இதோ உங்கள் முன்..
ஏம்பா இந்த
கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்பீங்க? - நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்.
அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்.
இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க Clientனு சொல்லுவோம்.
சரி
இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு Sales Consultants, Pre-Sales Consultants..... இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், முடியும்னு பதில்
சொல்றது இவங்க வேலை.
இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க?
MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க.
முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்? - அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.
சரி இவங்க போய் பேசின உடனே client project (atwood) கொடுத்துடுவானா?அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்
500
நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?
இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு புலம்ப
ஆரம்பிப்பான்.
அப்புறம்? - அப்பா ஆர்வமானார்.
இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்னு சொல்லுவோம்.
CR-னா?
Change Request.
இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்.
அப்பாவின்
முகத்தில் லேசான பயம் தெரிந்தது.
இதுக்கு அவன் ஒத்துபானா?
ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?
சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?
முதல்ல ஒரு டீம் (atwood team) உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. (prabir) இவரது தான் பெரிய தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு.
அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு.
அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது.
அப்போ இவருக்கு என்னதான் வேலை? - அப்பா குழம்பினார்.
நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை.
பாவம்பா
ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்.
எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?
ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை.
நான் உன்னோட அம்மா கிட்ட பண்றது மாதிரி?!
இவருக்கு கீழ டெக் லீட், (JH) மோடுல் லீட், (FUN) டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க.
இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?
வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், (gopal) டெஸ்டர்னு (muthukumar,kathir) , அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க.
அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?
இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி.
ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?
அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க
கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?
கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்.
எப்படி?
நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை. இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்.
சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?
அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்.
அப்புறம்?
ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குற மாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்.
அப்புறம்?
அவனே பயந்து போய், எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க. இதுக்கு பேரு Maintanence and Support. இந்த வேலை வருஷ கணக்கா போகும்.
ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.
எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா.எதுக்குடா இந்த மானங்கெட்ட பொலப்பு...........
டிஸ்கி: இதுஇமெயிலில் வந்த ஒரு கதை ....
Subscribe to:
Post Comments (Atom)
சில வருடங்களுக்கு முன்....
என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...
-
எல்லாரும் வாங்க வாங்க சாக்லேட் எடுத்துக்கோங்க அட நிறைய எடுத்துக்கோங்க ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா இன்று தேதியில் ...வருடங்களுக்கு முன்ப...
-
குட்டிவாசகம்: பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது இர...
-
பகிர படாத உணர்வுகளை எல்லாம் என் மௌனங்களின் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.. எப்பொதும் மௌனமாய் இருக்கும் நீ என்றாவது ஒரு நாள் புரிந்துகொள...
34 comments:
எனக்கும் இந்த மெயில் வந்தது. செம தமாசு
////இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது////
அழுத்தமான விடயம் தான்...
ஆனால் எனக்கு மெயில் வரலியே..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.
சுவாரஸியமா இருக்கு;)
//ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.//
karrrrrrrrrrrrrrrrrr * karrrrrrrrrrrrrrrrrrr:)))).
சிவா, கிராமத்துக் கதை எண்டதும் ஆசையா ஓடிவந்தால்.... கொசுவில வந்த மயில்ல்ல்ல்ல்... அதால பெரிசா எதுவும் சொல்ல வரேல்லை, எனக்கும் பல மாதங்களுக்கு முன் மெயில்ல வந்திட்டுதூஊஊஊஊஊஊ:)))).
ஐஐஐஐஐ... நான் தான் போத்தூஊஊஊஊஊஊஊ:)))(4வது:)).
mee the 5th my lucky number
//ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்// இதை நான் ஆட்சேபிக்கிறேன்... இப்பெல்லாம் நாங்களே சுயமா சம்பாரிச்சு எங்கள பராமரிச்சுக்கிறோமாக்கும்.....க்கும் :)
//மானங்கெட்ட பொலப்பு...........// ஐயோ சிவா டீச்சர் பார்க்கறதுக்குள்ள ஸ்பெல்லிங் மிஸ்டேக் கரெக்ட் பண்ணிடுங்க
ஏற்கனவே படிச்சது தான். உங்க சொந்தக் கதையா இருக்கும் போலன்னு ஓடி வந்தேன்.
Thanks for sharing.
இதை நான் ஆட்சேபிக்கிறேன்... இப்பெல்லாம் நாங்களே சுயமா சம்பாரிச்சு எங்கள பராமரிச்சுக்கிறோமாக்கும்.....க்கும் :)//
ஏனுங்க கிரிசா அம்மணி, மொத்த பெண் குலத்திற்கு சேர்த்து பேசுறீங்களா? இல்லாவிட்டால் உங்களுக்கு மட்டும் பேசுறீங்களா??
என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
Nagasubramanian said...
எனக்கும் இந்த மெயில் வந்தது. செம தமாசு
August 6, 2011 6:10 பம்
நன்றி தங்கள் வருகைக்கு
////இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது////
அழுத்தமான விடயம் தான்...
ஆனால் எனக்கு மெயில் வரலியே..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.
August 6, 2011 7:27 பம்//
நன்றி மதி சுதா
ம் உங்களுக்கு வரவில்லை எண்டுதான் பதிவிட்டுள்ளேன்
நன்றி வருகைக்கு
Priya said...
சுவாரஸியமா இருக்கு;)
August 6, 2011 10:00 பம்/
நன்றி பிரியா
athira said...
//ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.//
karrrrrrrrrrrrrrrrrr * karrrrrrrrrrrrrrrrrrr:)))).
August 7, 2011 4:04 அம//
வாங்க அதிரமா
தங்கள் வரவு நல்வரவு ஆகுக
athira said...
சிவா, கிராமத்துக் கதை எண்டதும் ஆசையா ஓடிவந்தால்.... கொசுவில வந்த மயில்ல்ல்ல்ல்... அதால பெரிசா எதுவும் சொல்ல வரேல்லை, எனக்கும் பல மாதங்களுக்கு முன் மெயில்ல வந்திட்டுதூஊஊஊஊஊஊ:)))).
ஐஐஐஐஐ... நான் தான் போத்தூஊஊஊஊஊஊஊ:)))(4வது:)).
August 7, 2011 4:07 அம//
ம் நான் கொஞ்சம் லேட் பிக்குப் அதான் லேட்-எ மெயில் வந்தது :)
OK நீங்கள் தான் 4வது
En Samaiyal said...
mee the 5th my lucky number
August 7, 2011 7:56 AM
//
வாங்க உங்களுக்குத்தான் ஐந்தாம் இடம் அமைதியாக அமருங்கள்
:)
En Samaiyal said...
//ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்// இதை நான் ஆட்சேபிக்கிறேன்... இப்பெல்லாம் நாங்களே சுயமா சம்பாரிச்சு எங்கள பராமரிச்சுக்கிறோமாக்கும்.....க்கும் :)
August 7, 2011 8:01 AM
/
உங்கள் ஆட்சபனை ஏற்றுக்கொள்ளபடுகிறது ..
THEN
பராமரிக்க நாள் ஒன்றுக்கு எவ்வளவு சிலவாகிறது ?
:))
En Samaiyal said...
//மானங்கெட்ட பொலப்பு...........// ஐயோ சிவா டீச்சர் பார்க்கறதுக்குள்ள ஸ்பெல்லிங் மிஸ்டேக் கரெக்ட் பண்ணிடுங்க
August 7, 2011 8:03 AM
//
நன்றி குறிப்பிட்டமைக்கு
தற்போது இருக்கட்டும் அடுத்த பதிவில
:)நன்றி கிரிஜாக்கா
vanathy said...
ஏற்கனவே படிச்சது தான். உங்க சொந்தக் கதையா இருக்கும் போலன்னு ஓடி வந்தேன்.
Thanks for sharing.
இதை நான் ஆட்சேபிக்கிறேன்... இப்பெல்லாம் நாங்களே சுயமா சம்பாரிச்சு எங்கள பராமரிச்சுக்கிறோமாக்கும்.....க்கும் :)//
ஏனுங்க கிரிசா அம்மணி, மொத்த பெண் குலத்திற்கு சேர்த்து பேசுறீங்களா? இல்லாவிட்டால் உங்களுக்கு மட்டும் பேசுறீங்களா??
August 7, 2011 9:35 அம/
உங்களை போன்ற பெரிய கதை ஆசிரியர்களுக்கு
பராமரிக்க வேண்டியது இல்லை...
நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
Reverie said...
என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
August 8, 2011 12:31 அம/
நன்றி நண்பரே
வாழ்க வளமுடன்
சுவாரஸ்யமான பதிவு சிவா..
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
//ஏனுங்க கிரிசா அம்மணி, மொத்த பெண் குலத்திற்கு சேர்த்து பேசுறீங்களா? இல்லாவிட்டால் உங்களுக்கு மட்டும் பேசுறீங்களா??// மொத்த பெண் குலத்துக்கும் தான் வக்காலத்து வாங்கினேன். இந்த மாதிரி பெண் குலத்த தப்பா நெனைச்சுக்கிட்டு சிவா தம்பி பிரமச்சாரியாவே இருந்துட போறாருன்னுதான்!!
//வாங்க உங்களுக்குத்தான் ஐந்தாம் இடம் அமைதியாக அமருங்கள்
:)// யாரது என்னைய அமைதியா எல்லாம் இருக்க சொல்லுறது?? அது ரெம்ப ரெம்ப கெஷ்டம் !!
//பராமரிக்க நாள் ஒன்றுக்கு எவ்வளவு சிலவாகிறது ?
:))// அதெல்லாம் கணக்கு வழக்கு வெச்சுக்கரதில்லேங்க :))
சிவா, இந்தக்கதையை நான் ஒரு இரண்டு வருடங்களுக்கு முன் வாசித்திருக்கிறேன். இருந்தாலும் மீண்டும் ஒருமுறை வாசித்தேன்.
En Samaiyal said...
//ஏனுங்க கிரிசா அம்மணி, மொத்த பெண் குலத்திற்கு சேர்த்து பேசுறீங்களா? இல்லாவிட்டால் உங்களுக்கு மட்டும் பேசுறீங்களா??// மொத்த பெண் குலத்துக்கும் தான் வக்காலத்து வாங்கினேன். இந்த மாதிரி பெண் குலத்த தப்பா நெனைச்சுக்கிட்டு சிவா தம்பி பிரமச்சாரியாவே இருந்துட போறாருன்னுதான்!!
August 8, 2011 11:29 பம்//
நிம்மதியா இருக்கலாம்னு பாத்தா விடமாடீங்கலே.
சிவா தம்பி பிரமச்சாரியாவே இருந்துட போறாருன்னுதான்!//
சரி கிரிஜா அக்கா நீங்களே நல்ல பொண்ண பாருங்க..:)
Rathi said...
சிவா, இந்தக்கதையை நான் ஒரு இரண்டு வருடங்களுக்கு முன் வாசித்திருக்கிறேன். இருந்தாலும் மீண்டும் ஒருமுறை வாசித்தேன்.
August 9, 2011 7:36 அம//
நன்றி ரதி
நான் கடந்த வாரம்தான் வாசித்தேன் பகிரனும் தோன்றியது பகிர்ந்தேன் ..
நன்றி தங்கள் முதல் வருகைக்கும்
உங்கள் தளம் மிக அருமை
//வாங்க உங்களுக்குத்தான் ஐந்தாம் இடம் அமைதியாக அமருங்கள்
:)// யாரது என்னைய அமைதியா எல்லாம் இருக்க சொல்லுறது?? அது ரெம்ப ரெம்ப கெஷ்டம் !!
//பராமரிக்க நாள் ஒன்றுக்கு எவ்வளவு சிலவாகிறது ?
:))// அதெல்லாம் கணக்கு வழக்கு வெச்சுக்கரதில்லேங்க :))//
hahaha..
thank you for come again...
இந்திரா said...
சுவாரஸ்யமான பதிவு சிவா..//
நன்றி இந்திரா
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
//சிவா தம்பி பிரமச்சாரியாவே இருந்துட போறாருன்னுதான்!//
சரி கிரிஜா அக்கா நீங்களே நல்ல பொண்ண பாருங்க..:)//
ஆஹா...கிரிஜாக்காவை புரோக்கரா ஆக்கிட்டாரே..ஹி...ஹி...
படிக்க மிகவும் சுவாரஸ்யமான பதிவு.
கதையில் வரும் அப்பா போலவே எனக்கிருந்த பல சந்தேகங்களுக்கு நல்ல பதில்கள் கிடைத்து விட்டன.
//எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா.எதுக்குடா இந்த மானங்கெட்ட பொலப்பு...........//
கதையில் வரும் அப்பா சொல்லும் கடைசி வரிகள் அருமையோ அருமை.
[பல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா என்ற என் நகைச்சுவைக் கதையின் முதல் பகுதிக்கு அன்புடன் வருகை தந்து கருத்துக்கூறியதற்கு நன்றிகள். அதன் அடுத்த இறுதிப்பகுதி இன்று வெளியிட்டுள்ளேன். இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் vgk] gopu1949.blogspot.com
ஜெய்லானி said...
//சிவா தம்பி பிரமச்சாரியாவே இருந்துட போறாருன்னுதான்!//
சரி கிரிஜா அக்கா நீங்களே நல்ல பொண்ண பாருங்க..:)//
ஆஹா...கிரிஜாக்காவை புரோக்கரா ஆக்கிட்டாரே..ஹி...ஹி...
August 10, 2011 12:14 AM///
வாங்க ஜெய் அண்ணா
உங்களுக்கும் சேர்த்து பார்துவிடசொல்லிவிடுவோம்
நன்றி வருகைக்கு
வை.கோபாலகிருஷ்ணன் said...
படிக்க மிகவும் சுவாரஸ்யமான பதிவு.
கதையில் வரும் அப்பா போலவே எனக்கிருந்த பல சந்தேகங்களுக்கு நல்ல பதில்கள் கிடைத்து விட்டன.
//எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா.எதுக்குடா இந்த மானங்கெட்ட பொலப்பு...........//
கதையில் வரும் அப்பா சொல்லும் கடைசி வரிகள் அருமையோ அருமை.
[பல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா என்ற என் நகைச்சுவைக் கதையின் முதல் பகுதிக்கு அன்புடன் வருகை தந்து கருத்துக்கூறியதற்கு நன்றிகள். அதன் அடுத்த இறுதிப்பகுதி இன்று வெளியிட்டுள்ளேன். இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் vgk] gopu1949.blogspot.com
August 10, 2011 2:57 AM
வாங்க கோபாலன் ஐயா
நன்றி தங்கள் மேலான வருகைக்கு
தங்கள் பதிவு படித்து புன்னகை இன்னும் மாறவில்லை
"எங்கயோ படிச்ச மாதிரி இருக்கே... வேற எதுலயாச்சும் இதை பதிந்து இருந்தீங்களா? சும்மா ஒரு டவுட்.." அப்படின்னு டைப் பண்ணிட்டு கடைசி வரி பாத்தா டிஸ்கி விவரம் சொல்லிடுச்சு... எனக்கும் ஈமெயில்ல தான் வந்திர்ருக்கும் போல...:)
அப்பாவி தங்கமணி said...
"எங்கயோ படிச்ச மாதிரி இருக்கே... வேற எதுலயாச்சும் இதை பதிந்து இருந்தீங்களா? சும்மா ஒரு டவுட்.." அப்படின்னு டைப் பண்ணிட்டு கடைசி வரி பாத்தா டிஸ்கி விவரம் சொல்லிடுச்சு... எனக்கும் ஈமெயில்ல தான் வந்திர்ருக்கும் போல...:)
August 11, 2011 2:27 AM
/8/
vaanga vaanga appavi..
hm sorry to late reply.
yea this mail was old.
but i know few weeks ago only.
thanks for comming
Post a Comment