
எனக்குள் வந்தது ஒரு மடல்....
உனக்கு அனுப்பாமல் எனக்குள் இருக்கும் ஒரு கடிதம்.
ஹாய் பிரவின்,
எப்படி இருக்க? நலமா?
நானும் நலமாய் இருப்பதாய்ப் பொய் சொல்லுகிறேன். உண்மையில் அப்படி இல்லை; ஏதோ ஒரு மாற்றம் என்னில் உணர்கிறேன். அருகில் இருந்த தருணங்களில் எதையும் அறிய முடியவில்லை, நீ தொலைவில் சென்ற பிறகு உணர்கின்றேன்.
என் உணர்வுகளையும் மதிக்கும் ஒரு மனிதனை முதல் முறை சந்தித்து இருக்கிறேன். நேர்கொண்டு பார்க்கும் உன் கண்கள் முதற்கொண்டு, அளவாக உள்ள உனது கால் நகம் வரைக்கும் என் நெஞ்சில் புகைப்படமாய்.. வந்து கொண்டே இருக்கிறது..
காலம் எவ்வளவோ வேகமாய்ப் போனாலும் அதைவிட வேகமாய் என் மனது உன்னைத் தேடிப் பறந்து கொண்டு இருக்கிறது. என்ன பேசினாய், ஏது பேசினாய் எதுவும் நினைவில் இல்லை.
உன்னை நான் மட்டும் தேடவில்லை; பக்கத்து வீட்டு வாண்டுகளும் "பிரவின் அண்ணா மீண்டும் எப்போ வருவாங்க?" என்று என்னை நச்சரித்துக் கொண்டு இருக்கின்றனர்.
அதில் நானும் அடங்கும் எப்போது மீண்டும் என்னிடம் வம்பு இழுப்பாய் என்று...
பட்டம் விட்டு சிறுவர்களோட சேர்ந்து நீயும் கண்ணாம்மூச்சி ஆடி..அவர்களில் ஒருவனாய்
நீ செலவிட்ட விடுமுறைத் தினங்கள் அவர்களோடுதான் அதிகம். இருந்தாலும், கிடைத்த இடைப்பட்ட நேரங்களில் என்னிடம் குட்டிக் குட்டி வம்பு, சண்டைகள் தவறாமல் இழுத்துக்கொண்டே தான் இருந்தாய். அப்போது உன் மீது இருந்த கோபம் தற்போது எங்கே போனதோ தெரியவில்லை. மறுமுறை வருவாயா தெரியவில்லை. ஆனால்... எந்தன் சிந்தனையில் விட்டுச் சென்ற உந்தன் நினைவுகள் அதிகம்.
தொடரும்...
கண்ணாடி
நானும் கண்ணாடி பார்த்தேன்
என்ன கோவமோ .
என் முகத்தை காட்டவில்லை..
மாறாக உன்னை நினைத்த
சந்தோசத்தை காட்டியது...!