Thursday, April 19, 2012

இன்னொரு நிஜம்...


எதிலிருந்தும் விலகிவிட முடியும்
என்று தோன்றவில்லை.
நெருங்கிவிடவும் கூடவில்லை
என்பதுதான் துயரமான
இன்னொரு நிஜம்.
-வண்ணதாசன்.

Thursday, April 12, 2012

தனியே ஒரு நடைப்பயணம்.



தூக்கம் வராத பொழுதில்
தனியே ஒரு நடைப்பயணம்...

இரவு
போக்கில்
நடந்து

தலை அசைத்து பேசி மகிழும்
மரங்களை
கண்டு முகம் மலர்ந்து
என்ன பேசிக்கொண்டன என்று யோசித்த போது

மரங்களை பார்த்தேன்
அடர்ந்த புன்னகையை தென்றலாய்
மேலும் வீசி
என்னை மௌனிக்க செய்தது

அமைதியாய் நடக்க ஆரம்பித்தேன்
ஏதோ ஒன்று கொஞ்சம் யோசிக்க செய்தது

அலுவலகம்
போகும்போது
வரும்போதும் சரி
நிதானமாய் போவோம்
என்ற வார்த்தைகூட வேகமாய்தான்
வருகிறது...

விடியலில் ஆசையாய் அசதியில்
ஐந்து நிமிட குட்டி தூக்கமும்
அவசரகதில் எழுந்து
பறந்து பறந்து
தொலைந்து போகிறது கனவுகள் எல்லாம் ...



எழுந்து எங்கே செல்கிறோம்
இறுதியில்
ஒன்றுமே இல்லமால் போகும்
நமக்காக
இவ்வளவு வேகமாய்
செல்கிறோம்



பொய்யாய் நடிக்கும்
உலகத்தில் நானும் இருக்கேன் என்று நடித்துக்கொண்டே
இருக்க எனக்கு பிடிக்கவில்லை
இருந்தாலும்
யாருக்காகவது
நடித்தே ஆகவேண்டி இருக்கிறது

என் கனவுகள் எல்லாம் இங்கு இல்லை என்பது மட்டும் நிஜம்.


டிஸ்கி:
பதிவு உலக மற்றும் அனைவரும் நலமாய் இருக்க பிராத்திக்கிறேன் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பதற்றத்தில் இருந்து விடுபட வேண்டுகிறேன்.
ஒரு சுனாமி பாதிப்பே இன்னும் முடிய வில்லை முழுவதும் மறுபடியும் என்றால்...வார்த்தைகள் இல்லை..

Wednesday, March 14, 2012

சந்தோசமாக...!

பகிர படாத
உணர்வுகளை
எல்லாம்
என் மௌனங்களின் மூலம்
தெரியப்படுத்த
விரும்புகிறேன்..

எப்பொதும்
மௌனமாய் இருக்கும் நீ
என்றாவது ஒரு நாள்
புரிந்துகொள்வாய் என
பத்திரமாய்
வைத்து இருக்கிறேன்...!

தினம் தினம்
பேசும் வார்த்தைகள்
எல்லாம்

நிமிடமாய்
கரைந்து
போனாலும்

மௌனமாய்
உன் கண்கள்
பேசும்
வார்த்தைகளை...

என்மனம்
ஆயுள் முழுவதும்
அசைபோட்டுக்கொண்டு
இருக்கும்.....!

மறுக்கப்பட்ட
விடுதலை போல
சிறைப்பட்டேன்
உந்தன்
பார்வையில்....!

இருக்கும் வரையில்
உன் நினைவோடு
வாழ்ந்து...

இறந்தும்விடுவேன்..
சந்தோசமாக.

Wednesday, March 7, 2012

மழை!!!

உன் இரு
விழிகளும்
மழைத்துளியில்
விளையாடும்
கன நேரம்
கரைந்து
போகிறேன்!



மழையில்
விழாத
உனது நிழலை
பிடிக்கும்
நாளுக்காய்
மழையில்
நனைந்து
காத்து
இருக்கிறேன்!




மெல்லிய
சாரலில்
வானவில்லாய்
உன் புன்னகை!

இடி
மின்னலாய்
கோவப்பார்வை!



குடை
இருந்தும்
நனைந்து
நான்!

எப்போது முடியும்
இந்த
மழை!!!

Monday, March 5, 2012

பார்வை....

உன்னைத்
தொடர்ந்த நாட்கள்..
அழகாய் வாழ்ந்த நாட்கள்..
நீயும் பேசவில்லை
அதை நானும்
எதிர்பார்க்கவில்லை!!!


ஆனாலும்..
அந்த ஒரு பார்வை
பார்க்கும்
நிமிடத்திற்காக
உன்னை நான்
தொடர்ந்தேன்..!!!

ஒரு முறைப்பா
இல்லை அழைப்பா
எனக்குத் தெரியாது
ஆனால்
பிடிக்கும்..!!!

உந்தன்
பார்வையின்
நிழலையும்
தொட்டது
இல்லை நான்..!

பேச நினைக்கும்
நேரத்தில்
விலகிப் போனாய்,

யாரும் நம்மைப் பற்றி
பேசிவிடக் கூடாது
என்பதற்காக

எந்தன்
நேசம்
தொடரவும்
இல்லை,

முடியவும்
இல்லை!!!

DISKI:)
எல்லாம் முன்பு எழுதிய கிறுக்கியவை
கோடி நன்றிகள் இமா டீச்சர் :)

Monday, February 27, 2012

வணக்கம்

வணக்கம்



(வணக்கம் எல்லாம் நல்லாத்தான் சொல்ற)
ப்ளாக் ஒன்று இருப்பதே மறந்து போயிட்டு
அந்த அளவுக்கு சூழ்நிலை உருவாகி விட்டது
கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாம் சரி செய்து வருவதருக்குள் ஒரு மாதம் என்னை கேட்காமல்ஓடி விட்டது .

என்னங்க பண்றது ஒரு பிரச்சனை முடிந்த கையோட வேற பிரச்சனை
ஒன்று ரெடியா இருக்கு..

யாருக்கு பிடிச்சு இருக்கோ இல்லையோ எனக்கு பிரச்சனைகளை மிகவும் பிடித்து இருக்கிறது.
எவ்ளோ அடிச்சாலும் தாங்குறத போல எவ்ளோ நாள்தான் ஓடிட்டு இருக்கிறது.
ஒரு வழியா பிரச்சனைகளை பட்டியல் இட்டு ஓரம் வைத்து விட்டு வருகிறேன்.

ம் கொஞ்சம் அசந்து யோசிக்கும்போது

தோன்றியது
வாழ்க்கை
ஏன் எதுக்கு எப்படின்னு
எப்படி வாழ்வது சரியாய் இருக்கும் பல கேள்விகள்,சந்தேகங்கள் எழுகிறது.
எந்த அளவுகோல் போதும் என்ற நிலையை கொடுக்கும் என ஏகப்பட்ட கணைகள் தொடர்கிறது.

ஒன்று புரிந்து கொண்டேன் ரொம்ப யோசிக்கவே கூடாது யோசிச்ச அப்பறம் எதுவுமே இருக்காது.

தற்போது யாருக்கும் உதவி செய்தலும் பின்னால் எனக்கு உபத்திரம் ரெடியாக இருக்கும் என்று பட்சி சொன்னாலும் கேட்பதில்லை..உதவ முடியாமல் இருக்கும் தருணத்தில் மனசாட்சிக்கு வேற பதில் சொல்ல வேண்டி இருக்கு.

என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப ஒன்னும் பண்ண வேணாம் அது அது நடக்க வேண்டிய நேரத்தில தான நடக்கும் நீ இப்போ
ஒழுங்கா ப்ளாக் எழுதி மக்களை காப்பாத்து என்று கட்டளை இட்ட ஒரு குரல்
என்னை இங்கே திரும்ப கிறுக்க வைத்து இருக்கிறது.

ஹ்க்கும் அப்படியே எழுதி விட்டாலும் அப்படின்னு யாரோ அங்க நினைப்பது உணர முடிகிறது.விடுங்க விடுங்க அரசியல இதெல்லாம் சாதாரணம்...

வாழ்க்கையின் போராட்டங்களை சந்தோசமாய் ஏற்றுக்கொள்ள துணிந்துவிட்டேன்

தங்கிவிட்ட
வலிகளும்
பழகிவிட்ட
ஏமாற்றமும்
எதுவும் கடந்து போகும் என்ற நிலையும்
உணர்ந்து தொடர்கிறேன்..

காபி,காபி
ஒரு சிறுகதையில் கணவன் மனைவி அன்பாய் தரும் காப்பியை இப்படி வர்ணிக்கிறான்
கணவன் '' காபி,காபி,என்று சொல்லிக்கொண்டே ஒரு திரவத்தை குடித்தேன் ''சக்கரை இருந்ததா என்றால் தெரியவில்லை ,சூடு இருந்ததாய் (நமக்கு என்னைக்கு இருந்து இருக்கு )நினைத்துக்கொண்டு குடித்தேன் என்றான் கணவன் .ஆக அந்த காப்பி எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன். சினத்தை குறைக்க ஒரு புன்னகை தோன்றியது.



விரும்புகிறேன்

உறக்கத்தில்
உன் விழி ஓரம்
அருகும்
புன்னகையாய்
பூத்திருக்க
விரும்புகிறேன்

ம் ..
காற்றுடன்
கலந்துவிடேன்
என்கிறது மனம்
உன் நெற்றியில் தவழும்
முடியை பார்க்கும்போது
எல்லாம்....

கோவத்தை கூட அன்பாய் காட்டு என்ற இனிய பழமொழி நியாபகம் வருகிறது..
அதனால் கவிதை எல்லாம் படித்து விட்டு கோவபடமா கம்மேன்ட்ல காட்டுங்க

டிஸ்கி :
தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அகில உலக பேபி அதிரா ரசிகர் மன்றம் சார்பில்
நகைச்சுவை அரசி பேபி அதிரா
அவர்களுக்கு பதினாறாவது((பேசியபடி அமௌன்ட் செட்டில் பண்ணிடவும்)
பிறந்த நாள் வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday, February 1, 2012

BILLA IS BACK




THE BILLA IS BACK....

(BILLA=SIVA)
JUST summa

என்ன நட்புகளே அனைவரும் நலமா.
கொஞ்ச நாட்கள் கழித்து...


விடுமுறை விரைவாக முடிந்து அரக்க பறக்க ஓடி வர மனம் இல்லாமல் நின்று நிதானமாய் வந்து பார்க்க விரும்பியதால் கொஞ்சம் தாமதம்.மன்னிக்கவும்

சென்று வந்த விடுமுறை அனைத்தும் நிறைந்த அழகான பயணம்
நிறைய (ஏ)மாற்றங்கள் சுற்றத்திலும், எல்லாம் நன்மைக்கே என்று அடுத்த படி நோக்கி நகர்கிறேன்.


நேரம் சரி இல்லை:(
கோவப்படும் ஒரு ஒரு நேரமும் எமனாகி போய்கிறேன் எனக்கே..ஏன் கோவப்பட வேண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் அப்புறம்தான் வருகிறது ..கொஞ்சம் நிதானமாய் இருந்து இருக்கலாம் என்று என்னும்போதும் எல்லாம் முடிந்து போய் இருக்கிறது இனிமேலாவது சற்று நின்று நிதானமாய் செல்ல விரும்புகிறேன். இந்த ஏழரை சனி எனக்கு முன்னால் நின்று நிதானத்தை இழக்க வைக்கிறது.(வீட்டில சொன்னாக நமக்கு நேரம் சரி இல்லையாம்..)வாட் டு டூ. இது செய்தலும் தவறாக படுகிறது, நான் நானாக பார்க்க படவில்லை என்று நினைக்கும்போதுதான் கோவமும் வருத்தமும் வருகிறது என்னதான் சுற்றமும் உறவுகளும் இருந்தாலும் நம் கையில் நாலு காசு இருக்கும் வரைக்கும்தான் நாம் வாழ முடியும்.

பணம்தான் உயிர்:

உயிர் இல்லா அச்சிட்ட காகித பேப்பருக்கு இருக்கும் மதிப்பு
உயிர் உள்ள மனிதருக்கு இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது..

ஒரு செயலும் வருத்தமும்
தவறு செய்ய யாரும் கொஞ்சம் கூட யோசிக்க வில்லை பார்த்த வரையில் பழகிய வரையில் நியமாய் இருப்பதை யாரும் மதிப்பதே இல்லை.அவரவர் வேலை முடிந்தால் சரி .

நேரம் இல்லை :(


நட்பும் சுற்றமும் பார்த்த வரையில்
நின்று பேச யாருக்கும் நேரம் இல்லை...ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் ஊரில் அப்படி எங்க என்ன பண்றங்கானு தெரியல. ஒரு ஒரு விசியமும் தாமதமாய் தான் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது அலுவலகம் முதல் அனைத்தும். தொலை பேசியில் கூட யாரையும் தொடர்பு கொள்ள முடிய வில்லை அனைவரும் அவ்ளோ பிஸி..

தொலைவில்
கண்டுகொண்டு
அருகில் இருந்தும்
வாகனத்தில்
தலையாட்டிவிட்டு
மட்டும் செல்லும்
நட்புகளும்

ஒன்றாய்
நடந்து சென்று
பழகிய நாட்களை
மறக்க செய்கின்றன

சோகம் :
விபத்து
கண் எதிரே இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு ஒருவர் இருந்த கிடந்தது தூரதில் அவர் உறவினர் அடிப்பட்ட நிலையில் அழுதுக்கொண்டு இருந்தது. .
கவனித்ததில் தலைக்கவசம் அணியவில்லை எவரும்.

என்னால் எந்த உதவியும் முடியாமல் போக வருத்தத்தில் ஆண்டவனிடம் மன்னிப்பு கேட்டு அந்த இடம் விட்டு நகர்ந்தாலும் இன்னும் நெஞ்சம் விட்டு அகல வில்லை.

கொஞ்சம் கூட கவனம் இல்லை,பாதுகாப்பு பற்றி அக்கறை இல்லை,சாலைகள் நன்றாக இருந்தும் தவறு நம் மீது இல்லாது இருந்தும் இறப்புகள் பல கண் முன்னே.அவரவர் அவரவர் வேலை பார்த்துக்கொண்டே போய்க்கொண்டே இருக்கின்றனர் அவர்களுடன் நானும்...

தினமும் இட்லி:)


குறைந்த நாள் என்றாலும் இருந்த நாட்களில் வீட்டில் அதிகம் இருந்தேன்.பஞ்சு பஞ்சாய் இட்லி.வகை வகையாய் சட்டினி ,பொடி, சாம்பார் ,என்று எதையும் விட மனம் இல்லை..அம்மா கையால் எல்லாம் சாப்பிட்டு உறக்கம்.அம்மாவுக்கு காய்கறிகள் நறுக்க உதவி என்று நாட்கள் வெகு விரைவாய் சென்றது.

ஒரு நிம்மதி

ஒரு LIC பாலிசி ஒன்று அப்பாவின் பெயரில் போட்டுவிட்டு வந்தது..

ஒரு சந்தோசம். ஒரு இணைய நட்பை அவர் வீட்டுக்கு சென்று பெற்றோருடன் சந்தித்தது அவருடன் அவர் வீட்டில் வடை பாயசம் சாம்பாருடன் ஒரு கட்டு கட்டியது.கொஞ்சம் நேரம் இருந்தாலும் சந்தோசமாய் கழிந்து நெஞ்சில் எப்பொதும் இருக்கும்.

பிறகு சென்று வந்த ஒரே இடம் திருச்செந்தூர் முருகன் கோவில்.
முதன் முறை சென்று இருக்கிறேன்.ஒரு அனுபவம் மேல்சட்டை எல்லாம் இல்லாமல் போக வேண்டும்..அது பற்றி அடுத்த பதிவில் (நாம அடுத்த போஸ்ட் போடணும்ல)

எப்பொதும் தனியாக இல்லை அப்பாவுடன் மட்டும் ஏர்போர்ட் வருவேன் இந்த முறை
அம்மா அப்பா தம்பி அனைவரும் கூட வந்து வழி அனுப்பி (தள்ளி) விட்டனர்...

எங்க பார்த்தாலும் ஒரே பீலிங்க்ஸ் ஒப் இந்தியா..என்னமோ வேற கிரகத்துக்கு போவது போல ஒரு உணர்வு...

போகும்போது இரவில் விமானம் விட்டு இந்தியா மண்ணில் இறங்கும்போது திருப்பாச்சி விஜய் பாணியில் காலை சுழற்றி ஒரு SLOW MOTIONஇறங்கலாம்னு பார்த்தா பின்னாடி இருந்த ஒரு அவசரபயணி ஒரு பார்வை பார்க்க(!) அந்த வழியயை பின்பற்றமால் நல்ல பிள்ளையாய்

வந்ததது குறிப்பிட தக்கது.
பயணம் தொடரும்.

Wednesday, January 11, 2012

பொங்கல் வாழ்த்துக்கள் ...

அனைவருக்கும்

வணக்கம்(/\)
வணக்கம்(/\)
வணக்கம்(/\)


அன்பான தைத்திருநாள் வாழ்த்துக்கள்.



கடந்த வருடம் ரொம்ப
கடினமான நிமிடங்களும் சந்தோசமான தருணங்களும் கலந்து
அழகாய்க் கடந்து போனது.

அன்பே உருவான பாசமான பதிவு உலக உறவுகள்... மற்றும் கிடைத்த நட்புக்கும் நட்பின் பாசத்துக்கும் அனைத்துக்கும்



இறைக்கு நன்றி. (தேங்க்ஸ் பிள்ளையாரப்பா)

பொங்கல் எங்கே வைத்தாலும் பொங்கல் பொங்கல்தான்..
அதனால் எங்கே இருந்தாலும் பொங்கல் வைத்து
கொண்டாடுங்க.

பொங்கலுக்கு ஊருக்குப் போறேன்... .
ஊரில் விளம்பர தட்டி எல்லாம் கட்டி வரவேற்பு பலமாய் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ம்... ரொம்ப வருஷம் கழிச்சு அம்மா, அப்பா, தம்பிங்க எல்லோரும்ம் சேர்ந்து கொண்டாடப் போகிறோம். ஒரு பக்கம் சந்தோசமா இருந்தாலும் மறுபக்கம்... திரும்பி வரப்ப ஒரு கஷ்டம் வரும் அதை நினைத்தால் போக விரும்பவில்லை.போகாமல் இருந்தால் இன்னும் வருத்தம் வரும்.

போக வேண்டாம் என்று இருந்தேன். வீட்டில் இருந்து திரும்பத் திரும்ப அழைப்பு, மறுக்க முடியவில்லை. அதனால் இங்கு உள்ள வேலைகள் எல்லாம் வேகவேகமா முடித்து வேறு ஒரு நண்பரிடம் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன், ஒரு பதினைந்து நாள்... இல்லை இருபது நாட்கள் இருப்பேன்.

பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க வந்துவிடுவேன்
வீட்டில் நெட் வசதி இல்லை..நெட் செல்வது கடினம் தான்
ஊரில் இருக்கும் அத்தனை நாளும் நெட் பக்கம் போகமாட்டேன் விடுமுறை விட்டாச்சு......

பிறகு வீட்டில் அம்மாவுக்கு அப்பாவுக்கு தம்பிக்கு எல்லாம் எனக்கு தெரிந்த சமையல் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். (என்னை சமைக்க விடமாட்டார்கள் என்று தெரியும். கடந்த முறை சாதம் வைத்ததில் அடிப்பிடித்து ஒரு பாத்திரம் பயன்படுத்த முடியாமல் போனது குறிப்பிட வேண்டிய தகவல்.) இந்த முறை அப்படி ஏதும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுவேன். :)

சிவன் கோவில், பெருமாள் கோவில் எல்லாம் போகணும். அங்கே பொங்கல் சாப்பிடணும். (பிரதோஷம் அன்று தயிர்சாதம் புளியோதரை அருமையாய் இருக்கும்.)

சைக்கிள் எடுத்து ஊர் எல்லாம் சுத்தி வரணும். அத்தை பொண்ணு பொன்னிக்கு கல்யாணம் ஆகிட்டான்னு தெரியல, விசாரிக்கணும். :)



டிஸ்கி 1:


பிறந்த நாள் வாழ்த்து

வாழ்த்த வயதில்லை இருந்தாலும்
வணங்கி மகிழ்கிறோம்

இவர் பற்றி...

கற்பனையின்
வடிவம்
காகிதமாய் இருந்தாலும்
கண்ணாடி
உடைந்தும் போனாலும்
உருவம் கொடுக்கும்
பிரம்மா.

கண்டிப்பில்
கனிவான
வாத்தியார்
வளர்ந்தும் வளர்ச்சி அடையாத குழந்தைகளுக்கு
அன்பாய் சொல்லி தரும்
அன்னை தெரசா!

ஆமை முதல் பட்டம் பூச்சி வரை இவர் வீட்டில் இடம் உண்டு...

நாளை 13.01.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு அனைத்து உலக தலைவர்களும்,பதிவு உலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவிக்கின்றனர் ..

நானும் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்


HAPPY BIRTHDAY TO YOU IMMA

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


என்றும் நலமாய் வாழ இறைவனை வேண்டுகிறோம்.

நம்ம வீட்டுக்கு வந்தால் நல்லா சாப்பிட்டுதான் போகணும்
வாங்க வாங்க சாப்பிட்டு விட்டு வாழ்த்திட்டு போங்க..


மொய்ப்பணம் பேபி அதிரா வீட்டில் பிடிக்க படுகிறது:)


டிஸ்கி 2:
பிறகு நூறாவது பதிவு போட்ட பிரபல பதிவர் பேபி அதிரா அவர்களுக்கு
நூறு வாழ்த்துக்கள் சொல்லி விடை பெறுகிறோம்
இன்னும் பல நூறு பதிவுகள் போட்டு அனைவரையும் சந்தோஷ படுத்த விரும்புகிறோம்

சும்மா 1....

வாழும் வாழ்க்கை
கடினமாத்தான் இருக்கு
ஆனால் பிடித்து இருக்கிறது.
வாழ்ந்துதான் பார்ப்போமே .
என்னவள் இருக்கிறாள்
என்ற நம்பிக்கையில்..

சும்மா 2....

நாளை நம்பிக்கை மட்டுமே.
இன்று, இந்த நிமிடம்
மட்டும் நிஜம்.
அதனால்
சந்தோசமாய்
அமைதியாய்
இருக்கும் வாழ்வை வாழ்ந்து,
நன்றி சொல்லிப் போவோம்
வாழ்வின் அடுத்த படிக்கட்டுக்கு.

Tuesday, December 20, 2011

தலைப்பு தெரியாத கவிதைகள்...




கிறுக்கி வைக்கிறேன்

வேகமாய்
தேடுகிறேன்
வார்த்தைகளை
கிடைத்த
நிமிடத்தில்
கிறுக்கி வைக்கிறேன்
உன் நினைவுகளை...


மழைச்சாரலில்
நனைவது
இல்லை நான்,
உன் ஞாபகம்
கரைந்து விடும்
என்பதால்.


உன் பெயர்
வந்த புத்தகத்தின்
பக்கம்
கிழித்து
பத்திரப்படுத்துகிறேன்
பொக்கிஷமாய்.


கண்களால்
கைதி ஆக்கிச்சென்றவளே
எப்போது விடுதலை
எனக்கு!

தினம் தினம்
மழை வரும் நேரம்
ஏதோ ஏதோ
ஒரு நினைவு
மழையின்
ஒரு ஒரு துளியிலும்!


உனக்கு மழை பிடிக்கும்
என்றாலும்
நனையவே விட மாட்டாய்
எனக்கு ஜலதோஷம்
பிடிக்கும் என்று ...


டிஸ்கி :

அனைவருக்கும் அன்பான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
எல்லாரும் சந்தோசமா எப்பொதும் நலமுடன் இருக்க கடவுளிடம்
வேண்டுகிறேன்.



Friday, December 9, 2011

இந்த வார புலம்பல் ...




என்னால முடியல:....(((((


நண்பனுக்கு கல்யாணம் நல்ல விசியம்தான் ...
நிச்சயம் நல்ல விசியம்தான்..
ஆனால் கல்யாணத்துக்கும் நிச்சயத்துக்கும் இடையில இடைவெளி விடக்கூடாது
அப்படி விட்டா..அது அது தொலைபேசி கம்பெனிக்குதான் நல்ல விசியம்
கூட இருக்கும் நமக்கு அது ராகு காலம்...

அப்படி யாருக்காவது பிக்ஸ் ஆகிட்டா..அவங்கள நம்ம கூட கூட்டு சேக்க கூடாது..
யார இருந்தாலும் கழட்டி விட்ரனும் ..இவிங்க தொல்ல தாங்க முடியல சாமி
வேலை விட்டு வந்த ஆரம்பித்த போன் அடுத்த நாள் வேலைக்கு போற வரைக்கும் பேசிக்கிட்டே இருக்காங்க ...அப்படி என்னதான்(.&*&**&^#^#$^%$^%$#...).....:)

ஏன் புலம்ப்றேனு கேக்குறீங்கள எல்லாம் நண்பர் ஒருவர் இரவு உறங்கும் போதும் கூட ஹிலோ ஹிலோனு பேசிகிட்டு இருந்தா...
கோவம் வராம என்ன பண்ணும்...

இனி வேற கல்யாணம் ஆகாத நண்பனா கூட்டு சேர்க்க வேண்டியதுதான் ...அவ்வவ்

லைப் இஸ் டு லவ் மச்சி:

ம் என்ன வாழ்க்கைடா சாமின்னு ஒருசில நேரம் வேண்டி வரும்...
ஆனால் இது உண்மைதான் போல் இருக்கு

போராடிக்கொண்டே இருப்பதால்
வாழ்கையின் நேரம் முடிந்து விடுகிறது
அதனால எல்லாரும்
போராடும் போதே உங்கள் வாழ்க்கையையும்
வாழ்ந்துவிடுங்கள் ...

(தத்துவம் சொன்னவர் - சிவா )


இந்த வாரம் மொக்கை :

ரொம்ப யோசிக்காதீங்க சும்மா...
வாழ்க்கை ஒரு அழகான பயணம்
எவ்ளோதூரம் பயணம் அழகா இருக்கும் என்பது நம்ம கைலதான் இருக்கு...
பல நேரம் என்னை நானே திட்டிக்கொள்வேன், ஏன் எப்படி இருக்கிறேன் என்று
நிதானமாய் யோசித்து பார்த்ததில் ஒன்றுமே இல்லாத
விசியத்துக்கு எல்லாம் கவலை பட்டு இருக்கிறோம் என்று வருத்தபடுகிறேன்.
அதனால் இப்போது எதற்கும் கவலை படுவது இல்லை..
ஒரு சில விசியங்கள் தவிர..
சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை தொடர்ந்து வருகிறது..
பாக்கலாம் எவ்ளோ தூரம்தான் போகும்
எல்லாம் கடந்து போகும் என்று
ஒரு புன்னைகையை விட்டுச்செல்கிறேன்.



இந்த வார கவிதை:

ம்
யோசித்து பார்க்கிறேன்
ஒரு வரிகூட
வர வில்லை
கவிதையாய்
அதனால்
எழுதிய
பேப்பரை கசக்கி
எறிந்தேன் ...

குப்பையில் இருந்த
காகிதம் சொன்னது
"தமிழ் தப்பித்தது
என்னிடம் இருந்து "

அடடே ...
நமக்கும் கவிதை
வந்துட்டே ...:


(யாரும் அடிக்க கூடாது சிவா பாவம் )

Monday, November 7, 2011

ஞாபகம் ...



தீபாவளிஞாபகம்
தீபாவளி முடிந்து சென்னைக்கு கிளம்பிக்கொண்டு இருந்தேன், பேருந்தில் "பத்திரமா போய்ட்டு வா,போன உடனே கால் பண்ணு,மணி பர்ஸ் எல்லாம் பத்திரம்!" என்ற பாசமான உரையாடலை கேட்டுக்கொண்டே அப்போது என் கவனம் பஸ் ரேடியோவில் அரைகுறையாக இருந்தது, சார் இந்த பெட்டியை மேல வைக்க முடியுமா என்ற குரலை எங்கயோ கேட்டது போல இருக்கே என்று திரும்பி பார்க்கையில் ....

அருகில் அவள், அவளது அம்மா,ஒருவயது குழந்தை. வந்ததது கவிதா என்று புரிந்தது. "என்ன ஜீவா எப்படி இருக்க? உன்ன பார்ப்பேன் நினைக்கவே இல்லை..எங்க போற?" என்று கேள்வி மேல கேள்வி கேட்டு என்னை முழி பிதுங்க வைத்து விட்டாள்..சம்பரதாய விசாரிப்புகளுக்குப் பின் அவள் அம்மாவிடம் என்னை அறிமுக படுத்தி விட்டு அவள் புராணத்தை தொடர்ந்தாள்.

அருகில் இருப்பவர்களை பற்றி கவலை பட்டதாக தெரியவில்லைவில்லை, இப்பவும் அவளின் வெளிப்படையான தன்மை மாறவில்லை என்பதை கண்டு உள்ளுக்குள் சந்தோசம். வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஆம் ஆம் இல்லை என்று பதில் கூறுவதை விட வேறு வழி தெரியவும் இல்லை.

"பள்ளி முடிந்து பத்து வருடம் கழித்து முதன் முதலாக பார்க்கின்றேன், அதுவும் இந்த நிலைமையில் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை ஜீவா" என்றாள் மறுபடியும்..பிளாஷ் பாக்: பள்ளிமுடிந்ததும் அவள் அப்பாவிற்கு வேறு ஊருக்கு மாறுதல் கிடைத்து விட்டதாகவும், அங்கே கல்லூரி படிப்பு முடித்து கம்ப்யூட்டர் கிளாஸ் போய்க்கொண்டு இருக்கும்போது திருமணம் முடிந்ததாக கூறி முடித்தாள்.

சரவெடி வெடித்து முடிந்தது போல இருந்தது அவளின் உரையாடல்கள்..அவளிடம் பிடித்த விஷயம் ஒளிவு மறைவு இன்றி நேரடியாக பேசும் பண்புதான். இப்போவும் மாறாமல் இருக்கிறது, ஒருமுறை கணக்கு பாடத்தில் ஏதோ கேட்க எனக்கு தெரியவில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது கணக்கு வாத்தியார் வர இசகு பிசகாக மாட்டிக்கொண்டு அவர் என் காதைத் திருகி அடிவாங்கியதை அடிக்கடி சொல்லி கேலி செய்து பிறகு மன்னிப்பு கேட்டதும் திடீரென்று நினைவில் வந்து போனது.."உனக்கு ஞாபகம் இருக்கா ஜீவா என்னால தான அன்னைக்கு நடராஜன் சார் கிட்ட திட்டு வாங்கின?" என்று அவளும் நினைவு கூர்ந்தது எனக்கு வியப்பை கொடுத்தது.

வகுப்பில் எட்டு பேரு மட்டும் பெண்கள் மீதி நாற்பது பேர் பசங்க. அந்த எட்டில் கவிதா மட்டும் என்னிடம் பேசி பழகியது இப்போது நினைத்தாலும் கொஞ்சம் ஆச்சர்யமாய் இருக்கும்.
மற்ற நண்பர்களிடம் பழகியது போலத்தான் உன்னிடம் நட்புக் கொண்டு இருந்தாலும் மற்றவர் பார்வையில் தவறாய் படும் என்று விலகி விலகிப் போனது உனக்கு என்றாவது புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.
மறுபடியும் பேசிக்கொண்டே நேரம் போனது தெரியவில்லை, அவள் இறங்கும் இடம் வந்ததும்
"போயிட்டு வரேன் ஜீவா, கவனமா இரு, சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு!" என்று சொல்லிவிட்டு சென்றாள்.

சென்ற உடன் பள்ளி இறுதி நாள் அன்று என்னிடம் கேட்ட கேள்வி ஒன்று ஞாபகம் வந்து போனது. "ஜீவா என்ன கல்யாணாம் பண்ணிகிறியா?" அப்போதும் பதில் தெரியாத திரு திரு வென்று முழித்தது

நினைத்து எனக்குள் ஒரு குறும் சிரிப்பு
எப்போவும் வந்து போகும்..

diski:

சாமி இந்த ப்ளாக் படிக்கிறவங்கள மட்டும் காப்பாத்து..

Friday, October 14, 2011

விழிகளிலே ஒரு மயக்கம்...!




கண்ணுக்குள்
இருக்கும்
கருவிழியே
உன் விழி
பேசும்
மொழி
தெரியாமல்
தவிக்கிறேன் !

உன் இமைகள்
அசையும் போதும்
பார்க்கும் திசை நோக்கி
இமைக்காமல்
தவம் இருக்கிறேன்!

இமைக்கும் நேரத்தில்
உன் பார்வை கடந்துவிட்டால்
தவம் கலைந்து விடும் என்று!

தினம் தினம்
பார்க்கும்
பார்வையின்
அர்த்தம் உணர
மறுமுறை
திரும்பி
பார்க்கின்றேன்!

கோவத்தில்
பார்ப்பாயோ?
இல்லை
தாபத்தில்
அனுதாபத்தில்
பார்ப்பாயோ?
தெரியாது.

ஆனால்
ஒருமுறையாவது
என்விழிக்கு
பார்வை கொடு!

உனக்காய்
நான் தேடிய
ஒரு வார்த்தை
ஒன்று மட்டும்தான்!

உன்னை
மிகவும்
நேசிக்கிறேன்
இருக்கும்
வரையிலும்!

டிஸ்கி:

என்னவளே
ஏன் எப்படி
அழகாய் இருந்து
பயமுறுத்துகிறாய்?

பேய்களை கண்டு
எனக்கு பயம் இல்லை
என்று சொன்னதாலா?

Wednesday, September 21, 2011

குட்டிவாசகம்...




குட்டிவாசகம்:

பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை.
பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை.
இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது
இருந்தாலும் சமாளிப்போம் என்ற நம்பிக்கையில்
அன்பான நட்பின் ஆதரவோடு உண்மையான நட்பின் பாசத்தோடு
சந்தோசமாய் வாழ்வோம்..

இருக்கும்
வரையிலும்
மற்றவரை
சந்தோஷப்படுத்தி
வாழ்வோம்.

முடியும் வரையில்
யாரையும்
கஷ்டப் படுத்தாமல்
இருப்போம்.

எவ்வளவு நாள் இருப்போம் யாருக்கும் தெரியாது
இருக்கும்வரை யாரையும் புறம் சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

ஓகே போதும் போதும்......

இப்போ ஒரு
குட்டிக் கிறுக்கல்...

என்னவளின்
சாயம் பூசா
இதழ்
பார்த்து
தாமரை

பிரம்மனிடம்
சண்டை இட்டது!

அவள் இதழ்
என்னைவிட
அழகாய் இருக்க
காரணம்
என்னவென்று?..


சுழலும்
வாழ்க்கைச்சக்கரத்தில்
உன்னோடு இருக்கும்
நிமிடத்தை மட்டும்
சுழலாமல்
இருக்க....

கடிகாரத்தின்
பேட்டரியை
கழற்றி
வைக்கின்றேன்!

அதில்
தவிக்க
வைத்த
நிமிடத்தையும்
சேர்த்து ...!


டிஸ்கி:

இன்று உடன் பிறவா (SIS + FRIEND )தோழிக்கு பிறந்த நாள்
எப்போதும் போல வெற்றிக்கரமாக
முதல் வாழ்த்து சொல்லி வாழ்த்திவிட்டேன்.
இன்று மட்டும் அல்ல எப்போதும் நலமாய் வாழ நீங்களும் வாழ்த்துங்கள்
(முதல் வடை போல முதல் வாழ்த்து சொல்றதுகூட ஒரு சந்தோசம்தாங்க..)
ஹாப்பி பர்த்டே பேபி)

Monday, August 29, 2011

மழையே நீ நல்லா இருப்பியா...


மழை ரொம்ப நல்ல விசயம், ஆனால் ஒரு சிலருக்கு.


"ம்! இந்த பாழாப் போன மழை இருக்கே, நேரம் கேட்ட நேரத்தில வந்து இம்சையா கொடுக்குது," என்ற வசவுகளை கேட்டுக் கொண்டு இருந்த நேரத்தில் பெரு மழை வந்தது. தொப்பலாய் நனையும் முன்பு வீடு போய் சேர வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வண்டியை வேகமாய் செலுத்திக் கொண்டு இருந்தேன்.

அந்த நேரம் வேகமாய் காற்றும் அடித்தது. வண்டியில் வேகமாய்ப் போய் விடலாம்; இருந்தாலும் எதற்கு இவ்ளோ அவசரம் என்று அருகில் இருந்த மரத்தடியில் எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் இருந்த நிழல்குடை கட்டிடத்தில் மழைக்கு நடுங்கிக் கொண்டு என்னைப் போல அங்கே காத்திருக்கும் கூட்டத்துள் நுழைந்தேன்.

தெரிந்த முகமாய் யாரவது இருக்கிறார்களா என்று கண்கள் தேடும்போது இரு காந்தவிழிகள்... என்னைப் பார்த்தும் பாராமலும் நிற்கும் ஒரு காந்த விழியாளைக் கண்டு கொண்டேன்.

கொஞ்சம் சந்தேகம்தான் காந்தக்கண்கள் பார்ப்பது நம்மையா இல்லை வேறு என் அருகில் இருக்கும் யாரையாவதா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். நல்ல வேளை யாரும் இல்லை. ஏன் என்றால் அங்கு இருந்தவர்கள் எல்லாம் அறுபதை தாண்டிய முன்னாள் இளம் வாலிபர்கள். அவ்வாறு திரும்பி பார்க்கும் போது காந்தவிழி புன்னகைக்கவும் தவறவில்லை. இந்த இடத்தில் வைரமுத்து நின்று இருந்தால் ஒரு 'கள்ளிக்காட்டு இதிகாசம்' போல 'உன் புன்னகை காட்டும் இதிகாசம்' என்று கவிதை நூல் வெளியிட்டு இருக்கலாம்.

அந்த மழையிலும் மக்கள் அனைவரும் ஒவ்வொரு கதை பேசிக்கொண்டு இருந்தனர். அதில் ஒரு அக்கா, "என் தங்கச்சி ஊரில இருந்து போனவாரம் போன் போட்டு, அக்கா வத்தல் போட்டு வைக்கா. பசங்கலாம் வத்தல் கேக்கராங்க என்று கேட்டு இருந்தா. இன்னைக்கு வத்தல் போடலாம்னு இருந்தேன். இந்த சனியன் மழை வந்து ஒண்ணும் பண்ண விடாம பண்ணிட்டு," என்று பக்கத்தில் இருக்கும் பாட்டியிடம் அங்கலாய்த்துக் கொண்டு இருந்தது. அதற்கு அந்த பாட்டி சொன்ன பதில் கேட்டு நாங்கள் சிரித்துக் கொண்டோம்.

அந்த காந்த விழி அருகில் இருக்கும் கல்லூரியில் படித்துக் கொண்டு இருப்பது போல கையில் இரண்டு நோட்டுகளும் வைத்து இருந்தது. ஏதோ ஒரு தைரியம் பேச வேண்டும் என்று தோன்றியது.

"மழை எப்போது விடும் என்று தெரியல," என்று பொதுவாக பேச ஆரம்பித்தோம்.
சினிமா போல கனவா இல்லை நனவான்னு தெரியல. இருந்தாலும் உள்ளுக்குள் மனது மழை விடக்கூடாது என்று வேண்டிக் கொண்டு இருந்தது அந்த வத்தல் போட நினைக்கும் அக்காவுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

உள்ளுக்குள் இந்த காந்தவிழியுடன் கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஊரில பேச முடியாது, ஏன் என்றால் எங்காவது நின்றால் கூட "உங்க பையன் அங்க எதுக்கு நிக்கரப்பல?" என்று தகவல் அப்பாவுக்குப் போய்விடும். கொஞ்சம் பயம் அதனால் எங்கும் நிக்கவும் மாட்டேன் காரணம் இன்றி எவரிடமும் பேசுவதும் கிடையாது. தெரிந்த முகம் என்றால் ஒரு புன்னகை அவ்வளவே. ரொம்ப அமைதியான பையன்னு ஊருக்குள்ள நமக்கு ஒரு பேரு. (நீங்க நம்ப மாட்டீங்களே.)

அந்த காந்தவிழி கல்லூரியில் படிப்பதாகவும், புதிதாய் அந்த ஊருக்கு குடி வந்து இருக்கும் போஸ்ட் மாஸ்டர் மகள் என்றும் அறிமுகப் படலம் ஆயிற்று. என்னைப்பற்றி கொஞ்சம் சுருக்கமாய் கூறிக்கொண்டேன். ஒரு விசயம் சொல்ல மறந்து விட்டேன் மழை விடுவதற்குள் நாங்கள் பேசும்போது எல்லாம் பக்கத்தில் இருந்த தாத்தா நூறுமுறை மணி கேட்டு தொல்லை பண்ணிவிட்டார். எனது கடிகாரத்தை அவரிடமே கொடுத்து விடலாம் என்று நினைத்தேன். அவருக்கு மணி பார்க்கத் தெரியுமா என்பது வேறு விசயம்.

மெல்ல மழை பெய்துகொண்டு இருந்தது. முன்பு மழை பிடித்தும் உணராமல் இருந்து இருக்கிறேன். இந்த மழை அழகாய்த் தெரிந்தது கொஞ்ச நேரம் மட்டுமே.

காந்தவிழியுடன் பொதுவான விசயங்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே மழை நிற்கும் போல சத்தம் குறைந்து ஒருவர் ஒருவராய் நகர ஆரம்பித்தனர். கடைசி வரை நின்று கொண்டு இருந்தது நாங்கள் மட்டும் இல்லை; மணி கேட்டு தொல்லை பண்ணின அந்த பல்லு போன தாத்தாவும்தான். பிறகு ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு அவரவர் வீடு நோக்கி நகர ஆரம்பித்தோம்.

மழை நின்று விட்டது அவளின் காந்த விழிகள் என்னைவிட்டு போகவே இல்லை..... நாங்கள் நிஜமாவே பல்லுபோன தாத்தாவை திட்டவில்லை.

நீ வெறும் தூறலை
விட்டுச் சென்றால்
கவலை இல்லை.
அவளின் நினைவுகளை
அல்லவா
தூறிவிட்டு
சென்று விடுகிறாய்.

மழையே நீ நல்லா இருப்பியா...

அந்த மழை வராமல் போய் இருக்கலாம் என்று திட்டிக் கொண்டிருந்தோம்.


டிஸ்கி :
இந்த சின்ன முயற்சிக்கு பதிவில் உள்ள தவறுகளை திருத்தி மாற்றம் பண்ணிகொடுத்த இமா டீச்சர் அவர்களுக்கு மிக்க நன்றியும் அன்பும்..


Thursday, August 18, 2011

நம்ம ஊரு மையினருக்கு பிறந்தநாள் ...



வாழ்த்த வர உங்களுக்கு ....


அண்ணே
நம்ம ஊரைப் பத்தி எப்படி ஒரு ஒரு இடத்தையும்
அப்படியே என்றும் நினைவில் வைத்து
அலை போல என்றும் நீங்காது இருக்கும்
உங்கள் நினைவுக்கும்

கதைமுதல்
கவிதை வரை
கட்டுரையிலும்
விளையாட்டிலும்
மேலும்

கம்ப்யூட்டர் கதைகளை எழுதும் சுஜாதாவை போல
க்ரைம் தொடர் கதைகள் எழுதும் ராஜேஷ்குமார் போல
நகைச்சுவையும் கலந்து
எல்லாம் கலந்த கதம்பமாய்
பதிவுலகில்
திறம் வாய்ந்த ஒரு வேந்தனாய் வளம் வரும்
உங்களுக்கு எந்த தம்பியின் அன்பான
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

என்றும் இளமையுடன் நீண்ட
ஆயுளுடன் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் .

ஒரு ஒரு பதிவையும் லிங்க் கொடுத்து படிப்பதை விட
ஒரு லிங்க் உங்கள் சரித்திரம் பதிவு வரலாற்றில் என்றும் இருக்கும்
என்று நம்புகிறேன்.

வாழ்த்த வயதில்லை
இருந்தலும் வாழ்க வளமுடன்
நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் சந்தோசமாய் இருக்க
எனது அன்பான பிராத்தனைகள் அண்ணா.

இன்னைக்கு நம்ம ஊரு மையினருக்கு பிறந்தநாள்
முடிந்தால் நீங்களும் வாழ்த்துங்கள்
டிஸ்கி : உங்களுக்கு பிடித்த இட்லியும் கூட தேங்காய் சட்னியும்,இட்லிபொடியும்...
.



நம்ம ஊரு மைனர்

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...