Monday, August 2, 2010

தாமரை மேலே




மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ?
அன்பே!.... என் அன்பே!
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ?
கண்ணே!.... என் கண்ணே!
பூபாளமே... கூடாதென்னும் வானம் உண்டோ சொல்

தாமரை மேலே, நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன?
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன?
சொந்தங்களே இல்லாமல், பந்தபாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன... சொல்!

மேடையைப் போலே வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும், வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன..? வா!

2 comments:

Priya said...

மிகவும் அருமையான பாட‌ல்வரிகள்.. எனக்கு பிடித்த பாடல் இது!

Unknown said...

Priya said...

மிகவும் அருமையான பாட‌ல்வரிகள்.. எனக்கு பிடித்த பாடல் இது!

மிக்க நன்றி ப்ரியா.

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...