Saturday, November 20, 2010

அன்புள்ள தோழிக்கு...

'அவசியம் கலந்து கொள்ள வேண்டும்,' என்று அவர்களிடம் எனது திருமணப் பத்திரிகையைக் கொடுத்து விட்டுத் திரும்பி வரும்போது ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. காலம் பின்னோக்கி நகர்ந்தது. கடந்த காலத்தின் நிமிடங்களை நானும் புரட்டிப் பார்க்கின்றேன் ...

எத்தனை கனவுகள்! எல்லாம் காலத்தின் போக்கில், சூழ்நிலையின் சுழலில்
சிக்கிக் கலைந்து போனது.. அழாத நாட்களும் சந்தோசம் குறையாத நாட்களும் நெஞ்சைவிட்டு அகல மறுக்கின்றன.. காலம்தான் எத்தனை வேகமாய் மாறுகிறது.. இல்லை மனிதர்கள் இல்லை.. மனம் காலத்தை விட மிக வேகமாய் மாறியதை உணர்ந்தேன்..





பல முறை உன்னை சந்தித்து இருக்கிறேன் எதுவும் தோன்றவில்லை ஒரு முறை நீ விடுமுறையில் சென்றபோது நானும் ஒரு சராசரியாய் உணர்ந்தேன் ஒரு உறவின் பிரிவின் வலியை.மறுக்கவும் மறைக்கும் முடியவில்லை.!

விடுமுறை முடிந்து அவர்கள் வீட்டில் செய்த அச்சு முறுக்கையும் அதிரசத்தையும் எனக்க எடுத்து வந்து கொடுத்தபோது என்னை பற்றி நினைக்க கூட ஒருவர் இருக்கிறாங்க நினைத்த சந்தோஷமான நாட்கள் அவை.

விடுமுறை முடிந்து உன் வீட்டில் செய்த அச்சுமுறுக்கையும் அதிரசத்தையும் எனக்காக எடுத்து வந்து கொடுத்தபோது என்னைப் பற்றி நினைக்கக் கூட ஒருவர் இருக்கிறாங்க என்று நினைத்த சந்தோஷமான நாட்கள் அவை.

ஒரு சின்னத் தலைவலி வந்தாலும் பெரும் பாடு படும் உன் மனம் எனக்கு மிகப் பிடிக்கும். அதற்காகவே பலமுறை எனக்கு தலைவலி வந்தது உண்டு. என்னைப் போலவே பலரும் இருந்து இருப்பார்கள் என்று நம்புகிறேன். சின்னச் சின்னப் பொய்களும் எனக்கு பிடித்துப் போன நாட்கள்.

இன்னும் ஒரு முறை ஒரு கேள்வி என்னிடம்....
பதில் சொல்ல முடியாத தருணங்கள்; பெருமூச்சில் சுவாசித்த பல நிமிடங்கள்; எதார்த்தம் உணர, ஏற்றுக்கொள்ள மறுத்த நாட்கள்... "அடுத்த பிறவி பிறந்தால் நீ என்னவாகப் பிறக்க நினைக்கிறாய்?" என்று கேட்ட கேள்விக்குப் பதில் மறுத்து
ஒரு மௌனப் புன்னகை தாமரை மொட்டு போல உதிர்த்துவிட்டுச் சென்றது இன்னமும் மனதில் வாடாமல் இருக்கிறது.

இப்படி எளிதாய்க் கேட்கும் பல கேள்விகளுக்கான விடைகளுக்கு மௌனம் மட்டுமே பதிலாய்க் கொடுத்திருக்கிறேன். இருந்தாலும், "அதி புத்திசாலிகள் அமைதியாக இருப்பார்கள் என்று எங்கோ படித்து நினைவுக்கு வருகிறது," என்று என்னை விட்டு கொடுக்காமல் அரவணைத்துச் செல்லும் நாட்களை இனி எங்கே தேடுவேன்..

தினமும் பேசின வார்த்தைகள் நினைவில் இல்லை.
திட்டிய ஆராதனைகள் அறவே மறந்து விட்டது....

சூழ்நிலையின் சந்தர்ப்பத்தால் நீ என்னை விட்டுச் சென்ற நிமிடம் தவிர ஏதும் நினைவில் இல்லை...அதைவிடப் பெரிய தண்டனை... அந்த நிமிடம் போல கொடுமையான நிமிடமும் இல்லை...அதுபோல நாட்கள் எதுவும் இல்லை...


பிரிவும் சந்திப்பும் நிரந்தரம் இல்லை இருந்தாலும்...
இந்தத் தண்டனையை மெல்ல மெல்ல ஏற்றுகொள்ளக் காலம் கற்றுக் கொடுத்தது...
அனுபவங்களும் வலிகளும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு புதிய வாழ்கையைத் தேடி நானும் எனது பயணத்தைத் தொடர்கிறேன்.

எத்தனை அடி அடித்தாலும் திரும்பத் திரும்ப அம்மாவைத் தேடி வரும் ஒரு குழந்தையைப் போல நான் உன்னுடன் வந்த நினைவுகளைத் திரும்ப எதாவது ஒரு சம்பவம் ஞாபகத்துக்குக் கொண்டு வரும் என்பதை மறுக்கமுடியாது...

இப்படிக்கு அழியாத அழகான நினைவுகளுடன்...




Friday, October 22, 2010

வாடிக்கை...!!!




எங்கே போனது இந்த மனித நேயம் எல்லாம் நேற்று வாங்கின "அறை" கனத்தில எல்லாம் வறண்டு போயிட்டு...

இந்த வாசிங் மிசின் கூட இப்போ வர வர மனசாட்சியே இல்லாம இருக்கு...
வாசிங் மிசின் கட புடனு சத்தம் போட்டு துணி மணிகள் எல்லாம் என்னைய தூக்கி கம்பியில காயபோடுனு சத்தம் கொடுத்து நின்றது..

எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வெயிலில் காயபோட போனால் அங்கே
பாழாய் போன மேகம் சூரியனை மறைத்துக்கொண்டு நிக்குது,சரி அடிக்கிற காத்திலவது காயும் நினைச்சு காயபோட்ட அப்போதான் ஊரில இருக்கிற புழுதி மண்ணை எல்லாம் காத்து பத்திரிக்கை வைத்து அழைத்துக்கொண்டு வருது.. !என்ன பண்ண எல்லாம் என்னோட நேரம்..!!

அப்பறம் ஒருவழியா கிளிப் மாட்டி ,விடு விடு என சமையல் அறைக்குள் நுழைகிறேன் ,ஏதோ ரசம்,எத்தன வேகமா சமையல் முடிக்க ரசம் வைக்கலாம் சரி என்று எல்லாம் ரெடி பண்ணிக்கொண்டு காஸ் அடுப்பை பத்த வைத்தல் காஸ் இல்லை..ஹயோ நேரம் வேற ஆகிட்டே இருக்கே..இன்னைக்கும் நல்ல திட்டு வாங்க போறேன்.கூட அடியும் விழுமேனு "நினைத்தப்ப அப்பாவை
திட்டி தீர்த்தேன் நல்ல இடமாம் நல்ல இடம்.. எல்லாம் சுத்த பொய்...

என்னைய காசு கொடுக்காத வேலை ஆளா வைத்து போயட்டங்கலேபொலம்பிகிட்டு இருந்தேன்.அப்புறம் காஸ் போன் பண்ணி அது வந்து ஒரு வழிய மிளகு ரசம் வைத்து உருளைக்கிழங்கு வறுவல் பண்ணியாச்சு..

அப்போதுதான் வாசனையை மோப்பம் பிடித்துகொண்டே என்ன உருளை கிழங்கு வறுவல் போல பக்கத்துவீட்டு பாட்டி உள்ளே சவுண்ட் விட்டுகிட்டே வந்துச்சு,அந்த பாட்டிக்கு பல்லு மட்டும் இல்லை,ஆனால் வாய திறந்தால் போதும் ஊரு கதை எல்லாம் நாறு நார கிழிக்கும்..அப்படி இருந்த கூட பரவல,நா அது பேசறதுக்கு எல்லாம் ஆமம் சாமி போடணும்.

வந்தா சும்மா இருக்குமா,இருக்காது அங்க என்ன இருக்கு எங்க என்ன இருக்கு கேட்டு உயிரை வாங்கிரும்...

அப்பறம் என்ன அதுக்கு ஒரு காபி போட்டு கொடுத்து அனுப்பிவிட்டு எனது வேலையை தொடர்ந்தேன்.சே என்ன வாழ்க்கை..ஒரு பீச் உண்டா ஒரு திருவிழா உண்டா,தினமும் இந்த வீடே கதியா வாழ வேண்டிருக்கு..

"என்னபண்ண எல்லாருக்கும் எல்லாம் அமையுமா?..இப்போ யேசித்து என்ன பயன்!!!!?"

பிறகு ஒரு முக்கியமான வேலை மறந்துவிட்டேன் "இந்த மகி அக்கா (http://mahikitchen.blogspot.com/2010/10/blog-post_19.html)ப்ளாக்ல போட்ட வெந்தய தோசைக்கு ஊற வைத்தது நினைவுக்கு வந்தது."ஓடிபோய் கிரைண்டேற ஓடவிட்டு ஒரு வழிய மாவும் அரைத்து வைத்து விட்டு மணியை பார்த்தேன் அது ஐந்து முப்பது.
அவரசம் அவசரமாய் வீடு பெருக்கி ஒன்டவைது ஒதுங்க வைத்து அப்பா அப்பா எவ்ளோ வேலை,எவ்ளோ வேலை..

இப்போதான் அம்மா பட்ட கஷ்டம் மனசுக்கு வந்துச்சு.. அம்மாவும் இப்படிதான கஷ்டப்பட்டு இருப்பாங்கனு தோன்றியது.அம்மாவை பாக்கனும்போல இருந்துச்சு..என்ன இருந்தாலும் தனிய இருந்தால் இப்படித்தான் கஷ்டபடனும்.மாமனார் மாமியார் இருந்தா எவ்ளோ ஒத்தாசைய இருக்கும் என்று கொஞ்சம் கொஞ்சமாய் புரிந்துகொண்டேன்..!

அப்போது வீட்டுக்கேட்டு திறக்கும் சத்தம் கேட்டது..ஒரு வழிய அடுத்த திட்டு வாங்க என்னை ஆயத்த படுத்திகொண்டு இருந்தேன்.

"எப்படி சமைத்தாலும் என் மனைவிஎன்னை திட்டாமல் போக போவது இல்லை....!!!!

பின்குறிப்பு: (சும்மா ஒரு கற்பனை...)
ஒரு குட்டி கமெடி (எங்கோ ரசித்தது)
என் மனைவி வேகமா ஓடிவந்து ஒரு விசியம் சொன்னாள் ." நமக்கு ஜோசியம் பார்த்த ஜோசியர் செத்து போய்ட்டாராம் ..பிறகு அப்படியானு கேட்டுவிட்டு...(பின்ன பண்ண பாவம் எல்லாம் சும்மா விடுமானு மனசுக்குள் முனுமுனுத்தேன் )

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...