
என்னை
மன்னித்து விடு
என் தோழி.
உனக்காகக்
கவி
எழுதத்
தெரியவில்லை...!
உனக்கான
கவிதை எழுத
யோசித்த போது
என் தமிழ்
எனக்குக்
கொடுத்தது..
துறவு...!
ஒரு ஒரு முறையும்
நன்றி
சொல்லுகிறேன்
இந்த பூமித் தாய்க்கு,
உன்னைச்
சுமந்து கொண்டு இருப்பதால்,
(என்னை போல)
மோதிக் கொண்ட
மேகங்கள்
தூவிவிட்ட
மழைத்துளிகளில்
எனக்கான
ஒரு துளியைத்
தேடி
நம்பிக்கையுடன்
வானவில்லாய்...
நீ விட்டுச் சென்ற
சிரிப்பையும்
முறைப்பையும்
அழகாய்
சேமித்து
மௌனத்தில்
வைத்து இருக்கிறேன்
என்றாவது ஒரு நாள்
நீ தேடுவாய் என்று...!
12 comments:
//ஒரு ஒரு முறையும்
நன்றி
சொல்லுகிறேன்
இந்த பூமித் தாய்க்கு,
உன்னைச்
சுமந்து கொண்டு இருப்பதால்,
(என்னை போல)//
சூப்பர்....
ஆனா, இப்படி மாத்தி பாருங்க.
உனக்கு நன்றி,
உன்னை தாங்குவதால்தான்
இன்னும் பூமித்தாய் உலகத்தையே தாங்குகிறாள்
//ஒரு ஒரு முறையும்
நன்றி
சொல்லுகிறேன்
இந்த பூமித் தாய்க்கு,
உன்னைச்
சுமந்து கொண்டு இருப்பதால்,
(என்னை போல)//
இந்த வரிகள் கலக்கலா இருக்கு அண்ணா ..!!
//நீ விட்டுச் சென்ற
சிரிப்பையும்
முறைப்பையும்
அழகாய்
சேமித்து
மௌனத்தில்
வைத்து இருக்கிறேன்
என்றாவது ஒரு நாள்
நீ தேடுவாய் என்று...!
//
ஹய்யோ , கவிதை கவிதை .. உண்மைலேயே அருமையா இருக்கு அண்ணா ..!!
கொடுத்துவைத்த தோழி:)அழகான கவிதை!
இன்னும் நிறைய கவிதைகளை பதிவிடுங்கள் சிவா.
@சிவா
தம்பி!!! முதல் இரண்டு பத்தி மொக்கை... ஊரைநடை. மத்தது எல்லாம் சூப்பர்!!!
@அருண்
//உனக்கு நன்றி,
உன்னை தாங்குவதால்தான்
இன்னும் பூமித்தாய் உலகத்தையே தாங்குகிறாள்//இது கவிதை...."
அருண் அண்ணா வருகைக்கு நன்றி
முக்கிய அறிவிப்பு:
நான் எழுதியவை எல்லாம் கவிதைகள் இல்லை என்பதை
மகிழ்ச்சியோட தெரிவித்து கொள்கறேன்:ஏதோ எனக்கு தோன்றிய வரிகள் மட்டுமே!!!
@செல்வாகுமார்
இந்த வரிகள் கலக்கலா இருக்கு அண்ணா ..!!
அண்ணே வாங்க..வாங்க நன்றி
தங்கள் ...ஞ்ச-புகழ்ச்சிக்கு அணி இலக்கணத்துக்கு நன்றி.
@terror பாண்டியன்
//
தம்பி!!! முதல் இரண்டு பத்தி மொக்கை... ஊரைநடை. மத்தது எல்லாம் சூப்பர்!!!.//
நன்றி அண்ணே "முக்கிய அறிவிப்பை படிச்சிடுங்க"
@பிரியா
//கொடுத்துவைத்த தோழி:)அழகான கவிதை!
இன்னும் நிறைய கவிதைகளை பதிவிடுங்கள் சிவா.//
வாங்க ப்ரியா..நன்றி தங்கள் கருத்துக்கு..தோழிதான் கிடைக்க வில்லை:))
சிவா,
//முக்கிய அறிவிப்பு// ;))))
very nice siva
Post a Comment