Tuesday, August 3, 2010

கண்டேனடி தோழி


கனா கண்டேனடி தோழி....
கனா கண்டேனடி...! கனா கண்டேனடி..
கனா கண்டேனடி...

(கனா....)

உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்
அகமெது புறமெது புரிந்தது போலே கனா கண்டேனடி...
உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள்
சுவையெது சுகமெது அறிந்தது போலே
கனா கண்டேனடி தோழி... கனா கண்டேனடி


(கனா.......)

எதையோ என் வாய் சொல்லத் தொடங்க
அதையே உன் வாய் சொல்லி அடங்க
உதடுகள் நான்கும் ஒட்டிக்கொள்ள நான் கண்டேன்
நிலம் போல் உன் மனம் விரிந்து கிடக்க
நிழல் போல் என் மனம் சரிந்து படுக்க
இதயம் இரண்டும் கட்டிக் கொள்ள நான் கண்டேன்
ஒரு கண்ணில் அமுதம் கண்டேன்
மறு கண்ணில் அமிலம் கண்டேன்!
எங்கெங்கோ தேடித் தேடி
உன்னில் என்னை நான் கண்டேன்

(கனா.........)

இடை மேல் என் விரல் கவிதை கிறுக்க
படை போல் உன் விரல் பதறித் தடுக்க
கூச்சம் உன்னை நெட்டித் தள்ள நான் கண்டேன்!
கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து
மடிக்கிற சாக்கில் வாசனை பிடித்து
மூச்சில் உன்னைச் சொட்டச் சொட்ட நான் கண்டேன்
நிறம் இல்லா உலகம் கண்டேன்
நிறமெல்லாம் உன்னில் கண்டேன்
எங்கெங்கோ தேடித் தேடி
என்னில் உன்னை நான் கண்டேன்

2 comments:

Priya said...

நல்ல பாட்டு இது.அதுவும் இந்த வரி....."எங்கெங்கோ தேடித் தேடி
என்னில் உன்னை நான் கண்டேன்"... சூப்பர்ப்!

இந்த பாடல் வரிகளுக்கு எல்லாம் பொருத்தமா எங்கேயிருந்து படங்கள் கிடைக்கிறது உங்களுக்கு! அத்தனையும் அழகு!

இமா க்றிஸ் said...

கனவுல கூட என்ன அழகா சிரிக்கிறாங்க. ;)

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...