ஜீவா சுமாராய்ப் படிப்பவன். ராஜேஷ் அவனுக்கு முன்னால் இருப்பவன், படிப்பதைப் பொறுத்து முடிவுகள் இருக்கும். கணேஷ் ஒரு அளவுக்கு படிப்பான். எப்படியோ மூவரும் ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்றாய் படிப்பவர்கள், இன்று பிளஸ் 2 வரை வந்து விட்டனர்.
இப்படி இருக்க ஜீவா இன்னும் அந்த கிராமத்துக் கனவிலே லயித்து இருந்தான். காரணம் அந்த கனவில் வந்த....
ஐந்தாம் வகுப்பில் காலணாவுக்கு கடலை மிட்டாயும் மீதிக்கு தேன்மிட்டாயும் வாங்கிகிட்டு
அவனுக்குக் கொடுக்க வேண்டும் என்று மெனக்கெட்டு அவனது அருகில் வந்து யாரும் பார்க்காம போது அவனிடம் கொடுத்து சாப்பிடச் சொல்லும் அவனோட அத்தை பொண்ணு ரேவதி தான் அவன் கனவுக்கு காரணம்.
ரேவதியைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிட்டு. இப்போது எப்படி இருப்பா!! அப்போ

'குண்டு பொண்ணு' அப்டின்னு கிண்டல் பண்ணிட்டு இருப்போம். இப்போ பார்த்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
உப்புக்கும் காரணம் இல்லாத ஒரு சின்னக் குடும்பச் சண்டையில் இரு குடும்பமும் வெகு தொலைவு பிரிந்து விட்டார்கள்.
அப்போது ராஜேஷ், "ஏய் ஜீவா! தமிழ் வாத்தி வாந்துட்டாரடா." என்று எழுப்பிவிட்டான்.
கன நேரம் எல்லாம் மறந்து ரேவதியை பற்றி நினைத்துக் கொண்டு இருந்தான்.
ஜீவா பொதுவாக எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டான், சோம்பேறியும் கிடையாது. அதே சமயம் "அவன் வேலையில் சமத்தாக இன்று வரை இருந்து இருக்கிறான்." என்று மற்றவர்கள் கூறக் கேட்டு இருக்கிறான்.
இந்த சமயத்தில் திடீரெண்டு ரேவதி நினைவுக்கு வரவும் ஒரு வித மனக்கலக்கம் அடைந்து இருந்தான்.
இந்த வருடம் விடுமுறையில் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று உள்மனம் சொல்லிகொண்டே இருந்தது.
நாட்கள் நகர்ந்தன. காலாண்டு, அரையாண்டு, மூன்றாம் பருவத் தேர்வும் பள்ளி இறுதித் தேர்வும் நெருங்கிவிட்டது.
இந்த தேர்வு நல்லபடியாக எழுத வேண்டும் என்று தந்தை அறிவுரை கூறிகொண்டே இருந்தார். "சரி, சரி" என்று கேட்டுக்கொண்டே அவனால் முடிந்த அளவுக்கு தேர்வையும் எழுதி முடித்து இருந்தான்.
அவனது எண்ணம் எல்லாம் நகரத்தில் இருக்கும் கல்லூரியில் படிக்க வேண்டும்.
பள்ளி தேர்வுகள் வெளி வந்தன. அவனும் நண்பனும் முதல் வகுப்பில் தேறி இருந்தனர். இருவரில் ராஜேஷ் கணேஷை விட கூடுதல் மதிப்பெண்கள் பெற்று இருந்தான்.
ஜீவாவும் பள்ளியில் மூன்றாம் இடம் பெற்று இன்ஜினியரிங் கல்லூரி செல்லும் தனது கனவை நிஜமாக்கிக் கொண்டான்.
இதற்கு இடையில் கிராமத்தில் முக்கிய தலைவர் ஒருவர் திருமணத்தில் இரு குடும்பங்களும் சந்தித்துக் கொண்டன. ஜீவா எதிர்பார்க்கவே இல்லை, இப்படி ரேவதியைப் பார்ப்போம் என்று.
திருமணத்தில் பரிமாறும் இடத்தில் ஜீவாவும் நண்பர்களும் சேர்ந்து அங்கு இருந்தவர்களுக்கு பரிமாறி கொண்டு இருந்தனர்.

அப்போது "ஏன்பா, சாம்பார் கொஞ்சம் இங்க போடு." என்ற ஒரு தேன்குரல். ஜீவாதான் அது என்று ரேவதிக்குத் தெரியாது.
ஜீவாவுக்கு மட்டும் தெரியும் அந்த குண்டு விழி பார்வையும், அழகான கன்னக்குழி அழகும் இவள்தான் ரேவதி என்று புரிந்து கொண்டான். ரேவதிக்கும் எங்கோ பார்த்த நியாபகம் என்று யோசித்து அறிந்து கொண்டாள்.
சம்பிரதாய விசாரிப்புகளுக்குப் பிறகு இருவரும் பால்ய நினைவுகள் பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது அவள் தந்தை குரல் கேட்டு பிறகு சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.
அந்த நேரம் மாமாவின் மேல் வந்த கோவத்துக்கு அளவே இல்லை. பின்னாடி அவன் நண்பன் ராஜேஷ் வந்து, "யாருடா அது? சொல்லவே இல்லை." அப்படி இப்படி என்று இவனை இன்னும் உசுப்பேற்றிக் கொண்டு இருந்தான்.
அந்த திருமணத்தில் மீண்டும் இரு உறவுகளும் பழசு மறந்து வழக்கம் போல பேசிக்கொண்டு இருந்தது இருவருக்கும் மனதில் ஒரு சந்தோசத்தை கொடுத்தது.
இந்த வருடம் கல்லூரிக்கு செல்வது பற்றி அவனது பெற்றோர் பேசிக்கொண்டு இருந்தனர்.
அந்த சமயத்தில் வீட்டில் பின்பக்கக் கூடத்தில் ரேவதி கண்களில் நேசமும், குறும்பு பார்வைகளும், ஜீவாவை பேச விடாமல் திணறடித்துக்கொண்டு
தலையாட்டி பொம்மையாக வைத்து இருந்தது. பிறகு தொலை பேசி எண்கள் பரிமாறப்பட்டன
அதற்குள் சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதற்கான எண்ணத்தின் அறிகுறிகள் இரு பெற்றோர்களிடமும் இருந்தது.
பிறகு மூன்று ஆண்டுகள் ஜீவா ரேவதி உபயத்தால் ஒரு தொலைபேசி நிறுவனம் நன்கு செழித்து வளந்தது இவர்கள் நேசத்தைப் போல.
படிப்பு முடிந்ததும் நல்ல வேலையில் ஜீவா சேர்ந்தான். திருமணப் பத்திரிகை அச்சடித்து கிராமத்து வீட்டில் திருமணம்

வெகு சிறப்பாக நடைபெற்றது.
டிஸ்கி:
* கதையில வில்லன் அப்டின்னு யாரும் வரலைன்னு கவலைப்படக் கூடாது.
வேகமாய் முடித்த காரணம் 'மண்டையில் அவ்வளோதான் மசாலா இருக்கு.' என்று எண்ணிக்கொள்ளவும்
* சூழ்நிலையும் சாதகமாக இல்லை, அதனால் அதிகம் ப்ளாக் பக்கம் வரமுடிவது இல்லை.
*எழுதுவதை விட வாசிப்பது பிடிக்கின்றது. ஆனால் மீண்டும் நேரம் கிடைக்கும் போது என்னுடைய மொக்கைகள் தொடரும்.
*அப்பாட இன்னும் கொஞ்ச நாளைக்கு வரமாட்டேனு சந்தோசமா ஒரு சிரிப்பு சிரிக்கிறீங்கள்
ம் ம் ம்
ஓகே ஸ்வீட் எடு கொண்டாடு....:)

மீண்டும் பொறுமையுடன்
படித்தமைக்கு நன்றி