ம். ஒரு வழியா மரத்தடி பக்கமா வந்தாச்சு சாமிய கும்பிட்டுகிட்டு மணிகிட்ட "என்னடா பண்ணணும்? சைக்கிள் எப்படி கீழ விழாம போகுது?" ன்னு கேட்டேன். "இப்படி கேள்வி எல்லாம் கேக்காம இருந்தாதான் சொல்லித் தருவேன்" னு சொன்னான். மெதுவா குரங்கு பிடல் போட்டு இப்படித்தான் மெல்ல மெல்ல ஓட்டணும் என்று சொல்லிக் கொடுத்தான்.
தப்பு தப்பா ஓட்டி, மணிகிட்ட திட்டு வாங்கி - என்ன திட்டினாலும் சிரிச்சுகிட்டே இருப்பேங்க.
இல்லாட்டி மணி சொல்லித்தர மாட்டான். சரியான மொசடு, ஆனால் நல்லவங்க. மறுபடியும் சொல்லிக் கொடுப்பாங்க. அப்புறம் எனக்கு அப்போல இருந்து இப்போது வரைக்கும் ஒரு வாட்டி சொன்னா புரியாது, இரண்டு மூன்று தடவை சொல்லணும். அப்போதான் கப்புனு பிடிச்சிப்பேங்க. யாருமே வராத ரோட்ல ஓரமா ஓட்டி கத்துகிறேன்னு முள்ளுமேல விழுந்து கை கால் எல்லாம் ஸ்ராய்ப்பு ஏற்பட்டது. உடனே மணி "அப்படி அடிப்பட்டா தான் உனக்கு சீக்கிரம் கத்துகிற ஆர்வம் வரும்." னு என்னைய உசுப்பேத்தி நிறைய அடிபட்டு ஒரு வழியா குரங்கு பிடல்ல போற அளவுக்கு கத்துகிட்டேங்க. அப்படி தனியா போகும்போது அவ்ளோ சந்தோசம் என்னோமோ ப்ளைட்ல போறதுபோல.. ம்
சைக்கிள் எடுத்துகிட்டு நேரா பொன்னி வீட்டு பக்கமா சுத்திகிட்டு இருந்தேன்.
பொன்னிய காணும். அப்புறம் பார்த்தா அது சைக்கிள் சீட்ல உக்காந்து எக்கி எக்கி பெடல் போட்டு சைக்கிள் ஓட்டிகிட்டு வருது. எப்படி இருக்கும் நமக்கு. பொன்னி "இப்போதான் குரங்கு பிடலே ஓட்டற. போ போ. உனக்கு எங்க கால் எட்டும்! நீ சைக்கிள் எல்லாம் ஓட்ட முடியாது"ன்னு என்னைய நல்ல ஓட்டிக்கிட்டு இருந்திச்சு. இதுக்குத்தான் இந்த பொன்னி இருக்கிற பக்கமே போறது கிடையாதுங்க.
அப்புறம் ஒரு வழியா சின்ன சைக்கிள் எடுத்து கம்பி மேல போட்டு எப்படியாவது சீட்ல உக்காந்து ஓட்டி கத்துக்கணும்னு வெறியில கீழ விழுந்து அடிபட்டேன். யாரும் நம்மை பாக்கறதுக்குள்ள எழுந்து விடலாம்னு பார்த்தா யாரோ ஒரு புண்ணியவான் எங்க தாத்தா கிட்ட போயி வத்தி வச்சுட்டாங்க. சாயங்காலம் வீட்டுக்கு போன பிறகு என்ன, எனக்கு கச்சேரி ஆரம்பம்தான். சும்மா சொல்லக் கூடாது. எங்க தாத்தா அடிக்கலைங்க. எல்லா மாட்டுக்கும் தண்ணி, வைக்கோல் எல்லாம் என்னைய வைக்கச் சொல்லிட்டு, அதுக்கு காவலா ஒரு ஆள் போட்டுவிட்டு டவுன் பக்கம் போய்ட்டார்.
அப்புறமா எங்க ஆத்தா கிட்ட கெஞ்சி இனிமே சைக்கிள் எடுக்கமாட்டேனு பொய் சொல்லிட்டு ஓடி வந்துவிட்டேங்க...
ஒரு வழியா சைக்கிள் கத்துக்கிட்டேன். அப்புறம் கொஞ்சம் doubles அடிக்கற அளவுக்கு கத்துக்கிட்டேங்க. அப்படியே கைய விட்டு போறது ரொம்ப பிடிக்கும். என்னதான் சைக்கிள் கத்துக்கிட்டாலும் எங்க வீட்டில உடனே சைக்கிள் வாங்கி கொடுக்கல. நான் முதல் ரேங்க் வாங்கினால் சைக்கிள் வாங்கி தருவோம்னு சொல்லிட்டாங்க.
இது எல்லாம் நடக்கிற காரியமா..?
கொஞ்ச வருசத்துக்கு சைக்கிள் பத்தி வீட்டில பேசவே மாட்டேன்.
ம்முனு மறுபடியும் சோகமா மூஞ்ச வச்சுக்கிட்டு இருப்பேன். ஒரு வழியா எட்டாம் வகுப்பில இரண்டவது ரேங்க் வாங்கினேங்க. (நம்புங்க ப்ளீஸ்.) அப்போதான் சைக்கிள் கிடைச்சது. அம்மாகிட்ட "அம்மா, என்னைவிட சின்ன பையன் எல்லாம் சைக்கிள் ஒட்ராங்க. எனக்கும் ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுங்க," ன்னு அடம் பிடித்து வாங்கிட்டேங்க.
புது சைக்கிள் ரெட் கலர். கேப்டன் வண்டி, முதல் தடவை புது சைக்கிள் வாங்கி அத ஓட்டிகிட்டு போற சுகம் இருக்கே. அனுபவித்தால்தான் தெரியும்.. அப்புறம் கைய விட்டு போறது பழகி போச்சு. வாரம் வாரம் சைக்கிள் எண்ணை போட்டு தொடச்சு புதுசு போலவே வச்சு இருப்பேன்.
இந்த சைக்கிள் வாழ்கையில மறக்கவே முடியாது. இது போல உங்களுக்கும் இருந்தால் சொல்லுங்க.
நன்றி வணக்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
சில வருடங்களுக்கு முன்....
என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...
-
எல்லாரும் வாங்க வாங்க சாக்லேட் எடுத்துக்கோங்க அட நிறைய எடுத்துக்கோங்க ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா இன்று தேதியில் ...வருடங்களுக்கு முன்ப...
-
குட்டிவாசகம்: பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது இர...
-
பகிர படாத உணர்வுகளை எல்லாம் என் மௌனங்களின் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.. எப்பொதும் மௌனமாய் இருக்கும் நீ என்றாவது ஒரு நாள் புரிந்துகொள...
28 comments:
அருமையான பதிவு! எல்லாருமே அவனகளோட சின்ன வயசு பத்தி நெனப்பாங்க இதை படிச்சா!
சைக்கிள் கத்துகறதுக்கு நான் எவ்வளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? பயங்கர அடி, சைக்கிளுக்கு.
நானும் தலையில் குட்டு வாங்கி சைக்கிள் ஓட்ட கத்துகிட்டது நினைவுக்கு வருகிறது !!!!!!!!!!!!!!!!
சபாஷ் சிவா!!! நீங்க ஒரு மாவீரன்....
@இம்சை
மக்கா இந்த பிளாக் நமக்கு வேலைக்கு ஆகாது. ஐயா நல்லா எழுதறாங்க, ஆன கமெண்ட் மாட்ரேஷன் வச்சி இருக்காங்க. இது நம்ம கொள்கைக்கு எதிரானது... அதனால படிச்சிட்டு போய்டறோம்...
சிவா ஸார்! சிவா ஸார்! ஓட்டு போட்டு இருந்தா நான் present தெரிஞ்சிகோங்க... டாடா...
சாமி!! ஓட்டு பட்டன் எங்க???
உங்கள் முதல் வருகைக்கும், கமெண்டுக்கும் நன்றி நண்பரே!
இன்றிலிருந்து நானும் உங்களுக்கு பாலோயர்,
இணைந்து செயல்படுவோம்!
// நான் முதல் ரேங்க் வாங்கினால் சைக்கிள் வாங்கி தருவோம்னு சொல்லிட்டாங்க.//
ஐயோ .. அப்படின்னா இது இந்த ஜென்மத்துல நடக்காதே .!!
// வாரம் வாரம் சைக்கிள் எண்ணை போட்டு தொடச்சு புதுசு போலவே வச்சு இருப்பேன்.//
இப்ப அந்த சைக்கிள் இருக்கா ..?
//சைக்கிள் கத்துகறதுக்கு நான் எவ்வளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? பயங்கர அடி, சைக்கிளுக்கு.
//
அதுக்கு அப்புறம் நீங்க சைக்கிள் பழகவே இல்லை அப்படின்ன்கரத்தையும் சொல்லிடுங்க ..!!
//நான் முதல் ரேங்க் வாங்கினால் சைக்கிள் வாங்கி தருவோம்னு சொல்லிட்டாங்க//
எப்புடி எல்லாம் சிந்திக்க வேண்டியிருக்கு உங்கள படிக்கவைக்க..
ஆனா அது நடக்காதுங்குறது வேற விஷயம் ..
சிவா சைக்கிள் ஓட்டப் பழகினதுல பொன்னியோட பங்கு பெருசா இருக்கே!! ;)
அது என்ன முடிவுல //நன்றி வணக்கம்.// மேடைப்பேச்சா? ;)
@ சிவராம்குமார் said...
அருமையான பதிவு! எல்லாருமே அவனகளோட சின்ன வயசு பத்தி நெனப்பாங்க இதை படிச்சா!"
வாங்க ராம் அண்ணா.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
@அருண் பிரசாத் said...
சைக்கிள் கத்துகறதுக்கு நான் எவ்வளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? பயங்கர அடி, சைக்கிளுக்கு.
உங்களுக்கு ஒரு அடி கூட விழவில்லையா..?
நன்றி உங்கள் வருகைக்கு
@இம்சைஅரசன் பாபு.. said...
நானும் தலையில் குட்டு வாங்கி சைக்கிள் ஓட்ட கத்துகிட்டது நினைவுக்கு வருகிறது !!!!!!!!!!!!!!!!
பாபு அண்ணே வாங்க நீங்களும் குட்டு வாங்கைநீங்கள..நாம் எல்லாம் வீரர்கள்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
@ TERROR-PANDIYAN(VAS) said...
சபாஷ் சிவா!!! நீங்க ஒரு மாவீரன்....
பாண்டியன் அண்ணே வாங்க
நீங்களும் மெகா வீரர் அண்ணே.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
@ TERROR-PANDIYAN(VAS) said...
சபாஷ் சிவா!!! நீங்க ஒரு மாவீரன்....
பாண்டியன் அண்ணே வாங்க
நீங்களும் மெகா வீரர் அண்ணே.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
@TERROR-PANDIYAN(VAS) said...
சாமி!! ஓட்டு பட்டன் எங்க???
ஏன் சாமி எனக்கு இன்னும் ஓட்டு போடும் வயது வரவில்லை..இன்னும் சின்ன பிள்ளைதான்..நன்றி
@ப.செல்வக்குமார் said...
// நான் முதல் ரேங்க் வாங்கினால் சைக்கிள் வாங்கி தருவோம்னு சொல்லிட்டாங்க.//
ஐயோ .. அப்படின்னா இது இந்த ஜென்மத்துல நடக்காதே .!!
"
ஆமாண்ணா..எப்படிவது மறுபடியும் ஸ்கூல் போயி படிக்கலாம்னு இருக்கேன்..!
நன்றி வருகைக்கு!
@ இந்திரா said...
//நான் முதல் ரேங்க் வாங்கினால் சைக்கிள் வாங்கி தருவோம்னு சொல்லிட்டாங்க//
எப்புடி எல்லாம் சிந்திக்க வேண்டியிருக்கு உங்கள படிக்கவைக்க..
ஆனா அது நடக்காதுங்குறது வேற விஷயம் .."
என்ன பண்றது எப்படி படிச்சாலும் மண்டையில ஏறமாட்டுக்கு அதனால...அன்பா சொல்லிக்குடுத்த படிப்போம்...
நன்றி தங்கள் வருகைக்கு
@வால்பையன் said...
"உங்கள் முதல் வருகைக்கும், கமெண்டுக்கும் நன்றி நண்பரே!
இன்றிலிருந்து நானும் உங்களுக்கு பாலோயர்,
இணைந்து செயல்படுவோம்!"
முன்னமே வந்து இருக்கேன் உங்க ப்ளாக் ஓபன் ஆகாவில்லை,இபோதுதான் ஓபன் ஆகிறது மீண்டும் வருகிறேன் நண்பா"
உங்களூட இணைந்து செயல்பட காத்து இருக்கிறேன்...
நன்றி தங்கள் வருகைக்கு நண்பா..
இமா said...
சிவா சைக்கிள் ஓட்டப் பழகினதுல பொன்னியோட பங்கு பெருசா இருக்கே!! ;)
ஹிஹிஹி அது எல்லாம் சீக்ரெட்...(தேங்க்ஸ் பொன்னி.) :)))
அது என்ன முடிவுல //நன்றி வணக்கம்.// மேடைப்பேச்சா? ;)
வருங்கால முதல்வர் ஆவேன் ஒரு நாள்.. அதனால இப்போவே பேசி பழகி கொள்கிறேன்..
நன்றி இமா தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்..
நன்றி
வணக்கம்
:))
Indha adi vanguna anubavam lam enakum iruku shiva. innum andha veera thalumbum eyebrow la iruku. valthukkal
@monika said...
//Indha adi vanguna anubavam lam enakum iruku shiva. innum andha veera thalumbum eyebrow la iruku. valthukkal//
nandri monikka..china sila visayangal epothum nam manathoda erukkum..
nandri thangal varugaikku
//"என்னடா பண்ணணும்? சைக்கிள் எப்படி கீழ விழாம போகுது?" ன்னு கேட்டேன்//
அடடா ஐன்ஸ்டீன் தோத்தாரு போங்க... ஹா ஹா ஹா
//தப்பு தப்பா ஓட்டி, மணிகிட்ட திட்டு வாங்கி - என்ன திட்டினாலும் சிரிச்சுகிட்டே இருப்பேங்க. //
பின்னா காரியம் ஆகணுமல்ல... இன்னொரு வாட்டி அத்த பொண்ணு கிண்டல் பண்ணிட்டா என்ன ஆகறது... ஹா ஹா ஹா
//போ போ. உனக்கு எங்க கால் எட்டும்! நீ சைக்கிள் எல்லாம் ஓட்ட முடியாது"ன்னு என்னைய நல்ல ஓட்டிக்கிட்டு இருந்திச்சு//
சபாஷ் சரியான போட்டி...ஹா ஹா ஹா
//ஒரு வழியா எட்டாம் வகுப்பில இரண்டவது ரேங்க்//
கடசீல இருந்து ரெண்டாவது...கரெக்டா? ஹா ஹா
//இந்த சைக்கிள் வாழ்கையில மறக்கவே முடியாது. இது போல உங்களுக்கும் இருந்தால் சொல்லுங்க//
அதை எல்லாம் சொன்னா கொஞ்ச நஞ்ச இமேஜும் டர்ர்ர் தான்... மீ எஸ்கேப்...
//
@அப்பாவி
அதை எல்லாம் சொன்னா கொஞ்ச நஞ்ச இமேஜும் டர்ர்ர் தான்... மீ எஸ்கேப்.....//
அதை எல்லாம் சொல்லாட்டி
இமேஜும் டர்ர்ர்தான் பார்த்துகோங்க நீங்கள் எந்த தொடரை தொடர பணிவோட
கேட்டு கொள்கிறேன்...
மிக்க நன்றி அப்பாவி
தங்கள் வருகைக்கு
உன்னோட சரியான காமெடி தான் போ :-) மிகச் சுவாரசியமான வெளிப்படையான எழுத்து. கீப் இட் அப் :-)
சுபத்ரா said...
உன்னோட சரியான காமெடி தான் போ :-) மிகச் சுவாரசியமான வெளிப்படையான எழுத்து. கீப் இட் அப் :-)
February 1, 2011 6:09 பம்/
/மிக்க நன்றி சுபா
Post a Comment