
எப்படி இருக்க பொன்னி நலமா
அத்தையும் மாமாவும் நலமாய் இருப்பார்கள் என்று நம்புகிறேன்
இங்கு நண்பர்கள் அனைவரும் நலம்
கடந்த முறை வந்த போது சில நிமிடங்கள் தான் உன்னை பார்த்தாலும் அதிகம் பேச முடியவில்லை சூழ்நிலையும் சந்தர்ப்பமும் இடைவெளியை ஏற்படுத்தி கொடுத்துக்கொண்டே இருக்கிறது இருந்தாலும் இந்த தூரத்தின் பயணத்தில் எல்லாம் நீ அறிவாய் என்று அமைதியாய் ஏற்றுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு முறையும் வரும் வரை காத்து இருந்து வந்த பிறகு விரைவில் சென்று விடுவாய் என்று சொல்லும் ஒரு ஒரு நேரத்திலும் வரும் வலிகள் கண்ணீராய் வெளிப்படுகையில் தூசி விழுந்தது என்று துடைக்கும் உனது பாங்கிலும் நலம் விசாரிப்பிலும் அன்பாய் பார்க்கும் ஒரு பார்வைக்கும் பதில் தெரியாமல் மருகுகிறேன்.
இந்த பாசம் எப்பொதும் வேண்டும் என்றுதான் தள்ளி போய்க்கொண்டு இருக்கிறேன்
கணக்கிலா அன்பை கொட்ட நீ இருக்கும்போது என் ஆயுசுக்கும் பாசம் தர நான் இருக்கிறேன் என்று சொல்ல முடியாமல் இருக்கிறேன் எனக்குள் மட்டும் சொல்லிக்கொண்டு.
ஊருக்குள் எங்க மாமா வந்து இருக்காக என்று சொல்லும்போது உன் கண்ணில் காணும் சந்தோசத்தை காண திரும்ப எப்போது வருவேன் என்று ஏங்குகிறேன்.
பிறகு நம்ம அசின்னு தமன்னா

எல்லாம் வீட்டில் விற்று விட்டதை அறிந்தும் தற்போது
ஹன்சிகா
மட்டும் வைத்து இருப்பதை அறிந்து கொஞ்சம் வருத்தம் முற்றேன்.
புல்லறுத்து கொண்டு நேராக அசினுக்கும் தமனவுக்கும் நீ புல் வைக்கும் சாக்கில் பேசிக்கொண்டே போவது எனக்கு பிடிக்கும். பாவம் வாய் இருந்தால் அழுது இருக்கும் என்னை போல..
எல்லாம் விட்டு தனியாக இருப்பது சற்று கடினம்தான் என்று சொல்லிக்கொண்டே வீட்டில் மாப்ளை பார்த்துக்கொண்டு இருக்காக என்று வார்த்தைகளை முழுங்கி சொல்லும்போது என்ன சொல்வது நிஜமாய் அந்த நிமிடங்கள் கனக்கிறது.
கடந்த முறை மாமா அத்தை சொல்லும்போது வேலை இல்லாத சூழ்நிலையில் எப்படி பேசுவது என்று தெரியாமல் இருந்து விட்ட நிலையில் திரும்பவும் உங்கள் வீட்டில் வேறு வரன் பார்க்கும் செய்தி கொஞ்சம் தடுமாற்றம் கொடுக்கிறது.
என் சார்பில் பேச யாரும் இல்லை என்ன பேசவது என்று தெரியவும் இல்லை
இருந்தாலும் ஒரு நம்பிக்கையில் வாழ்கிறேன்.
எட்டாம் வகுப்பு தேர்வில் முதல் மார்க் வாங்கியதற்க நீ கொடுத்த இங்க்பேனா இன்னமும் பத்திரமாய் இருக்கிறது.
பிறகு விரைவில் ஊருக்கு வருகிறேன்
ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடு,கவலை படாத பொன்னி எல்லாம் சரி வரும்
மீண்டும் அடுத்த

கடிதத்தில்...
சும்மா 1 :)மழை வரும் நேரத்தில்
குடை இல்லாமல் நனைகிறேன்
உன் நினைவுகளில்
டிஸ்கி :சும்மா ஒரு கற்பனையில் எழுதியது
இக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே :)