எத்தனை கனவுகள்! எல்லாம் காலத்தின் போக்கில், சூழ்நிலையின் சுழலில்
சிக்கிக் கலைந்து போனது.. அழாத நாட்களும் சந்தோசம் குறையாத நாட்களும் நெஞ்சைவிட்டு அகல மறுக்கின்றன.. காலம்தான் எத்தனை வேகமாய் மாறுகிறது.. இல்லை மனிதர்கள் இல்லை.. மனம் காலத்தை விட மிக வேகமாய் மாறியதை உணர்ந்தேன்..

பல முறை உன்னை சந்தித்து இருக்கிறேன் எதுவும் தோன்றவில்லை ஒரு முறை நீ விடுமுறையில் சென்றபோது நானும் ஒரு சராசரியாய் உணர்ந்தேன் ஒரு உறவின் பிரிவின் வலியை.மறுக்கவும் மறைக்கும் முடியவில்லை.!
விடுமுறை முடிந்து அவர்கள் வீட்டில் செய்த அச்சு முறுக்கையும் அதிரசத்தையும் எனக்க எடுத்து வந்து கொடுத்தபோது என்னை பற்றி நினைக்க கூட ஒருவர் இருக்கிறாங்க நினைத்த சந்தோஷமான நாட்கள் அவை.
விடுமுறை முடிந்து உன் வீட்டில் செய்த அச்சுமுறுக்கையும் அதிரசத்தையும் எனக்காக எடுத்து வந்து கொடுத்தபோது என்னைப் பற்றி நினைக்கக் கூட ஒருவர் இருக்கிறாங்க என்று நினைத்த சந்தோஷமான நாட்கள் அவை.
ஒரு சின்னத் தலைவலி வந்தாலும் பெரும் பாடு படும் உன் மனம் எனக்கு மிகப் பிடிக்கும். அதற்காகவே பலமுறை எனக்கு தலைவலி வந்தது உண்டு. என்னைப் போலவே பலரும் இருந்து இருப்பார்கள் என்று நம்புகிறேன். சின்னச் சின்னப் பொய்களும் எனக்கு பிடித்துப் போன நாட்கள்.
இன்னும் ஒரு முறை ஒரு கேள்வி என்னிடம்....
பதில் சொல்ல முடியாத தருணங்கள்; பெருமூச்சில் சுவாசித்த பல நிமிடங்கள்; எதார்த்தம் உணர, ஏற்றுக்கொள்ள மறுத்த நாட்கள்... "அடுத்த பிறவி பிறந்தால் நீ என்னவாகப் பிறக்க நினைக்கிறாய்?" என்று கேட்ட கேள்விக்குப் பதில் மறுத்து
ஒரு மௌனப் புன்னகை தாமரை மொட்டு போல உதிர்த்துவிட்டுச் சென்றது இன்னமும் மனதில் வாடாமல் இருக்கிறது.
இப்படி எளிதாய்க் கேட்கும் பல கேள்விகளுக்கான விடைகளுக்கு மௌனம் மட்டுமே பதிலாய்க் கொடுத்திருக்கிறேன். இருந்தாலும், "அதி புத்திசாலிகள் அமைதியாக இருப்பார்கள் என்று எங்கோ படித்து நினைவுக்கு வருகிறது," என்று என்னை விட்டு கொடுக்காமல் அரவணைத்துச் செல்லும் நாட்களை இனி எங்கே தேடுவேன்..
தினமும் பேசின வார்த்தைகள் நினைவில் இல்லை.
திட்டிய ஆராதனைகள் அறவே மறந்து விட்டது....
சூழ்நிலையின் சந்தர்ப்பத்தால் நீ என்னை விட்டுச் சென்ற நிமிடம் தவிர ஏதும் நினைவில் இல்லை...அதைவிடப் பெரிய தண்டனை... அந்த நிமிடம் போல கொடுமையான நிமிடமும் இல்லை...அதுபோல நாட்கள் எதுவும் இல்லை...
பிரிவும் சந்திப்பும் நிரந்தரம் இல்லை இருந்தாலும்...
இந்தத் தண்டனையை மெல்ல மெல்ல ஏற்றுகொள்ளக் காலம் கற்றுக் கொடுத்தது...
அனுபவங்களும் வலிகளும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு புதிய வாழ்கையைத் தேடி நானும் எனது பயணத்தைத் தொடர்கிறேன்.
எத்தனை அடி அடித்தாலும் திரும்பத் திரும்ப அம்மாவைத் தேடி வரும் ஒரு குழந்தையைப் போல நான் உன்னுடன் வந்த நினைவுகளைத் திரும்ப எதாவது ஒரு சம்பவம் ஞாபகத்துக்குக் கொண்டு வரும் என்பதை மறுக்கமுடியாது...
இப்படிக்கு அழியாத அழகான நினைவுகளுடன்...