
அம்மா என்று அழுது கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் மூன்றாவது படிக்கும் ஒரே மகன் ராஜேஷ்,உள்ளே இருந்து பதறிக் கொண்டு அவனது தாய் மகேஸ்வரி ஓடிவந்தாள், தைத்துக்கொண்டு இருந்த தையல் எந்திரத்திடம் இருந்து...
"என்ன கண்ணு? ஏன்டா தங்கம் பள்ளிக்கூடம் போகலை? போன உடனே திரும்பி வந்துவிட்ட" என்று கேட்டுக்கொண்டே. அவனது விழியோரம் இருக்கும் கண்ணீரை கண்டு அவளது கண்களும் கசிந்துவிட்டது.
"டீச்சர் பீஸ் கட்டலை என்று வீட்டுக்கு சென்று வாங்கிட்டு வர சொன்னாங்க அம்மா." அவன் படிப்பது சாதாரண பள்ளிக்கூடம் தான். அதிலும் அந்த பீஸ் இந்த பீஸ் என்று கேட்டு ஒரு வழி பண்ணிவிட்டனர். "கண்ணு நாந்தான் நாளைக்கு வந்து கட்றேன்னு சொன்னேன்லப்பா'" என்றாள். "நீ இதே தான்மா டெய்லி சொல்ற. கிளாஸ்ல எல்லாரும் பீஸ் கட்டிட்டாங்க அம்மா. டீச்சர் என்னை ஏன்டா பீஸ் கட்டவில்லை என்று கேக்கும்போது என்னை எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்க அம்மா. நீ சீக்கிரம கட்டிடுமா," என்று சொல்லி அழுது கொண்டே உள்ளே ஓடினான்.
அவளும் என்னதான் செய்வாள் அவளது கணவன் இறந்து ஒரு வருடம் ஆகிறது. பிடிவாதமாக மறுமணம் செய்து கொள்ளவில்லை; நல்ல வேளை அவள் கணவன் விட்டுச்சென்ற சிறிய சொந்த வீடு ஒன்று இருந்தது. தனது மகனுக்காக வாழ வேண்டும் என்று ஒரு வைரக்கியத்தோடு குற்றம் சொன்ன உறவுகளை எல்லாம் தள்ளி வைத்து விட்டு அவளுக்கு தெரிந்த இந்த தையல் வேலையை வைத்துக் கொண்டு அன்புமகனை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்று காலங்களை கடந்து வருகிறாள்...
இப்போது எல்லாம் முன்பு போல அதிக வருமானம் இல்லை. இருந்தாலும் கிடைக்கும் சொற்ப வருமானம் அவர்கள் இரண்டு பேருக்கும் போதுமானதாக இருந்தது. இப்படி எதிர்பாராமல் வரும் செலவுகளை ஒரு சில நேரம் சமாளிக்கக் கொஞ்சம் கடினமாக இருக்கிறது.
காதோரம் இருக்கும் ஒரு கல்லுதோடு நினைவுக்கு வந்தது. உடனே ஓடிச் சென்று அருகில் உள்ள மீனாட்சி அடகுக் கடையில் வைத்துப் பள்ளிக்குக் கட்ட வேண்டும், என்று வீட்டுக்குள் பணத்துடன் வந்தாள். தனது மகன் சிரித்த முகத்துடன் "அம்மா என்கிட்ட நூத்தி எழுபது ஐம்பது பைசா இருக்கும்மா, இந்தாம்மா'" என்றான்.
ஏதுடா உனக்கு எவ்ளோ பணம் என்று கேட்ட அவள் கோவத்துடன் போது
"அம்மா தினமும் நீ மிட்டாய் வாங்கிச் சாப்பிடக் கொடுக்கும் ஒரு ஒரு ரூபாயும் சேர்த்து வைத்து இருந்தேன்மா," என்றான் அந்த மூன்றாம் வகுப்புச் சிறுவன். அந்த நேரம் அவள் உள்ளம் அளவில்லா பூரிப்பு அடைந்தது. தினமும் தன் கஷ்டம் உணர்ந்து வளர்ந்து இருக்கும் தனது மகனை அள்ளி முத்தம் கொடுத்து "என் தங்கம்," என்றாள். அந்த நேரம் அவளுக்கு வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இளமையில் வறுமையை எவ்வளவு தூரம் அறிந்து இருக்க வேண்டும், அதனால்தானே சேமிக்கும் பழக்கம் இந்தச் சின்ன வயதில் வந்து இருக்கிறது. சிறுவயதில் அவளும் தன மகன் போல சிறு சிறுக சேமித்து வைத்து இருப்பது அவளுக்கு நினைவுக்கு வந்தது. தான் சொல்லி கொடுக்காமலே இப்படி சேமிக்கும் குணம் வந்ததை எண்ணி மகிழ ஆரம்பித்தாள்.
இனிமேல் தான் மகன் பள்ளிக்கு பீஸ் அவ்வப்போதே கட்டிவிட வேண்டும் என்ற தீர்மானத்துடன் மகனைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டுத் தனது தையல் மிசினுடைய இன்னும் வேலைகளை விரிவாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது மகன் தந்த சந்தோசத்தை மனதில் வைத்துகொண்டு வாழ்க்கையின் கஷ்டங்களை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்தாள் அவளது வாழ்க்கை பயணத்தை......
பிஸ்கி:
எனது சின்ன முயற்சி மொக்கைய இருந்தாலும் திட்டவோ
எண்ணினாலும் சலிக்காமல் கம்மேண்டில் கொட்டவும்..
எவ்ளோ படங்களை திரும்ப திரும்ப பார்க்கிறோம் அதில இந்த கதையும் மனசில வைத்துககொளுங்கள்....
20 comments:
nice story.
keep writing.
அண்ணா உண்மைலேயே முதல் கதை அப்படின்னு சொன்னாலும் ரொம்ப நல்லா இருக்கு.. மொக்கையா எல்லாம் இல்லை .. சிறுகதை சிறுசாவும் ஏதோ ஒன்ன சொல்லக்கூடியதாகவும் இருக்கறதே அருமை .. அதிலும் முதல் இரண்டு பத்திகளில் கொஞ்சம் பீல் பண்ண வச்சிருக்கீங்க .. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா .
Mathi said...
nice story.
keep writing.
//
நன்றி மதி.
அண்ணா உண்மைலேயே முதல் கதை அப்படின்னு சொன்னாலும் ரொம்ப நல்லா இருக்கு.. மொக்கையா எல்லாம் இல்லை .. சிறுகதை சிறுசாவும் ஏதோ ஒன்ன சொல்லக்கூடியதாகவும் இருக்கறதே அருமை .. அதிலும் முதல் இரண்டு பத்திகளில் கொஞ்சம் பீல் பண்ண வச்சிருக்கீங்க .. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா .
//
நன்றி செல்வா அண்ணா
மீண்டும் வருக
சிவாவுக்கு, எது எழுதினாலும் எப்படி எழுதினாலும் அது எழுதுபவருக்கு திருப்தி தர வேண்டும்,வலையில் எழுதுவதே பகிர்வுக்குத்தானே. உங்கள் சிறுகதை ஒரு உன்னத செய்தியையும் கூறுகிறது. சேமிப்பின் முக்கியத்துவத்தை. அருமை. வாழ்த்துக்கள்
மொக்கை போடாமல் கதை சொன்னதுக்கு பாராட்டுக்கள்.
அதிலும் கருத்து சொன்னதுக்கு வாழ்த்துக்கள்.
கருத்துக் கந்தசாமி சிவா வாழ்க...
very nice....
பாசத்தையும் சேமிப்பின் அவசியத்தையும் சொன்ன விதம் அருமை. இன்னும் எழுதுங்கள்.
kathai nalla irukukku Siva!
G.M Balasubramaniam said...
சிவாவுக்கு, எது எழுதினாலும் எப்படி எழுதினாலும் அது எழுதுபவருக்கு திருப்தி தர வேண்டும்,வலையில் எழுதுவதே பகிர்வுக்குத்தானே. உங்கள் சிறுகதை ஒரு உன்னத செய்தியையும் கூறுகிறது. சேமிப்பின் முக்கியத்துவத்தை. அருமை. வாழ்த்துக்கள்//
வாங்க
திரு பாலா சுப்ர மணியன் ஐயா.
மிக்க நன்றி தங்கள் வருகைக்கும்
வாழ்த்துக்கும் .
இந்திரா said...
மொக்கை போடாமல் கதை சொன்னதுக்கு பாராட்டுக்கள்.
அதிலும் கருத்து சொன்னதுக்கு வாழ்த்துக்கள்.
கருத்துக் கந்தசாமி சிவா வாழ்க...
//
வாங்க கருத்தமா இந்திரா..
தங்கள் கருத்து போல வராது,,
மீண்டும் வருக
Chitra said...
very nice....
// வாங்க சித்ரா அக்கா..உலக பதிவுகளின் உள்ள அனைத்து பதிவுக்கும் கமெண்ட் போடும் அரசி வாழ்க .
சிவகுமாரன் said...
பாசத்தையும் சேமிப்பின் அவசியத்தையும் சொன்ன விதம் அருமை. இன்னும் எழுதுங்கள்.
//
வாருங்கள் அண்ணா நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.,,
உங்கள் கவிதைகளும் மிக அருமை.
@Mahi said...
kathai nalla irukukku Siva!
February 9, 2011 5:06 அம//
வாங்க மதி அக்கா
நலமா தங்கள் பதிவு போல சுவையான பதிவு இல்லை இருந்தலும்
வருகைக்கு நன்றி மீண்டும் வருக
உங்கள் சிறுகதை அருமை. வாழ்த்துக்கள்.
@ஆயிஷா said...
உங்கள் சிறுகதை அருமை. வாழ்த்துக்கள்.
//
வாங்க
ஆயிஷா
மிக்க நன்றி தங்கள் வருகைக்கும்
வாழ்த்துக்கும் .
நண்பரே உங்கள் கதை அருமையாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!!
மாத்தி யோசி said...
நண்பரே உங்கள் கதை அருமையாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!!
February 11, 2011 3:49 AM//
நன்றி அண்ணா
மீண்டும் வருக
நல்ல கதைங்க... மனதில் தைக்கும் விதமாய் சொன்னதும் சூப்பர்.... :)
அப்பாவி தங்கமணி said...
நல்ல கதைங்க... மனதில் தைக்கும் விதமாய் சொன்னதும் சூப்பர்...//
நன்றி
நன்றி
நன்றி
மீண்டும் வருக
Post a Comment