Sunday, July 31, 2011

என்னைத் தேட வேண்டாம்....


என்ன யோசிக்கிறேன்
என்று தெரியாமலே
யோசிக்கிறேன்.
எங்கு செல்கிறது
என்மனம்!
அதுவும் தெரியவில்லை
தெரிந்துகொள்ள
விரும்பவும் இல்லை.

மூச்சு முட்டாத சுவாசம்,
கண்ணைப் பறிக்காத
சூரிய ஒளி,

காதைக் கிழிக்காத
வண்டுகளின்
ரீங்காரம்,

மயங்க வைக்காத
மலரப் போகும்
பெயர் தெரியாத
பூக்களின் வாசம்.

காற்றுப் புகாத இடத்திலும்
என் மனம்
பரந்த விண்வெளியில்
விரிந்து கிடக்கிறது.

எங்கு பார்த்தாலும்
பச்சைப் பசேல் மரங்களின்
புன்னகை வெள்ளம்,

அடுக்கடுக்காய்
அழகான
மலைப்பாதைகள்,

அடர்ந்த காட்டில்
நீண்டு திரும்பும்
வகிடிடப்பட்ட
ஒற்றையடிப்பாதைகள்,

அழகாய்
வரவேற்கும்
வானவில்.

கபடம் இல்லா
அன்பு உலகின்
எல்லையைக் காணவிரும்பி
தொலைகிறேன்....

என்னைத் தேட வேண்டாம்.!

Friday, July 15, 2011

கிராமத்து கனவிலே...(2)..The end

ஜீவா சுமாராய்ப் படிப்பவன். ராஜேஷ் அவனுக்கு முன்னால் இருப்பவன், படிப்பதைப் பொறுத்து முடிவுகள் இருக்கும். கணேஷ் ஒரு அளவுக்கு படிப்பான். எப்படியோ மூவரும் ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்றாய் படிப்பவர்கள், இன்று பிளஸ் 2 வரை வந்து விட்டனர்.

இப்படி இருக்க ஜீவா இன்னும் அந்த கிராமத்துக் கனவிலே லயித்து இருந்தான். காரணம் அந்த கனவில் வந்த....

ஐந்தாம் வகுப்பில் காலணாவுக்கு கடலை மிட்டாயும் மீதிக்கு தேன்மிட்டாயும் வாங்கிகிட்டு
அவனுக்குக் கொடுக்க வேண்டும் என்று மெனக்கெட்டு அவனது அருகில் வந்து யாரும் பார்க்காம போது அவனிடம் கொடுத்து சாப்பிடச் சொல்லும் அவனோட அத்தை பொண்ணு ரேவதி தான் அவன் கனவுக்கு காரணம்.


ரேவதியைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிட்டு. இப்போது எப்படி இருப்பா!! அப்போ

'குண்டு பொண்ணு' அப்டின்னு கிண்டல் பண்ணிட்டு இருப்போம். இப்போ பார்த்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

உப்புக்கும் காரணம் இல்லாத ஒரு சின்னக் குடும்பச் சண்டையில் இரு குடும்பமும் வெகு தொலைவு பிரிந்து விட்டார்கள்.

அப்போது ராஜேஷ், "ஏய் ஜீவா! தமிழ் வாத்தி வாந்துட்டாரடா." என்று எழுப்பிவிட்டான்.

கன நேரம் எல்லாம் மறந்து ரேவதியை பற்றி நினைத்துக் கொண்டு இருந்தான்.

ஜீவா பொதுவாக எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டான், சோம்பேறியும் கிடையாது. அதே சமயம் "அவன் வேலையில் சமத்தாக இன்று வரை இருந்து இருக்கிறான்." என்று மற்றவர்கள் கூறக் கேட்டு இருக்கிறான்.

இந்த சமயத்தில் திடீரெண்டு ரேவதி நினைவுக்கு வரவும் ஒரு வித மனக்கலக்கம் அடைந்து இருந்தான்.

இந்த வருடம் விடுமுறையில் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று உள்மனம் சொல்லிகொண்டே இருந்தது.

நாட்கள் நகர்ந்தன. காலாண்டு, அரையாண்டு, மூன்றாம் பருவத் தேர்வும் பள்ளி இறுதித் தேர்வும் நெருங்கிவிட்டது.

இந்த தேர்வு நல்லபடியாக எழுத வேண்டும் என்று தந்தை அறிவுரை கூறிகொண்டே இருந்தார். "சரி, சரி" என்று கேட்டுக்கொண்டே அவனால் முடிந்த அளவுக்கு தேர்வையும் எழுதி முடித்து இருந்தான்.


அவனது எண்ணம் எல்லாம் நகரத்தில் இருக்கும் கல்லூரியில் படிக்க வேண்டும்.


பள்ளி தேர்வுகள் வெளி வந்தன. அவனும் நண்பனும் முதல் வகுப்பில் தேறி இருந்தனர். இருவரில் ராஜேஷ் கணேஷை விட கூடுதல் மதிப்பெண்கள் பெற்று இருந்தான்.

ஜீவாவும் பள்ளியில் மூன்றாம் இடம் பெற்று இன்ஜினியரிங் கல்லூரி செல்லும் தனது கனவை நிஜமாக்கிக் கொண்டான்.

இதற்கு இடையில் கிராமத்தில் முக்கிய தலைவர் ஒருவர் திருமணத்தில் இரு குடும்பங்களும் சந்தித்துக் கொண்டன. ஜீவா எதிர்பார்க்கவே இல்லை, இப்படி ரேவதியைப் பார்ப்போம் என்று.

திருமணத்தில் பரிமாறும் இடத்தில் ஜீவாவும் நண்பர்களும் சேர்ந்து அங்கு இருந்தவர்களுக்கு பரிமாறி கொண்டு இருந்தனர்.


அப்போது "ஏன்பா, சாம்பார் கொஞ்சம் இங்க போடு." என்ற ஒரு தேன்குரல். ஜீவாதான் அது என்று ரேவதிக்குத் தெரியாது.

ஜீவாவுக்கு மட்டும் தெரியும் அந்த குண்டு விழி பார்வையும், அழகான கன்னக்குழி அழகும் இவள்தான் ரேவதி என்று புரிந்து கொண்டான். ரேவதிக்கும் எங்கோ பார்த்த நியாபகம் என்று யோசித்து அறிந்து கொண்டாள்.

சம்பிரதாய விசாரிப்புகளுக்குப் பிறகு இருவரும் பால்ய நினைவுகள் பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது அவள் தந்தை குரல் கேட்டு பிறகு சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.

அந்த நேரம் மாமாவின் மேல் வந்த கோவத்துக்கு அளவே இல்லை. பின்னாடி அவன் நண்பன் ராஜேஷ் வந்து, "யாருடா அது? சொல்லவே இல்லை." அப்படி இப்படி என்று இவனை இன்னும் உசுப்பேற்றிக் கொண்டு இருந்தான்.

அந்த திருமணத்தில் மீண்டும் இரு உறவுகளும் பழசு மறந்து வழக்கம் போல பேசிக்கொண்டு இருந்தது இருவருக்கும் மனதில் ஒரு சந்தோசத்தை கொடுத்தது.

இந்த வருடம் கல்லூரிக்கு செல்வது பற்றி அவனது பெற்றோர் பேசிக்கொண்டு இருந்தனர்.
அந்த சமயத்தில் வீட்டில் பின்பக்கக் கூடத்தில் ரேவதி கண்களில் நேசமும், குறும்பு பார்வைகளும், ஜீவாவை பேச விடாமல் திணறடித்துக்கொண்டு
தலையாட்டி பொம்மையாக வைத்து இருந்தது. பிறகு தொலை பேசி எண்கள் பரிமாறப்பட்டன

அதற்குள் சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதற்கான எண்ணத்தின் அறிகுறிகள் இரு பெற்றோர்களிடமும் இருந்தது.

பிறகு மூன்று ஆண்டுகள் ஜீவா ரேவதி உபயத்தால் ஒரு தொலைபேசி நிறுவனம் நன்கு செழித்து வளந்தது இவர்கள் நேசத்தைப் போல.

படிப்பு முடிந்ததும் நல்ல வேலையில் ஜீவா சேர்ந்தான். திருமணப் பத்திரிகை அச்சடித்து கிராமத்து வீட்டில் திருமணம்


வெகு சிறப்பாக நடைபெற்றது.


டிஸ்கி:

* கதையில வில்லன் அப்டின்னு யாரும் வரலைன்னு கவலைப்படக் கூடாது.
வேகமாய் முடித்த காரணம் 'மண்டையில் அவ்வளோதான் மசாலா இருக்கு.' என்று எண்ணிக்கொள்ளவும்

* சூழ்நிலையும் சாதகமாக இல்லை, அதனால் அதிகம் ப்ளாக் பக்கம் வரமுடிவது இல்லை.

*எழுதுவதை விட வாசிப்பது பிடிக்கின்றது. ஆனால் மீண்டும் நேரம் கிடைக்கும் போது என்னுடைய மொக்கைகள் தொடரும்.

*அப்பாட இன்னும் கொஞ்ச நாளைக்கு வரமாட்டேனு சந்தோசமா ஒரு சிரிப்பு சிரிக்கிறீங்கள்
ம் ம் ம்
ஓகே ஸ்வீட் எடு கொண்டாடு....:)
மீண்டும் பொறுமையுடன்
படித்தமைக்கு நன்றி

Thursday, May 26, 2011

கிராமத்து கனவிலே...(1)




மிதமான காலைப்பொழுது அழகாய் பகலவன் பல் துலக்கி அதிகாலையிலே எழுந்து விட்டான் போல. அதுவரை கனவில் இருந்தான் ஜீவா. அழகான கிராமம், பெயர் தெரியாத குருவிகளின் ரீங்காரம், குயில்களின் கூவல், பொழுது விடிந்து இரை தேடப் புறப்படும் பறவைகள், அல்லி அதிகமாக இருந்த குளக்கரை ஓரம் ஒற்றை காலில் நடனம் ஆடும் கொக்கு, நானும் இருக்கேன்னு குளக்கரையில் துள்ளிக் குதிக்கும் கெண்டை மீன்கள்...

இதமாய் ஒரு மெல்லிய காற்று படும் படாமலும் வீசிக்கொண்டு இருந்தது. இந்த இளஞ்சூரியன் லேசாய் சுட்டாலும் அது ஒரு வித உத்வேகம் கொடுத்தது. வண்டுகள் எல்லாம் அதன் பணியை தொடங்க ஆரம்பித்து விட்டன. பூக்களின் தேன் வாசம் காற்றில் வந்து கொண்டு இருந்தது.

அந்த சிறு கிராமம் மெல்ல எழுந்து கொண்டு இருந்தது.

அப்போதுதான், "மணி எட்டு ஆக போகுது. இன்னும் அந்த எரும மாடு எந்திரிக்கலையா?" என்று அம்மாவிடம் அப்பா கேட்டது லேசாக காதில் ஒலித்தாலும் அசந்த தூக்கமும் அந்த அழகான கனவும் அவனை படுக்கையில் இருந்து எழ விடவில்லை.

"அவனை விட சின்ன பிளைங்க எல்லாம் காலையில எழுந்து குளித்து அமைதியாக படித்து கொண்டு இருக்கின்றனர். இவனுக்கு மட்டும் ஸ்கூல் இல்லையா?" என்று எப்போதும் பேசும் பாராட்டுகள் ஒரு பக்கம் திரும்பி படுத்தாலும் கேட்டுக் கொண்டேதான் இருந்தது. மெல்ல கனவில் இருந்து எழுந்தான். அம்மா, "இந்தாடா, டீ குடிச்சிட்டு போ." என்று சொல்லி விட்டு அவர் சமையல் வேலையில் மும்முரமாய் இருந்தார்.

மெல்ல சோம்பல் முறித்து எழுந்து போர்வை எல்லாம் மடித்து வைத்து விட்டு குளிக்கச்சென்றான். குளித்து வந்து நேரம் பார்த்தப்போது மணி ஒன்பது ஆகி இருந்தது. 'ஆகா! நேரம் ஆகிவிட்டதே.' என்று உள்மனம் துடித்துக் கொண்டு இருந்தது. மனசுக்குள் புலம்பிக் கொண்டு இருந்தான் ஜீவா. பின்ன! லேட் ஆகி போனால் பள்ளி சென்று அங்கும் திட்டு வாங்க வேண்டுமே. பள்ளியைச் சுற்றி ஓடி வர வேண்டுமே, என்று விரைவாக அம்மா சுட்ட பஞ்சு இட்லியை மிளகாய்ப் பொடியோட தேங்காய் சட்னியையும் விட்டு வைக்காமல் சாப்பிட்டு முடித்து விட்டான்.


மதியம் சாப்பாடும் ரெடி பண்ணி அவன் பையில் வைத்திட்டு "மிச்சம் வைக்காம சாப்பிடு கண்ணா." என்று பாசத்துடன் கூறிய அன்னையின் வார்த்தைக்கு "சரிம்மா." என்று சொல்லிக்கொண்டு தனது மிதி வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
போகும் வழியில் போகும் வழியில் அவனது நண்பர்கள் ராஜேஷும் ,கணேஷும் சேர்ந்து கொண்டனர். மூவரும் இந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பில் நான்காவது குருப்பில் படித்து கொண்டு இருந்தனர். அந்த பள்ளிக்கூடம் அவனது வீட்டில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சரியாக ஒன்பது நாற்பதுக்கு எல்லாம் வகுப்பில் இருந்தனர். இந்த வருடத்தின் முதன் நாள் முதல் இன்று வரை அனைவரும் வருங்காலம் பற்றிய பயத்துடன்... எப்படி படிப்பது என்று பல யோசனைகள் ஒவ்வொரு மாணவருக்கும் இருந்தது.

இதில் ஜீவா சுமாராய்ப் படிப்பவன். ராஜேஷ் அவனுக்கு முன்னால் இருப்பவன், படிப்பதை பொறுத்து இருக்கும். கணேஷ் ஒரு அளவுக்கு படிப்பான். எப்படியோ மூவரும் ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்றாய் படிப்பவர்கள். இன்று பிளஸ் 2 வரை வந்து விட்டனர். இப்படி இருக்க ஜீவா இன்னும் அந்த கிராமத்துக் கனவிலே லயித்து இருந்தான். காரணம் அந்த கனவில் வந்த....


ஓகே மீதி அடுத்த பகுதியில்...

Monday, May 23, 2011

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பொன்னி...


இந்த போட்டோ எதுக்குன நாந்தான் firstu விஷ் பண்றேன் அதுக்காக ஹாப்பி பர்த்டே பேபி..




வானத்து தேவர்களும்
பூமியின் புண்ணிய
பதிவர்களும்
உலகத்தில் உள்ள அத்தனை
கவிதை அரசர்களும்
நேசம் தரும் தேவதைகளும்
பாசம் தரும் குழந்தைகளும்
நட்பை தரும் நண்பர்களும்...

ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியாவும்
இந்திய வானொலியும்
தத்தம் வாழ்த்துக்களை

பிரபல பதிவர்
கவிதை நாயகி

(கவிதையை கொலை பண்றவங்க)
சுபத்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றன..

என்றும் நீண்ட ஆயுளோட
நல்ல நலமுடன் வாழ
எல்லாம் வல்ல இறையை
நானும் வேண்டுகிறேன்

சாமி இந்த புள்ளைக்கு நல்ல புத்திகொடு...
கவிதையாய் எழுதி எங்களை எல்லாம் கொன்னுகிட்டு இருக்கு.....

சுபா உங்களுக்கு
எனது வாழ்த்துக்களையும் சொல்லிக்கொள்கிறேன்...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பொன்னி...

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி
எல்லாரும் இருந்து சாப்ட்டு




விட்டு பரிசு பொருள் கொடுத்து

வாழ்த்திட்டு போங்க


நூறு பலூன் விட்டு அதில ஹாப்பி பர்த்டே
எழுத விருப்பம்..
பசிக்கிற அனைவருக்கும் சாப்பாடு போட்டு உனக்கு வாழ்த்து சொல்ல விருப்பம் ..
என்னால அவ்ளோலாம் பண்ண முடியுமான்னு தெரியல...

ஆனாலும் பதிவுலகத்தில கிடைத்த நட்பு
மனசார நீ நல்ல இருக்கணும் வாழ்த்றேன்
சந்தோசமா இரு..
ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடு...
ஒரு சாதாரண வாசகன் சிவா

ஹாப்பி பர்த்டே டு நெல்லைக் கவிதை சுபத்ரா ...
ஹாப்பி பர்த்டே டு நெல்லைக் கவிதை சுபத்ரா ..
ஹாப்பி பர்த்டே டு நெல்லைக் கவிதை சுபத்ரா ...


ஓகே ஸ்டார்ட் மியூசிக்


டிஸ்கி:
என்னடா இவன் ஒரு ஒருத்தருக்கும் வாழ்த்து சொல்லியே
போஸ்ட் போடறான்னு திட்ட கூடாது...(வேண்டும் என்றால் உங்க பிறந்தநாள் சொல்லுங்க போஸ்ட் போட்டு கலக்கிடுவோம் .(போஸ்ட் போடாட்டி பிறந்த நாள் குழந்தை திட்டுவாங்க..)இந்த குழந்தை என்ன பண்ணும் நீங்களே சொல்லுங்க...)

Tuesday, May 17, 2011

அழகாக்க புன்னகை பூக்கும் பூக்களுடன் நானும்.....

திறக்கப்பட்ட
ஜன்னலில்
எதிர்ப்பட்ட
தென்றல்...




நினைவு தரும்
கணத்தில்
விழியோரம்
விரும்பி வரும்
அரும்புகள்...




கானலாய்
மாறும்
கவலைகள் ...


தனிமை
தீப்பெட்டிக்குள்
அடைக்கப் பட்ட
இரவுகள்..



பக்குவபடதா
நிலையில்
புகுத்தப் பட்ட
கஷ்டங்கள்...!


நம்பிக்கை எனும்
வழி
கொண்டு வந்த
நட்புகள்.





போகும் வழியில்
நாளைப் பற்றி
யோசிக்காத
புன்னகைத்த
பூக்கள்..



இவை எல்லாம்
என்னை இன்னும் யோசிக்க வைக்கின்றன.

இருக்கும் ஒவ்வொரு நொடியையும்
இனிமையாய் மாற்றிக் கொள்ள வேண்டுமென..

வாழ்க்கை எனும் நாட்காட்டியில்
முடிந்து போன விசயங்கள் பற்றி யோசிப்பதில்
பயன் இல்லை என்று
கடந்து போன நாட்கள் உணர்த்துகின்றன..

அருமையாய் ஆண்டவன் கொடுத்த நிமிடத்தை
அழகாக்க புன்னகை பூக்கும் பூக்களுடன்
நானும்...


நானும்...

முடிந்த வரையில்
முடியாதவர்களுக்கு
உதவி செய்து
கடக்கும் நாட்களை
நட்புகளோடு பகிர்ந்து கொண்டு
நாட்கள் மட்டும் அல்ல,
இருக்கும் நிமிடங்களும்
சந்தோசமாய் நகரும்
என்ற நம்பிக்கையோடு........


Thursday, May 12, 2011

எதிர்கட்சிகள் செய்த சதியால் நேற்று வாழ்த்த முடியவில்லை ...

பாளையம் கோட்டை நாயகிக்கு பிறந்தநாள் ..13.5.11


பாளையம் கோட்டை நாயகிக்கு பிறந்த நாள் ..
அட ஆமாங்க நாம பதிவு உலக சூப்பர் ஸ்டார் சித்ரா மேடம் அவர்களுக்கு
பிறந்த நாள் இன்று 13.5.11
அகில உலக பதிவர்களும்
அனைத்து நாட்டு பிரதமர்களும்
பொது மக்களும்
தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றனர் ..

ஹாப்பி பர்த்டே டு பதிவு உலக சூப்பர் ஸ்டார் சித்ரா..
ஹாப்பி பர்த்டே டு பதிவு உலக சூப்பர் ஸ்டார் சித்ரா..
ஹாப்பி பர்த்டே டு பதிவு உலக சூப்பர் ஸ்டார் சித்ரா..

எல்லாரும் வாங்க கொஞ்சம் வெட்டி பேச்சு பேசிக்கிட்டே வாழ்த்து சொல்லுங்க...
ஹாப்பி பர்த்டே டு யு சித்ரா அக்கா.உங்கள் வாசகர்களில் ஒருவன்.

என்னதான் சூப்பர் ஸ்டார் இருந்தாலும் நம்ம சித்ரா அக்கா போல ஸ்டார் யாரும் இல்லைங்க
பதிவு உலக மேதை
பதிவு உலக சுற்றும் மேதை ...

பதிவர்
சாதா பதிவர் ..(லைக் மீ )
பிரபல பதிவர் ....
அணைத்து பதிவருக்கும்
தெரிந்த ஒரே பதிவர்
இவங்க மட்டும்....

போகாத நாடு இல்லை
போடாத கமெண்டும் இல்லை
வெட்டி பேச்சில
விவரம் சொல்றவங்க
இவங்கதான்...

டிஸ்கி : தகவல் உபயம் reva
அட இன்னைக்கு பார்த்து வார்த்தைகள் எல்லாம் லீவ் விட்டு போயிட்டு
அதனால கவிதை எல்லாம் எழுத முடியல
இருந்தாலும் ஒரு போஸ்ட் போட்டு
வாழ்த்தி வணங்குகிறேன் ...
இல்லாத இறைவனையும் வேண்டுகிறேன்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
அனைத்து நலன்களையும்
எப்பொதும் அளித்திட வேண்டுகிறேன்.....!!!



வாழ்த்து கவிதை எழுதியவர்
கவிதை உபயம் reva


கொஞ்சம் கொஞ்சும் வாழ்த்து.....

பூமிக்கு வந்த வான் நிலவே....
தேய்பிறைக் காண
எங்கள் முழுநிலவே...

(இன்னைக்கு தேர்தல் ரிசல்ட் வேற அதான் ஒரு ப்லோல...ஹி ஹி )

நாணம் குடைபிடிக்க,
பனித்துளி உன் வெட்கம்
நிறைக்க
இன்று பூத்த மலருக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

கொஞ்சும் உன் முதல் பேச்சை,
கொஞ்சம் கேட்டாலே,
சிலாகித்துப் போகும்
பதிவர் கூட்டம்....

இதயமில்லா உலகமிதில்,
இணையத்தில் இணைந்திட்ட
இயக்கமற்ற இதயங்களில்,
நல் இதயம் உண்டென்றால்,
உரக்கச் சொல்வோம்
உன் பெயரையும்....
(எல்லாருக்கும் மாங்கு மாங்குன்னு கமெண்ட் போடுறேங்கள்ள, அந்த நல்லா உள்ளத்த சொல்லுறோம்.. ஹி ஹி....)

அசராத உன் பேச்சை,
அழகான உன் தமிழை,
அன்பான உன் நட்பை,
தெளிவான உன் அறிவை,
உன்னோடு இருந்து
பகிரும் பாக்கியம்
நட்பாய் நாங்கள் பெற்றோம்...

உன்னோடு பால்யக் கதைகள்
பேசி மகிழ்த்ததில்லை.
உன் பதிவினால்
பாசக் கதைகள் கேட்டிருக்கிறோம்....

பறந்த இந்த உலகில்,
சுற்றும் பணத்தின் பயணத்தில்,
பைசா செலவில்லாமல்,
அமெரிக்க தெருக்களில்,
உலா வருகிறோம் உன்னோடு
நட்பின் கரங்கள் பற்றி...

சிறகிழந்த பறவைகளாய்,
சிக்கித்தவிக்கும் சில நேரங்களில்
பறக்க தவிக்கும்
எங்கள் தவிப்பை
தீர்க்க வந்த பதிவுலகில்,
பாசக் கரம் நீட்டும்
எங்கள் நட்பே....

நலங்கள் பல நீ பெற்று,
நயமாய் நீயும்
வாழ்த்திடவே
அன்பென்னும் கடவுளை
அன்போடு வேண்டுகிறோம்...


எங்கள் அன்பு சித்து அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

வாழ்க பல்லாண்டு.

Friday, May 6, 2011

வழி தெரியாத பயணம்...


கண் முன்னே
கண்ணீராய்
கரையும்
எனது கனவுகள்...!

எதுவரை
தொடரும்
வழி(லி)
தெரியாத
பயணம்...?


காலத்தின்
மாற்றத்தை
முடிந்தால்
விரைந்து
மறக்க
வேண்டுகிறேன் ..

வலி
இருக்கும்
உனது நினைவுகளை
மட்டும்
என்னோடு
வைத்துக்கொண்டு...



தொடர்ந்து
வந்த பாதையில்
காணாமல்
போன வழித்தடங்கள்
ஆனது
வாழ்க்கை...!

கண்முன்னே
கரைந்த
கனவில்
உடைந்து போன
உள்ளத்தில்
யாருக்கும் தெரியாமல்
உள்ளுக்குள்
பீறிட்டு பொங்கிய
அழுகையை
சத்தம் வராமல்
விம்மி அழுதது
யாருக்கு
தெரியப் போகிறது...!

பசி மறந்து
உறக்கம் தொலைந்து
தன்னிலை மறந்து
தவித்த பொழுதில்...!

மறந்து போன
மௌனங்களில்
புலம்பித் தீர்த்த
வார்த்தைகள்
ஊமை ஆகிப் போனது...!

தூக்கத்தில்
துரத்தும்
கனவுகள் கூட
துக்கத்தை
தந்து போகிறது...!

எதுவும் நிலை
இல்லாத உலகில்
இந்த நிமிடம் கூட
எனக்கு சொந்தம்
இல்லையே ...!

இருக்கும்
நிமிடங்களுடன்
உன்னை நினைத்தே
கடந்து செல்கிறது
வாழ்க்கையும்....

Sunday, April 24, 2011

எனக்குப் பிடித்த நாட்களும் நிமிடங்களும்...


இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதரும் ஒரு விதம், ஏன் ஒவ்வொரு தனி உலகம் என்றே சொல்லலாம்..

நான் சந்தித்த ஒரு சில நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்...

மும்முரமாய் மீன் குழம்பு வைத்துகொண்டு இருக்கும்போது ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது.
என் நண்பன் ரமேஷ் பத்து வருடம் கழித்து தொலை பேசியில் அழைத்து தன்னைக் கண்டுபிடிக்குமாறு கூறிய தினம், பிறகு கண்டு பிடிக்க இயலாமல் "நீங்கள் யாரு என்று கூறுங்கள்," என்று கெஞ்சி அவனிடம் திட்டு வாங்கி பிறகு நலம் விசாரித்து பழைய கதைகள் எல்லாம் பேசி சிறிது மகிழ்ந்த தினம் நேற்று.


பிறகு சாப்பிட்டு விட்டு அருகில் உள்ள பூங்காவுக்கு ஒரு நடைப்பயணத்தில்...
ஒரு அண்ணன் தங்கை இருவருக்கும் ஐந்தும் நான்கும் வயது இருக்கும். தன் தங்கை அழ அண்ணன் ஒரு கையில் இருந்த சாக்லட்டை அந்த தங்கையிடம் கொடுத்துக் கொண்டு இருந்த காட்சி மிக அழகானது. தங்கையும் பாதி கடித்துவிட்டு மீதியைத் திரும்ப அண்ணனுக்கு "இந்தா அண்ணே நீயும் சாப்பிடு," என்று கொடுத்த அந்தப் பாசமான காட்சி இன்னும் மனதில்....

முன்னர் ஒரு மாலை நேரத்தில் குட்டிக் குட்டிக் குழந்தைகள் மிக அழகாய் ஓடி விளையாடிக் கொண்டு இருந்தபொது அவர்களைக் கவனித்துக் கொண்டு இருக்கையில் ஒரு சின்னப் பையன் ஏதோ ஒன்றுக்குப் பிடிவாதம் பிடித்து, தரையில் விழுந்து புரண்டு பிறகு ஒருசில நிமிடத்தில் அதை மறந்து எழுந்து மற்றக் குழந்தைகளோட விளையாடச் சென்றது... அருமையான கணம்.


பிறகு பூங்காவில் வேகமாய் ஓடி வந்த ஒரு குட்டிப் பாப்பா கால் தவறி கீழே விழுந்துவிட்டது. அந்த நேரத்தில் யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, பார்க்க வில்லை என்றவுடன் வேகமாய் ஒரு புன்னகையுடன் விழுந்த அடி தெரியாமல் மறைத்துக் கொண்டு நடந்து சென்றதை தூரத்தில் இருந்து பார்க்கையில் மனதில் ஒரு நம்பிக்கை...


அருகில் உள்ள மரப்பலகையில் 'ஒரு காலத்தில் நானெல்லாம் அப்படி இப்பிடி' என்று மகிழ்ச்சியுடன் பழங்கதை கட்டிக்கொண்டு இருந்த பெருசுகள்.
அவர்கள் புன்னகையில் வாழ்ந்து மகிழ்ந்த சந்தோசம். அவர்களுக்குள் எவ்வளவோ சோகம் இருப்பினும் காட்டிக் கொள்ளாமல் அந்த நண்பர்கள் பேசிக் கொண்டு இருப்பதைக் கவனித்த நிமிடத்தில் நாளை நாமும் இப்படிதானே பேசிக்கொண்டு இருப்போம் என்று மனதில் சிரித்துகொண்டு இருக்கையில் ஒரு வித சந்தோசம்...

வாழ்க்கையில் இந்த நிமிடம் மட்டுமே இருப்பதாய் நினைத்து இருக்கும் நிமிடத்தை சந்தோசமாய் அமைதியாய் நகர்த்த வேண்டும் என்று எண்ணி வரும் பிரச்சனைகளை மன உறுதியுடன் எதிர்கொள்ள அவ்விடத்தை விட்டு மெல்ல காற்றடிக்கும் திசையில் நடக்க ஆரம்பித்தேன்....

நட்பில் பிரிவு என்பது இல்லை
அப்படி பிரிந்தால் அது நட்பு இல்லை

எதிர்பாரா அன்புதான் எப்போதும்
சந்தோசம் தரும்...




வாசித்தமைக்கு நன்றி
வாங்க வாங்க எல்லாம் வெயிலில் வந்து இருப்பீங்க. ஜில்னுனு ஐஸ்கிரீம் சாப்பிடுங்க...



மீண்டும் சந்திப்போம்....

Wednesday, April 13, 2011

என்ன தலைப்பு வைக்க....?



பொறுப்பு உணர்ச்சி :

நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு
இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம
ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!

நேத்து:
அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!


ஒரு குட்டி கதை:
அதாவது ஒரு காலத்தில் ராமு சோமு என்ற நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்
அவர்களில் சோமு ராமுவிடம் ராமு ராமு உனக்கு நல்ல நண்பனாக எப்பொதும் இருப்பேன்னு சொல்லிக்கிட்டு வந்தான் இதைக் கேட்ட ராமு உன்னை போல நண்பன் கிடைக்க குடுத்து வச்சு இருக்கணும் சொல்லி நன்றி சொன்னான் அப்போ அந்த வழிய ஒரு கரடி வந்துட்டு...
உடனே சோமு ஹயோ ஹயோ என்ன பண்றது தெரியலே அப்படின்னு ஓடி போய் மரத்து மேல் ஏறி அமர்ந்து கொண்டான் அப்பறம் ராமுக்குதான் மரம் ஏற தெரியாதே உடனே ஒரு யோசனை செய்தான் ராமு கரடி அருகில் வருவது போல் இருந்ததும் கீழே விழுந்து செத்து போனவன் போல கிடந்தான்..
கரடி அருகில் வந்து முகந்து பாத்து தூர போயிட்டு..அப்புறம் கரடி போனதும் சோமு ஓடி வந்து
ராமு கரடி உன் காதில என்னடா சொன்னிச்சு உன்ன எதுமே பண்ண வில்லையே என்ன சொல்லிடு போய்ட்டுன்னு கேட்டான்..அதற்கு ராமு துன்பம் வரும்போது கூட யாரு இருக்காங்களோ அவங்கதான் உண்மையான நண்பன் அப்டின்னு சொல்லிட்டு போனது என்றான். இதை கேட்ட சோமு வெட்கி தலை குனிந்தான். தனது தவறை மன்னிக்கும் மாறும் கேட்டான்..அப்பறம் இருவரும் நண்பர்களை சந்தோசமாய்
சென்றார்கள்....

தத்துவம் : அதிக அன்பும் மனதை கணக்கும் சுமை ஆகும்

வாசித்ததில் பிடித்தது:

குருநாதர் தான் வெளியூர் சென்று திரும்பும்முன் தான் எழுதிய நூலைப் படித்து முடித்துவிடுமாறு குருகுலத்தில் சீடர்களிடம் சொல்லிச் சென்றார் அந்த குருநாதர். எல்லோரும் முழுமையாகப் படித்து முடித்திருந்தார்கள். ஒரே ஒரு சீடர், அதில் ஒரேயொரு வரியை மட்டுமே படித்ததாக சொன்னார். மிகக்கடுமையாய் ஏசினார் குரு.

சீடர் முகம் வாடவில்லை. ஓங்கி அறைந்தார் குரு. அந்த இளைஞர் வருந்தவில்லை. சிறிது நேரம் போனது. அமைதியடைந்த குரு, அந்த சீடரை அழைத்து ”நீ படித்த வரி என்ன?” என்று கேட்டார். ”உன் கோபத்தைக் கட்டுப்படுத்து. எப்போதும் நிதானமாக இரு” என்பதே அந்த வாசகம். வெட்கித் தலை கவிழ்ந்தார் குரு. அந்த குரு, துரோணர். அந்த சீடர் தருமர்.....

Thursday, March 17, 2011

நாங்களும் கவிதை எழுதுவோம்ல



முஸ்கி :

நாங்களும் கவிதை எழுதுவோம்ல...நட்புக்காக ஒரு சின்ன...


கடவுள்
எல்லா இடமும் இருக்க முடியாது என்பதால்
அன்னையைப் படைத்தான்
முதல் அறிவைக் கொடுக்க தந்தையும்
தொடரும் அறிவைக் கொடுக்க குருவையும் கொடுத்தான்
இவர்கள் அனைவரும்
எப்போதும் என்னுடன் இருக்க முடியாது என்பதால்
உனது நட்பை படைத்தான்
இறைவன் ...

இதயத்தில்
இடம்
கொடுப்பவர்கள்
காதலர்கள் …

இதயத்தையே
இடமாக
கொடுப்பவர்கள்
நண்பர்கள் …
(இந்த கவிதை நான் எழுத வில்லை ...)


நட்பு போல ஒரு இதயம் கொடுத்த
இறைவனுக்கு நன்றி...

டிஸ்கி :
இந்த உலகத்தின் அனைத்து உயிர்களும் நட்பில்தான் வாழ்கின்றன...

பிராத்தனைகள்:
கடந்த வாரத்தில் ஏற்பட்ட சுனாமியில்
இறைவனிடம் சேர்ந்த மனித உயிர்களுக்கு அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்...

எதுவும் நிரந்தரம் இல்லா உலகில்
எனக்கு கிடைத்த
அனைத்து நட்புகளும்
நலமாய் இருக்க
நிரந்தரமாய்
வேண்டுகிறேன்.

என்றும் நட்புடன்
உலகத்தின் ஒரு மூலையில்
...

Saturday, February 26, 2011

அன்புத் தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்


எல்லாரும் வாங்க வாங்க
சாக்லேட் எடுத்துக்கோங்க
அட நிறைய எடுத்துக்கோங்க

ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா
இன்று
தேதியில்
...வருடங்களுக்கு
முன்பு பிறந்த நம்ம தோழி ஒருவருக்கு பிறந்த நாள்
அதுவும் எந்த மாதம் கடைசிக்கும் முந்தின நாள்
அதாங்க நாளைக்கு (27.02.2011)
எல்லாரும் வாழ்த்துங்க...

ஓகே
சிங் பர்த்டே சாங்
ஹாப்பி
பர்த்டே டு யு
பர்த்டே டு யு
பர்த்டே டு யு

அன்புத் தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்


நட்பை
புரிந்து
தவறை
மெல்ல குட்டி
அன்பால்
திருத்தி
என்னை
நல்வழிப்படுத்தும்
என்நட்பே



கண்ணில்
காற்றுப்பட்டாலும்
கண்கலங்குவாய்
என் நட்பே

நின்
நட்பின்
அன்பைச் சொல்ல
எந்த
மொழியிலும் இல்லை
இந்த பிறவியும்
எனக்கு
போதவில்லை
என்றும்
எல்லா நலமும் பெற்று
என்றும்
உன் நட்பாய் இருக்க

அன்பிலும்
கருணையிலும்
குறைவில்லாத
நலத்தை
கொடுக்கும்
இறைவனை
வேண்டுகிறேன்


எத்துனை துன்பம்
வந்தாலும்
கண் கலங்காதே
வரும்காலம்
நலமாய்
இருக்கும்
என் நட்பே

பாசமான
அன்பில்
உன்
நட்பின்
நினைவில்
எதோ ஒரு மூலையில்
நானும்
நீ எப்பொதும்
நலமாய் இருக்க
வேண்டிக்கொண்டு இருப்பேன்

ஹாப்பி பர்த்டே
.
என்றும் நட்புடன்
உன் நண்பன்


டிஸ்கி:வாழ்த்து தெரிவித்த தெரிவிக்க போகும் அன்பு உள்ளங்களுக்கு எல்லாம்
நன்றிகள் ..

Friday, February 18, 2011

டீக்கடை.....(ஐம்பதாவது பதிவாம் )

முஸ்கி : சும்மா கற்பனை ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு.....





"ஏய்! அவன் இப்படி பண்ணுவானு எதிர்பார்க்கவே இல்லடா.. கூட இருந்தே இப்படி பண்ணுவானு.. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பண்ணிட்டு நம்மை எல்லாம் தலை குனிய வச்சுட்டு போய்ட்டான். அவன் மட்டும் என் கையில சிக்கினான்னு வை, மவனே அவன் காலிடா," என்றான் குமார்.

சதீஷ் "ஏன்டா அவனுக்கு மூளை இப்படி நாசமா போனது? எப்போவும் ஒண்ணும் தெரியாதவன் போல இருப்பான். நானும் எதிர்பார்க்கவில்லை, எனக்கு மண்டை வெடிச்சிடும் போல இருக்குடா," என்று அவன் பங்குக்கு
புலம்பித் தள்ளினான்.

"இதுக்குத்தான் அவன நம்மகூட சேர்க்காதீங்கனு அப்போவே சொன்னேன்," என்ற ரமேஷ் "நீங்க தான் பாவம் அது இதுன்னு சொல்லிவிட்டு இப்போ வந்து பொலம்பிக்கிட்டு இருக்கீங்க," என்று அவர்களை உசுப்பி விட்டான். "எனக்கு அப்போவே தெரியும். இந்த ராஸ்கல் எதாச்சும் பண்ணிட்டு நம்மை நாளைக்கு மாட்டிவிடாம போகமாட்டான் என்று," அவர்களை இன்னும் ஏத்தி விட்டுக் கொண்டு இருந்தான்.

சரி, விடுங்க அப்படி என்னதான் பண்ணிட்டான்னு கேக்கறீங்களா? அந்த மூணாவது தெரு மாரி.. நல்லவந்தாங்க எந்த பழக்கமும் இல்லை. ஆனாலும் இவர்களோடு எப்படியோ ஒட்டிக் கொண்டான். டெக்னிசியனாக ஒரு கம்பனியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தான். பார்க்க சுமாராக இருந்தாலும் கொஞ்சம் அமைதியானவன். ஒரு கோவில் திருவிழாவில் அந்த கமலாவின் கருவிழியில் எப்படியோ மாட்டிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் பார்வையால் மனதை பரிமாறிக் கொண்டு... நம்ம
தமிழ் வாத்தியார் ராமசாமி பொண்ணு கமலாவ டாவடிச்சு... பொண்ண கூட்டிக்கிட்டு ஊரை விட்டு ஓடிட்டான்.

'எப்பவும் இந்த எடுபட்ட வீணாப் போன நண்பர்கள் கூட சேர்ந்துகொண்டு டீக்கடையில் போற வரவங்களை கிண்டல் பண்ணி காலத்தை ஓட்டினாலும், பையன் கில்லாடி தான் அந்த வாத்தியாருக்கு ஒரே பொண்ணு எப்படியும் அவர்களைக் கண்டு பிடிச்சு அடிய போட்டாலும் கடைசியா மருமகனா ஏத்துப்பாங்கனு ஒரு திட்டம் போட்டு பொண்ணை கொண்டு போய்ட்டான்,' என்று ஒன்றுக்கு நூறாக கிராமத்துக்குள் பேசிகொண்டார்கள்.

அவன் நண்பர்கள் எங்கு சென்றாலும் அவர்களையும் விடவில்லை தெரு மக்கள்.
ஒருவருக்கொருவர் மாறி மாறிக் கேள்வி கேட்டு ஒருவழி செய்து விட்டனர். எத்தனையோ முறை "அவன் எங்கு சென்றான் என்று தெரியாது," என்று கூறியும் விடவில்லை.

அந்த வாத்தியார் பாவம் நல்லவர். என்ன, திருக்குறள் தவறாகச் சொன்னால் முட்டி போடச் சொல்லுவார். திரும்பச் சரியாகச் சொல்லும் வரையிலும் விடமாட்டார்.

அவர் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. சொல்லித் திருந்தாத ஜென்மங்கள் பட்டுத் திருந்தட்டும் என்று சொல்லிவ் விட்டு அவர் வேலையைப் பார்க்கத் தன்னை மாற்றிக்கொண்டு விட்டார்.

கிராமத்திலும் ஒரு மாதம் மட்டும் அந்த பேச்சு இருந்து கொண்டுதான் இருந்தது. அவர் காதில் விழுந்தால் அப்போது அவர் கண்கள் கொஞ்சம் கலங்கும் தாய். இல்லாமல் பாசம் காட்டி வளர்த்த பெண் அல்லவா? இருந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் அமைதியாய், 'தன் பெண் எங்கு இருந்தாலும் நலமாய் இருக்கட்டும்,' என்று வேண்டிக் கொண்டார்.

ஒரு சில உறவினர்கள் கூறும் கேலிப் பேச்சும் உற்ற நண்பர்கள் கூறும் ஆதரவும் அவரை ஏதும் செய்யவில்லை. மாறாக அவரின் மௌனம் அதிகம் ஆகியது. அந்த மௌனமே அனைவரின் பேச்சையும் குறைக்கச் செய்தது.

ஒரு வருடம் கழித்து ஒரு நாள் அவரின் மகள் கைக் குழந்தையுடன் கணவனோடு பிறந்த ஊருக்கு வருகிறாள். ஊரே வியப்புடன் பார்க்கின்றது. அவன் மிக நல்ல படியாக அவளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்பதை அவளது புன்முறுவலில்,

முகத்தில் காட்டிய சந்தோஷத்தில் அனைவரும் அறிந்து கொண்டனர். ஒருவர் ஒருவராக விசாரிக்கத் தொடங்கினர்.

அனைவரிடமும் தன் கணவன் ஒரு நல்ல வேலை கிடைத்து வேறு ஊரில் தங்கிவிட்டதாகக் கூறினாள். அனைவரும் திட்டிய திட்டுகளை எல்லாம் மறந்துவிட்டு "நல்லபடியா இரும்மா," என்று வாழ்த்தி விட்டு அவளது வீடு வரைக்கும் வந்து அவளது தந்தையிடம் சமாதனம் பேசி ஏற்றுக்கொள்ளுமாறு கூறினர்.

தந்தையைக் கண்டதும் ஓடிச் சென்று காலில் விழுந்து அழ அவர் மனம் இளகி, பேரப்பிள்ளையும் மகளையும் அழைத்துக் கொண்டு வீட்டு சாமிமாடம் நோக்கிச் சென்றார். அவரின் மௌனமும் மெல்ல குழந்தையின் கொஞ்சலில் கரைந்தது.

ம்.. நம்ம மாரிமுத்து வீட்டில் முதலில் எற்றுக் கொள்ளாவிட்டாலும் பிறகு ஒருவழியாக அவர்களும் சம்மதம் சொல்லிவிட்டனர்.

அவனது நண்பர்கள் ரமேஷ், குமார் எல்லாம் வந்து அவனை கிண்டல், கேலியோடு கொஞ்சம் அடியும் போட்டு மீண்டும் டீக்கடையில் ஐக்கியம் ஆனார்கள்.


டிஸ்கி: இந்த வார தத்துவம்
"தோழி இருந்தா எனக்கு ஒரு கேர்ள் பிரண்டு இருக்குன்னு சொல்லலாம்
ஒரு கேர்ள் பிரண்டு இருந்தா எனக்கு ஒரு தோழி இருக்காங்கனு சொல்ல முடியாது...."

Monday, February 14, 2011

எனது தேவதைக்கு....!!!



உன்னை
பார்த்த
நிமிடங்கள்
நடைப்பயில்கிறது
என் நினைவுகளில் ...!

கனத்தை
உணரும்
நிமிடங்கள்
உன்னோட
நினைவை
நினைத்து
முடிக்கும்
நிமிடங்கள்!

எப்போதும்
உன்னை
நினைக்கிறேன்
என்று பொய் சொல்ல
விரும்பவில்லை
என்ன...
ஆனாலும்
நினைக்காமலும்
இல்லை!




எதாவது ஒரு தருணம்
விழியின் ஓரத்தில்
கரைவது
என்னை
அறியாமல்
விழும்
துளிகள்.
இன்னும்
கன்னத்தில்...!!!

ரோஜா

கொடுத்தது இல்லை
அது உன்னைப் பார்த்து
வெட்கப்படும்
என்பதால்...!

வண்ண வண்ண
வாழ்த்து அட்டைகள்
கொடுத்ததும் இல்லை
வெற்றான
வார்த்தைகளில்
என் அன்பை
முடித்துவிட
விரும்பவில்லை ...!

பரிசு பொருளும்

கொடுத்தது இல்லை
பழசாகி விடும்
என்பதால் ..!

எப்பொதும்
உனக்காய்
புத்தம்
புதிதாய்


துடித்து..
நினைத்து...
வாழ்ந்து
கொண்டு
இருக்கும்....


ஒரே ஒரு
இதயத்தைக்
கொடுத்து
விடுகிறேன்
பத்திரமாய்
வைத்துக்கொள்
என் தேவதையே ...

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...