொண்டையை
விட்டு வரவே மாட்டேன்
என்கிற அழுகை
நீ தூர நடந்ததும்
கொட்டும் மழையாய்
( Arumaiya iruku shiva!)

கருடன் said...

அட பாவி!! நல்லா எழுதர.. அப்புறம் ஏன் இந்த கும்மி அடிக்கிற பயலுககூட கூடி கெட்டுபோக பாக்கற?

Unknown said...

@ TERROR-PANDIYAN(VAS) said...
அட பாவி!! நல்லா எழுதர.. அப்புறம் ஏன் இந்த கும்மி அடிக்கிற பயலுககூட கூடி கெட்டுபோக பாக்கற?"

வாங்க வாங்க பாண்டியன் அண்ணா,
ஏன் எப்படி உசுபெத்தேறீங்க...நன்றி அண்ணா

Unknown said...

@ mathisree said...
வாங்க ஸ்ரீ
நன்றி தங்கள் வருகைக்கு

Unknown said...

@ monika
நன்றி
மோனிகா

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...