
தூக்கம் வராத பொழுதில்
தனியே ஒரு நடைப்பயணம்...
இரவு
போக்கில்
நடந்து
தலை அசைத்து பேசி மகிழும்
மரங்களை
கண்டு முகம் மலர்ந்து
என்ன பேசிக்கொண்டன என்று யோசித்த போது
மரங்களை பார்த்தேன்
அடர்ந்த புன்னகையை தென்றலாய்
மேலும் வீசி
என்னை மௌனிக்க செய்தது
அமைதியாய் நடக்க ஆரம்பித்தேன்
ஏதோ ஒன்று கொஞ்சம் யோசிக்க செய்தது
அலுவலகம்
போகும்போது
வரும்போதும் சரி
நிதானமாய் போவோம்
என்ற வார்த்தைகூட வேகமாய்தான்
வருகிறது...
விடியலில் ஆசையாய் அசதியில்
ஐந்து நிமிட குட்டி தூக்கமும்
அவசரகதில் எழுந்து
பறந்து பறந்து
தொலைந்து போகிறது கனவுகள் எல்லாம் ...

எழுந்து எங்கே செல்கிறோம்
இறுதியில்
ஒன்றுமே இல்லமால் போகும்
நமக்காக
இவ்வளவு வேகமாய்
செல்கிறோம்

பொய்யாய் நடிக்கும்
உலகத்தில் நானும் இருக்கேன் என்று நடித்துக்கொண்டே
இருக்க எனக்கு பிடிக்கவில்லை
இருந்தாலும்
யாருக்காகவது
நடித்தே ஆகவேண்டி இருக்கிறது
என் கனவுகள் எல்லாம் இங்கு இல்லை என்பது மட்டும் நிஜம்.
டிஸ்கி:
பதிவு உலக மற்றும் அனைவரும் நலமாய் இருக்க பிராத்திக்கிறேன் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பதற்றத்தில் இருந்து விடுபட வேண்டுகிறேன்.
ஒரு சுனாமி பாதிப்பே இன்னும் முடிய வில்லை முழுவதும் மறுபடியும் என்றால்...வார்த்தைகள் இல்லை..