என்னதான் சொல்லுங்க எவ்ளோதான் காசு கொடுத்தாலும் விடியல் காலையில ஏழு மணி வரையில தூங்கிற தூக்கம்..அம்மா சுட சுட சுட்டு வைக்கும் பஞ்சுபோன்ற இட்லி
அப்பறம் இட்லி பொடி,கூட புதினா சட்னி,கொஞ்சம் மிளகாய் சட்னி(கொஞ்சம் தக்காளியும்)..அத நல்ல வயுறு முட்ட சாப்பிட்டுவிட்டு...
ஸ்கூல் போனபிறகு அங்க வாத்தியார் பாடம் நடத்தும்போது ..
வரும் ஒரு தூக்கம் பாருங்க..அதுவா எல்லாம் ஒரு கனா காலம்...
அப்பறம் நைட் studynu சொல்லிபுட்டு நண்பர்கள்கூட சேர்ந்து அரட்டை அடிச்சு..அப்பறம் நேரம் போனது தெரியாம அவசரம் அவசரமா இரண்டு பக்கங்களை படித்துவிட்டு பிறகு எல்லாம் பரிட்சைக்கு முன்னால அரைமணி நேரம் எல்லாமே மறந்து போனது போல ஒரு பயம் வருமே அந்த பயம் கூட ஒரு சுகம்...
அதைவிட பரீட்சை பேப்பர் கொடுக்கும்போது யாரு யாரு எவ்ளோ மார்க்குன்னு தெரிஞ்சிக்கிற ஒரு ஆர்வம் நம்மைவிட ஒரு பொண்ணு கூட ஒரு மார்க்கு வாங்கிட்டா அது பண்ற அலப்பல் அப்போ நாம படும் வேதனை இது எல்லாம் சொன்னா புரியாதுங்க அனுபவிக்கணும்....
அப்புறம் நம்ம வகுப்புக்கு புதுசா ஒரு பொண்ணு கொஞ்சம் அழகா இருந்துவிட்டால் அதுகிட்ட பேசி ப்ரெண்டா ஆக நாம எடுக்கும் கஜினி முகமதுவின் முயற்சிகள்...என்னத்த சொல்ல....அந்த புள்ள நம்ம கிட்ட கடைசிவரைக்கும் பேசும் நினைக்றீங்க?...அத பத்தி எல்லாம் கேட்க பிடாது...!
பிடித்த எதாவது ஒரு டிரஸ் போட்டுக்கிட்டு..அப்படி கொஞ்சம் ஸ்டைலா நடந்து வரும்போது நம்மை விட நண்பன் ஒரு நல்ல சூப்பர் டிரஸ் போட்டுகிட்டு வந்தா நமக்கு வருமே ஒரு சின்ன பொறாமை....(இது வெளியில சொல்ல மாட்டோம் மனசுக்குள்ளே..
அவன நாம எவ்ளோ திட்டுவோம் தெரியுமா)...
பட் அவன்தான் நம்ம நல்ல நண்பனா இருப்பாங்க...
மீண்டும் (காலையில லேட்டா எழுந்திரிச்சு அம்மாகிட்ட அப்பாகிட்ட இருந்து வரும் வசவும் ஒரு சுகம்தாங்க)... தொடரும்...
பி.கு: (படத்தில் காட்டியுள்ள இட்லி அப்பாவி தங்கமணியின் இட்லி கடை இட்லி அல்ல அல்ல என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்)
Subscribe to:
Post Comments (Atom)
சில வருடங்களுக்கு முன்....
என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...
-
எல்லாரும் வாங்க வாங்க சாக்லேட் எடுத்துக்கோங்க அட நிறைய எடுத்துக்கோங்க ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா இன்று தேதியில் ...வருடங்களுக்கு முன்ப...
-
குட்டிவாசகம்: பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது இர...
-
பகிர படாத உணர்வுகளை எல்லாம் என் மௌனங்களின் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.. எப்பொதும் மௌனமாய் இருக்கும் நீ என்றாவது ஒரு நாள் புரிந்துகொள...
28 comments:
அடடே கொசுவத்தி பதிவா? நல்லாயிருக்கே. தொடருங்க தொடருங்க. இவ்வளவு அழகா டைப் தெரிஞ்சுட்டு இவ்வளவு நாளா வெறும் பாட்டை மட்டும் எடுத்து பதிவா போட்டு வச்சிருக்கீங்களே :)
ஒருத்தர் நல்ல பதிவு போட்டுட்டு மொக்கை பதிவு அப்படின்னு சொல்லும்போது வரும்பாருங்க ஒரு கோவம்.. அதுதான் எனக்கு இப்ப .. இப்படி ஒரு நல்ல பதிவு போட்டுட்டு மொக்கைனு சொன்னா அப்ப நான் எழுதற மொக்கை பதிவ என்னனு சொல்லுவீங்க.! ஹி ஹி ..
அட இட்லி படமும், விஜி படமும் கண்ணுலயே நிக்குது. அதுக்கே 10 ஓட்டு போடலாம். அப்புறம் நான் எங்க பதிவை படிக்கறது..... ஹிம்...
என்னத்த சொல்ல!!
ரெண்டே ரெண்டு பல்லு இருக்கிற சிவாவா இத்தனை பேசுறது!!! மேல வைங்கோ.
அது சரீ... உங்க ட்ரேட் மார்க் தங்லிஷுக்கு என்ன ஆச்சு!!
ரெண்டே ரெண்டு பல்லு இருக்கிற சிவாவா இத்தனை பேசுறது!!! மேல வைங்கோ.
:))
என்னத்த சொல்ல.... பள்ளி நினைவுகளுக்கு அழைத்து போனது உங்கள் எழுத்துக்கள்...அழகு....
உங்கள் வலைப்பூ வின் தலைப்பு மிகவும் அழகாக இருக்கு சிவா
"அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை" உண்மையான வரிகள்
முதலில் அந்த இட்லி தட்டை இந்த பக்கமாக அனுப்பி வைங்க..... ஸ்ஸ்ஸ்....... சூப்பர்!
உங்கள் பதிவும் ரொம்ப நல்லா இருக்குதுங்க...... துள்ளல் நடை!
@chitra.
முதலில் அந்த இட்லி தட்டை இந்த பக்கமாக அனுப்பி வைங்க..... ஸ்ஸ்ஸ்....... சூப்பர்!
கண்டிப்பாக
சித்ரா அக்காவுக்கு ஒரு 12 இட்லி பார்சல் கூட இட்லி பொடியும் அனுப்பிவிடுகிறேன்..
தங்கள் வருகைக்கு நன்றி
அட வாங்க ஆதவன்.நிசமா எனக்கு எதுவும் தெரியாதுங்க.வருகைக்கு நன்றி
@ selvakummar அப்ப நான் எழுதற மொக்கை பதிவ என்னனு சொல்லுவீங்க.! ஹி ஹி ..
நல்ல மொக்கை பதிவுன்னுதான் சொல்லுவோம்
தங்கள் வருகைக்கு நன்றி
@arun prasad.
அட இட்லி படமும், விஜி படமும் கண்ணுலயே நிக்குது. அதுக்கே 10 ஓட்டு போடலாம். அப்புறம் நான் எங்க பதிவை படிக்கறது..... ஹிம்.....
ம் இட்லி பார்சல் பணிட்றேன் அருண் ..
சும்மா படிங்க அருண்..
வருகைக்கு நன்றி
@சிநேகிதி
உங்கள் வலைப்பூ வின் தலைப்பு மிகவும் அழகாக இருக்கு சிவா
"அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை" உண்மையான வரிகள்
வாங்க சிநேகிதி அக்கா..
நன்றி உங்கள் பாரட்டுக்கு..
வருகைக்கு நன்றி
அழகா எழுருறீங்க..அந்த இட்லி படம் அருமை
உங்கள் பார்வை என் புதிய வலை பதிவுக்கு தேவை
http://nsmanikandan.blogspot.com/
- கலக்கல் கலந்தசாமி
@கலக்கல் கலந்தசாமி
தங்கள் வருகைக்கு நன்றி
முதல்ல Follow widget, voting button எல்லாம் வைங்க. அப்பதான் எல்லோரும் வருவாங்க.
doubt னா gtalk ல என்னை contact பண்ணுங்க
arunprasath.gs@gmail.com
சின்ன சின்ன சுகங்களையும் மிக அழகா ரசிச்சி எழுதி இருக்கிங்க சிவா.தேர்ந்தெடுத்த படங்களும் அழகா இருக்கு!
தொடர்ந்து இது போல நீங்க ரசித்தவை... உங்களை ரசிக்க வைப்பவைகள் பற்றியெல்லாம் நிறைய எழுதுங்க.
எனக்கும் அப்படியே இட்லி பார்ஸல்!
@சிவராம்குமார் said...
எனக்கும் அப்படியே இட்லி பார்ஸல்!
பார்சல் அனுப்பிவிட்டேன் அண்ணா..
தங்கள் வருகைக்கு நன்றி
@அருண் பிரசாத்
முதல்ல Follow widget, voting button எல்லாம் வைங்க. அப்பதான் எல்லோரும் வருவாங்க.
doubt னா gtalk ல என்னை contact பண்ணுங்க.
முதல்ல நன்றி கூறிகொள்கின்றேன்..தங்கள் உதவியால் Follow விட்கேட் வைத்து விட்டேன்.
உதவிக்கும்,வருகைக்கும் நன்றி அருண் அண்ணா.
@Priya said...
சின்ன சின்ன சுகங்களையும் மிக அழகா ரசிச்சி எழுதி இருக்கிங்க."
மிக்க நன்றி பிரியா,
எழுத முயற்சிக்கிறேன்...
உங்கள் கருத்துக்கும்,வருகைக்கும் நன்றி
சிறு வயது நினைவுகளை மறுபடியும் நினைவுக்கு கொண்டுவந்தது உங்கள் பதிவு..
சிவா, நல்லா இருக்கு கொசுவத்தி. இப்படி ஏதாச்சும் வித்யாசமா எழுதுங்க. அதை விட்டுப் போட்டு சினிமா பாடல் எழுத வேண்டாம். முன்பொரு முறை உங்கள் ப்ளாக் பக்கம் வந்து, வெறுத்துப் போய் திரும்பி போனேன்.
@வானதி.
எழுத முயர்ச்சிகிறேன்
தங்கள் வருகைக்கு
நன்றி
@ இந்திரா said...
சிறு வயது நினைவுகளை மறுபடியும் நினைவுக்கு கொண்டுவந்தது உங்கள் பதிவு..
நன்றி இந்திரா...
super kosuvathi... adhellam oru kanaa kaalam than ponga
//படத்தில் காட்டியுள்ள இட்லி அப்பாவி தங்கமணியின் இட்லி கடை இட்லி அல்ல அல்ல என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்//
idhenna sir? தங்கமணி ட்லிய பழிச்ச சிவாவுக்கு நூறு இட்லி பார்சல் அனுப்பப்படும் c
வாங்க புவனா அக்கா
ம் தெரிந்து தெரியாம சொல்லிட்டேன்
நீங்க பார்சல் அனுப்பிடுங்க..
எங்க காலேஜ்ல மறியல் பண்ண போறோம்.அப்போ இட்லி தேவைப்படும்.
எப்புடி
நன்றி
very nice remember things and it's never broken.
keep it up Siva
write more your evergreen dreams
Thanks
மிக்க நன்றி புதுவை சிவா
எழுத முயற்சிக்கிறேன்...
உங்கள் கருத்துக்கும்,வருகைக்கும் நன்றி
Post a Comment